வகுப்பு – 18 – கோபம்

வகுப்பு – 18 – கோபம்
கதை
சுத்தியலும் ஆணியும்

மிகவும் மோசமான சுபாவம் கொண்ட ஒரு சிறுவன் இருந்தான். அவனது தந்தை அவனிடம் பை நிறைய ஆணிகளைக் கொடுத்து அவன் எப்போதெல்லாம் தனது நற்குணத்தை இழக்கிறானோ அப்போதெல்லாம் வேலியில் ஒரு ஆணியை அடிக்கக் கூறினார்.

முதன் முதலில் சிறுவன் 37 ஆணிகளை வேலி மீது அடித்திருந்தான். பிறகு நாளாக ஆக குறைந்தது. ஒருநாள், வேலியில் ஆணிகளை அடிப்பதைக் காட்டிலும் தனது நற் குணங்களை நீடித்திருக்கச் செய்ய இயலும் என்பதைக் கண்ணுற்றான். முடிவாக தனது நற்குணத்தை ஒருபோதும் இழக்காத நிலையை எட்டினான்.

இதைத் தனது தந்தையிடம் கூறினான். அவர் இனி தனது சுபாவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள சமயம் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கும்படி யோசனை கூறினார்.

நாட்கள் செல்லச் செல்ல ஒருநாள் எல்லா ஆணிகளும் வேலியில் இருந்து பிடுங்கப்பட்டு விட்டதாகத் தந்தையிடம் கூறினான் சிறுவன். “நல்லதைச் செய்தாய், என் மகனே! ஆனால் வேலியில் இருக்கும் ஓட்டைகளைப் பார். ஆனால் வேலி ஒருபோதும் மாறாமல் அப்படியேதான் இருக்குமல்லவா! நீ கோபமுற்று பேசும் போதெல்லாம் அவை யாவும் இது போலவேதான் தழும்பு ஒன்றை விட்டுச் செல்லும். நீ ஒருவர் மீது கத்தியை செறுகி வெளியே எடுத்து விட்டு எத்தனை முறை நீ என்னை மன்னித்து விடு எனக் கோரினாலும் காயம் என்பது அங்கே இருக்கத்தான் செய்யும். தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது. அதை விட இது மிகவும் மோசமானது.

நாம் நடந்து செல்கையில் கால்கள் தவறினால் காயமுற்ற கால்கள் மிஞ்சும். ஆனால் நமது நாக்கு தடுமாறினால் அதனால் அவரது இதயத்தில் ஏற்பட்ட காயம் ஆற மிக நீண்ட நாட்கள் ஆனாலும் ஆறுவது கடினம்.

ஒரு ஞானி தனது சீடர்களை வினவினார்: “நாம் ஏன் கோபத்தால் சத்தமிடுகிறோம்?” “மக்கள் ஏன் நிலை தடுமாறிய சமயத்தில் ஒருவர் மீது ஒருவர் சத்தமிடுகிறார்கள்?” சீடர்கள் கண நேரம் சிந்தித்தார்கள். பிறகு அவர்களில் ஒருவன் பதில் கூறினான். “ஏனெனில் நாம் நமது அமைதியை இழக்கிறோம். அதற்காகவே சத்தமிடுகிறோம்”.

“குரு, “ஆனால் நமக்கு அருகில் இருக்கும் நபரிடம் கூட ஏன் சத்தமிட வேண்டும்?” “அவர்களிடம் மிருதுவான குரலில் பேச இயலாதா? நீங்கள் கோபமுறும் சமயத்தில் ஏன் சத்தமிட வேண்டும்?” என்றார்.

முடிவாக குருவே விளக்கமளித்தார். “இரண்டு நபர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபமுற்றால் அவரவர் இதயங்கள் நீண்ட இடைவெளியில் இருக்கின்றன. இந்த இடைவெளியைச் சமாளித்து அவரவர் இதயந்தனில் எட்டும் அளவிற்கு அவர்கள் உரக்கவே பேச வேண்டியுள்ளது. எந்த அளவிற்கு அவர்கள் கோபமுற்று இருக்கிறார்களோ அந்த அளவிற்கு மேலும் சக்தி கொண்டு தூரம் எட்டும் அளவிற்குப் பேச வேண்டியுள்ளார்கள்”.

ஞானி கேட்டார்: “நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கும் போது என்ன நிகழ்கிறது? நாம் ஒருவர் மீது ஒருவர் சத்தமிடுவதில்லை. மாறாக மிருதுவாகவே பேசுகிறோம். ஏன்? ஏனெனில் நமது இதயங்கள் மிகவும் அருகருகே இருப்பதால். நமக்கு இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கையில் பேசுதல் கூட சில நேரங்களில் அவசியமற்றதாகி விடுகிறது” எனப் பதில் உரைத்தார்.

கோபத்தைக் கண்காணிப்பதற்கான பாடல்

ஏனிந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி ஏனிந்த கோபம் கோபம் கோபம் சொல் குழந்தே! வீணான கோபம் உன் நேரத்தை வீணடிக்கும்! மேலே சுவாசத்தை வீணடிக்கும்! அழுத்தத்தை அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்! உடம்பையும் பாதிக்கும் உன் உடம்பையும் பாதிக்கும்! ஏனிந்த கொலவெறி…….. கோபம் கொண்ட சமயத்தில் தண்ணீரை நிறைய குடி நீ தண்ணீரை நிறைய குடி! நல்ல ஒரு நிலையை நீயே உணர்வாயே! நல்ல ஒரு நிலையை நீயே உணர்வாயே! கோபம் கொண்ட சமயத்தில் ஆடியிலே உன் முகம் பார்! கண்ணாடியிலே உன் முகம் பார்! மோசமாக மோசமாக மோசமாக தெரிவாய் பார்! படு மோசமாக தெரிவாய் பார்! ஏனிந்த கொல வெறி கொல வெறி……………. கோபம் கொண்ட சமயத்தில் ஒண்ணு ரண்டு மூணு எண்ணு! நீ ஒண்ணு ரண்டு மூணு எண்ணு! பத்து வரை ஒண்ணு ரண்டு மூணு எண்ணு! அதையும் மெதுவா சரியா எண்ணு! சரியா ஒழுங்கா எண்ணு! கோபம் கொண்ட சமயத்தில் நெடுஞ் சாண் கிடையா படு! நீ நெடுஞ் சாண் கிடையா படு! கோபமெலாம் பஞ்சாய் பறந்து விடும் பாரு! பறந்து விடும் பாரு! ஏனிந்த கொல வெறி கொலவெறி…………….