வகுப்பு – 16 – அன்பு

வகுப்பு – 16 – அன்பு
கதை
அன்பின் சக்தி

பயங்கரமான ஒரு யுத்தத்தில் போரிட்டு வெற்றி கொண்ட வீரமிக்க ஒரு அரசன் நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் அருகாமை நாட்டின் முடிசூடிய இளவரசனை வெற்றி கொண்டு அரசனையும் கொன்றுவிட்டிருந்தான். அந்த அரசன் ஒரு காட்டின் வழியாக போய் கொண்டிருந்தான். அப்போது ஓய்வெடுக்க விரும்பினான். அன்று மாலை படையினர் அங்கேயே தங்கினர். அருகாமையில் ஆசிரமம் ஒன்று இருந்தது. அங்கேயிருந்த முனிவரைச் சந்தித்து மரியாதை செலுத்த எண்ணினான். தமது மந்திரியுடன் படை வீரர் சிலரை அனுப்பி அவையினரைக் கேட்கச் சொன்னான். அவர்கள் சீடர்களிடம் மஹாராஜா முனிவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினர். சீடர்கள், “குருஜி இப்போது ஓய்வெடுக்கச் சென்று விட்டார். நீங்கள் நாளை காலை வாருங்கள்” என்றனர்.

அடுத்த நாள் காலை அரசன் தனது அழகிய ராஜ உடை தரித்துக் கொண்டு தமது மந்திரி படையினர் புடை சூழ ஆசிரமத்திற்கு வருகை தந்தான். முனிவர் மரத்தடியில் அமர்ந்து கொண்டு சோளத்தைத் தூவிக்கொண்டிருந்தார். அவற்றை வெவ்வேறு விதமான நூற்றுக் கணக்கான பறவைகள் உண்டு கொண்டிருந்தன. அவற்றின் கிறீச்சிடும் சத்தம் காற்றில் கலந்தன.

அரசன் முனிவரிடம் சென்றார். முனிவர் ஏரேடுத்தும் பார்க்கவில்லை.

அரசன், “வணக்கம் குருஜி!” என்றான்.

பதில் ஏதும் இல்லை.

அரசன் உரத்த குரலில், “வணக்கம் குருஜி!” என்றான்.

இப்போதும் பதிலே வரவில்லை.

“குருஜி! நான் தங்களுக்கு வணக்கம் கூறினேன்” அரசன் இப்போது கோபமாக உரைத்தான்.

முனிவர் நிமிர்ந்து நோக்கி, “சத்தமிடுவதை நிறுத்து! பறவைகளுக்கு அச்சமூட்டுகிறாய்!” என்றார்.

இது அரசனை மேலும் சினங் கொள்ளச் செய்தது. “நான் யார் என்று தெரியுமா?” எனக் கத்தினான்.

முனிவர் அமைதியாகக் கூறினார், “ஆம். அறிவேன். அதிகார மோகத்தினால் கொலை செய்யவும் கூடியவன். இத்தகைய அதிகாரம் அனைத்தும் தற்காலிகமானது என்று அறியாதவன். இதே முறையில் தான் இன்னொரு அரசன் உன்னைக் கொல்லப் போகிறான். அதிகாரத்தின் மீதான மோகமே உனக்கு வீழ்ச்சியைத் தரப் போகிறது” என்றார்.

அரசன் கடுமையான கோபத்தினால் குன்றிப் போனான். அவன், “உங்கள் அதிகப் பிரசங்கித்தனம் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. உங்களை இப்போதே சிரச்சேதம் செய்கிறேன் பாருங்கள்!” எனக் கூறி முனிவரை வெட்ட தனது உடைவாளை வெளியே எடுத்து ஓங்கினான்.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மேலே பறந்து அரசனைத் தாக்க ஆரம்பித்தன. அவை தமது அலகுகளினால் அரசனின் முகம், கண்கள், கரங்கள் என எல்லா அங்கத்திலும் கொத்தின. அரசன் தம் கரங்களை உயர்த்தித் தம்மைச் சுற்றிலும் பறவைகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முயற்சித்தான். ஆனாலும் பறவைகள் அவனை விடுவதாக இல்லை. முனிவர், “அவனை விடுங்கள்! அவனை விடுங்கள்! என்னிடம் வாருங்கள் அன்பானவர்களே!” என்றார். உடனே பறவைகள் அமைதியடைந்து முனிவரின் காலடியில் சாதுவாகச் சென்று அமர்ந்தன.

முனிவர் கூறினார்: “இந்தப் பறவைகளுக்கு நான் அளித்ததெல்லாம் அன்பு மட்டுமே! ஓ அரசனே! அன்பின் சக்தியை உணர்ந்து கொள். அதிகாரத்தின் மீதான மோகம் உன் கண்களை மறைத்து உன்னை கொலைக்கும் அஞ்சாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

இந்த பறவைகள் உன்னைக் கொன்றிருக்கவும் கூடும்; ஆனால் அவை என்னை நேசிப்பதால் அவ்வாறு நிகழவில்லை. நான் கூட அவைகளை ஒரு அரசனைப் போலவே ஆள்கிறேன்.