வகுப்பு 14 – உணவும் எண்ணமும்

வகுப்பு 14 – உணவும் எண்ணமும்
உணவு பற்றிய கீதா ஸ்லோகம்
கதை
நாம் உண்ணுவதையே எண்ணுகிறோம்

ஒரு காலத்தில் கர்னாடகத்தில் பக்தி கொண்ட பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் பண்டிதர். அவருக்கு நல்ல ஒரு மனைவி வாய்த்தாள். இந்த உயர்ந்த மனிதர் நற்பண்புக்குப் பெயர் பெற்றவர்.

ஒரு நாள் துறவி ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து தர்மம் அளிக்குமாறு கேட்டார். இதனால் பிராமணருக்கு மிகுந்த மனமகிழ்ச்சி உண்டாயிற்று. அவருக்கு தர்மம் அளித்த பிறகு துறவியை மீண்டும் தனது வீட்டுக்கு உணவுண்ண அழைத்தார்.

அடுத்த நாள் காலை பிராமணர் துறவிக்காக தனது வீட்டை மிகவும் அழகாக அலங்கரித்தார்.

ஆனால் அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமற் போனதால் அவர்களால் துறவிக்குச் சமைக்க இயலாமல் போனது.

அவர்களுடைய அருகாமை வீட்டுக்காரர் நல்லவர். அவர்கள் உணவு தயாரிக்க உதவுவதாகக் கூறி வீட்டுக்கு வந்து உணவு சமைத்துக் கொடுத்தார்கள். துறவி வந்து உணவு உட்கொண்டார். அனைவரும் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். எவ்வாறு இருந்தாலும் துறவி ஒரு விஷயத்தில் மன நிறைவு கொள்ளவில்லை. அவர் உணவு உட் கொள்ளும் சமயத்தில் தனது தட்டின் அருகே இருந்த வெள்ளிக் கோப்பையை திருடிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அவர் அதை எடுக்கக் கூடாது என்று கடின முயற்சி எடுத்தும் கூட அதை யாரும் பார்க்காதபோது எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். உணவுண்டு முடித்த பிறகு வெள்ளிக் கோப்பையுடன் வீடு போய் சேர்ந்தார்.

தனது வீட்டுக்குச் சென்ற துறவியால் உறங்கவே இயலவில்லை. அவர் மிகவும் தாழ்வாக எண்ணினார். அவர் வெள்ளிக் கோப்பையைத் திருடியதற்காக மிகவும் வருந்தினார். அடுத்த நாள் காலை பிராமணரின் வீட்டுக்கு ஓடினார். அங்கே சென்றவுடன் பிராமணரின் கால்களில் விழுந்தார். அவரது வெள்ளிக் கோப்பையை பிராமணரிடம் திரும்பத் தந்தார். அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இத்தகைய செயல் புரிந்தமைக்காக மிகவும் வருத்தம் தெரிவித்தார்.

துறவி பிராமணரிடம் “முதன்முறை உங்கள் வீட்டில் உணவு ஏற்று உண்டபோது இத்தகைய தீய எண்ணம் கொள்ளவில்லை. இரண்டாவது முறை உணவு ஏற்கும்போதோ திருட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது” என்றார்.

பிராமணர் முதன் முறை தமது மனைவியார் சமையல் செய்தார் என்றும் உணவு உட்கொள்வதற்கான பிரார்த்தனையைக் கூறினார் என்றும் தெரிவித்தார். இரண்டாவது நாள் அடுத்த வீட்டு அம்மையார் சமையல் செய்ததாகவும் தெரிவித்தார்.

பிறகே பிராமணர் அண்டை வீட்டு அம்மையார் திருடும் குணம் கொண்டவர் என்றும் ஒரு நாளும் பிரார்த்தனை புரிந்ததில்லை என்றும் பல முறை பொருட்களைத் திருடிச் சென்றிருக்கிறாள் என்றும் தெரிந்தது.

ஆகவே, அண்டை வீட்டம்மையார் தயாரித்த உணவை உண்டதால் துறவிக்குத் திருட வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.

ஆகவே, நாம் எப்பொழுதும் ஸாத்வீக உணவையே உண்ணவேண்டும்.