வகுப்பு 13 – பணிவு

வகுப்பு 13 – பணிவு

பணிவு என்பதென்ன? அனைவர் மீதும் பேச்சு மற்றும் செயல்பாட்டில் நல் மனித தன்மையுடன் குறிப்பாக பெரியவர்களிடம் நடந்து கொள்வதே பணிவு எனலாம்.

யாரெலாம் பணிவான குழந்தைகளாகின்றனர்? பணிவான குழந்தை, ஒவ்வொன்றையும் உற்சாகம் மற்றும் உதவிகரமாக இருக்கும் விதத்தில் ஏற்கும் விதமாகக் கூறும். செயல்பாட்டில் பணிவு என்பது மற்றவர் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருத்தல், உதவிகரமாக இருத்தல், எதைச் செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் செய்தல்.

ஒரு பணிவான குழந்தை மற்ற குழந்தைகளைப் போல வேடிக்கையாயிருக்கும்; ஆனால் சின்னஞ்சிறு விஷயங்களுக்காகக் கத்துவதாகவோ அல்லது தலைகவிழ்வதாகவோ ஒருபோதும் இருப்பதில்லை.

நாம் ஏன் பணிவாக இருத்தல் வேண்டும்?

மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறோமோ அதையே பிறருக்கு ஆற்ற வேண்டும். நாம் யாராவது சிலர் நம்மிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவோமா? இல்லை அல்லவா! இதுவே மற்றவர்கள் கூட பிறரிடம் விரும்புவதும்.

ஒருபோதும் யாரிடமும் சத்தமிடாதீர். ஒருமுறை உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை மீளப் பெறுதல் என்பது ஒருபோதும் இயலாத ஒன்று.

“தயவு செய்து”, “நன்றி”, “மன்னியுங்கள்” என்பது போன்ற சொற்களை நினைவில் கொள்ளுங்கள். இவை யாவும் மாய வித்தைச் சொற்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு உதவக் கூடியவை.

கதை
பேச்சாளரை வெளிக் கொணரும் ரகசியம் அவரது வார்த்தைகளே!

ஒரு காலத்தில் கண் பார்வையற்ற விவசாயி ஒருவர் தனது வயலில் அறுவடைப்பணியினை கடுமையாகச் செய்து கொண்டு இருந்தார். அவர் கண் பார்வையற்றவராக இருந்ததால் யாரோ ஒருவர் தம்மை அணுகுவதை அறியவில்லை. திடீரென உரத்த முரட்டுத்தனமான குரல் ஒன்று கேட்டதால் அதிர்வடைந்தார். “ஏய்! பழுதையே! சிப்பாய்கள் இந்த வழியாக அணிவகுத்துச் சென்றதைக் கேட்டாயா?” அவர் பதில் உரைத்தார்: “இல்லை சிப்பாய் அவர்களே! என்னுடைய அறுவடை இயந்திரம் மிகவும் இரைச்சல் உண்டாக்குகிறது.”

இரண்டாவது ஒரு மனிதன் அவர் அருகே வந்து, “பார்வையற்ற மனிதரே! உமது வாயைத் திறவுங்கள். என்னிடம் கூறுங்கள். இந்த வழியாக சிப்பாய்கள் அணி வகுத்துச் சென்றார்களா?” என்றான். மேலே கூட தலையை உயர்த்தாமல், “இல்லை தளபதி அவர்களே! நான் என் வேலையில் மும்முரமாக இருந்தேன்” என்று பதில் அளித்தார்.

பிறகு சீக்கிரமாகவே அவர் மற்றுமொரு குரலைக் கேட்டார்.

“ஐயா! சில சிப்பாய்கள் இந்த வழியாக அணி வகுத்துச் சென்றதைக் கேட்டீர்களா?” அந்த குரலின் உயர்வையும் சொற்களையும் கொண்டு விவசாயி அவர் யாரென அடையாளம் கண்டு கொண்டார். எனவே, “மன்னியுங்கள் மந்திரி ஐயா அவர்களே! எனது மனது என் வேலையிலேயே ஆழ்ந்து இருந்து விட்டது” என்றார்.

இறுதியாக இன்னும் ஓரு நபர் அருகே வந்து, தம் கரத்தை அவருடைய தோளில் வைத்து இனிமையாக ஆனால் கம்பீரமாக, “எனதருமையானவரே! தயவு செய்து கூறுங்கள் சிப்பாய்கள் இவ்வழியே அணி வகுத்துச் சென்றதைச் செவியுற்றீர்களா?”

வார்த்தைகள் ஒருவரது உயர்வான நிலையை காண்பிக்கவே செய்கின்றன. பார்வையற்ற மனிதர் அரசனை அடையாளம் காண முடிந்தது. “இல்லை மேன்மை மிகுந்த அரசர் அவர்களே! நான் அணிவகுத்துச் செல்லும் நபர் யாரையும் ஒரு போதும் செவியுறவில்லை!”

நாவே உண்மையான உருவைக் காட்டும் அடையாளமாகும். வார்த்தைகள் உங்கள் உயர் நிலையை, பண்பைக் காண்பித்து விடும். நீங்கள் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.

பாடல்
இரண்டு சிறிய மாய வார்த்தைகள்

இரண்டு மாய வார்த்தைகளாம்! எதையும் திறக்கும் எளிதாமாம்! வார்த்தையில் ஒன்றே “நன்றி”யாமாம்! இரண்டாவதோ “தயவு செய்து”! ஆச்சரியங் கொள்வீர் நீவிருமே! இவ்விரண்டும் என்ன செய்து விடும்! வசீகரம் செய்யும் எனக்காக! வசீகரம் செய்யும் உனக்காக! வெண்ணெய் வேண்டும் சமயத்தில்; தயை கூர்ந்து வெண்ணெய் தாவெனச் சொல்! நல்ல நடத்தை என்பதெல்லாம் ஒருபோதும் பழையன ஆகிவிடா! வெண்ணெய் கிடைத்த மறுகணமே நன்றி என்றே கூறிடுவாய்.