வகுப்பு 12 – கருணை

வகுப்பு 12 – கருணை
கதை

ஆதி சங்கரர் தீர்த்த யாத்திரை சென்று கொண்டிருக்கையில் நீர் வற்றிப் போன குளம் ஒன்றையும் அங்கே நீர் இல்லாமையால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மீன்களையும் காண நேர்ந்தது. அவர் அருகாமையில் இருந்த கிராமத்தினரிடம், “தயை செய்து எனக்கு சிறிது நீர் தாருங்கள். இக்குளத்தில் அதை ஊற்ற விரும்புகின்றேன்” என்றார். கிராமத்தினர் சிரித்தார்கள். “நாங்களே நீர் இன்றி பன்னிரண்டு ஆண்டுகளாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், ஸ்வாமி. ஆனால் நீங்கள் குளத்தில் உள்ள மீன்களுக்காக நீர் கேட்கிறீர்கள். எங்களுக்குத் தேவையான நீரையே பத்து மைல்கள் தூரத்தில் இருந்து கொண்டு வர வேண்டியுள்ளது” என்றார்கள். “சரி! பத்து மைல் தூரத்தில் உள்ள அந்த இடத்தை யாராவது காண்பிக்க இயலுமா” என்று கேட்டார். அவ்வாறே கிராமத்தில் இருந்து ஒருவரை அழைத்துக் கொண்டு அங்கு சென்று தன் கமண்டலம் நிறைய நீர் கொண்டு வந்தார். கொண்டு வந்த நீரைக் குளத்தினுள் விட்டார். அதில் இருந்த மீன்கள் யாவும் குதூகலத்தால் குதித்தன. உடனே மின்னலும் இடியுமாக ஆரம்பித்து மிகவும் கனமான மழை பொழியலாயிற்று. ஆதி சங்கரர் அவர்களிடம், “பன்னிரண்டு ஆண்டுகளாக நீங்கள் நீரின்றி அவதிப்படுவதாகக் கூறினீர்கள்.