வகுப்பு 11 – நட்பு

வகுப்பு 11 – நட்பு
கதை
உங்களுடைய நண்பர்களிடையே விழிப்பாக இருங்கள்

ஓருமுறை வேடன் ஒருவன் இரண்டு அழகிய கிளிகளைப் பிடித்தான். அவற்றுள் ஒன்றை கசாப்புக் கடைக்காரருக்கும் மற்றொன்றை ஹரிதாஸர் ஒருவருக்கும் விற்றுச் சென்றான். ஹரிதாஸர் என்பவர் பக்தர்களைக் கூட்டி இறைவன் ஹரியின் புகழைப் பாடல்கள் மற்றும் கதைகளால் வர்ணித்து சாதனை புரிபவர். ஆறு மாதங்கள் கழிந்தன. ஒருமுறை வேடன் கசாப்புக் கடை வழியாக செல்ல நேரிட்டது. அவன் முன்பு தான் விற்றுச் சென்ற கிளியைப் பற்றி எண்ணினான். கடைக்குள் காலடி எடுத்து வைக்க முற்பட்டான்.திடீரென அவன் கிளியின் கிறீச்சிடும் குரலைக் கேட்டான். “பிடி, கொன்று செதுக்கு, துண்டு போடு”

வேடன் கிளி கூறிய வார்த்தைகளை எண்ணி அசைபோட்டவாறே கசாப்புக் கடையில் இருந்து அகன்றான். இந்நிலையில் இன்னொரு கிளியைப் பற்றி அறியவும் ஆவல் கொண்டான். ஆகவே, ஹரிதாஸரின் ஆசிரமத்திற்குச் சென்றான். கூண்டுக்குள் இருந்த கிளி சந்தோஷத்தால் இறக்கைகளை அடித்துக் கொண்டு, “வாருங்கள்! வாருங்கள்! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!” என்று கூவியது. வேடன் கிளியைப்பார்த்து அது பேசும் மொழிகளைக் கேட்டதும் மனமகிழ்ச்சியுற்றான்.

அவன் தன் குடிசையை நோக்கி நடக்கையில் இரண்டு கிளிகள் பேசியவற்றின் மூலம் சொற்கள், சுபாவம் மற்றும் குரல் யாவும் இரு துருவங்களைப் போல சம்பந்தமில்லாதிருப்பதை உணர்ந்து ஆச்சரியம் கொண்டான். ஒரு கிளியின் வார்த்தைகள் அவமதிப்பதிற்கு உரியதாகவும் அருவருப்பாகவும் இருந்தன. மற்ற கிளியின் வார்த்தைகளோ இனிமையுடனும் சாந்தமாகவும் புடம் போட்டதாகவும் இருந்தன. அந்தக் கிளிகள் வளர்க்கப்பட்ட சூழ்நிலை மற்றும் நிலையான நட்புமே இத்தகைய வேறுபட்ட தன்மையை உருவாக்கியுள்ளன. ஆகவேதான், “உன்னுடைய நண்பர் யார் எனக் கூறு.