வகுப்பு 10 – கனிவு

வகுப்பு 10 – கனிவு
கதை
கனிவான அரசன்

ஒருமுறை மஹாராஜா ரஞ்சித் சிங் ஷேர் இ பஞ்சாப் அதாவது பஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்பட்டவர் தனது அரண்மனைத் தோட்டத்தில் மந்திரிமார்கள் மற்றும் சேவகர்களுடன் உலாவிக் கொண்டிருந்தார். திடீரென எங்கிருந்தோ வந்த கல் ஒன்று அவரது நெற்றியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. இரத்தம் பெருகி வழிந்தது. மந்திரிமார்கள் அச்சமுற்று பதறினார்கள். அவர்கள் தோட்டத்திற்கு வெளியே விரைந்து யார் கல்லை எறிந்திருப்பார்கள் எனக் காணச் சென்றார்கள். சிறிது நேரத்திலேயே அவர்கள் கல்லை எறிந்த குற்றவாளியுடன் ராஜாவிடம் வந்தார்கள்.

அது வயதான ஒரு ஏழை மூதாட்டியாவாள். அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். ராஜா அவளைப் பார்த்து “அம்மா! கல்லை என் மீது ஏன் எறிந்தீர்கள்?” என்றார். அந்த மூதாட்டி பயத்தால் நடுங்கியவாறு, “அரசே! என்னை மன்னித்து விடுங்கள். நான் தங்கள் மீது கல்லை எறிய வில்லை. தாங்கள் இவ்விடத்தில் உலாவிக் கொண்டிருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. என் மைந்தன் மூன்று நாட்களாக உணவின்றி பசியுடனிருக்கிறான். நான் இம் மாமரங்களில் பழுத்த கனிகள் நிறைய இருப்பதைக் கண்டே கல் எறிந்தேன். நான் அதிர்ஷ்டசாலியாக இருந்திருப்பின் கல் பழத்தை விழச்செய்து என் மகனின் பசியை ஆற்ற உதவியிருக்கும். தங்கள் மீது கல் விழுந்ததால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவளாகினேன். மஹாராஜா! தயை செய்து மன்னியுங்கள். என்னைத் தண்டித்து விடாதீர்கள். நான் தங்களைத் துன்புறுத்த எண்ணவில்லை”என்று உரைத்தாள்.

மந்திரிமார்கள் ராஜாவின் இந்த வினோதமான ஆணையைக் கேட்டு ஆச்சரியமானார்கள். “மஹாராஜா! இந்த மூதாட்டி தங்களைக் காயப்படுத்தியிருக்கிறாள். தாங்கள் மட்டும் ஏன் இவள் மீது இந்த அளவுக்குக் கனிவுடனிருக்கிறீர்கள்?” என்றார்கள்.

மஹாராஜா புன்னகை புரிந்து “இந்த மூதாட்டி மாங்கனியை வீழ்த்தி வெற்றியடைந்திருந்தால் அவளது மைந்தனின் பசியாறியிருக்கும். ஆனால், மஹாராஜா தாக்கப்பட நேர்ந்தது. ஒரு மரத்தில் இருந்து பெற உள்ளதைக் காட்டிலும் ராஜாவிடமிருந்து மிக அதிகமானதைப் பெற வேண்டாமா? அவர்களது பசி என்பது எப்போதும் தீர்க்கப் படுதல் வேண்டும்” என்றார்.

மூதாட்டி மகிழ்ச்சி பொங்கக் கண்ணீர் வடித்தாள்; ஆரவாரம் செய்து ராஜாவைக் கொண்டாடினாள்.