சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா

குச்சிகளைக் கற்றையாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நூல் அல்லது ரப்பர் பேண்டால் இறுகச் சுற்றிப் பிணையுங்கள். இப்போது உங்கள் பலத்திற்கு ஒரு சோதனை. குச்சிகளின் கற்றையை ஒடிக்க முயலுங்கள். நம்மில் யாராலும் ஓடிக்க இயலாது. கற்றையைப் பிரித்து விடுங்கள். இப்போது ஒவ்வொரு குச்சியையும் எளிதாக உடைத்து விட முடியும். ஒரே நேரத்தில் ஒரு குச்சியை ஒடிப்பதற்கு அதிக பலம் தேவையில்லை என உணர்வோம்.

ஒரு தேசம் என்பது கூட குச்சிகளின் கற்றையைப் போன்றதே! ஒவ்வொரு மாநிலமும் ஒரு குச்சியாகும். மாநிலத்துக்குள் என எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நபரும் ஒரு குச்சியைப் போன்றவர். அனைவருமாக ஒன்றுபட்டு இருக்கையில் நாம் குச்சிகளின் கற்றையைப் போன்றவராவோம். யாராவது ஒருவர் நம்மை உடைக்க இயலுமா? ஆனால் நாம் ஒன்றிணைந்து நிற்காவிடில் நாம் ஒற்றைக் குச்சியைப் போன்ற பலவீனராவோம். அதுவே நம்மை ஒருவர் பின் ஒருவராக எளிதாக உடைத்துவிடக் காரணமாகிவிடும்.

எப்போதும் குச்சிகளின் கற்றையையே நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இந்திய நாடு எப்போதும் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து வளர வேண்டும்; எப்போதும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்.இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள், பழக்க வழக்கங்கள் என்று இருந்தாலும் அனைத்துக்கும் மேலாக நாம் இந்தியர்கள் என்பதையும் முதலில் இந்தியர் என்பதையும் எண்ணி ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்.

சுதந்திர தினப் பாடல்

தங்கக் குருவிகள் தங்கிவிடும் கூடே எங்கள் பாரதமாம்! சத்யம், தர்மம், அஹிம்சையுமாய் வாழும் எங்கள் பாரதமாம்! புனித பூமியில் ரிஷிகள் முனிவர் கடவுளர் பெயரை உச்சரிக்கும் பூமியே பாரதமாம்! ஒவ்வொரு குழவியும் கிருஷ்ணனாவான்! ஒவ்வொரு குழவியும் ராதையாவாள்! கதிரவன் தன் முதற் கதிரை வீசிடும் பூமி பாரதமாம்! புண்ணிய பூமியாம் இப்புவியில் விழவும் அழகும் விசித்திரமாம்! தீபாவளியும் ஒருபுறமாமாம்! திரு ஹோலி நாளும் மறுபுறமாம்.