சிவராத்திரி

கைலாசராணா, சிவசந்த்ர மௌலி பணீந்த்ரமாதா முகுடி ஜலாலி காருண்ய சிந்து பவதுக்கஹாரி துஜவீன சம்போ, மஜகோனதாரி
கதை – நீலகண்டன்
அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது, பதினான்கு விதமான விலை மதிப்பற்ற பொருட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒரு தருணம், ஒரு குவளை முழுவதுமான விஷம் வெளிப்பட்டது. அந்த விஷம் எவ்வளவு கொடியது என்றால் அதன் ஒரு திவலை கூட இந்த உலகம் முழுவதையும் அழித்து விட முடியும். இப்பொழுது பிரச்னை என்னவென்றால் அதனிடமிருந்து எப்படி விடுபடுவது? அப்படிபட்ட அபாயகரமான பொருளை எங்கு வைப்பது? தேவர்களும், அசுரர்களும் மஹாவிஷ்ணுவைத் தஞ்சம் அடைந்தனர். சிவபெருமான் எவ்வளவு வலிமை வாய்ந்தவர் என்பதைக் காட்டும் பொருட்டு, மஹாவிஷ்ணு, அவர்களை சிவனிடம் அனுப்பினார். http://demo3.esales.in:8081/ அனைவரும் அந்தக் குவளை விஷத்தையும் வெகு ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு கைலாய மலையை அடைந்தனர். சிவன் மோன நிலையில் இருந்தார். அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே கூறி அவரது உதவிக்கு இறைஞ்சி நின்றனர். முறுவலித்தவாறு சிவன் உறுதியளித்தார். ஒரே முழுங்கில் விஷத்தை விழுங்கினார். அது தொண்டை வழியாக உள்ளே இறங்கியது. ஆனால் அந்த விஷம் அவரது ரத்தத்துடன் கலந்து, அவரது பாதம் பூமியில் படியும்போது உலகமுழுதும் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதை சிவபெருமான் அறிவார். ஆகவே, அவர் விஷத்தை தொண்டைக்குக் கீழ் இறங்க விடவில்லை. தொண்டைக்குழியிலேயே நிறுத்தினார். அவரது தொண்டை குழி நீல நிறமானது (அதுவே பின்னர் ‘நீலகண்டர். என்ற பெயர் காரணமானது). விஷம் அவருக்கு எரிச்சலை தந்தது. அவருமனைத்து பரிகாரங்களும் செய்து குளுமையாக்க முயன்றார்.
முதலில் நிலவைத் தரித்தார். ஆனால் அதனால் எரிச்சலைத் தணிக்க இயலவில்லை. பிறகு தனது ஜடாமுடியில் கங்கையை தரித்தார். இருப்பினும் அதுவும் எந்த பலிதமும் இல்லாமல் போய்விட்டது. கடைசியில், ராம நாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார். உடனே அது விஷத்தின் எரிச்சலைத் தணித்தது. அதனால் தான் இறைவன் நிலவை முன்னுச்சியில் தரித்திருக்கிறார். அவரே கருணைக்கடல். ஏனென்றால் அவர் தமது பக்தர்களிடம் கொண்ட கருணையினால் விஷத்தை விழுங்கினார்.