வகுப்பு 9 – விலங்குகள் எவ்வாறு நமக்கு உதவுகின்றன மற்றும் அவைகளிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்.

வகுப்பு 9 – விலங்குகள் எவ்வாறு நமக்கு உதவுகின்றன மற்றும் அவைகளிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்.

விலங்குகள் நமக்கு பல வழிகளில் உதவுகின்றன. நாய்கள் கண்பார்வை அற்றவர்களுக்கு வழிகாட்டியாக உதவுகின்றன. அவை பாதையை காட்டுகின்றன. காவல் நாய்கள் திருடர்களை பிடிப்பதற்கு காவல்துறைக்கு உதவுகிறது. யானைகள் கடினமான மரங்களை தூக்குவதற்கு உதவுகின்றன. சுமைகளை தூக்கவும், வண்டியிழுக்கவும் காளைகள், குதிரைகள், கழுதைகள் போன்ற விலங்குகள் உதவுகின்றன. விலங்குகளிடமிருந்து நாம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

பாடல்

ईश सृष्टि मे सब कुछ सुंदर जीव शिखावे सेवासर सबमे परम प्रभू का दर्शन करलो बारबार ये है जीवों का संसार , इनमे भी है अच्छी बात हिलते फिरते सि खलाते हैं हमको जग का सुंदर सार बिल्ली खुशी से गाती है जब वो मुंह को धोती है (म्यां म्यां ) जो नहीं मुंह को धोता है गंदा बच्चा होता है बोलो बोलो बच्चों हमें दि न में कि तनी बार दांत साफ करना है ? एक बार , दो दि न में एक बार या दि न में दो बार ?

काली कोयल पर सबको प्या र वो जाने वाणी का सार ( कू कू ) मीठी बोली उसका राज ,वश में हो जा ये संसार बोलो बोलो बच्चों हमरी बोल कैसी होनी चाहिए speak softly, speak sweetly and speak truth कुत्ता रहे सजग होशियार कुत्ता घर का है रख़वाल (बौ बौ) कोई घर में घुस न जाए लेकर मन में चोर विच ार हमें बुरे विच ारों से बचकर रहना चाहिए अच्छे विच ोरों और लोगों को स्वा गत करना चाहिए मुर्गा ख़ुशी से गाता है जब वो बांग लगता है (कोकरको) जो भी जल्दी उठता है अच्छे स्वा स्थ्य को पाता है बोलो बोलो बच्चों हमें कि तने बजे उठना चाहिए कौआ जब भी रोटी पाए लेता सबको पास बुलाए (कां कां ) हम भी जब कुछ पा जाए हिल मि ल बांट के खा जाए मछली का है निर्म ल प्या र पानी उसका प्राण धार (साफ साफ) बिना प्रभु के जीवन भी प्या रे बच्चों है बेकार

“உங்கள் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே விலங்குகளிடம் அளவுகடந்த அன்புகாட்டக் கற்றுக்கொடுங்கள்.”

சில படைப்புகள் சிறியனவாகவும், சில பெரியனவாகவும் இருக்கும். ஆனால் நாம் அனைத்து விலங்குகளிடமும் அன்பு செலுத்தவேண்டும். விலங்குகளும் நம்மை போலவே அனைத்து உணர்ச்சிகளும் உடையன என்பதை சில மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. விலங்குகளும் சோர்வடைந்துவிடும் எனவே அதற்கும் ஓய்வு தேவை. அவைகள் தாகம் அடையும் எனவே அருந்த நீர் தரவேண்டும். அவைகளுக்கும் பசி எடுக்கும் எனவே தேவையான உணவை வழங்கவேண்டும்.

சில மனிதர்கள் மிருகங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அவ்விலங்குகளும் மனிதர்களைப் போலவே வலிகளை உணர்கின்றன. அபத்துல் பாபா “விலங்குகளை அடிப்பது என்பது மனிதர்களை அடிப்பதை விட மிக மோசமானது, ஏனென்றால் விலங்குகளால் தங்கள் வலிகளை வெளிப்படுத்த முடியாது, யாரிடமும் சென்று குறை கூறவும் முடியாது” என்று கூறுகிறார். மேலும் அவர், “விலங்குகளை நேசியுங்கள் உங்கள் அருகில் உள்ள மனிதர்களை விட அதிகமாக விலங்குகளை நேசியுங்கள். சிறு வயதிலிருந்தே உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொடுங்கள். விலங்குகளுக்கு காயம் ஏற்படும்போது அதை குணப்படுத்தவும், தாகத்திரற்கு நீர் கொடுக்கவும், பசி எடுக்கும் பொழுது உணவு தரவும் கற்றுக்கொடுங்கள்” என்கிறார்.

அதே சமயம் கொடிய மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாம்பு, ஓநாய் போன்ற மிருகங்களைக் கண்டால் ஒதுங்கிவிட வேண்டும். அவைகளும் இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்டவையே எனவே அவற்றையும் துன்புறுத்தக் கூடாது.

செயற்பாடு
  • குழு A (சிறு குழந்தைகள்)
  • குழந்தைகளை அவர்களுக்குத் தெரிந்த விலங்குகளின் படங்களை வரைய சொல்லுக. அல்லது அவர்களது கற்பனையில் உள்ள விலங்குகளின் படங்களை வரைய சொல்லுக. எடுத்துக்காட்டு: மான்ஸ்டர் மற்றும் டைனோசரஸ்.
  • குழு B மற்றும் C (பெரிய குழந்தைகள்) “விலங்கு வரிசைகள்”

குழந்தைகளை வட்டமாக அமர வைக்க வேண்டும். அவர்களிடம் 50x200cm அளவு காகிதம் மற்றும் பென்சிலை தரவேண்டும். அந்தக் காகிதத்தின் மேற்பகுதியில் ஒரு விலங்கின் தலை மற்றும் கழுத்துப் பகுதியை வரைய வேண்டும். அனைவரும் வரைந்த பின்பு காகிதத்தை வெளிப்புறமாக மடித்து இடபுறம் உள்ள அடுத்த குழந்தையிடம் தரவேண்டும். இப்பொழுது அக்குழந்தை அந்த கழுத்திற்குப் பொருத்தமான உடலை வரைய வேண்டும், பிறகு அதை இடதுபுறமுள்ள அடுத்த குழந்தையிடம் தரவேண்டும், அதற்குத் தகுந்த பாதங்களை இந்த குழந்தை வரைய வேண்டும். தற்பொழுது அனைவரும் அக்காகிதங்களைப் பிரித்து பார்த்து வரையப்பட்டுள்ள விலங்கினைக் கண்டு மகிழலாம்.