வகுப்பு 8 – மரங்கள்

வகுப்பு 8 – மரங்கள்
மரங்கள்

நாம் மரங்களின் பகுதிகளை பார்ப்போம். http://demo3.esales.in:8081/ தண்டுப்பகுதி, இலைகள், கிளைகள், மொட்டுக்கள், மலர்கள் மற்றும் பழங்கள்.

 • மரங்கள் நமக்கு எல்லா வகைகளிளும் பயன் தருகின்றன.
 • மரங்கள் நாம் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் வாயுவை தருகின்றன.
 • மரங்கள் சுற்றுபுறத்தைக் குளுமையாக வைத்திருக்க உதவுகின்றன.
 • நாம் மரங்களிலிருந்து கனிகள், மலர்கள் மற்றும் மரப்பொருட்கள் பெறுகிறோம்.
 • மரங்கள் நிழல் தருகின்றன.
 • மரங்கள் விலங்குகள் தங்குவதற்கு இடம் தருகின்றன.
 • மரங்கள் அதிகமான மழையைக் கொடுக்கின்றன. மரங்களின் ஒவ்வொரு பகுதியும் இன்றியமையதாதது.
 • வேர்கள் மண்ணின் வளத்தை தக்க வைத்துக் கொள்ளவும், மண்ணில் தண்ணீரை சேமிப்பதற்கும் உதவுகின்றன.
 • மலர்களிலிருந்து கிடைக்கும் தேன் பறவைகள் மற்றும் பூச்சியினங்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கும், வாசனைப் பொருட்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வண்ணங்கள் தயாரிப்பதற்கும் பூக்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
 • மரங்களின் பட்டைகள் மருத்துவ பொருட்கள் தயாரிப்பதற்கும் வரைவதற்கும் பயன்படுகின்றன.
 • மரக்குச்சிகள் மற்றும் இலைகள் விறகாக பயன்படுகின்றன.
 • மரங்கள் இயற்கையின் ஒரு பகுதி என்பதை நினைவு கூறுங்கள்.
 • நாம் எப்படி மரங்களுக்கு தீங்கு விளைவிக்கிறோம்? ஆனால் மரங்கள் எப்பொழுதும் நமக்கு இரக்கத்தை மட்டுமே காட்டுகின்றன. ஒருவன் மரத்தின் மீது கல்லை எறிந்தால் அது அவனுக்குப் பழங்கள் அல்லது பூக்கள் அல்லது இலைகளைத் தருகின்றன.
 • நாம் மரங்களை கொடூரமான முறையில் வெட்டினால் கூட அது நமக்கு மரச்சாமான்களான மரச்சட்டம், மரப்பலகை போன்றவற்றைக் கொடுக்கிறது.
 • நாம் ஒரு மரத்தை வெட்டினால் கூட பலவகையான பூச்சிகள், மற்றும் சிறிய விலங்குகள் தங்களுடைய வீடுகளை இழந்துவிடும். அத்துடன் மரங்களின் அனைத்து வகையான பயன்களையும் நாம் இழந்துவிடுவோம்.
 • நாம் காடு முழுவதும் உள்ள மரங்களை வெட்டினால் அதாவது மரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறைவாகவும் வெயில் அதிகமாகவும் இருக்கும். பச்சை உலகமானது பழுப்பு உலகமாக மாறிவிடும். குளுமையான உலகமானது வெப்பமான உலகமாக மாறிவிடும். ஆறுகள் மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர் குறைந்து அவை முழுமையாக வற்றிவிடும்.
 • உன்னால் என்ன செய்ய முடியும்? நீ உலகைக் காப்பாற்றுவதற்குக் கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும். உலகத்திற்கு மரங்கள் நிறைய தேவை. நீ மரக் கன்றுகளை நட்டு, அதனை பராமரிக்க வேண்டும்.http://demo3.esales.in:8081/ ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும்.