வகுப்பு 51 – ஒழுக்கம்

வகுப்பு 51 – ஒழுக்கம்
கதை

நான்காவது சீக்கிய குருவாகிய குரு ராம்தாசிற்கு நிறைய சீடர்கள் இருந்தனர் ஒவ்வொரு சீடரும் அவரவர் வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். அர்ஜுன் தேவ் என்பவர் அவரது சீடர்களில் ஒருவர். அவர், அவருக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டுள்ளதோ அதை அர்ப்பணிப்புடன் மும்முரமாக செய்து முடிப்பார். அந்த குருவிடம் அவர் சீடராக சேர்ந்ததிலிருந்து அவருக்குப் பாத்திரம் தேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தனர். மற்ற சீடர்களனைவரும், அவரிடம், “நீ ஏன் பாத்திரத்தை மட்டும் தேய்த்துக் கொண்டிருக்கிறாய்?, குருவிற்கும் சில வேலைகளைச் செய்யலாமல்லவா?” என்று கேட்டனர். அதற்கு அர்ஜுன் தேவ், “குருவின் கட்டளையின் பேரில்தான் இந்த பாத்திரம் தேய்க்கும் வேலைகளை நான் செய்கின்றேன்” என்பார். “ஆனால் பாத்திரம் மட்டும் தேய்ப்பது முழு சேவையை உள்ளடக்கியது அல்ல, நீ மற்ற வேலைகளையும் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் குரு உன்னை பார்த்து மகிழ்ச்சியடைவார்“ என்று கூறினர். அர்ஜுன் தேவ் அதற்கு “குருவை மகிழ்ச்சியூட்ட நான் முயற்சி செய்யவில்லை. என்னுடைய வேலை அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகும்” என்றார். மற்ற சீடர்கள், அவருக்கு ஆலோசனை வழங்குவது நேரத்தை வீணாக்குவதாகும் என்று நினைத்து அமைதியாகச் சென்றனர்.

காலம் கடந்து சென்றது. எப்பொழுதெல்லாம் சமய உரை அல்லது பிரார்த்தனைக் கூட்டம் நடக்கின்றதோ அப்பொழுது கூட அர்ஜுன் தேவ் அவருடைய வேலையை மிகவும் கவனத்துடன் செய்து கொண்டிருந்தார். குரு ராம்தாஸ் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியை அடைந்தார். ஒவ்வொரு சீடரும் அவருக்குப் பின்னால் தலைமை பொறுப்பு அவர்களிடம் தான் வரும் என்று நினைத்தனர். ஏனென்றால் அவர்களிடம் தான் அந்த வேலைக்கேற்ற தகுதி உள்ளது என்று நினைத்தனர். ஆனால் குரு தனக்குப் பிறகு யார் குருவாக வர வேண்டும் என்ற அவரது விருப்பத்தை உயில் எழுதி வைத்தார். அவர் எழுதிய உயில் அவர் இறந்த பிறகு திறந்து பார்க்கப்பட்டது. குரு ராம்தாஸ் இறந்துவிட்டார். ஒவ்வொருவரும் அவர் உயிலில் என்ன எழுதி இருக்கிறார் என்பதை அறிய ஆவலுடன் இருந்தனர்.

ஒவ்வொருவரும் அவரது அதிர்ஷ்டத்தை எண்ணிக் காத்திருந்தனர். உயில் திறக்கப் பட்டது. அர்ஜுன் தேவை வாரிசாக அறிவித்திருந்தார். ஒவ்வொருவரும், குறிப்பாக மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர்கள் மிகவும் ஆச்சரியப் பட்டனர். சில சீடர்கள் எப்படி அர்ஜுன் தேவ் குருவின் வாரிசாக ஆனார். அவரிடம் மற்ற சீடர்களை விட அதிகமான தரம் இல்லை என்று நினைத்தனர். ஞானிகள் மட்டும், “குருவின் பார்வையில் அர்ஜுன் தேவ் மட்டும் தான் தகுதி வாய்ந்த வாரிசு என்று நினைத்திருக்கிறார்” என்றனர். சீடர்கள் அவர்களிடம், “அவர் எப்பொழுதும் பிரார்த்தனை செய்யவில்லை. மத சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவில்லை. அவர் பாத்திரங்களை மட்டும்தான் தேய்த்தார். வேறெதுவும் செய்யவில்லை. பிறகு அவரை எப்படி வாரிசாக நியாயப்படுத்த முடியும்” என்றனர். அதற்கு, “நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் தான் பிரதான குணங்கள்.

உண்மையில் கூறப்போனால், ஒருவருடைய தகுதிக்கான குணங்கள் என்பவை அவருடைய நம்பிக்கை, முழுமையான பக்தி மற்றும் ஒழுக்கமே ஆகும். அவருடைய அறிவோ ஞானமோ அல்ல” என்றனர்.

குழந்தைகளுடன், சூரியன், சூரியோதயம், சூரிய அஸ்தமனம், சூரியக் குடும்பம் போன்ற இயற்கையின் ஒழுக்கத்தையும், மனித உடலின் ஒழுக்கங்களான, உடல் வெப்பநிலை , இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் பலவற்றைப் பற்றியும் விவாதிக்கவும்.
விளையாட்டு

குழந்தைகளை வரிசையாக நிற்க வைக்கவும். சாலைக் காவலராக நியமிக்கப்பட்ட குழந்தை “ பச்சை” என்று கூறினால், உடனே குழந்தைகள் எல்லைக் கோட்டிற்கு ஓடவேண்டும். “சிவப்பு” என்று கூறினால், இருக்கும் இடத்திலேயே நிற்கவேண்டும்.