வகுப்பு 50 – அணுகுமுறை

வகுப்பு 50 – அணுகுமுறை
சிறந்த அணுகுமுறை:

ஒருமுறை ஒரு பறவை தேனீயிடம் “நீ மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத் தேனைச் சேகரிக்கிறாய். ஆனால் மனிதன் அதை திருடிக் கொள்கிறான். அதனால் நீ வருத்தம் அடையவில்லையா?” என்று கேட்டது. தேனி அதனிடம் “அவன் என்னிடம் தேனை மட்டும் தான் திருடுகிறான். நான் தேனை சேகரிக்கும் முறையை அல்ல” என்று கூறியது.

கதை : ஒவ்வொருவரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

ஒரு மனிதன் காலையில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் . அவர் அப்பொழுது அலை வரும் போது நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் வருவதையும், அலை திரும்பி செல்லும்போது கரையிலேயே தங்கி விடுவதையும், சூரிய கதிர்கள் அவைகள் மீது படும் போது அவைகள் இறந்துவிடுவதையும் பார்த்தார். அந்த அலைகள் வரும்போது அவை உயிர் வாழ சாத்தியம் இருப்பதாகவும் நம்பினார். அவர் சில அடிகள் முன்னால் வைத்து நட்சத்திர மீன்களை எடுத்து தண்ணீரில் தூக்கிப் போட்டார். அவர் திரும்பத் திரும்ப அதனை செய்தார். அவருக்குப் பின்னால் இருந்த மனிதருக்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. அவர் அந்த நட்சத்திர மீனை தூக்கி கடலில் வீசுபவரிடம் “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் எப்படி உதவி செய்ய முடியும்” என்று கேட்டார். “நீங்கள் சில நட்சத்திர மீன்களை கடலில் திரும்ப போடுவதால் என்ன மாற்றத்தை அடைய முடியும்” என்றார். அதற்கு அந்த மனிதன் பதிலளிக்காமல் இன்னும் இரண்டு அடி முன்னால் சென்று இன்னொரு நட்சத்திர மீனை எடுத்து கடல் தண்ணீரில் போட்டு விட்டு “இந்தச் செயல் இந்த ஒரு மீனுக்கு உயிர் கொடுக்கிறது” என்று கூறினார்.

என்ன வித்தியாசத்தை நாம் ஏற்படுத்துகிறோம். சிறியதோ, பெரியதோ அதைப் பற்றி நாம் கவலைப்பட கூடாது. ஒவ்வொருவரும் ஒரு சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தினால் அது பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

மனிதசக்தி:

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனிமனித கடமைகள், கட்டுப்பாடு, மற்றும் பொறுப்புகள் உள்ளன. நமக்கு எப்பொழுதுமே பெறுவதற்கு நிறையவும், பிறருக்கு அளிப்பதற்கு சிறிதே இருப்பதும் போல் ஒரு எண்ணம் உண்டு. எப்போதும் நமக்கு பற்றாக்குறைதான். அதிலும் குறிப்பாக காலம் மற்றும் பணத்தில். நாம் இந்தக் கரையைக் கடந்தால் லட்சக்கணக்கான நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கியிருக்கும். நம்மால் இந்த முழு உலகத்தையும் மாற்ற முடியாது. ஆனால் நம்மால் ஒருவர் நிச்சயம் எவரேனும் ஒருவரின் உலகத்தை மாற்ற உதவலாம்.