வகுப்பு – 49 – அமைதி

வகுப்பு – 49 – அமைதி

ஒருமுறை ஒரு விவசாயி தன்னுடைய கடிகாரத்தை கொட்டகையில் தொலைத்துவிட்டார். அது சாதாரண கடிகாரம் அல்ல. அதில் ஒரு உணர்வு பூர்வமான மதிப்பு இருந்தது. வைக்கோல் போரின் மேலும் கீழும் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் அவர் அதைத் தேடும் பொறுப்பை, கொட்டகைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம், கொடுத்தார். யார் அந்த கடிகாரத்தை கண்டுபிடிக்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதைக் கேட்டவுடன் குழந்தைகள் அனைவரும் வேகமாக கொட்டகையின் உள்ளே சென்று அங்குள்ள வைக்கோல் போரின் உள்ளேயும் அதனை சுற்றியும் தேடியும் கிடைக்கவில்லை. அந்த விவசாயி தேடும் முயற்சியைக் கைவிடும் சமயத்தில் ஒரு சிறுவன் அவரிடம் வந்து மறுபடி ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டான். அந்த விவசாயி அவனைப் பார்த்து, “ஏன் கூடாது? நீ போய் தேடு” என்று அவனுடைய ஆர்வத்தைப் பார்த்து அவனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனால் அந்த விவசாயி அந்த சிறுவனை கொட்டகையில் உள்ளே மீண்டும் அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் கையில் கடிகாரத்தோடு வெளியே வந்தான். அந்த விவசாயி மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து, “மற்ற அனைவரும் கண்டு பிடிக்காத போது நீ மட்டும் எப்படி கண்டுபிடித்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன், “நான் எதுவும் செய்யவில்லை. நான் தரையில் அமர்ந்து கவனித்தேன். அந்த அமைதியான தருணத்தில் அந்தக் கடிகாரத்தின் “டிக் டிக்” ஓசை கேட்டது. ஓசை வந்த திசையில் பார்த்தபோது கடிகாரம் கிடைத்தது”, என்றான்.

நீதி:

எப்பொழுது பரபரப்பான மனதை விட அமைதியான மனது சிறந்த முடிவை தான் எடுக்கும். தினமும் சிறிது நேரமாவது உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால், அது உங்கள் வாழ்க்கையை எண்ணம் போல் அமைத்துக் கொள்ள உதவும். நம்முள் இருக்கும் ஆத்மாவிற்கு தெரியும் தம்மை தாமே குணப்படுத்தும் வழி. ஆனால் அந்த மனதை அமைதிப்படுத்துவது தான் ஒரு சவால்.