வகுப்பு 48 – செயலும் பிரதிச்செயலும்

வகுப்பு 48 – செயலும் பிரதிச்செயலும்
கதை:ஒரு பவுண்ட் வெண்ணெய்

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் தினமும் ஒரு கேக் கடைக்காரருக்கு வெண்ணெய் விற்று வந்தார். ஒரு நாள் கடைக்காரர் விவசாயி கொண்டு வரும் வெண்ணெயின் எடையைச் சோதிக்க விரும்பினார். பரிசோதித்துப் பார்த்ததில் வெண்ணெய் எடை குறைவாக இருந்ததை அறிந்தார். கோபமடைந்த கடைக்காரர், விவசாயியை நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். நீதிபதி விவசாயியைப் பார்த்து, “ நீ ஏதாவது எடைக் கல் உபயோகப் படுத்துகிறாயா?” என்று கேட்டார். அதற்கு விவசாயி, “ ஐயா! நான் வெகுநாட்களாக இந்த கடைக் காரருக்கு வெண்ணெய் விற்று வருகிறேன். அதற்குப் பதிலாக இவரிடம் ஒரு பவுண்ட் ப்ரெட் வாங்கிச் செல்வேன். அந்த ஒரு பவுண்ட் ப்ரெட் வைத்து தான் நான் வெண்ணெயை எடை போடுவேன். தாங்கள் எவரையேனும் குற்றம் சாட்ட வேண்டுமென்றால், அது இந்த கடைக்காரரைத்தான்” என்றார்.

கதையின் நீதி என்ன?

நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அதையே நாம் நம் வாழ்வில் திரும்பப் பெறுகிறோம்.ஒவ்வொரு முறையும் நீ ஒரு செயலை எடுத்துக் கொள்ளும்பொழுது, நீ உன்னையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: நான் செய்யும் இச் செயலில் நீதி இருக்கிறதா? என்பதுதான்.நேர்மையும் பலருக்குப் நேர்மையின்மையும் பழக்கமாகிவிட்டன.சிலருக்கு நேர்மையின்மை ஒரு வழக்கமாகியிருக்கும். சிலர் உண்மை என்ன என்பதே மறக்கும் அளவிற்கு எப்பொழுதும் பொய் கூறுவர்.