வகுப்பு 44 – செயலில் அன்பு

வகுப்பு 44 – செயலில் அன்பு

அன்பு என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்கும் சாவி. அந்த அன்பை மனதில் பூட்டி வைத்திருப்பதனால் ஒரு பயனும் இல்லை. மகிழ்ச்சி என்கிற கதவைத் திறக்க , அன்பு என்னும் சாவியை செயல் என்னும் சாவித் துளைக்குள் போட்டுத் திருப்ப வேண்டும். எதுதான் அன்பின் செயல்.

செயலில் அன்பு என்பது மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், இனிமையாகப் பேசுவதன் மூலமும், உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும்போது உங்கள் மனதில் ஒரு இனிய உணர்வு ஏற்படும். நீங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிறீர்களோ அவரும் மகிழ்ச்சியாக இருப்பார். பிறரிடம் அன்பை வெளிபடுத்த பல வழிகள் உள்ளன. அவற்றிற்கு நீங்கள் பல விதமான சேவைகளை செய்யலாம்.

நீங்கள் வீட்டில் பல வகைகளில் உதவி செய்யலாம். நீங்கள் உங்கள் வேலைகளை செய்வதாலும், பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிக்கான வேலைகளில் சிறிய அளவில் உதவலாம்.

நீங்கள் வீட்டு பாடங்களை சரிவர செய்வது, ஆசிரியர்களுக்கு பணிந்து நடப்பது, பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது, பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தாமல் இருப்பது, போன்றவற்றை செய்வதன் மூலம் உங்கள் பள்ளியின் மேல் உங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்தலாம்.

ஏழை எளியோருக்கு உதவி செய்தவதன் மூலம் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தலாம். உடல் ஊனம், ஆரோக்கியமின்மை, ஏழ்மை போன்ற காரணங்களால், நூற்றுக்கணக்கானோர் தினம் தினம் அவதிப்படுகின்றனர்.

செயலில் அன்பு என்பது மற்றவர்களை துன்புறுத்தாமல் இருப்பதும், தொந்தரவு செய்யாதிருத்தலும்தான். அது மற்றவர்கள் இனிமையாகப் பேசுவதும்,பணிவாக நடந்து கொள்வதும் ,மற்றவர்கள் மகிழும் வண்ணம் நடந்து கொள்வதும் ஆகும்.

ஜான் ஆப்பிள் சீட் என்பவர் இயற்கைக்கு செய்த சேவையின் மூலம் அமெரிக்கா முழுவதும் நன்கு அறியப்படுகிறார். அவர் தன் வாழ்வை வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்காவின் பல இடங்களில் ஆப்பிள் விதை விதைப்பதிலேயே செலவழித்தார்.

அவர்கள், தமக்கு வாழ்வு கொடுக்கும் மரங்களைக் காப்பதற்காக இரவு முழுவதும் கண்விழித்துக் காத்தனர்

கதை : அன்புடன் பகிர்ந்து கொள்ளுதல்

ரோரி, தனது ஆசிரியர் ஏழைகளுக்கு உதவுவதைப் பற்றிப் பேசி கொண்டிருப்பதை நன்கு கவனித்துக் கொண்டிருந்தான். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் ஆசிரியர் பொம்மைகள் சேகரித்தலை ஒரு செயல்பாடாக செய்யலாம் என்று கூறினார்.

ரோரியும் பொம்மை சேகரித்தலுக்கு ஒரு பொம்மையை கொடுக்கத் தீர்மானித்தான். அன்று மதியம் தனது பொம்மைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தான் . அவனது விருப்பமான பொம்மை இருந்தது. “இது எனக்கு விருப்பமான பொம்மை இதை யாரிடமும் கொடுக்கமாட்டேன்” என்று நினைத்து அதை எடுத்து வைத்துக்கொண்டான். கடைசியாக பல வருடங்களுக்கு முன் வாங்கிய உடைந்து போன பொம்மை ஒன்று இருந்தது. ‘நான் இதை எடுத்துச் செல்லலாமே, அந்த ஏழை குழந்தைகள் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள். அதனால் இதை வைத்து மகிழ்ச்சி அடைவர். இது பழையதாக இருந்தாலும் வேலை செய்கிறது’ என்று நினைத்தான்.

அதனால் அவன் மிகவும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்குக் கிளம்பினான். அவனது பையில் வைத்திருந்த அவனது பழைய பொம்மையை ஆசிரியரிடம் கொடுப்பதற்காக அவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஜிம்மியை பார்த்தான். அவன் ஜிம்மியிடம் ஏழை குழந்தைக்காக எடுத்து வந்ததாகக் கூறினான். ஆசிரியர் சில பாடங்களை நடத்திவிட்டு மாணவர்களை பார்த்து “யாரவது கிறிஸ்துமஸ் பொம்மை சேகரித்தலுக்கு பொம்மை கொண்டு வந்துருக்கிறீர்களா” என்று கேட்டார். நிறைய மாணவர்களோடு ரோரியும் கையைத் தூக்கினான். ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் அழைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொம்மையை அனைவரிடமும் காண்பித்தார். ரோரி மிகவும் வெட்கப்பட்டான். ஆசிரியர் அவனைக் கூப்பிடுவது அவன் காதில் விழுந்தது. “ரோரி நீ கையை தூக்கினாயே. என்ன பரிசு எடுத்து வந்தாய்“ என்று கேட்டார்?. அதற்கு ரோரி, “நான் நாளை எடுத்து வருகிறேன்” என்று கூறினான். அன்று மதியம் அவன் வீட்டிற்குச் சென்றவுடன் பள்ளியில் நடந்ததை நிறைய தடவை நினைத்துப் பார்த்தான். அவனும் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர்ந்தான். அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை மற்றவர்களுக்குப் பகிர நினைத்தான். அவன் அன்று அவனது பெற்றோரின் அனுமதியுடன் அவனுக்கு பிடித்த பொம்மையை ஒரு அழகான காகிதத்தால் சுற்றி கிறிஸ்துமஸ் தாத்தாவை அதன் மேல் வைத்தான். அதனை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்து செல்லத் தயாராக வைத்தான்.