வகுப்பு 43 – எளிமை

வகுப்பு 43 – எளிமை

எளிமை என்பது மிகவும் பணிவாகவும், இயற்கையாகவும் இருப்பது. அதனுடன் உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதும், அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்து பொருட்கள் மீதும் ஆசைபடாமல் இருப்பதும் ஆகும்.

எளிய மனிதன் ஒரு சில பொருட்களிலேயே மகிழ்ச்சியடைகிறான்.

உணவில் எளிமை: எளிமையான உணவு உடலுக்கு நல்லது. ஆடம்பரமான மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

உடையில் எளிமை: எளிமையான ஆடையே ஆடம்பரமான ஆடையை விட நல்லது. இடத்திற்கேற்றார் போல் ஆடைகளை அணியுங்கள்.

மேன்மை என்பது உன்னிடம் உள்ள பொருட்களிலோ அல்லது நீ அணியும் உடையிலோ இல்லை. அது நீ எப்படிபட்ட மனிதன் என்பதில் தான் உள்ளது.

நிறைய பல சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எளிமையான உடைகளையே அணிந்தனர். அவர்களது பழக்க வழக்கங்கள் மிகவும் சாதரணமாக இருக்கும்.

காந்திஜி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். தன் கையால் நெய்த காதி வஸ்திரத்தையே அணிந்தார். அவருடைய நல்ல குணங்களாலும் மற்றும் ஆளுமைத் திறனாலுமே அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டார்.

அவர் பிற்காலத்தில் பிரபலமான பிறகு கூட அவருடைய தினசரி வாழ்க்கை எப்பொழுதும் போல எளிமையாகவே இருந்தது. அவருடைய ஆடைகளை அவரே நெய்துக் கொள்வார். காய்கறி நறுக்குவது, கழுவுவது, தோல் சீவுவது என்று சில சிறு சிறு வேலைகள் செய்து சமையலிலும், வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்.

கதை : எளிமை என்கிற ஆபரணம்

இது, டைனமோ கண்டுபிடித்த சிறந்த விஞ்ஞானியான மைக்கேல் ஃபாரடே அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். டைனமோ என்பது, காந்த சக்தியை, மின்சார சக்தியாக மாற்றுவது. அவர் மிகவும் எளிமையாக உடை அணிவார். மிகவும் பணிவாகப் பேசுவார். அதனால், அவரை ஒரு விஞ்ஞானியாக யாராலும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாது.

ஒரு நாள் இங்கிலாந்து அரசவையிலிருந்து ஒரு அதிகாரி மைக்கேல் ஃபாரடேவை சந்திக்க விரும்பினார். அவர் மைக்கேல் ஃபாரடே ஆய்வகத்தைப் பார்த்தார். அவர் அந்த ஆய்வகத்திற்குள் நுழைந்ததும், “ஒரு வயதான எளிமையான உடையணிந்த மனிதன் பாட்டில்களை கழுவிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர் மைக்கேல் ஃபாரடேயிடம், “நீங்கள் இங்கு காவல் காப்பவரா?” என்றார். அதற்கு அவர் ஆமாம் என்றார். அந்த அதிகாரி அந்த வயதான மனிதனிடம், அவருடைய வேலை மற்றும் சம்பளத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். அதற்கு அந்த வயதான மனிதர் மிகவும் பண்புடன் பதில் கூறினார். பிறகு அவர் அந்த வயதான மனிதனின் பெயரைக் கேட்டார். என்னை மைக்கேல் ஃபாரடே என்று அழைப்பார்கள்” என்று கூறினார். அதைக்கேட்ட அதிகாரி உடனே அவரிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஃபாரடே மனது சிறிதும் புண்படவில்லை. அதிகாரி “ஆஹா! எவ்வளவு எளிமையான சிறந்த மனிதர் இவர்? இவருடைய எளிமையால் இவர் இன்னும் சிறந்தவராகக் காணப்படுகிறாரே” என்று மனதில் எண்ணிக்கொண்டார்.

செயற்பாடு : எளிமையை நிறைய பல குணங்களுடன் இணைக்கலாம்
  • கீழே காணும் குணங்களில் எளிமையுடன் இணைக்கக்கூடிய குணங்களை வட்டமிடுக.
  • பொறாமை, தனித்தன்மை, கர்வம், அடக்கம், குறும்பு, கடின உழைப்பு, சோம்பேறித்தனம், பணிவு, பேராசை, தன்னிறைவு, நட்பு.