வகுப்பு 41 – புரிதல்

வகுப்பு 41 – புரிதல்
கதை : நாய்க் குட்டிகள் விற்பனைக்கு

ஒரு கடை உரிமையாளர். அவர் கடைக் கதவின் மேல் “நாய்க் குட்டிகள் விற்பனைக்கு” என்று ஒரு வாசகம் தொங்கவிட்டிருந்தார். அது குழந்தைகளை எளிதில் கவரும் படி இருந்தது. ஒரு சிறுவன் அங்கு வந்து அவரிடம், “நீங்கள் நாய்களை என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர் 30 டாலரிலிருந்து 50 டாலர் வரை என்று பதிலளித்தார்.

அந்தச் சிறுவன் அவன் சட்டை பையிலிருந்து கொஞ்சம் சில்லரையை எடுத்து “என்னிடம் 2.37 டாலர் தான் உள்ளது. நான் அந்த நாய்களைப் பார்க்கலாமா?”, என்றான்.

அந்தக் கடை உரிமையாளர் சிரித்துக்கொண்டு விசிலடித்தார். அந்தக் கடையிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். அவரின் பின் ஐந்து நாய்க் குட்டிகள் வந்தன. அதில் ஒரு நாய் தாங்கி நடந்து பின் தயங்கியது. அவன் உடனே அந்த நாய்க்குட்டி நொண்டியபடியே தயங்கித் தயங்கி நடந்ததைப் பார்த்து அதற்கு என்னாயிற்று என்று கேட்டான். அதற்கு “கால்நடை மருத்துவர் அதனை பரிசோதித்து இடுப்பெலும்பு இல்லை, அதனால் அது எப்போதுமே நொண்டி நொண்டி தான் நடக்கும் என்று கூறிவிட்டார்” என்றார். உடனே அவன் ஆர்வமுடன் அந்த நாய்க் குட்டியை வாங்க விரும்புவதாக கூறினான்.

அதற்குக் கடை உரிமையாளர் அவனிடம், “நீ அதை வாங்க வேண்டியதில்லை. உண்மையிலேயே உனக்கு விருப்பமிருந்தால் அதை நான் உனக்கு சும்மா தருகிறேன்” என்றார்.

அந்த பையன் வருத்தமுடன் அவர் கண்களைப் பார்த்து “அதை நீங்கள் இலவசமாகத் தர வேண்டாம். மற்ற நாய்க் குட்டியைப் போல அதற்கும் ஒரு விலை உண்டு. நான் இப்பொழுது 2.37 டாலர் பணத்தை தருகிறேன். மீதியை மாதம் 50 சென்ட் என்று கொடுத்து அதை வாங்கிக் கொள்கிறேன் என்றான்.

அதற்கு அந்த கடை உரிமையாளர் பதிலடியாக நீ அந்த நாய்க் குட்டியை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம். அதனால் எப்போதும் ஓட முடியாது, குதிக்க முடியாது. மற்ற நாய்க் குட்டிகளைப் போல உன்னோடு ஓடி விளையாட முடியாது என்றார்.

அவர் ஆச்சரியப்படும்படி அவன் தனது பேண்ட்டை சுருட்டி அவன் காலைக் காட்டினான். அவனது இடது கால் மோசமாக வளைந்து முடமாக இருந்தது. அவன் காலில் உலோகத்தினாலானத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. சிறுவன் கடைக்காரரைப் பார்த்து அமைதியான குரலில் “முதலில் எனக்கே ஒழுங்காக ஓட முடியாது. அந்த நாய்க் குட்டிக்குத் தன்னை புரிந்து கொள்ளும் ஒருவர் தான் தேவை”, என்று கூறினான்.

நமக்குத் தேவை நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் தான்.
கதை : புல்லாங்குழல் சிறுவன்

முன்னொரு காலத்தில் ஒரு சிறுவன் ஒருவன் புல்லாங்குழல் வாசிப்பதை விருப்பமாகக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதெல்லாம் புல்லாங்குழல் வாசிக்கிறானோ, அப்பொழுது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து அதனை ரசித்தனர். விலங்குகள் கூட மனிதர்களிடையே இருந்த பயம் விலகி அவன் இசையை ரசித்தன. அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாசித்தால் அந்த இசை மந்திர சக்தி வாய்ந்ததாக இருக்கும். குட்டி குட்டி மலர்கள் தனது இதழ்களை விரிக்கும். தேவதைகள் பறந்து கொண்டும், நடனமாடிக்கொண்டும், இருப்பர். அவன் எங்கு சென்றாலும் நிறைய சந்தோஷத்தைப் பரப்புவதால் எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்டான்.

ஒருநாள் அந்தப் புல்லாங்குழல் சிறுவன் வாசித்துக் கொண்டே அரண்மனையைக் கடந்து சென்றான். http://demo3.esales.in:8081/ அகந்தையும் குறும்பும் மிக்க இளவரசி ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அவனுடைய புல்லாங்குழல் இசையினால் ஈர்க்கப்பட்டு கீழே செல்லும் அவனைப் பார்த்தாள். அவள் ஆச்சரியபடும்படி பூக்கள் இதழ்களை திறந்து மூடுவதும், தேவதைகள் குதிப்பதும், நடனமாடுவதுமாக இருந்தது. “என்ன ஒரு அற்புதமான ஒரு விளையாட்டு சாமான்!” என்று ஆச்சரியப்பட்டாள். “அது எனக்கு வேண்டும்” என்று சொல்லியபடி, அவள் பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மாடிப்படிகளில் இறங்கி, கீழே அவன் நின்றுகொண்டிருந்த தோட்டத்திற்குச் சென்றாள். அவள் அவனிடம் அந்தப் புல்லாங்குழலை அவளுக்கு விற்கும்படிக் கேட்டாள்.

அந்தச் சிறுவன் வாசிப்பதை நிறுத்திவிட்டு சிரித்துக்கொண்டே, “நீ இதை எடுத்துக்கொள். எனக்குப் பணம் எதுவும் தர வேண்டாம். ஆனால் ஒரு நிபந்தனை” என்றான். அதற்கு அவள் கோபப்பட்டாலும் அந்த புல்லாங்குழலினால் ஈர்க்கப்பட்டு அவள் அவனிடம், “என்ன நிபந்தனை?” என்று கேட்டாள். அதற்கு அவன் “இது சாதாரண புல்லாங்குழல் இல்லை. இது உன்னிடம் இருகும் பொழுது உன்னைச் சுற்றி நல்லதே நடக்கவேண்டும். அதற்கு, எப்பொழுதும் நீ மிகவும் அன்பாக இருக்கவேண்டும். நீ மற்றவர்களின் சந்தோஷத்திற்காகவே இந்தப் புல்லாங்குழலை இசைக்கவேண்டும், உன்னுடைய சந்தோஷத்திற்காக இசைக்கக்கூடாது” என்றான். அவன் குனிந்து வணங்கி அவளிடம் அந்தப் புல்லாங்குழலை ஒப்படைத்தான்.

இளவரசி அவனிடமிருந்து புல்லாங்குழலைப் பறித்துக்கொண்டு அத்தோட்டத்தின் மற்றொரு பகுதிக்கு ஓடிச்சென்றாள். “என்ன ஒரு முட்டாள்தனமான பையன். நான் என்ன நினைக்கிறேன் என்று அவனுக்கு எப்படித்தெரியும். நான் ஏன் மற்றவர்களைப் பற்றி நினைக்கவேண்டும். என்னுடைய சந்தோஷத்தை விட உலகத்தில் வேறொன்றும் பெரிதில்லை”, என்றெல்லாம் மனதில் நினைத்தாள். இந்த எதிர்மறையான எண்ணங்களை மனதில் கொண்டு அவள் புல்லாங்குழலை இசைத்தாள். உடனே மலர்கள் தன் இதழ்களைத் திறந்தன. ஆனால் தேவதைகளுக்கு பதிலாக எட்டுக்கால் பூச்சி அவளை சுற்றி வலைகளைப் பின்னியது. அதே சமயம் கருப்பும் ஆரஞ்சும் கலந்த குளவி ஒன்று அப்பூவிலிருந்து வெளியே வந்து அவளது மூக்கின் நுனியில் கொட்டியது. வலியால் கீச்சென்று கத்திக் கொண்டு அந்தப் புல்லாங்குழலை வீசி எறிந்துவிட்டு அரண்மனைக்கு ஓடிவிட்டாள். தோட்டத்தின் மறு முனனயிலிருந்து நடந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தப் புல்லாங்குழல் சிறுவன் மிகவும் வருந்தினான். அவன் போட்ட நிபந்தனையை அவள் கடைப்பிடிக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். பின்பு அவள் தூக்கி எறிந்த புல்லாங்குழலைத் தேடி எடுத்துக்கொண்டு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். திரும்பவும் அதனை அவன் இசைக்க அதன் இனிமையான இசை அவ்விடத்தை அன்பு மற்றும் அமைதியான இடமாக மாற்றியது.

அரண்மனையில் இளவரசி குளவி கொட்டிய இடத்தைத் தேய்த்துக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டு அழுதாள். தாம் சுயநலமாகவும், அன்பில்லாதவளாகவும் இருப்பதை அவள் மெதுவாக உணர்ந்தாள்.

அவள் தம்மை மென்மையானவளாகவும், அன்பானவளாகவும், பிறருக்கு நன்கு உதவுபவளாகவும் மாற்றி கொண்டாள்.