வகுப்பு 4 – இறைவன் ஒருவரே

வகுப்பு 4 – இறைவன் ஒருவரே

இறைவனின் வெவ்வேறு பெயர்கள் என்பது நாம் தந்தையை ‘பாபா’, ‘பாபு’, ‘அச்சன்’, ‘அப்பா’, மற்றும் ‘டாடி’ என்று வெவ்வேறு மொழிகளில் அழைப்பதற்கு நிகராகும். இறைவன் இந்துக்களால் ‘ஈஸ்வரன்’ என்றும், இஸ்லாமியர்களால் ‘அல்லா’ என்றும், கிறிஸ்தவர்களால் ‘எல்லாம் வல்ல இறைவன்’ என்றும், ஜுராஸ்டிரர்களால் ‘அஹுரா மஸ்டா’ என்றும், யூதர்களால் ‘ஜெகோவா’ என்றும் அழைக்கப்படுகிறார். இவை அனைத்தும் இப்பேரண்டத்தின் தந்தையாகிய எம்பெருமானைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள் ஆகும்.

நாம் வெவ்வேறு கடவுளைக் கொண்டிருக்கவில்லை. ஒரே கடவுளின் பல்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பிய வழிபாட்டு முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் மற்ற அனைத்து வழிபாட்டு முறைகளையும் மதிக்கவும் அன்பு செலுத்தவும் வேண்டும்.

இவ்வுலகில் உள்ள வெவ்வேறு மதங்களும் இறைவனை அடைவதற்கான ஒரே பாதையாகும்.

எனவே எந்த வழிபாட்டு முறையும் புனிதமானதே. அது இந்துக்களின் ஓம் ஆகவும் இருக்கலாம். கிறிஸ்தவர்களின் சிலுவையாகவும் இருக்கலாம். இஸ்லாமியர்களின் வளர்பிறையாகவும் இருக்கலாம். புத்த மதத்தினரின் சக்கரமாகவும் இருக்கலாம். அல்லது எந்த மதத்தின் அடையாளமாகவும் இருக்கலாம் அனைத்தும் புனிதமானதே.

நாம், வழிபாட்டு முறைகளையும் மதச் சின்னங்களையும் நேசிப்பதில்லை. இறைவனை நேசிக்கின்றோம். அதுவே அந்த வழிபாட்டு முறையையும் மத அடையாளங்களையும் குறிக்கிறது. நாம் இறைவனைப் பூஜிக்கிறோம். அந்த உருவங்களை அல்ல சிலைகளுக்குள் இருக்கும் இறைமையை வணங்குகின்றோம்.

வெவ்வேறு மதங்களின் வழிபாடுகளில் கைகளை உபயோகப்படுத்துகிறோம்.

விளையாட்டு : கடவுள்களின் பெயர்கள்

ஒரு மாணவரையோ, அல்லது பல மாணவர்கள் அடங்கிய ஒரு குழுவையோத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அவர்களைத் தாமாகவே கடவுள் பெயர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லவும். உதாரணமாக, கிருஷ்ணா, ராமா, அல்லாஹ், புத்தா என்று எந்த இறைவனின் பெயரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

தற்பொழுது முதல் குழு ராமா என்று விளையாட்டைத் தொடங்கவேண்டும்.
முதல் குழு கீழ்க்கண்டவாறு சொல்ல வேண்டும்;
ராமா ராமா (அனைத்து மாணவர்களும் இருமுறை கைகளைத் தட்ட வேண்டும்)
ராமா, கிருஷ்ணா
இப்பொழுது கிருஷ்ணா குழு
கிருஷ்ணா, கிருஷ்ணா (கைத்தட்டு, கைத்தட்டு )
கிருஷ்ணா, அல்லாஹ்
என்று சொல்லவேண்டும்.
அல்லாஹ் குழு இதைத் தொடர வேண்டும். அப்படியே பிற குழுக்களும் தொடரவேண்டும்.