வகுப்பு 39 – கடமை மற்றும் விசுவாசம்

வகுப்பு 39 – கடமை மற்றும் விசுவாசம்

யாஷ் என்ற ஒரு அரசர் இருந்தார். அவருடைய அரசு தோட்டத்தில் மிகவும் பழமையான மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் சுவையான மாங்கனிகளைக் கொடுத்வந்தது. அதனால் அரசன் அந்த மாமரத்தை மிகவும் விரும்பினான். இப்பொழுது அம்மா மரத்தின் கிளைகள் காய்ந்து கொண்டிருந்தது.http://demo3.esales.in:8081/ மிகவும் குறைந்த அளவே மாங்காய்கள் காய்த்தன.

அந்த இடத்தில் ஒரு புதிய மரத்தை நடத் திட்டமிட்டான். அரசன் மந்திரியிடம் அந்த மரத்தை வெட்டி விட்டு புதிய மரக்கன்றை நட உத்தரவிட்டான். மந்திரி, சிவா என்னும் ஒரு மரம் வெட்டுபவரிடம் அந்த மரத்தை கோடரியால் வெட்டி விட்டு அந்த இடத்தை விட்டு அகற்றுமாறு உத்தரவிட்டான். சிவா கோடாரியுடன் அந்த மரத்தை வெட்டுவதற்கு வந்தான். அந்த கோ டாரி மரத்தை வெட்டுவதற்கு முன்னால் அவன் அம்மரத்தின் உடற்பகுதியில் ஒரு மரப்பொந்து இருப்பதைக் கண்டான். ஒரு கிளி தனது குஞ்சுகளுடன் உள்ளே அமர்ந்திருந்தது. மரம் வெட்டி அந்த கிளியிடம், “அன்பான கிளியே! இந்த இடத்தைக் காலி செய்து விட்டு வேறொரு மரத்திற்கு உன்னுடைய குஞ்சுகளுடன் சென்றுவிடு. மன்னன் மரத்தை வெட்டுவதற்கு கட்டளையிட்டுள்ளார்”, என்று கூறினான். அந்த கிளி அவனிடம், “சகோதரனே, நான் இந்த இடத்தை விட்டு வேறு ஒரு மரத்திற்குச் செல்ல மாட்டேன், நீ மரத்தை வெட்ட விரும்பினால் வெட்டு, நானும் எனது குஞ்சுகளும் உள்ளேயே தான் இருப்போம்” என்றது. மரம் வெட்டி, இது ஒரு வேடிக்கையான கிளியாக இருக்கிறதே!! என்று நினைத்தான். “இன்னும் சிறிது நேரத்தில் நான் என்னுடைய கோ டாரியால் மரத்தை வெட்டி விடுவேன் நீயும் உன்னுடைய குஞ்சுகளும் காயப்படுவீர்கள் அல்லது கொல்லப்படுவீர்கள். அதனால் நீயும் குஞ்சுகளும் சீக்கிரம் வேறு ஒரு மரத்திற்குச் சென்று விடுங்கள்” என்றான். ஆனால் கிளி அதன் குஞ்சுகளுடன் அவனது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் உள்ளேயே இருந்தது. மரம் வெட்டி அதனை அவ்விடத்தில் இருந்து விரட்ட முயன்றான். கிளிக்கு நிலைமையைப் புரிய வைக்க முயற்சித்தான். ஆனால் அது நடக்கவில்லை. கிளி அந்த மரத்தில் இருந்து போக மறுத்து விட்டது.

மரம் வெட்டி மிகவும் அன்பானவன். அவன் அந்த கிளி மற்றும் குஞ்சுகளை கொல்ல விரும்பவில்லை. அவன் அரசனிடம் சென்று அந்த கிளியை பற்றிக் கூறினான். அரசனும் பறவைகள் மற்றும் விலங்குகளை நேசிப்பவன். அதனால் அரசன் கிளியுடன் பேசிப் பார்க்கலாம் என்று விரகுவெட்டியுடன் தோட்டத்திற்குச் சென்றான்.

கிளியதன் குஞ்சுகளுடன் அந்த மரப்பொந்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தான். அன்னக்கிளியிடம், “கிளியே நான் இந்த மரம் இருக்கும் இடத்தில் வேறொரு புதிய மரத்தை நட விரும்புகின்றேன். எனவே மரத்தை வெட்டி விட்டு புதிய மரத்திற்கு இடம் தர வேண்டும். அதனால் நீயும் உன் குஞ்சுகளும் வேறு ஒரு மரத்திற்குச் சென்று விடுங்கள்”, என்றான். அந்த கிளி மன்னனிடம் “நான் மரத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்”, என்றது. ஆனால் ஏன்? நீ உயிருடன் வாழ விரும்பவில்லையா? உன்னுடைய குஞ்சுகள் கொல்லப்பட்டு விடுமே? என்று கேட்டான். கிளி அதனுடைய நிலையை விளக்கியது. “மன்னா கடவுளின் ஒவ்வொரு படைப்பும் உயிருடன் வாழவே விரும்புகிறது. அதனால் நானும் உயிருடன் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் கடமை மற்றும் விசுவாசம் உயிரை விட மிகவும் முக்கியமானது. அதனால்தான் நானும் எனது குஞ்சுகளும் இந்த இடத்தை விட்டு அகல மறுக்கிறோம்”, என்றது.

அரசன் “என்ன கடமை கிளியே? அதனை எனக்கு சற்று விளங்குவாயா? என்று கேட்டான்.

அதற்கு கிளி நண்பனிடம் இருக்க வேண்டிய விசுவாசம்தான் கடமை. இம்மரம் எனது பழைய நண்பன். நான் இந்த மரப்பொந்தில் தான் பிறந்தேன். நான் அதன் பாதுகாப்பில் தான் வளர்ந்தேன். அது எனக்கு உணவு மற்றும் வாழ்வதற்கான இடத்தை கொடுத்தது. கடவுளுக்குத் தெரியும் இம்மரம் என்னை எத்தனை புயல், மழை மற்றும் கோடை வெயிலில் இருந்து காப்பாற்றியது, என்று. ஒவ்வொரு கோடையிலும் எனது குஞ்சுகளை வளர்ப்பதற்கு உதவி செய்தது. இன்று எனது நண்பனான இம்மரம் இழப்பை சந்திக்கும் தருவாயில் உள்ளது. நான் இந்நிலையில் எப்படி இதனை தனியாக விட்டுச் செல்வேன்?” என்றது. “நீங்கள் இந்த மரத்தை வெட்ட நினைத்தால் வெட்டுங்கள். நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம். நாங்கள் எங்களுக்கு இழப்பு நேர்ந்தால் கூட எனது நண்பனுக்கு துணையாக நிற்போம்” என்று கூறியது. அம்மன்னன் அந்தக் கிளியின் ஞானத்தையும் அம்மரத்தின் மீது உள்ள விசுவாசத்தையும் கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான். மன்னன் கிளியிடம் ,”நான் உனது விசுவாசத்தை ரசிக்கிறேன், நான் உனக்கு வாக்களிக்கிறேன்!! இனி இந்த மரத்தை நாங்கள் தொடவே மாட்டோம். நீயும் உன் குழந்தைகளுடன் நீண்ட நாட்கள் வாழ என் வாழ்த்துக்கள்”, என்றார். பிறகு விறகு வெட்டியையும் திருப்பி அனுப்பிவிட்டார்.