வகுப்பு 34 – அன்னை

வகுப்பு 34 – அன்னை
கதை
அன்னை மிகச் சிறந்தவள்.

ரமேஷ் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் செய்யும் சிறு சிறு வேலைகளுக்கும் கை பணம்( பாக்கெட் மணி) பெறுவது அவர்களது வழக்கம் என்று ரமேஷுக்குத் தெரிந்தது.

ரமேஷின் பெற்றோர் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கித் தருவார்கள், அவனுக்கு சரியானது என்று அவர்களுக்குத் தோன்றும் அனைத்தையும் வாங்கித் தருவார்கள். அவனும் மற்றவர்களைப் போல் தனது தாய்க்கு அனைத்து உதவிகளையும் செய்வான் ஆனால் அதற்கு அவன் எந்த தொகையையும் பெறுவதில்லை. ஆனால் இனிமேல் தான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் பாக்கெட் மணி கொடுத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தான். அடுத்த நாள் காலை அவனது தாய் அவன் படுக்கையை ஒழுங்குபடுத்த கூறியும் அவன் அதை செய்யவில்லை. அவன் தாயிடம் தாங்கள் இதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே அவ்வேலையை செய்வேன் என்று கூறினான்.அவனது தாய்க்கு அவன் கூறுவது ஒன்றும் புரியவில்லை. ரமேஷ் தனது தாய்க்கு செய்யும் உதவிகள் அனைத்தையும் தவிர்த்து வந்தான், அவனுக்குப் பணம் கொடுத்தால் மட்டுமே உதவி செய்தான். மாலை வேளையில் ரமேஷ் பள்ளியில் இருந்து வீடு திரும்பினான். அவன் மிகவும் பசியுடன் இருந்தான். அவன் உண்பதற்கு ஒன்றுமில்லை அப்போதுதான் அவன் உணவு மேசையின் மீது ஒரு நோட்டுப்புத்தகம் இருப்பதைப் பார்த்தான், அதில், அன்புள்ள ரமேஷ், இதில் நான் உனக்கு தினசரி செய்யும் வேலைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

நான் அனைவருக்கும் முன்பாக மிகவும் அதிகாலையில் எழுந்து அந்த நாளுக்கு ஆயத்தமாகிறேன். அனைவருக்கும் பிடித்தமான காலை உணவைத் தயார் செய்கிறேன். உனது மதிய உணவை டப்பாவில் பேக் செய்கிறேன். எனது முழு நாளும் மற்றவர்களைப் போலவே மிகவும் பரபரப்பாகப் போகிறது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது நானும் மிகவும் சோர்வாக உணர்கிறேன்.

மாலை நீ ஓய்வெடுக்கும்போது, விளையாடும்போது, புத்தகம் படிக்கும்போது, டிவி பார்க்கும்போது, நான் சமையல் செய்கிறேன். இரவு உணவு முடிந்த பிறகு நீ படுக்கைக்கு செல்கிறாய், நான் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு அடுத்த நாளைக்கு தேவையானவற்றைத் தயார் செய்கிறேன். நான் வீட்டைத் தூய்மை செய்கிறேன். துணிகளைத் துவைக்கிறேன் இஸ்திரி செய்கிறேன் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி வருகிறேன். தேவையான உணவை சரியான நேரத்தில் தயார் செய்கிறேன். உனது படிப்பில் உதவி செய்கிறேன், உனக்கு தேவையானவற்றை செய்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் அனைவரும் ஓய்வு எடுக்கிறீர்கள் ஆனால் நான் எடுப்பதில்லை. எனக்கு கோடை விடுமுறையும் மற்ற எந்த விடுமுறையும் கிடைப்பதில்லை. இப்பொழுது கூறு மகனே இந்த அனைத்து வேலைகளுக்கும் நான் பணம் பெறாமல் வேலை செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாயா.

அம்மா இதைப் படித்தவுடன் ரமேஷ் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான். உடனடியாக அவன் தன் தாயிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா” என்று கூறினான். “நான் இனிமேல் இவ்வாறு கூறமாட்டேன். என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்” என்று கூறினான். அவன் தாய் அவனை அணைத்துக் கொண்டு, “ உனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே நான் இதை எழுதினேன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது ஒன்றாக இணைந்து வேலை செய்வது என்பது குடும்பத்தில் ஒரு சந்தோஷம். இதற்காக நாம் பணம் பெற வேண்டிய அவசியமில்லை. குடும்பத்திற்கு செய்யும் வேலைகளுக்காக பணம் கேட்க கூடாது.” என்று கூறினாள்.

பாடல்

Mother of mine you gave to me, all of my life to do as I please, I owe everything I have to you, Mother sweet mother of mine. Mother of mine when I was young You showed me the right way things had to be done, Without your arms where would I be, Mother sweet mother of mine. Mother you gave me happiness, much more than words can say, I thank the lord let me breathe with you, every night and every day. Mother of mine now I am grown and I can walk straight all on my own, I’d like to give you what you gave to me, Mother sweet mother of mine. Mother of mine now I am grown and I can walk straight all on my own, I’d like to give you what you gave to me, Mother sweet mother of mine.