வகுப்பு – 3 இறைவன் எங்கும் இருக்கிறார்

வகுப்பு – 3 இறைவன் எங்கும் இருக்கிறார்
கதை : தனியாக இருக்கும் பொழுது உண்ணுங்கள்.

ஒருநாள் ஒரு ஆசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அன்றைய நாளின் பாடம் கடவுளைப் பற்றியது. ஆசிரியர் குழந்தைகளிடம், “இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை” என்று கூறினார். அடுத்த நாள் ஆசிரியர் சில வாழைப்பழங்களை வாங்கி வந்து அதை அனைத்து சிறுவர்களுக்கும் வழங்கினார். மாணவர்களிடம், “இதை அனைவரும் தனியாக எடுத்துச் சென்று உண்ணவேண்டும். அவ்வாறு உண்ணுவதை எவரும் காணக் கூடாது” என்று கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அச்சிறுவர்கள் வகுப்பறையை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

(இத்தகைய சூழ்நிலையை உங்களது மாணவர்களிடமும் கூறி அவர்களின் பதிலைப் பெற்று அதன்மூலம் இக்கதையைத் தொடருங்கள்)

அடுத்த 15 நிமிடங்களுக்குள் அனைத்து சிறுவர்களும் திரும்பி வந்தனர். அனைவரும் தங்களது பழங்களை உண்டு முடித்திருந்தனர். ஆனால் ஒரே ஒரு சிறுவன் மட்டும் இன்னும் வரவில்லை. பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து அந்தச் சிறுவன் வகுப்பறைக்கு வந்தான், ஆனால் அவனது கையில் அந்த வாழைப்பழம் அப்படியே இருந்தது. அவன் இன்னும் உண்டு முடிக்கவில்லை.

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆசிரியர் அவனிடம், “ஏன் இன்னும் நீ அதை உண்ணவில்லை” என்று வினவினார்.

அதற்கு அவன், “ஐயா, நேற்று வகுப்பில், இறைவன் எங்கும் இருக்கிறார் என்றும் மனிதர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் இவ்வுலகில் இருக்கிறார் என்றும் கூறினீர்கள். நீங்கள் தனியாக அப்பழத்தை எடுத்துச் சென்று எவரும் காணாமல் உண்ண வேண்டும் எனக் கூறியவுடன் நான் புதருக்கு அருகில் சென்றேன் அங்கு ஒரு சிறு அணில் மூலம் என்னை இறைவன் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஏரிக்கரைக்குச் சென்றேன், அங்கு மீன்கள் மற்றும் தாமரை மலர்கள் மூலம் என்னை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். நான் எங்கு சென்றாலும் இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னால் இறைவன் இல்லாத இடத்தைக் கண்டறிய முடியவில்லை. எனவே, இப்பழத்தை என்னால் உண்ண முடியவில்லை” என சிறுவன் கூறினான்.

எல்லா இடங்களிலும் இறைவனைக் காணும் அச்சிறுவனைக் கண்ட ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். அச்சிறுவனைத் தழுவிக்கொண்டு, “மகனே நீ கூறுவது மிகவும் சரி.