வகுப்பு 27 – ஒற்றுமை

வகுப்பு 27 – ஒற்றுமை
கதை: சண்டையிடும் விரல்கள்

ஒரு சமயம் கையின் ஐந்து விரல்களுக்குள்ளே சண்டை வந்து விட்டது. ஒவ்வொன்றும் தானே சிறந்தது என்றும், தானே முக்கியமானது என்றும் கூறத் தொடங்கின. சுண்டு விரல் கூறியது ”மிகச்சிறியவனாக இருந்தாலும் நான் தான் மிக முக்கியமானவன். யாராவது கரங்குவித்து நமஸ்காரம் செய்யும்போது நான் தான் முன்னிற்பேன், என்ணும் போதும் நான் தான் முதல்.”

மோதிர விரல் கூறியது, “நான் தான் உயர்ந்தவன். ஏனென்றால் அரசன் முதல் சாதாரண மனிதன் வரை, விலை உயர்ந்த கற்கள் பதித்து எனக்கு மோதிரம் அணி விக்கிறார்கள். ஆகவே நான் மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறேன்.” நடுவிரல் கூறியது, ”நான் தான் உயரமானவன். எனக்கு இரு பக்கங்களிலும் கவர்னருக்கு இருப்பது போல் மெய்க்காப்பாளராக இரண்டு விரல்கள் இருக்கின்றன.” ஆள்காட்டி விரல் கூறியது, ”நான் தான் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்று மதிப்பீடு செய்ய கடை முடிவான அதிகாரம் பெற்றவன்.” இறுதியாக புன்முறுவலுடன் பெருவிரல் கூறத் தொடங்கியது, “எதற்கு இந்த செருக்கு? என்னுடைய ஆதரவு இல்லாமல் உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?”

அனைத்து விரல்களும், அனைத்துமே முக்கியம் என்பதையும், சேர்ந்தே செயலாற்ற வேண்டும் என்பதையும் உணரத் தொடங்கின. ஏனெனில் ஒற்றுமையே பலம்.

நமஸ்காரம் – பொருள்
  • பெருவிரல்: நமக்கு நெருக்கமானவர்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக.
  • ஆள்காட்டிவிரல்: உலகத்தை உணர்விப்போர் – ஆசிரியர்கள், குருமார்கள் ஆச்சர்யர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் முதலியோர்.
  • நடுவிரல்: உலகத் தலைவர்கள்
  • மோதிரவிரல்: சமுதாயத்தின் நலிந்த பிரிவினர்
  • சுண்டுவிரல்: நமக்காக. நமக்கானப் பிரார்த்தனை கடைசியாகவும் சிறியதாகவும் இருக்க வேண்டும்.