வகுப்பு 26 – ஒருமித்த மனக்குவிப்பு

வகுப்பு 26 – ஒருமித்த மனக்குவிப்பு
கதை : ஒருமித்த மனக்குவிப்பின் சக்தி

ஸ்வாமி விவேகானந்தர், தன் பிள்ளைப்பருவத்தில் தன் நண்பர்களுடன் தியானம் என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டில், அனைவரும் தனக்குப் பிடித்த கடவுளை நினைத்துக் கண்களை மூடி அமர்ந்திருக்க வேண்டும்.

ஒரு நாள் அவர்கள் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவன், ஒரு மெல்லிய சப்தத்தைக் கேட்டான். கண்களைத் திறந்து பார்த்த போது, ஒரு பெரிய பாம்பு அவர்களை நோக்கி தரையில் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அவன் ‘நாகப்பாம்பு… நாகப்பாம்பு’ என்று கத்திய போது, விவேகானந்தரைத் தவிர அனைவரும் கத்திக்கொண்டே எழுந்து ஓடிவிட்டனர். அவருடைய நண்பர்கள் அனைவரும் எழுந்து ஓடுமாறு கத்திக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் இந்த சத்தத்தைக் கேட்கவேயில்லை. இன்னும் கண்களை மூடிக்கொண்டே இறை நினைப்பிலேயே இருந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியவில்லை.

சரி. அந்த பாம்பு என்ன செய்தது? அது அப்படியும் இப்படியும் நகர்ந்து விட்டு சென்று விட்டது. அவருடைய நண்பர்கள், பெற்றோர், அண்டை வீட்டார் அனைவரும் அவரது ஒருமித்த மனக்குவிப்பையும், இறைவன் மீதான அன்பினையும் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இந்த மனக்குவிப்பால் தான் விவேகானந்தரால் ஓரிரண்டு முறை படித்தாலே பாடங்களை நினைவு கூர முடிந்தது. கல்லூரியிலும், அறிவிற் சிறந்த மாணவராக அறியப்பட்டார். இந்த சக்தியே அவருக்கு பெரிதும் உதவியது.

ஒருமுறை அவர் அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில் இருந்தபோது. சில பையன்கள் நதியில் மிதந்துக் கொண்டிருந்த முட்டை ஓடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்வதைக் கண்டார். அந்த ஓடுகள் சிறிய அலைகள் மீது ஏறி இறங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் அதனை அடிக்க முடியவில்லை. அனைத்துப் பையன்களும் பல முறை முயன்றும் அவர்களால் குறியை எய்த முடியவில்லை. அவர்கள் விவேகானந்தர் தங்களை ஆர்வத்துடன் கவனிப்பதைக் கண்டனர். எனவே அவரைக் கூப்பிட்டனர்; ”நீங்கள் வெகு நேரமாக எங்களை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் முடியும் என நினைக்கிறீர்களா?” எனக்கேட்டனர். விவேகாநந்தர் ஒரு சிரிப்புடன் தான் முயற்சி செய்ய விரும்புவதாகக் கூறினார். பிறகு அந்த துப்பாக்கியைக் கையில் எடுத்தார். பனிரெண்டு முறை சுட்டார். ஒவ்வொரு முறைக்கும் ஒரு முட்டை ஓட்டினைச் சுட்டார். ஸ்வாமிஜியின் திறமையைக் கண்டு வியப்பால் உறைந்து போன பையன்கள், “நல்லது ஐயா, எவ்வித பயிற்சியும் இன்றி இதனை எவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். பலமாக சிரித்த விவேகாநந்தர் கூறினார்” நன்று. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா? எந்த செயலைச் செய்தாலும் உங்கள் மொத்த கவனத்தையும அதன் மீது குவியுங்கள். வேறு எண்ணமும் இருக்கலாகாது. நீங்கள் சுடுவதாக இருந்தால் உங்கள் மனம் அந்தக் குறியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் குறி தப்பாது. ஒன்றிய மனக்குவிப்பு அற்புதங்களை நடத்தும் நீங்கள் படிக்கும் போதும், கையில் இருக்கும் பாடத்தைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். நீங்கள் படிப்பது அனேகமாக உங்கள் ஞாபகத்தில் அச்சாகிவிடும்.

செயல்பாடு – விளையாட்டு
உங்கள் கவனத்தை சோதித்தல் – கூழாங்கல் விளையாட்டு
  • குழந்தைகள் கண்களை மூடியுள்ளனர்.