வகுப்பு 24 – அன்னையர் ஐவர்

வகுப்பு 24 – அன்னையர் ஐவர்
நமது ஐந்து அன்னையர் யார் என்றால்
 • நமக்கு தேகத்தை கொடுத்த தாய் (தேஹ மாதா)
 • அன்னை பூமி (பூ மாதா)
 • அன்னை பசு (கோ மாதா)
 • புனித நூல்கள் (வேத மாதா)
 • தாய் நாடு (தேச மாதா)
தேஹ மாதா
 • தேக மாதாவான நம் அன்னை நம்மை பெற்றெடுத்தாள். மிகுந்த அன்புடன் பராமரித்தாள். கடவுளைப் பார்க்க முடியாத நாம் நம் அன்னையின் வடிவில் நம் கண் முன்னே காணலாம். அவள் அன்பு, சேவை, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவம். வீடே அனைத்து நற்குணங்களின் நாற்றங்கால்; மற்றும் நமது அன்னையே முதல் ஆசிரியரும் ஆவார். நம்மை மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் வளர்த்து, போஷித்த அன்னைக்கு நாம் அனைத்திற்கும் கடமைப்பட்டவர்களாகிறோம். தொட்டிலை ஆட்டும் கைகள் உலகையும் ஆளும்.
பூமாதா
 • பூமியான அன்னை நமக்கு உணவு, துணிகள், மற்றும் உறைவிடம் தருகிறாள். நமக்கு அனைத்தையும் தரவல்ல பெரிய, பரந்த, அதிசயமான உலகம், இருக்கிறது. நமது முன்னோர்கள், நமக்கு பூமியன்னை எதைக் கொடுத்தாளோ அதனைக் கொண்டு, சந்தோஷமும் திருப்தியுமுற்றனர். அவர்கள் நிலம், காடுகள், நதிகள் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாத்து, பராமரித்து வந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று, மனிதன் அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அன்னை பூமியைத் துன்புறுத்துகிறான். குப்பைகளை வீசுவதும், ரசாயனக் கழிவுகளை நதியில் விடுவதும், மரங்களை வெட்டி சாய்ப்பதும், அனேக விதமான பறவை மிருக இனங்களைக் கொன்று போடுவதுமாக இருக்கிறான். இதன் விளைவாக இன்று பலவேறு விதமான பறவையினங்கள் மற்றும் மிருகங்கள் பூமியில் இல்லை.
கோமாதா
 • பசு. கோமாதா என்பது அன்னையாக விளங்கும் பசுவாகும். அது நமக்கு புஷ்டியான பாலைத்தருகிறது. நாம் அனைவரும், குறிப்பாக, சிறு குழந்தைகள் பசுவின், பால் மற்றும் பால்படுப் பொருட்களையே நம்பியிருக்கிறோம். மென்மையான பசு நமக்கு பல நற்குணங்களையும் கற்பிக்கிறது. நாம் தரும் புல் மற்றும் நீருக்கு ப்ரதிபலனாக, பாலைத் தருகிறது. இறந்த பின்னும் தன் தோலையும் கொம்புகளையும் தருகிறது. பசுவின் சாணி ஒரு சிறந்த உரமாகும். சாதுவான இந்தப் பசு, பிறருக்கு சேவை செய்வதே நமது வாழ்வின் குறிக்கோள் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.
வேத மாதா
 • நமது புனிதமான ஆன்மீக நூல்கள் நாம் நல்வாழ்க்கை வாழ உதவுகின்றன. அனைத்து பெரிய மதங்களிலும் புனித நூல்கள் உள்ளன. இறைவனை அடைய, நாம் அன்புடனும், சேவை மற்றும் தியாகத்துடனும் கூடிய வாழ்வை நடத்த வேண்டும் என்பதை அவை வலியுறுத்துகின்றன. மேலும் அவை நமக்கு எப்போதும் சேவை செய், ஒருபோதும் துன்புறுத்தாதே என்பதையும் கற்பிக்கின்றன. அவையெல்லாம், “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பதையே பிரகடனம் செய்கின்றன.
 • தேசமாதா பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே. நம் தாய்நாடு என்பது நாம் பிறந்த பூமி. நாம் பிறந்த நாட்டைப் பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். நமது நாட்டின் உன்னதமான கோட்பாடுகளையும் நற்குணங்களையும் நாம் பேணிப் பயிலவேண்டும். தாய் நாட்டிற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். “நாடென்ன செய்தது எனக்கு?” என்று கேட்காமல், “நாமென்ன செய்ய வேண்டும் நாட்டுக்கு?” என்று கேட்பதே சிறந்தது.
செயல்பாடு : அன்னையை அடையாளம் காண்க
 • நமக்கு அறிவை/ஞானத்தைக் கொடுப்பவள்.
 • நல்ல குடிமகனாக விளங்குக.
 • சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்தல்.
 • மங்களத்தின் அடையாளம்.
 • உன் நாட்டின் செல்வத்தை பாதுகாக்க.
 • எல்லாம் அறிந்தவர்
 • சீதையின் அன்னை.
 • தினமும் அவளை மதித்து நமஸ்காரம் செய்.
 • கிருஷ்ணனுடன் இருப்பவர்.
 • அவரை மதிக்கும்போது அது கடவுளை மதிப்பதற்கு ஒப்பானது.