வகுப்பு 23 – பகிர்தலும் அக்கரை கொள்ளுதலும்

வகுப்பு 23 – பகிர்தலும் அக்கரை கொள்ளுதலும்
கதை : பல்லி தரும் படிப்பினை

இது ஒரு உண்மைக்கதை, ஜப்பானின் நடைபெற்றது. ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் போது வீட்டின் உரிமையாளர் சுவற்றை இடித்தார். பொதுவாக ஜப்பானிய மரத்தாலான வீடுகளில் இரண்டு சுவற்றுக்கிடையில் இடைவெளி இருக்கும்.

சுவற்றை கீழே இழுத்து தள்ளியபோது ஒரு பல்லி சுவற்றுடன் ஒட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார். வெளிப்புறமிருந்து அடித்த ஒரு ஆணி அதன் ஒரு காலில் அறையப்பட்டு அது நகர முடியாமல் இருந்தது

இதைப் பார்த்து இரக்கப்பட்ட அவர், அதே சமயம் இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமானார். அந்த ஆணி, ஆறு வருடங்களுக்கு முன்னால் வீடு கட்டப்பட்ட போது அடிக்கப்பட்டது என்று கண்டுபிடித்தார்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆறு வருடங்களாக ஒரு இருட்டான இடத்தில், நகரமுடியாத நிலையில் ஒரு ஆபத்தான நிலையில் அது இருந்திருக்கிறது.

இது நடக்கக் கூடியதல்லவே. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் அந்த பல்லி எவ்வாறு ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறது!

எனவே அவர் வேலையை நிறுத்திவிட்டு, பல்லியை கவனிக்க ஆரம்பித்தார். அது என்ன செய்கிறது, எதைச் சாப்பிடுகிறது, எவ்வாறு சாப்பிடுகிறது என்று கவனித்தார்.

விரைவில் மற்றொரு பல்லி ஆணியால் அரையப்பட்ட தன் நண்பனுக்கு வாயில் உணவுடன் அங்கு தோன்றியது. ஆறு வருடங்களாக அது உணவு அளித்துக் கொண்டிருக்கிறது.

ஆறு நீண்ட வருடங்களாக சலிப்பின்றி தன் நண்பன் மீது நம்பிக்கை வைத்து இந்த செயலைச் செய்துக் கொண்டிருக்கிறது.