வகுப்பு 22 – மன்னித்தல்

வகுப்பு 22 – மன்னித்தல்

யாராவது, உன்னைத் துன்புறுத்தும் விதமாக ஏதாவது செய்திருந்தால், பதிலுக்கு நீ என்ன செய்ய நினைப்பாய்? அந்த நபரைத் துன்புறுத்த நினைப்பாயா? யோசி. நீ அவ்வாறு செய்தால் உனக்கும் உன்னைத் துன்புறுத்திய அந்த நபருக்கும் என்ன வித்தியாசம்? நீ அந்த நபரைபோல் இருக்க விரும்புவாயா என்ன? உன்னைத் துன்புறுத்தியவரை விட நல்ல மனிதராகவே இருக்க விரும்புவாய். பிறகு வேறென்ன செய்ய முடியும்? நீ மன்னிக்கத்தான் வேண்டும். மன்னிப்பது என்றால், ஒருவர் உன்னைப்பற்றிக் கோபமாகப் பேசி அல்லது தவறான செயல்களை செய்து உன்னை வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக நீ கோபப்படாமல் இருப்பதுதான்.

தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் அனேகம் பேரைத் துன்புறுத்துகிறோம் அல்லது பறவை மிருகங்களுக்குத் தீங்கு செய்கிறோம்.http://demo3.esales.in:8081/ நாம் இறைவனிடம் இதற்காக மன்னிப்புக் கோர வேண்டும். இது மாதிரி மீண்டும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்ய வேண்டும்

ஸ்லோகம்

கரசரணக்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ

கதை : சுய மதிப்பிடல்-வேலை

ஒரு சிறுவன், கல்லாப் பெட்டி அருகிலோ அல்லது ஒரு கடையிலோ இருக்கும் ஒரு தொலைபேசி பூத்துக்குச் செல்கிறான். ஒரு எண்ணிற்கு டயல் செய்கிறான். கடைக்காரர் அந்த சம்பாஷணையைக் கேட்கிறார்.

சிறுவன்: அம்மையீர், உங்கள் தோட்டத்தில் புல் செதுக்கும் வேலையை கொடுப்பீர்களா?
பெண்மணி(மறுபக்கத்தில்): ஏற்கனவே ஒருவர் இருக்கிறார்.
சிறுவன்: அம்மா, நான் தற்போது உங்களிடம் இருக்கும் ஆளின் பாதிகூலியில் வெட்டித்தருகிறேன்.
பெண்மணி: நான் இப்போது வேலை செய்பவரின் வேலை குறித்து திருப்தியாக இருக்கிறேன்
சிறுவன் (விடாப்பிடியாக): அம்மா, நான் உங்கள் வீட்டுத்தரை மற்றும் படிகளையும், இலவசமாகவே பெருக்குகிறேன்.
பெண்மணி: வேண்டாம். http://demo3.esales.in:8081/ நன்றி.
(முகத்தில் முறுவலுடன், சிறுவன் தொலைபேசி ரிசீவரை கீழே வைத்தான்) அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கடைக்காரர் சிறுவனிடம் பேசினார்.
கடைக்காரர்: மகனே, உன்னுடைய மனோபாவம் எனக்கு பிடித்திருக்கிறது .உன்னுடைய நேர்மறை எண்ணம் எனக்கு பிடித்துள்ளபடியால் உனக்கு ஒரு வேலை தர விரும்புகிறேன்
சிறுவன்: வேண்டாம் ஐயா. நன்றி.
கடைக்காரர்: ஏன்? நீ ஒரு வேலைக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாயே?
சிறுவன்: இல்லை ஐயா. நான் தற்போது இருக்கும் வேலையில் எனது வேலைத் திறமையை பரிசோதித்துக் கொண்டிருந்தேன். நான் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்மணி வீட்டில் வேலை செய்பவன் நான்தான்.

ஒரு நாளின் நிறைவில், அந்த நாளை நாம் எவ்வாறு செலவு செய்தோம் என்று எண்ணிப் பார்த்தோமானால் அந்த நேரம் தான் நமது சுய பரிசோதனை நேரமாகும்.

கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போம்;
  • இன்று எவருக்கேனும் உதவி செய்தேனா?
  • அனைவரிடமும் இனிமையாகவும், மிருதுவாகவும் பேசினேனா?
  • உணவை வீணடித்தேனா?
  • என்னுடைய பொருட்களை நண்பர்களிடம், சகோதர, சகோதரிகளிடம் பகிர்ந்து கொண்டேனா?
  • தண்ணீரை சேமித்தேனா?
  • என்னுடைய நாளை “நல்லதையே பார், நல்லவனாக இரு, நல்லதையே செய்” என்ற விதத்தில் கழித்தேனா?

கேள்விகள் முடிந்த பின் நமக்கு ஒரு அழகான, சந்தோஷமான நாளை தந்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய நேரம். இதுவே இந்த நாளில் எவரையேனும் துன்புறுத்தியிருந்தால் அல்லது ஏதாவது கெடுதல் செய்திருந்தால் இறைவனிடம் மன்னிப்புக் கேட்போமாக. இறைவனிடம், மீண்டும் இத் தவறை செய்யாதிருக்க உறுதி கூறுவோமாக.

செயல்பாடு
  • இரண்டு அட்டைப் பெட்டிகளை எடுத்துக் கொள்க. ஒன்றை அழகாக அலங்கரித்து கஜானாப் பெட்டி என்று பெயரிடவும். மற்றொரு பெட்டியை குப்பைத் தொட்டி என அழைக்கவும். சிறு அட்டைகளில் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் இவற்றை எழுதிக்கொள்ளவும். இந்த அட்டைகளை குழந்தைகளிடம் வினியோகிக்கவும். குழந்தைகள் பெறப்பட்ட இந்த அட்டைகளை எந்த பெட்டியில், போட வேண்டும் என்று தீர்மானித்து ஏதாவது ஒரு பெட்டியில் போடுவார்கள். ஏன் அந்த பெட்டியில் போட்டார்கள் என்பதை விவாதிக்க வேண்டும்.