வகுப்பு 2 – கடவுள் எங்கே இருக்கிறார்?

வகுப்பு 2 – கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறார். சர்க்கரைத் தண்ணீர் சோதனையை விவரிக்கவும். இப்பிரபஞ்சத்தில் கடவுள் நமக்காக என்ன படைத்திருக்கிறார்?

கதை : கடவுள் உண்மையே

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பயிற்சி கொடுத்ததனால் தான் அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை வருகிறது என்று அவர் நினைத்தார். குழந்தைகளுக்குக் கடவுளைப் பற்றி சொல்லவே இல்லை என்றால் அவர்கள் கடவுளைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள், நம்பவும் மாட்டார்கள் என்று அவர் அடிக்கடிக் கூறுவார். கடவுள் என்பவர் நிஜம் அல்ல. அவர் நம் போன்ற மக்களின் கற்பனையே என்று அரசர் நினைத்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான். உடல்நிலைக் குன்றிய அரசி பிறந்த குழந்தையை அரசரிடம் விட்டுவிட்டு இறந்துவிட்டாள். அரசர் தன் குழந்தைக் கடவுளைப்பற்றி எப்பொழுதுமே தெரிந்து கொள்ளக்கூடாது என்று அவனை ஒரு அறையில் போட்டு பூட்டினார். ஆனால் அந்தக் குழந்தைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். வேலையாட்களும் ஆசிரியர்களும் அந்தக் குழந்தையை நன்றாக கவனித்துக் கொண்டனர். கல்வி கற்றுக் கொடுத்தனர். ஆனால் அந்த இளவரசனிடம் கடவுளைப் பற்றி எதுவும் தெரிவிக்க கூடாது என்று அவர்கள் அனைவருக்கும் அரசர் ஒரு எச்சரிக்கை விட்டிருந்தார். அரசரின் நம்பிக்கைக்குரிய அந்த வேலை ஆட்களும், ஆசிரியரும் குழந்தையை நன்கு வளர்த்து வந்தனர். அந்த இளவரசருக்கு அனைத்தும் பயிற்றுவித்தனர் ஆனால் கடவுளைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

ஒரு நாள் எப்பொழுதும் போல் அரசன் தன் மகனைப் பார்க்க வந்த பொழுது, மகன் தலைவணங்கி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அரசர் திகைத்துப் போனார். என்ன செய்கிறாய் மகனே என்று கேட்டார் அதற்கு அவன் தந்தையே! நான் இந்த உலகத்தைப் படைத்தவரை வணங்குகிறேன் என்றான்.

அரசர் அனைத்து வேலையாட்களையும் ஆசிரியர்களையும் உடனே அழைத்தார். இளவரசனிடம் ‘கடவுளைப் பற்றி உனக்குக் கூறியது யார்?’ என்று கேட்டார். ஆனால் அவர்கள் யாரும் கூறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.

ஆச்சரியமடைந்த அரசர் தன் மகனைப் பார்த்து, யார் அந்தப் படைப்பாளி? உனக்கு யார் அதைப் பற்றிக் கூறினார்? என்று வினவினார். “எனக்கு எவரும் கூறவில்லை. எதற்காக ஒருவர் கூற வேண்டும்? ஜன்னல் வழியே இந்த அழகான உலகத்தை என்னால் காணமுடிகிறது. அழகான மலைகள், வானம், பசுமையான புல்வெளிகள், மரங்கள், மலர்கள், நதிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் இவை அனைத்தையும் யாரோ ஒருவர் படைத்திருக்க வேண்டுமல்லவா? இவ்வளவு அழகையும் படைத்தவர் மிகச் சிறந்தவராகவே இருக்க வேண்டும். அதனால் தான் அவருக்குத் தலைவணங்குகிறேன்; என் அன்பை வெளிப்படுத்துகிறேன்” என்று கூறினான் சிறுவன். தோல்வியடைந்த மனிதனாக அரசன் மெதுவாகத் திரும்பிச் சென்றார். தன் மகனிடமிருந்துக் கடவுள் உண்மையே என்பதைப் புரிந்து கொண்டார்.

கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்றால் அவர் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார் என்றுதான் பொருள்படும். அவர் ஒவ்வொரு மலரிலும், ஒவ்வொரு செடியிலும் இருக்கிறார். ஒவ்வொரு துளி நீரிலும் இருக்கிறார். இசையில் இருக்கிறார். ஒவ்வொரு உயிரிலும் இருக்கிறார். பெரியது, சிறியது என அனைத்திலும் இருக்கிறார்.

அதனால் தான் நம் கலாச்சாரத்தில் நாம் அனைத்தையும் மரியாதையுடன் நடத்துகிறோம். மரங்கள், நதிகள், மலைகள், சூரியன், சந்திரன் பிற கிரகங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் என அனைத்தையும் வழிபடுகிறோம். நமக்கு நிறைய கடவுள்கள் இருக்கின்றனர் என்று பொருளல்ல. நாம் எல்லாவற்றிலும் கடவுளைக் காண்கிறோம் என்றுதான் பொருள்.

பாடல் – My God Is So Great

My God is so great, so strong & so mighty There is nothing my God cannot do…………. The mountains are his, the rivers are his The stars are his handicraft too (My God …). He fashioned the trees, the wind and the seas And painted the sky royal blue (My God is so ….) He made us with love, Sent straight from above. And filled us with his wisdom too My God is so great, so strong & so mighty There is nothing my God cannot do………….