வகுப்பு 16 – இரக்கம்

வகுப்பு 16 – இரக்கம்

வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி இரக்கம் காட்டுவது? பெற்றோர்களிடமும், பெரியவர்களிடமும் மரியாதை காட்டுவதும், உதவி புரிவதும் , மேலும் சகோதர , சகோதரிகளை நேசிப்பதுமே சிறந்த வழியாகும். பள்ளியில் இரக்கம் காட்டுவது எப்படி? ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிதல், அவர்களுக்கு உதவியாக இருத்தல் ,மேலும் அவர்கள் கூறுவதை நன்கு கவனித்தல். மேலும் சக மாணவர்களிடம் நட்பு பாராட்டுதல்.

விலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது கூட பல வழிகளில் இரக்கம் காட்ட முடியும். அவையாவன, செல்லப் பிராணிகளை வளர்த்தல், விலங்குகளுக்கு உணவு அளித்தல், மரங்கள் நடுதல், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் பறவைகளுக்கு நீரும் உணவும் வைத்தல் ஆகியவையாகும்.

கதை : ஒரு தீர்க்கதரிசியின் அன்பு

பொறாமைப் பிடித்தப் பெண் ஒருத்தி, தினமும் காலை, முஹம்மது நபி அவள் வீட்டு வழியாக் கடந்து செல்லும் போதெல்லாம் அவர் தலையில் குப்பைகளைக் கொட்டுவாள். நபிகள் எவ்வித சலனமும் இன்றிக் கடந்துச் செல்வார். அந்தப் பெண் இதைப் பல நாட்கள் செய்து வந்தாள்.

ஒரு நாள் அவர் அவ்வழியே கடந்து செல்லும்போது, அவர் தலையில் குப்பை வந்துவிழவில்லை. அதை நினைத்து அவருக்கு கவலையாக இருந்தது. குப்பை வரும் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பெண்மணி தனியாக படுத்து இருப்பதைக் கண்டார். அவள் மிகவும் உடல்நிலைக் குன்றியவளாக இருந்தாள். நபிகள் உடனடியாக ஒரு மருத்துவரை வரவழைத்து அந்தப் பெண்மணியை எழுப்பி உட்கார வைத்தார். அவள் அழுதுகொண்டே நபிகள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள். அவள் தினமும் அவருக்கு கிடைத்த அவமானத்திறகுப் பதிலாக இவர் காட்டிய இரக்க குணம் அவளை முற்றிலுமாக மாற்றியது. இரக்கத்தின் சக்தி இதுதான்.