வகுப்பு 15 – அண்டைவீட்டார்

வகுப்பு 15 – அண்டைவீட்டார்

அண்டைவீட்டார் என்பவர் எவர்? நமது இல்லத்தருகில் வசிப்பவர் அண்டைவீட்டார். நம் குடும்பத்தாருக்கு அடுத்து நமக்கு மிகவும் நெருக்கமானவர் நம் அண்டை வீட்டார் தான். அதனால், அண்டை வீட்டாரிடமும் அன்பு காட்ட வேண்டும்.

உனது வீட்டு அருகில் இருக்கும் குழந்தைகளை நேசிக்க கற்றுக் கொள். பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள். அண்டை வீட்டாரிடம் அன்பாகவும் அவர்களுக்கு உதவியாகவும் இரு.

முதியவர்களைத் தொந்தரவு செய்யாதே. அவர்களுக்கு ஓய்வும் அமைதியும் தேவை. http://demo3.esales.in:8081/ அண்டைவீட்டாரின் சுவற்றில் எதுவும் எழுதாதே. உபயோகமற்றப் பொருட்களை அவர்கள் வீட்டில் எறியாதே. அவர்கள் தோட்டத்திலிருந்து மலர்களைப் பறிக்காதே.