வகுப்பு 14 – ஆரோக்கியமான வாழ்க்கை முறை

வகுப்பு 14 – ஆரோக்கியமான வாழ்க்கை முறை

உடல் நலக்குறைவை யாரேனும் விரும்புவார்களா? நாம் ஒரு சில எளிமையான வழி முறைகளைப் பின்பற்றினால் உடல் நலக் குறைவையும் வலிகளையும் தவிர்க்கலாம். ஆரோக்கியமான வாழ்வு நான்கு முக்கியமான வழிமுறைகளை உள்ளடங்கியுள்ளது – தூய்மையான உடல், நல்ல உணவு, நல்ல பழக்கவழக்கங்கள், தூய்மையான எண்ணங்கள்.

தூய்மையான உடலுக்கான விளையாட்டு
நேர்மையாக பதில் கூறுங்கள் – ஆமாம் அல்லது இல்லை.
 1. நீங்கள் எழுந்தவுடன் பல் தேய்ப்பீர்களா? எதுவும் குடிப்பதற்கு முன் பல் தேய்த்து விடுவீர்களா?
 2. தினமும் குளிக்கும் பொழுது உங்கள் காதுகளையும் பின் கழுத்தையும் சுத்தம் செய்வீர்களா?
 3. உங்கள் நகங்கள் குட்டையாகவும் சுத்தமாகவும் இருக்கின்றனவா என்று கவனித்தீர்களா?
 4. ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன் நீங்கள் கைகளை சுத்தம் செய்வீர்களா?
 5. இப்பொழுது உங்களைக் கவனியுங்கள். உங்கள் சீருடையும் காலணிகளும் சுத்தமாக இருக்கின்றனவா?
 6. தினமும் ஒரு பழமாவது உண்பீர்களா?
 7. தினமும் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவீர்களா?
 8. தினந்தோறும் வெளியில் சென்று விளையாடுவீர்களா?
 9. தினந்தோறும் சிறிது நேரமாவது வீட்டில் பள்ளிப் புத்தகங்களைப் படிப்பீர்களா?
 10. நீங்கள் புன்முறுவல் செய்வீர்களா அல்லது வாய்விட்டுச் சிரிப்பீர்களா?
 11. தினந்தோறும் ஒரு நேரமாவது கடவுளைப் ப்ரார்த்தனை செய்வீர்களா?
 12. எப்பொழுதும் உண்மை பேச முயற்சி செய்வீர்களா?
பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றிய வினாடி வினா.
 1. வெளியே சிவப்பாகவும் உள்ளே வெண்மையாகவும் இருக்கும், ‘ஆ’ என்று துவங்கும் பழத்தின் பெயர் என்ன? – ஆப்பிள்.
 2. ‘வா’ என்று துவங்கும் மெல்லிய நீண்ட பழத்தின் பெயர் என்ன? – வாழைப்பழம்.
 3. ‘கா’ என்று துவங்கும் மெல்லிய நீண்ட காயின் பெயர் என்ன ? -காரட்.
 4. வெளியே பச்சை நிறத்திலும் உள்ளே வெள்ளை நிறத்திலும் இருக்கும். ‘வெ’ என்ற எழுத்தில் துவங்கும் காயின் பெயர் என்ன? – வெள்ளரிக்காய்.
 5. ‘தி’ என்ற எழுத்தில் துவங்கும் இனிப்பாகவும் கொத்து கொத்தாக காய்க்கும் பழத்தின் பெயர் என்ன? – திராட்சைப்பழம்.
 6. ‘எ’ என்று துவங்கும் மிகவும் புளிப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழத்தின் பெயர் என்ன? – எலுமிச்சை.
 7. ‘ப’ என்ற எழுத்தில் துவங்கும் சிறிய மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் காயின் பெயர் என்ன ? – பட்டாணி.
 8. ‘உ’என்ற எழுத்தில் துவங்கும் வெளியே பழுப்பு நிறத்திலும் உள்ளே வெள்ளை நிறத்திலும் மண்ணுக்கடியில் வளரும் குழந்தைகளால் விரும்பப்படும் காயின் பெயர் என்ன? – உருளைக்கிழங்கு.
 9. ‘ஸ்’ என்ற எழுத்தில் துவங்கும் சிவப்பு மற்றும் இனிப்பான பழத்தின் பெயர் என்ன? – ஸ்ட்ராபெரி.
 10. ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் சிவப்பு மற்றும் மென்மையான பழத்தின் பெயர் என்ன? இப்பழத்தை காய்கறியாகவும் பயன்படுத்துவர்.