வகுப்பு 13 – உணவு உண்ணும் பழக்கங்கள்

வகுப்பு 13 – உணவு உண்ணும் பழக்கங்கள்
ஆரோக்கியத்திற்குத் தொடர்புடைய பழக்கங்கள்
ஸ்லோகம்
உணவு உண்ணும் முன் செய்யும் பிரார்த்தனை

ஹரிர்தாதா ஹரிர்போக்தா ஹரிரன்னம் ப்ரஜாபதி
ஹரிர்விப்ர: சரீரஸ்து புங்தே போஜயதே ஹரி:

கதை : பழி வாங்கும் காய்கறிகள்

ஒரு ஊரில் ஒரு இளம் இளவரசி இருந்தாள். அவள் சரிவர உண்ணமாட்டாள். சில உணவுகளைப் பார்த்து அஞ்சுபவள். ஒவ்வொரு முறை அவள் தட்டில் காய்கறிகளைக் காணும்போதும் சாப்பிட மாட்டேன் என்று வெறுத்து ஒதுக்குவாள். தட்டைத் தள்ளி விடுவாள். எவ்வளவோ முயற்சி செய்தும், அவளது அம்மாவால் இளவரசியின் பழக்கங்களை மாற்றமுடியவில்லை.

ஒரு இரவு இளவரசி உறங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் சமையலறையில் இருந்த காலிஃப்ளவரால் உறங்க முடியவில்லை. அந்த அரண்மனையின் உணவுப் பொருட்கள் வைக்கும் அலமாரியில் இருந்த, பெரிய இலைகளால் அலங்கரிக்கப்பட்ட, சத்து நிறைந்த காய்கறி அது.

அந்த காலிஃப்ளவர், “எனக்கு அந்த இளவரசியை நினைத்தாலே கோபம் வருகிறது. அவர் எப்பொழுதும் நம்மைப் பற்றிப் புகார் செய்து கொண்டே இருக்கிறாள். நான் அவளுக்கு ஒரு நல்ல பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கோபமாக கத்திக் கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்த பீன்சை நகர்த்தி எழுப்பியது.

எழுந்திரு! எழுந்திரு! என்று பீன்ஸ் கத்தியதில், வெண்டைக்காயும் கீரையும் எழுந்து, எதற்கு சத்தம் போடுகிறாய்? இங்கிருந்து செல் என்றது. “நீ எழுந்திருக்கவேண்டும். நமக்கு ஒரு வேலை இருக்கிறது”, என்றது பீன்ஸ்.

திடீரென்று ஒரு படபடக்கும் சத்தத்துடன் சமையலறை ஜன்னல் வழியாக ஒரு குட்டி தேவதை பறந்து வந்தது. “என்னால் உங்களுக்கு உதவ முடியும்” என்று காய்கறிகளைப் பார்த்து சொன்னது. ஒரு பளபளவென்ற கைக்குட்டையை எடுத்து மூன்று முறை சுழற்றியது. என்ன அதிசயம்! எல்லா காய்களுக்கும் இரண்டு ரெக்கைகள் முளைத்தன. அனைத்தும் நெடு தூரத்தில் இருந்த ஒரு மலையை நோக்கிப் பறந்தன. ஒரு குகையினுள் சென்று மறைந்து கொண்டன.

அடுத்த நாள் காலை இளவரசி சாப்பிட வந்த போது வெறும் ரொட்டிகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அவளுடைய தட்டில் ஒரு காய்கறியும் இல்லாததைக் கண்டு மகிழ்ந்தாள். “எப்படி எனக்கு ஒரு காயும் கொடுக்காமல் இருந்தீர்கள்?” என்று அம்மாவிடம் கேட்டாள்.

ஆனால் அலமாரியில் ஒரு காயும் இல்லாததையும், அவை மறைந்து விட்டதையும் கவலையுடன் கூறினார் ராணி. இளவரசி இப்படியே பல நாட்கள் காய்கறி இல்லாத உணவையே உண்டு கொண்டிருந்தாள். ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போனது. “எனக்கு என்ன ஆயிற்று?” என்று மனக் குழப்பத்துடன் அழுதாள்.

காய்கறிகளை சாப்பிடாமல் இருந்ததால்தான் இளவரசியின் உடம்பு தளர்ந்தது, என்றாள் அவள் அம்மா. காய்கறிகள் உடம்பிற்கு நல்ல தேவையான சத்துக்களை கொடுக்கும் என்றார். “காய்கறிகள் எங்கே? நான் அவற்றை சாப்பிட வேண்டும்” என்று முணு முணுத்தாள், இளவரசி. அவற்றைத் திருப்பி அழையுங்கள், என்று அம்மாவிடம் கெஞ்சினாள். ஆனால் எப்படி அழைப்பது என்று தனக்குத் தெரியவில்லை, என்றார் அம்மா.

திடீரென்று ரெக்கைகள் படபடக்க அங்கு வந்த தேவதை காய்கறிகளை நிராகரிக்காமல், அவற்றை நினைத்து சந்தோஷப்படுங்கள். நிச்சயம் அவை வந்துவிடும். காய்களுக்கு உங்கள் அன்பு புரியும், என்றது.

அவைகளின் முக்கியத்துவம் தனக்குத் தெரிந்த விட்டதாகவும், அவைகளிடம் அன்பு மொழி பேசுவதாகவும், வெறுக்காமல் இருப்பதாகவும், உறுதி செய்தாள் இளவரசி.

தேவதைத் தன் கைக்குட்டையை எடுத்து மூன்று முறை சுழற்றியது. அனைத்து காய்களும் பறந்து அரண்மனைக்குள் வந்து சமையலறை அலமாரியில் புகுந்தது.

காய்கறிகளிடம் நன்றி கூறிய இளவரசி, அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டதாகவும், அவை இல்லாமல் தன்னால் வளர்ந்து ராணியாக முடியாது என்றும் கூறினாள். அன்றிலிருந்து பல சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் இளவரசியின் தட்டில் இடம்பிடித்து மகிழ்ச்சியுடன் அவளால் உண்ணப்பட்டது.

பாடல்
பழங்கள் மற்றும் காய்கறிகள் (மெட்டு – Old Mcdonald had a farm.)

Vegetables are good for me EEIEEIO
And so I eat them happily EEIEEIO
With a carrot here, and a carrot there
Here a carrot , there a carrot
Everywhere a carrot, carrot
Vegetables are good for me EEIEEIO
(children can take turns with veg)
Apples are good for me
Yum Yum Yum Yum Yum
(குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு கனியின் பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

அமைதியாக அமர்தல்

கடவுளே!! எனக்கு கொடுக்கப்பட்டுள்ள உணவிற்காக நான் நன்றி கூறுகிறேன். உணவே கடவுள் என்று கற்றுக் கொண்டேன். இன்றிலிருந்து உணவை வீணாக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.