ஹோலி

ஹோலி
ஹோலி

கதை – ஹோலிகாவின் கதை

முன்னொரு காலத்தில் இந்த பூலோக ராஜ்ஜியத்தை வெற்றி கொண்ட ஹிரண்யகசிபு என்னும் அசுர அரக்கன் இருந்தான். அவன் எவ்வளவு ஆணவம் கொண்டவனாக இருந்தான் என்றால் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என அனைவருக்கும் உத்தரவிட்டிருந்தான். ஆனால் அவனது ஏமாற்றம் என்னவென்றால் அவன் மகன் ப்ரஹலாதனே ஸ்ரீமன் நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தான். எனவே தனது தந்தையை வணங்க மறுத்தான். ஹிரண்யகசிபு, தன் மகன் பிரஹலாதனைக் கொலை செய்ய பல வழிமுறைகளை முயற்சித்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாவிஷ்ணு அவனைக் காப்பாற்றினார். இறுதியாக தனது சகோதரி ஹோலிகாவை ப்ரஹலாதனை மடியில் வைத்துக்கொண்டு கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இறங்கக் கோரினான். ஹோலிகா தீயினால் சுடப்படாத வரம் பெற்றிருந்ததை அவன் அறிவான்.

ஹோலிகா, குழந்தை பிரஹலாதனை, வலுக்கட்டாயமாக மடியில் வைத்துக் கொண்டுத் தீயில் இறங்கினாள். அவளது துரோக புத்திக்கு அவள் தன் உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்த்து. அவள் தனியாக தீயில் இறங்கினால் தான் அந்த வரம் பயனளிக்கும் என்பது அவளுக்குத் தெரியாதிருந்தது. ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருந்த பிரஹலாதன் அவனது அதீத பக்தியின் காரணமாக இறைவன் அருளால் எந்தத் தீங்குமின்றி தீயினின்று வெளிவந்தான்.