கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

கதை
கோவர்தன மலையை தூக்குதல்

நமது இந்திய தேசத்தில் பிருந்தாவன் எனப்படும் ஒரு சிறிய நகரம் உள்ளது. அது புகழ் வாய்ந்ததும் புனிதமானதுமாகும். ஏனெனில் பகவான் கிருஷ்ணரின் பிறப்புடன் சம்பந்தப்பட்டதாகும் 5000 வருடங்களுக்கு முன்னர் இறைவன் அங்கு பிறந்தார். தீயவர்களை தண்டிக்கவும், நல்லவர்களை காப் பாற்றவும் அவர் மண்ணின் மீது சாதாரண மனிதனாக தோன்றினார்.

அது ஒருமழைக்காலம், சூரியன் மெலிதாக மேகங்களின் பின்னால் பலவீன மாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். அப்போது பிருந்தாவனம் என்னும் கிராமம், சுவர்க்கபூமியாகவும், ஆரோக்கியமானதாவும் பசுமையானதாகவும் அபிரிமிதமான மழை பொழியும் கிராமமாகவும் மாறிக்கொண்டிருந்தது. கிராமத்தில் இருந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருந்தனர், கிருஷ்ணன் ஒரு துள்ளலுடன் விழித்தெழுந்தான். இன்னும் விடிந்திருக்கக் கூடவில்லை எனினும் தெருக்களிலிருந்து வந்த பெரும் சத்தம் அவனை எழுப்ப போதுமானதாக இருந்தது. ஆர்வத்துடன் எழுந்திருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

அவனது வீட்டின் முன்னே ஒரு கூட்டம் கூடியிருந்தது. பல ஆண்களும் பெண்களும் தெருவை கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர். தெருவெங்கும் தோரணங்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது பிறந்தது முதல் இந்த மழைக்காலத்தில் கிராமத்தார்கள் விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருப்பதையே பார்த்திருந்த கிருஷ்ணனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. இன்று ஏதாவது திருவிழாவா அல்லது திருமணமா? ஆச்சரியப்பட்டான் அவன். அது போன்ற எதையும் அவனால் நினைவு கூர இயலவில்லை.

அவன் நதியில் குளித்துவிட்டு வரக் கிளம்பினான். திரும்பி வரும்போது ஆண்கள் வேலைசெய்வதை தன்தந்தை மேற்பார்வை இடுவதை பார்த்தான் அப்பா,தெருவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, தந்தையை கிருஷ்ணன் வினவினான் கோபாலர்கள் இந்திரன் வழிபாட்டிற்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள்” நந்தா கூறினார். இந்த வருடம் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிப்பாக உள்ளதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மழைக்கான அதிபதி இந்திரன் என்பதால், நம்மிடம் அவன் காட்டிய கருணைக்கு நன்றியறிதலை காட்ட வேண்டுமல்லவா. இந்திரன் தான் மழைக்கதிபதி என்று எவ்வாறு கூறுகிறீர்கள் அப்பா? கிருஷ்ணன் தன் மறுப்பை தெரிவித்தான். நந்தன் எச்சரிகையுடன் தன் மகனைப் பார்த்தான் நிச்சயமாக இந்திரன் தான் மழையை தருபவர் மகனே. கட்டாயம், அவர்தான் நமது நல்லதிர்ஷ்ட்த்துக்கு காரணமானவர். அவர்தான் மேகங்களின் கடவுள் அவரே அவற்றை ஆட்சி செய்கிறார். எனவே அவர்தான் இந்த வருடம் நமக்கு நல்ல மழையை அருளியவர். தயக்கமாய் பதிலிறுத்தார் மகனுக்கு இல்லை தந்தையே. திடமாக மறுத்தார், கிருஷ்ணன். நீங்கள் எல்லாம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். கோவர்தன மலையே நமது உண்மையான நண்பன். மேலே இருக்கும் மேகங்களை விட, நமது கிராமத்தில் இருக்கும் இந்த மலை தான்,” நமக்கு உதவியிருக்கிறது. எப்படி அதை நீ கூறுவாய்? நம்பிக்கையற்று வினவினான் நந்தா.

இந்த வளமான மலை, காற்றில் சமிஞ்சை சேதி அனுப்பி மேகங்களை உருவாக்குகிறது. அவை பிருந்தாவனத்தின் மேலே திரண்டு நமக்கு மழையைத் தருகிறது. ஆகவே, நாம் யாரை புகழவும் வழிபடவும் வேண்டும் இந்திரனையா, அல்லது கோவர்தன மலையையா?

நந்தனும் வேலையில் ஈடுபட்டிருந்த இதர கோபாலர்களும் திகைத்து நின்றனர். எப்படி மேகங்களின் தலைவனான இந்திரனை விடுத்து ஒரு மலையை வணங்கச் சொல்லுவான் இந்த கிருஷ்ணன்? இது போன்ற விஷயத்தை இப்போதுதான் முதன்முறையாக கேட்கின்றனர்.

ஆம் தந்தையே.” மகன் தொடர்ந்தார். நமக்கு மருந்துகளை மூலிகைகளாகவும் செடிகளாகவும் தருவது யார் நமக்கு தூய நீரையும் காற்றையும் மலை முகட்டிலிருந்து அனுப்பி வைப்பது யார்? நமது பசுக்களுக்கு நல்ல புல்லை தந்து அவை தேன் போன்ற பாலைத் தர காரணமாக இருப்பது யார்? அது கோவர்த்தன மலையே. கோபாலர்களிடையே முதலில் இருந்த ஆச்சரியமும் சந்தேகங்களும் மறையத் தொடங்கின. அவர்கள் இப்போது கிருஷ்ணன் கூறியவற்றை கவனிக்கத் தொடங்கினர்.

ஆகவே நாம் ஏன் அந்த மலையை வணங்கக்கூடாது? கிருஷ்ணன் மேலும் தொடர்ந்தான் எங்கோ சொர்க்கத்தில் சவுக்கியமாக இருக்கும் தேவரை விட நம் கண்ணெதிரே இருப்பதற்கு நன்றி தெரிவிப்பது, புத்திசாலித்தனம் அல்லவா?

கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு கோபாலர்கள் முழுமையாக சமாதானமடைந்தனர். அவர்கள் அனைவரும் அந்த வருடம் இந்திரனுக்கு பதிலாக கோவர்த்தனத்தை வழிபட சம்மதித்தனர் எனினும் தங்கள் விஸ்வாசம் இடம் மாறியது குறித்து கடவுளின் கோபத்தை எண்ணி பயம் தான் நந்தனுக்கு அவ்வாறே அவனது பயமும் உண்மையாயிற்று. மேலே வானில் தேவேந்திரன், கோபத்துடன் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆக, இந்த மாட்டுக்காரச் சிறுவன் என்னை கௌரவிக்கும் விழாவினை நிறுத்தி விட்டான்.

இந்திரனின் பெருமை அவனை விடுத்து கோவர்த்தன மலையை வணங்க கோபாலர்கள் செய்த முடிவால் இழுக்கடைந்தது கோபமடைந்த அவன் பிருந்தாவனத்து மக்களை தண்டிக்க தீர்மானித்தான். இத்தனை வருடங்களாக நான் அவ்ர்களது மன்றாடலையெல்லாம் கேட்டு அவர்கள் வளமுடன் வாழ உதவினேன். அதற்கு இதுதான் பிரதிபலனா? இதுதான் நேரம் அவர்கள் இங்கு உண்மையான கடவுள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு. நான் பிருந்தாவனத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இடி மழையை அனுப்புவேன். அவை பிருந்தாவனம் கிராமம் முழுமையையும் அழிக்கும். அப்போது பார்க்கலாம் இவர்களை யார் காப்பாற்றுகிறார்களென்று. குரூரமாக சிந்தித்தான் இந்திரன்.

தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தினான். தன் தெய்வீக சக்தியைக் கொண்டு தேவேந்திரன் மேகங்களை உண்டாக்கினான்.அவை நடுநிசி வானைக் காட்டிலும் கருப்பாகவும் பயங்கரமாகவும், பேய்த்தனமாகவும் இருந்தன. ”சென்று பிருந்தாவனத்தை அழியுங்கள் அவன் உத்தரவிட்டான். அவை தன் எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தன. தாமதமின்றி அவையனைத்தும் ஒருமித்து மேக படையெடுப்புபோல், திரண்டு கிருஷ்ணனும் பல அப்பாவி குடும்பங்களும் வாழும் கிராமத்தை நோக்கி புறப்பட்டன.

“இது போதும் அவர்களுக்கு” பெருஞ்சத்தத்துடன் சிரித்தான் இந்திரன். நல்ல அறுசுவை உணவை உண்டபின்னர், பிருந்தாவனத்து மக்கள் வீட்டில் இளைபாறிக் கொண்டிருந்தனர். திடீரென் பெருஞ்சத்தம் கேட்ட்து. டமால்!

அனைவரும் எச்ச்ரிக்கையுடன் வெளியே வந்து பார்த்தனர். அவர்கள் பார்த்த காட்சி! அவர்கள் மூச்சுவிட மறந்தனர். அப்போது பிருந்தாவனத்தில் நண்பகல் வேளை. ஆனால் அதுபோல் யாரும் சொல்ல முடியாது. கிராமம் முழுதும் கும்மிருட்டு. சூரியனை எங்கும் தென்படவில்லை. மாறாக, கரும் மேகங்கள் கிராமத்தை சூழ்ந்திருந்தன.

அவை கிராமத்தைச் சுற்றி பகலை இருட்டாக்கி, மூட்டம் போட்டிருந்தன. மேகங்கள் கெடுதியும் தொல்லையும் தருவனவாக தோன்றின. ஆனால் அவை அப்படியே வானில் நின்றன மழையை பொழியவில்லை. அவை யாருக்காகவோ அல்லது ஒருவேளை ஏதாவது சமிக்ஞைக்காகவோ எதிர் பார்த்திருப்பது போல் தோன்றியது. பிருந்தாவனத்து மக்கள் பயத்துடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வாயடைத்துப்போயிருந்தனர். அவர்கள் வாழ் நாளில் இதுபோல் இதுவரை நடந்ததேயில்லை.

கிருஷ்ணன், கிராமத்தாரின் பயந்த கூக்குரலைக்கேட்டான். ஆர்வமுடன் வெளியே வந்து பார்த்தான். அவன் வெளியே வந்த்துதான் தாமதம், அந்த கரும் மேகங்கள் நந்தா வீட்டின் மேல் பெரும் சத்த்த்துடன் மழையை கொட்ட ஆரம்பித்தன. இதற்காகத்தான் அந்த மிருகத்தனமான மேகங்கள் காத்திருந்ததுபோல் தோன்றியது.

அந்த அசுரத்தனமான மேகங்கள் ஒரு அரண் அமைக்க திட்டம் வைத்திருப்பதுபோல் தோன்றியது. நந்தாவின் வீட்டின் மேலிருந்து கிராமம் முழுமையும் அவை பரவின. பழிதீர்க்கும் விதமாக அவை தோன்றின. கடும் மழை பொழிந்து, மாடுகளும் கொட்டாய்களும் அடித்துச் செல்லப்பட்டன .இந்த கடும் மழைக்கு ஓலைவேய்ந்த கொட்டாய்கள் எம்மாத்திரம்.

ஓடுங்கள், ஒரு பயந்த மனிதன் கத்தியவுடன், அனைவரும் உயிரைக் காப் பாற்றிக்கொள்ள ஓட ஆரம்பித்தனர். தன் மக்களையும் உடமைகளையும் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓடினர் எனினும் தப்புவது என்பது கடினமே என்று பிருந்தாவன வாசிகளுக்கு தோன்றியது.http://demo3.esales.in:8081/ கண்மண் தெரியாத அந்த கடும் மழை ஏதோ ஒரு பிழைக்கு முகத்தில் அறைவது போல் சாரல் அடித்தது. எந்த இடத்திலும் ஒதுங்க முடியவில்லை. எதுவும் இந்த மேக வெடிப்பு மழைக்குத் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக இல்லை அந்த உதவியற்ற அப்பாவி கிராம மக்கள் இந்த இயற்கை சீற்றத்தைப் பார்த்து புலம்பினர். அவர்கள் தெய்வத்தின் உதவி வேண்டி பிரார்த்தித்தனர்.

ஆனால் அந்த மேகங்கள் கருணையற்றவையாக இருந்தன. இப்போது அவற்றுடன் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியும், காதை பிளக்கும் இடியோசையும் துணைக்கு சேர்ந்து கொண்டன. அடிக்கொருதரம், பசுமை மரத்தைமின்னல் தாக்கி நாசப்படுத்தியது. இடியானது மக்களின் நாடி ந்ரம்புகளை உலுக்கி பீதியை கிளப்பியது. பீதியுற்ற மக்களைப்பார்த்து நந்தா செய்வதறியாது திகைத்தான் .

பார்த்தாயா மகனே, இது சாதாரண புயல் மழையல்ல. இது நமது மீறிய செயலுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே எனக்கு தோன்றுகிறது. இறைவனின் கோபத்திலிருந்து தப்புதல் கடினமான செயலாகும். அதனால் தான் இத்தனை வருடங்களும் இந்திரனை பூஜித்தோம் கிருஷ்ணா. வருத்தத்துடன் கூறினார் நந்தா. நாம் இந்த வருடம் இந்திரனை அலட்சியப் படுத்த தீர்மானித்ததால்தான் அவர் நம்மை தண்டிக்கிறார். உன்னுடைய யோசனையினால், அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறர்கள், இப்போது நாம் என்ன செய்வது?

கிருஷ்ணன் ஆகாயத்தைப் பார்த்து ஆ, இந்திரா,உன் எண்ணம் வீணானது. கோபத்துடன் கூறினான். உன் திட்டம் புரிந்தது. நீ எங்களுக்கு பாடம் புகட்ட விரும்புகிறாய் இல்லையா? ஆனால் முதலில் உனக்கே அது தேவை. நான் விரைவில் உன் ஆணவத்தை அழிப்பேன். இவ்வாறு எண்ணம் கொண்டு,கிருஷ்ணன், தன் தந்தையின் தோளின் மேல் தன் உறுதியளிக்கும் கரத்தை வைத்தான்.

முதலில் நாம் மக்களின் எண்ணம் இதற்கான காரணத்தை அறியும்படி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியபிறகு, ஊரின் மத்தியில் சென்று நின்று கொண்டு தன்னுடைய தோரணையான குரலில்,அனைவரையும் கூவியழைத்தான். ஓ பிருந்தாவனத்து மக்களே, என்னை பாருங்கள் ஓடாதீர்கள், பீதியடையாதீர்கள் கோபாலர்கள் கிருஷ்ணனை இரங்கத்தக்க் வகையில் பார்த்தனர். வெகு காலமாக அச்சிறுவனை அவர்களுக்குத்தெரியும். அவன் சாதாரணமானவன் அல்ல. அமானுஷ்ய சக்தியை பெற்றிருப்பவன் என்றும் அறிந்துவைத்திருந்தனர். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் அவனால் என்ன செய்ய முடியும்?

இதெல்லாம் நம் தப்புதான்.யாரோ முணுமுணத்தனர். நாம் இந்திரனை அவ மதித்தோம். இப்போது அவன் தண்டிக்கிறான். மற்றொருவர் தொடர்ந்தார். ஆம் மாமா, நீங்கள் சொன்னது சரியே. இது இந்திரனின் கெட்ட திட்டமே. கிருஷ்ணா பதிலிருத்தான். ஆனால் முன்போல் கோவர்த்தனம் மீண்டும் நமக்கு உதவி புரியும், இவ்வழியில் வாருங்கள். எப்படி என்று நான் காட்டுகிறேன் என்று அறைகூவல் விடுத்து அவர்களை மலை பக்கம் வழி நடத்தினான். கிருஷ்ணன் அண்ணாந்து பார்த்து மேகங்களை கண்டு சிரித்தான். பின் கண் சிமிட்டுவதற்குள் கோவர்த்தன மலையை ஒரு குடைபோல் மக்களின் தலைக்கு மேலாக தூக்கினான்.

மக்கள் மூச்சுவிட மறந்தனர். ஒரு சின்னஞ்சிறிய பாலகன் தன் சுண்டு விரலால மலையை தூக்கிவிட்டான். மேலே, இந்திரன் திடுக்கிட்டான். எப்படி ஒரு சிறுவனால் மலையை தூக்க முடியும்? இந்த சிறுவன் கிடக்கட்டும். இதுபோன்ற சாதனையை எவரும் செய்ததாக அவன் பார்த்ததில்லையே இதற்குள் நீ புரிந்து கொண்டிருக்கவேண்டும் ஆனால் இல்லையே. கர்வமும் அகந்தையும் உனது பொது அறிவை மேகமாக மறைத்துவிட்டன இந்திரா, கேட்ட்து பிரம்மாவின் குரல்தான். தேவேந்திரன், குழப்பமுற்று படைக்கும் கடவுளைப்பார்த்தான், கிருஷ்ணா ஒரு தெய்வக் குழந்தை என்று உனக்குத் தெரியாதா? அவன் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூட உனக்குத்தெரியாதா? வெட்கக் கேடு என்றார் பிரம்மா. இந்திரன் பாதிப்படைந்தான், மழையை நிறுத்தினான். மன்னிப்பு கேட்கும் விதமாக வானத்திலிருந்து ரோஜா இதழ்களை பொழிவித்தான். பிறகு கரகோஷம் ஆரம்பித்த்து. எல்லா கோபாலர்களும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்துக் கொண்டு தங்கள் அன்புக்குகந்த பாலகனின் பலத்தையும் அறிவையும் புகழ்ந்தனர்.

தம்மிடையே வாழும் இறைத்தன்மை கொண்ட குழந்தையை கண்டு கொண்டனர். அவனை புகழ்ந்து பாட்டுகள் இயற்றி, அவனது அற்புதமான சாதனையை பாராட்டினர். வீரன் கிருஷ்ணன் வாழ்க, என்னும் கோஷம் எங்கும் எதிரொலித்த்து அது இன்று வரை தொடர்கிறது.

பாடல்

ஸ்ரீ கிருஷ்ணா,ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, வாராய் எந்தன் அருகினிலே நானும் உன்னவன், நீயும் என்னவன், எவ்வெப்பொழுதும் ஸ்ரீ கிருஷ்ணா மயிற்பீலியை கற்றைக்குழலில் அணிந்தாய் ஸ்ரீ கிருஷ்னா குழலூதியே என்னை நாடி,ஓடி வருவாய் ஸ்ரீ கிருஷ்ணா பீதாம்பரம் அணிந்த நீல நிற பாலகனே,ஸ்ரீ கிருஷ்ணா ஓ, அதி சுந்தரனே, அதி அற்புதனே,அனைவரின் இறைவா,ஸ்ரீ கிருஷ்ணா பாலும் வெண்ணையும் பூவும் பழங்களும் காத்திருக்கிறதே உனக்காக கோபியர்,மீரா அனைவருமே,கண்ணிருடனே காத்திருந்தார்.