நாக பஞ்சமி

நாக பஞ்சமி
நாக பஞ்சமி

இந்த பண்டிகை சம்பந்தப்பட்ட நிறைய கதைகள் உள்ளன. மிக பிரசித்தமான கதை இதோ

கிருஷ்ணர் யமுனை நதிக்கரையில் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளைகளில் பந்து சிக்கிக்கொண்டது.

பந்தை எடுப்பதற்காக மரத்தில் ஏறுகையில் அவன் நதியில் வீழ்ந்தான் .அந்த நதியில் காளியன் என்னும் கொடிய விஷமுள்ள நாகம் வசித்த்து.

அந்த பாம்பு இந்த தருணத்தை பயன்படுத்தி அவனை தாக்கியது ஆனால் கிருஷ்ணர் மனம் தளராது வீரத்துடன் போரிட்டார்.

சிறிது நேரம் கழித்து இவன் சாதாரண சிறுவனல்ல என்று புரிந்து கொண்டது. தன்னை கொல்ல வேண்டாம் என்று மன்றாடியது. கிருஷ்ணரும், இனிமேல் மக்களை துன்புறுத்த மாட்டேன் என அதனிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டு அதனை விடுவித்தார். மிகக் கொடிய நாகமாகியக் காளியனைக் கிருஷ்ணர் அடக்கி வெற்றி கண்ட நாளையே நாம் நாக பஞ்சமி என்று கொண்டாடுகிறோம்.