கணேஷ் சதுர்த்தி

கணேஷ் சதுர்த்தி
கணேஷ் சதுர்த்தி

கணேசர் வண்ணம் தீட்டுதல்

வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப, நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா

கதை
கணேசரும் பூனையும்

ஒரு சமயம் இறைவன் பால கணேசர், தன்னுடைய எலியுடனும் இதர நண்பர்களுடனும் கைலாய மலையில் விளையாடிக்கொண்டிருந்தார். விளையாடும் போது எலி வெகு தொலைவு சென்றுவிட்டது. அங்கு ஒரு பூனையைப் பார்த்த்து மிகவும் பயந்து போனது. அந்த பூனையும் எலியை மிகவும் பயமுறுத்தியது. எலி ஓடிவந்து இறைவன் பாலகணேசரிடமும் இதர நண்பர்களிடமும் பூனையைப் பற்றிக் கூறியது. எலியை பயமுறுத்திய அந்த பூனையைப் பார்த்து அதனை தண்டிக்க விரும்பினார் பால கணேசர். எனவே, அனைவரும், அதாவது இறைவன் பால கணேசர், மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்குச் .சென்று அந்த பூனையைப் பார்க்க விரும்பினர்.

அங்கு சென்றவுடன் இறைவன் பால கணேசர் அந்த பூனையை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். பூனையின் வாலைப் பற்றி இழுத்தல், வாலைப் பிடித்து சுற்றி அடித்தல் நமக்குத் தெரியும், குழந்தைகள் விலங்குகளை துன்புறுத்துவார்கள, ஆனால் அவைகளுக்கு என்ன நடக்கும் என்பது குழந்தைகளுக்குத் தெரியாது. இதைத்தான் பால கணேசர் செய்தார். தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறியவில்லை. எல்லா வகையிலும் அந்த பூனையை அவர் துன்புறுத்தினார்.

பூனையைத் துன்புறுத்தி விளையாடிவிட்டு, கணேசரும் அவருடைய எலியும் மாளிகைக்குத் திரும்பினர். அதிக நேரம் விளையாடியதால், பாலகணேசருக்கு ரொம்ப ரொம்ப பசியெடுத்தது, எனவே மோதகம் வேண்டித் தாயிடம் விரைந்தார். மாளிகை முழுதும் தாயை தேடி, பின்பு ஒரு அறையில் உடல் முழுதும் காயங்களுடனும், புழுதியுடனும், மிகவும் துன்புற்ற நிலையில் கண்டார்.

பாலகணேசர், “என்னவாயிற்று, யார் இதைச் செய்தது. பால கணேசரின் தாயை துன்புறுத்த யாருக்கு இவ்வளவு துணிச்சல் இருந்தது” என்று தாயிடம் வினவினார். மேலும் அந்த நபரின் பெயரைக் கூறுமாறும், தான் அவனைத் தண்டிப்பதாகவும் கூறினார், அதனால் அவன் மீண்டுமொரு முறை இவ்வாறு செய்யத் துணிய மாட்டான் என்றும் கூறினார்.

அன்னைப் பார்வதி இதற்கு பால கணேசர்தான் காரணம், அவர்தான் பார்வதி தேவியை துன்புறுத்தியவர் என்று பதிலளித்தாள். குழந்தை பால கணேசர் இதைக் கேட்டு அவர் எப்படி அன்னை பார்வதியை இம்சித்தார் என்று ஆச்சர்யமடைந்தார். பால கணேசரால் தன் அன்னைப் பார்வதி தேவியை துன்புறுத்துவது பற்றி கற்பனை அல்லது கனவு கூடக் காண இயலவில்லை.

அவரால் துன்புறுத்தப்பட்ட பூனை, அவளேயன்றி வேறு யாருமல்ல என்று அன்னை பார்வதி பால கணேசரிடம் கூறினாள். அந்தப் பூனைக்கு அவர் செய்தது எல்லாம் அவளுக்குத் தெரியும் “அந்த பூனையை நீங்கள் எந்த அளவிற்கு துன்புறுத்தினீர்களோ அத்தனை துன்பமும் நான் அனுபவித்தேன். அந்தப் பூனை உதவியற்ற நிலையில் பலஹீனமாக, உன்னுடைய கெட்ட நடத்தையினால் பயந்து போயிருந்த்து” என்று கூறினாள்.

இறைவன் பால கணேசன் தான் அந்த பூனையைத் துன்புறுத்தவில்லை, மாறாக எலியை பயமுறுத்திய அதற்கு ஒரு பாடம் கற்பித்ததாகக் கூறினார். “பாடம் புகட்டுவதற்கு இது சரியான வழியல்ல.

அதுவும் ஒரு பிராணி, பலகீனமாகவும், உதவியற்ற நிலையில் இருக்கும்போது. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பிராணியிடமும் கடவுள் இருக்கிறார். நான் (அன்னை பார்வதி) ஒவ்வொரு எளிய, உதவியற்ற நிலையில் இருப்பவரிடம் இருக்கிறேன். அவர்களை யாராவது துன்புறுத்தினால் அவன்/அவள் என்னை / கடவுளை துன்புறுத்துவதாகும்” என்று அன்னை கூறினாள்.

பால கணேசர் தன் தவற்றை உணர்ந்தார், அன்னை பார்வதியிடம் தன்னை மன்னிக்க வேண்டினார். எந்த எளிய, பலமற்ற பிராணியையும் துன்புறுத்துவதில்லை, மாறாக அவரும் அவரது நண்பர்களும் இனி அவைகளுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

இதனை கேள்வியுற்ற அன்னை பார்வதி, தன் மகன் இந்த நிகழ்ச்சியிலிருந்து பாடம் கற்றதையும். வாழ் நாளில் இது போன்ற தவறை அவர் செய்ய மாட்டார் என எண்ணியும் மிகவும் மகிழ்ந்தாள். பிறகு தன் அருமை குழந்தைக்கு, நிறைய மோதகமும் இதர இனிப்புகளும் கொடுத்தாள்.

இவ்வாறு இந்த கதையிலிருந்து, இறைவன் பால கணேசர் எவ்வாறு அறியாமையினால் தன் அன்னை பார்வதி தேவியை துன்புறுத்தினார் என அறிந்தோம். அவர் மட்டுமல்ல், நாமும் வாழ்நாளில் இது பற்றிய பாடத்தை கற்றோம்.