தீபாவளி

தீபாவளி
தீபாவளி

நரகாசுரன் கதை – பூமாதேவி( பூமித்தாய்)க்கு நரகா என்னும் ஒரு மகன் இருந்தான். தெய்வீகத்தின் மகனாக இருந்தாலும், அவன் குணம் என்னவோ அசுர குணமாக இருந்தது நரகா மிகுந்த சக்திசாலியாக இருந்ததால் மூன்று லோக வாசிகளையும் துன்புறுத்தி இன்பம் கண்டான்

மூன்று லோக அரசாங்கத்தையும் புகுந்து கொள்ளையடிப்பான். பெண்களைக்கூட விட்டு வைப்பதில்லை அவர்களைக் கட்த்திச்சென்று தன் பிரத்யேகமான பெண்கள் குழுவில் சேர்த்து விடுவான். தேவர்களின் தலைவனாகிய இந்திரன் ஆயிரக்கணக்கான தெய்வீக யானைகளை அவன் படையில் வைத்துள்ளதாக கேள்விப்பட்டான் நரகாசுரன்.

எனவே பேராசைக்காரனான அவன், இப்போது அனைத்தையும் அடைய விரும்பி, தேவலோகத்தின் மீது தாக்குதல் நடத்தினான்.

செயலிழந்த இந்திரன் நரகாசுரனின் கூட்டாளிகள் தேவலோகத்தை கொள்ளையடிப் பதை பார்த்துக்கொண்டிருந்தான். நரகாசுரன் தானே தேவர்களைத் தாக்க இறங்கினான் அப்போது வெகு தூரத்தில் ஒரு பிரகாசமான பொருள் அவன் கண்களைப் பறித்தது அருகில் சென்று பார்த்தபோது அது தேவர்களின் அன்னை அதிதியின் காதணி என்று தெரிய வந்தது. அவன் அதிதியை அடித்துத் துன்புறுத்தி அதனை பிடுங்கிக்கொண்டான். http://demo3.esales.in:8081/

தன் இழப்பினாலும், தன் தாயை துன்புறுத்தியதாலும் தாங்க முடியாத அவமானம் கொண்ட இந்திரன். அவனை பழி வாங்க எண்ணினான். அதற்கு, நரகாசுரனுக்கு சரிசமமாக இருக்க்க்கூடியவர் ஒருவரே அவரே கிருஷ்ணன் என்பது அவருக்குத் தெரியும்.

கிருஷ்ணன், சத்யபாமாவுடன் இனிமையாக காலம் கழித்துக்கொண்டிருந்த ஒரு உசிதமான நேரத்தில் இந்திரன் கிருஷ்ணரது மாளிகையைச் சென்றடைந்தான். நடந்த நிகழ்வுகளை விவரித்த இந்திரன் அவரது உதவியை யாசித்தான். அன்னை அதிதி மீது அவன் கை வைக்க முடியுமா என்று வெகுண்டெழுந்த கிருஷ்ணன். அவனது துடுக்குத்தனத்துக்கு அவன் சாவது தான் சரி என்றான்.

கிருஷ்ணன் தன்னை பிரிந்து செல்கிறானே என்று சத்யபாமா எரிச்சலுற்றாள் சத்யபாமா மற்றும் இந்திரன் இருவரையும் திருப்திபடுத்தும் நோக்குடன், கிருஷ்ணன் சத்யபாமாவை தன்னுடன் போருக்கு அழைத்துச்சென்றான்.

கிருஷ்ணன் கருடனை அழைத்து அதன்மீது ஆரோகணித்து நரகனின் கோட்டைக்கு செல்லலுற்றான். நரகன் தன் கோட்டையைச்சுற்றி, மாயாஜாலத்தால் மலைகளை தடுப்பாக உருவாக்கினான். எந்த பக்கத்திலிருந்தும் கிருஷ்ணன் நுழைய முயற்சித்தாலும் அந்த தடுப்பு வரும் என்ற நிலையில் அந்த மலைகள் அமைந்திருந்தன. தொல்லையுற்ற கிருஷ்ணன், தனது தண்டாயுதத்தை சுழற்றி வீசியவுடன், அந்த தடுப்பு மலைகள் ஒரே அடியில் உடைந்து விழுந்தன. மாயாஜாலஅஸ்திரங்கள் மழை போல் வர்ஷித்தன. கிருஷ்ணன் அடுக்கடுக்காய் அம்புகளைத் தொடுத்து அவற்றை அழித்தான். இவ்விதமாக அனேக மாயத் தடுப்புகளை அழித்து முடிவில் அவனது கோட்டையை அடைந்தான்.

நரகனது கோட்டை ஐந்து தலை கொண்ட முரன் என்னும் அரக்கனால் பாதுகாக்கப் பட்டது. முரன் அனேக அஸ்திரங்களை கிருஷ்ணன் மீது ஏவினான். ஆனால் கிருஷ்ணன் ஒவ்வொன்றையும் தன் வில் அம்பினால் அழித்தான். பிறகு கிருஷ்ணன் தன் சக்ராயுதத்தை எடுத்து வீச முரனின் ஐந்து தலைகளும் அறுந்து வீழ, முரன் மடிந்து மண்ணின் மீது வீழ்ந்தான்

கிருஷ்ணன் நரகாசுரனை போருக்கழைத்து சுலபமாக கொன்றான். பூமாதேவி கிருஷ்ணனை துதித்து, நரகனின் மகனான பகதத்தனை அவருடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ளும்படி கோரினாள். கிருஷ்ணன் பகதத்தனை சிம்மாசனத்தில் அமர்த்தி, நரகனால் சிறை பிடிக்கப் பட்டவர்கள் அனைவரையும் விடுவித்தார். தேவர்கள் அனைவரும் சொர்க்கத்திலிருந்து கிருஷ்ணன் மீது பூமாரி பொழிந்தனர்.

இன்று ஒளியைக் கண்டேன் எனது இறைவா, மக்கள் அனைவரும் இந்த நாளை இருளை ஒளி வெற்றிகொண்ட நாளாக கொண்டாட வேண்டும் என விரும்புகிறேன்.

இது நாள் வரையில் நரகாசுரனின் இறப்பு இருளின் மீதான ஒளியின் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. இது நரகசதுர்தசி எனப்படும், தீபாவளியின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படுகிறது. தீபத் திருநாளாம் தீபாவளி உண்மையில் தீமை மீது நன்மை பெற்ற வெற்றியையே குறிக்கிறது.