கிருஸ்துமஸ்

கிருஸ்துமஸ்
கிருஸ்துமஸ்

கிருஸ்துமஸ் (நீதிக்கதைகள்)

அர்ப்பணிப்பு மிக்க தாய்

ஒரு நாள் ஒரு தாய் வாத்து, தன் வாத்துக் குஞ்சுகளுடன் ஏரிக்குச் சென்று கொண்டிருந்தது. வாத்துக் குஞ்சுகள் மகிழ்ச்சியுடன், “க்வாக், க்வாக்” என கத்திக்கொண்டு தாயைப் பின் தொடர்ந்தன.

திடீரென, தாய் வாத்து, ஒரு குள்ள நரியை தூரத்தில் பார்த்த்து, “குழந்தைகளே வேகமாக ஏரிக்குச் செல்லுங்கள், ஒரு குள்ள நரி வருகிறது.” என்றது .

வாத்துக் குஞ்சுகள் ஏரிக்கு விரைந்தன. என்ன செய்வது என்று திகைத்தது தாய் வாத்து. முன்னும் பின்னுமாக ஒரு இறக்கையைத் தரையில் தேய்த்தவாறு சென்றது.

குள்ள நரிக்கு அதனைக் கண்டதும் ஒரே சந்தோஷம். அடி பட்டிருக்கிறது போலிருக்கிறது. எனவே அதனால் பறக்க முடியாது. நான் சுலபமாக பிடித்து தின்ன முடியும் என தனக்குள் சொல்லிக்கொண்டது. பிறகு அதனிடம் ஓடி வந்தது.http://demo3.esales.in:8081/ தாய் வாத்து, ஏரியிலிருந்து வெகு தூரத்துக்கு ஓடியது முன்னே ஓடிய வாத்தை நரி பின் தொடர்ந்தது. இப்போது அந்த நரியால் வாத்துக் குஞ்சுகளுக்கு தீங்கு இழைக்க முடியாது. தாய் வாத்து ஏரிப்பக்கம் பார்த்தது, குஞ்சுகள் ஏரியை அடைந்து விட்டிருந்தன. எனவே நிம்மதியடைந்த அது , ஒரு பெருமூச்சு விட்டது.