வித்ய ஜோதி திட்டம்


பிரிவு I


பிரிவு II


பிரிவு III

ஸ்ரீ சத்ய சாய் வித்யா ஜோதி இணையத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! இத்திட்டம், கடந்த 2௦16-ம் ஆண்டு, ஏப்ரல் 24-ம் தேதி, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா குடிகொண்டிருக்கும் பிரசாந்தி நிலையத்தில் முழு மூச்சில் துவங்கப்பட்டது! இதுவரை, இந்தியா முழுவதும், 9௦௦ – கும் மேற்பட்டப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வித்யா ஜோதி குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இத்திட்டம் பெருமளவில், ஸ்ரீ சத்யசாய் நிறுவனங்களுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாதப் பொதுமக்களைச் சென்றடைவதால், இதனை ஒரு தேசிய மேம்பாட்டுத் திட்டமாகவேக் கருதுகிறோம். வித்யா ஜோதிப் பாடத்திட்டம், 1. குழந்தைகளுடைய வயது, 2. பள்ளிகளின் இருப்பிடம்(கிராமம்/நகரம்), 3. “சர்வ தர்ம சத்பாவனா” கொள்கையின் அடிப்படையில் கற்பிக்கப்படவேண்டிய நற்குணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டம், வயதிற்கேற்றார்போல் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, வகுப்புகள் 1 முதல் 3 வரை,
4 முதல் 6 வரை மேலும் வகுப்பு 7 மற்றும் அதற்கு மேல் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனைகள், குழுப் பாடல்கள், அமைதியாக அமர்தல், கதைகள் மற்றும் குழுச் செயற்பாடுகள் போன்ற பல பயனுள்ள கற்பிக்கும் முறைகளைக் கையாள்வதால், மாணவர்களுக்குக் கல்வி கற்பதென்பது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாறுகிறது. அந்தந்தப் பள்ளியின் தேவைக்கேற்ப, வகுப்பெடுக்கச் செல்லும் ஆசிரியர்கள் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தைத் தவிர, வித்யாஜோதி மாணவர்களும், ஆசிரியர்களும் நன்கு பயனடையும் வகையில், பாடல்களுக்கானக் கேட்பொலி, அச்செடுக்கக்கூடிய, வண்ணம் தீட்டும் தாள்கள், சுலபமாகப் பாடங்களைத் தேடும் வசதி எனப் பலவற்றை உள்ளடக்கியுள்ளது இந்த இணையதளம்.

நம் பகவானின் பேராசியுடன், நம்மால் முடிந்த அளவு எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளுக்கு நல்லொழுக்கச் சுடர் ஏற்றி, நம் நாட்டைச் சிறப்புறச் செய்வோமாக!