Radius: Off
Radius: km
Set radius for geolocation
archive-title Category Archives: பிரிவு III

Category Archives: பிரிவு III

வகுப்பு 38 – சந்தேகம்

கதை சந்தேகம் கொள்ளாதீர் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவன் பளிங்குக் கற்களைச் சேகரித்து வைத்திருந்தான். சிறுமி தன்னிடம் இனிப்புப் பண்டங்களை வைத்திருந்தாள். சிறுவன் சிறுமியிடம் அவள் தன் இனிப்புகளைத் தருவதாயின் பதிலுக்குத் தன் எல்லா பளிங்கு கற்களையும் தருவதாகக் கூறுகிறான். சிறுமியும் இதை ஏற்றுக் கொண்டாள். http://demo3.esales.in:8081/ சிறுவன் பெரியதாகவும் மிக அழகானதாகவும் இருந்த பளிங்குக் கல்லைத் தம்முடன் வைத்துக் கொண்டு மீதமுள்ளதைச் சிறுமியிடம் கொடுத்தான். சிறுமியோ தான் வாக்களித்தவாறே தன்னிடம் […]

read more

வகுப்பு 37 – தன்னம்பிக்கை

கதை ஒருநாள் விவசாயி ஒருவரின் கழுதை கிணற்றில் விழுந்து விட்டது. விவசாயி என்ன செய்வதென்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கையில் கழுதையோ பரிதாபமாக முனகிக் கொண்டிருந்தது. இறுதியில் அவன் இந்த விலங்கோ மிகவும் வயதாகி விட்டது. எப்படியாயினும் இந்த கிணறும் மூடப்பட வேண்டியதாகும். எனவே, கழுதையைக் காப்பாற்றுதல் என்பது உபயோகமான செயல் அல்ல என எண்ணினான். அவன் தன் அருகாமையில் உள்ள எல்லோரையும் அழைத்து உதவி செய்யக் கோரினான். பக்கத்தில் உள்ள அனைவரும் வந்து ஷாவல் என்னும் உபகரணம் […]

read more

வகுப்பு 36 – விவேகம்

துஷ்ட மனிதர். நீங்கள் இரண்டு பேரும் ஒரு கழுதையின் மேலா! சுயநலமிக்க மனிதர். நீங்கள் கழுதையின் மீது சவாரி செய்கிறீர்கள் உங்கள் மனைவியோ நடந்து வருகிறார்கள். புத்தியில்லாத மனிதரே! உங்கள் மனைவி கழுதையின் மீது சவாரி செய்கையில் நீர் நடக்கின்றீர். உபாயமற்ற மனிதர், உங்களுக்கு கழுதையின் மீது சவாரி செய்வது எப்படி என்றே தெரியவில்லையே! ஒவ்வொரு நபரையும் திருப்தி செய்ய முயன்றால் தீரா துன்பத்தையே அளிக்கும்.

read more

வகுப்பு 35 – முன்னுரிமைகள்

கதை வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள். தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் முன்பு சில பொருட்களை வைத்துக் கொண்டு வகுப்பின் முன் நின்றார். வகுப்பு ஆரம்பித்த பொழுது எவ்வித வார்த்தையையும் கூறாமல் பெரிய ஒரு குளிர்பதன ஜாடியை எடுத்தார். அதில் இரண்டு அங்குல விட்டமுள்ள கற்களைப் போட்டார். இப்போது மாணவர்களைக் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?” என்று. மாணவர்கள் நிரம்பி இருக்கிறது என்றார்கள். பிறகு பெட்டி நிறைய கூழாங்கற்களை எடுத்து ஜாடியில் போட்டு லேசாகக் குலுக்கினார். இயல்பாகவே கூழாங் […]

read more

வகுப்பு 34 – பலவீனமா அல்லது வலிமையா

கதை பலவீனமா வலிமையா சில நேரங்களில் நமது மிகப் பெரும் பலவீனமே நமது மிகப் பெரும் வலிமையாக மாறக் கூடும். உதாரணத்திற்கு பயங்கரமான கார் விபத்து ஒன்றில் தனது இடது கரத்தை இழந்து விட்டோம் என்பது உண்மையாயினும் ஜூடோ கற்றுக் கொள்ள முடிவு செய்த பத்து வயது சிறுவனின் கதையை எடுத்துக் கொள்வோம். அவன் வயதான ஜப்பானிய ஜூடோ மாஸ்டர் ஒருவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். சிறுவன் நன்றாகப் பயின்று வந்தான்; ஆகவே மூன்று மாத பயிற்சிக்குப் […]

read more

வகுப்பு – 33 – தியாகம்

கதை இளைஞன் ஒருவன் பெரிய ஒரு கம்பெனியில் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கச் சென்றான். அவன் ஆரம்ப நிலையில் உள்ள நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுப் பின் கம்பெனியின் இயக்குநரிடம் முடிவான தேர்வுக்குக்காக சந்திக்கச் சென்றான். அவனது கல்வித்தகுதியானது மிகவும் நன்றாக உள்ளது என்பதை சான்றுகள் வாயிலாகத் தெரிந்து கொண்டார். “நீங்கள் பள்ளியில் உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தீர்களா?” என்றார் இளைஞன்”இல்லை” எனப் பதிலுரைத்தான். “பள்ளிக் கட்டணங்களை யார் செலுத்தினார்கள்?” “பெற்றோர்” “அவர்கள் எங்கு பணி புரிந்தார்கள்?” […]

read more

வகுப்பு 31 – மகிழ்ச்சி

கதை மகிழ்ச்சியின் ரகசியம் கடை ஒன்றின் உரிமையாளர் தன் மகனிடம் இந்த உலகிலேயே உள்ள மிகவும் கூர்மையான அறிவு கொண்ட ஞானி ஒருவரைக் கண்டு மகிழ்ச்சியின் ரகசியம் என்னவென்று அறிந்து வரச் சொன்னார். அந்த இளைஞன் நாற்பது தினங்களாக பாலைவனத்தில் பயணித்து முடிவில் மலை மீது இருந்த அழகிய கோட்டை ஒன்றிற்கு வந்து சேர்ந்தான். அங்குதான் அந்த ஞானி வாழ்ந்து வந்தார். ஞானியாகிய அந்த மனிதரைக் காண்பதையும் விட மேலானதாக நமது நாயகனான இந்த இளைஞன்அரண்மனையின் முக்கியமான […]

read more

வகுப்பு 30 – மகிழ்ச்சி

கதை நாம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? (குழுவின் செயல்பாடு மூலமாகக் காண்பிக்கலாம்) ஒருமுறை ஐம்பது பேர் கொண்ட குழுவினர் போதனை வகுப்பில் கலந்து கொண்டனர். திடீரென உரையாளர் உரையை நிறுத்திவிட்டு குழுச் செயல்பாடு ஒன்றை நடத்த முடிவு செய்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு பலூன் கொடுத்தார் அவர்கள் தம் பெயரை பலூனில் எழுதச் சொன்னார். பின் பலூன்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வேறு ஒரு அறையில் கொண்டு போய் வைக்கப்பட்டன. இப்பொழுது அனைவரும் பலூன்கள் இருக்கும் அறைக்குச் சென்று தம் […]

read more

வகுப்பு 29 – நமக்குக் கடவுள் தேவையா?

கடவுள் நமக்குத் தேவையா என கலந்தாலோசியுங்கள். கதை கடவுளே, இனி எதற்கும் நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. “கடவுளே! இனி எதற்கும் எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. முடிவில் விஞ்ஞானம், ஏதுமின்றி உயிரை உருவாக்கும் வழியைக் கண்டுபிடித்துள்ளது. இதை வேறு வார்த்தைகளால் சொல்ல வேண்டும் எனில் நீங்கள் ஆரம்ப காலத்தில் செயலாற்றியதை எங்களால் இப்போது ஆற்ற முடியும், “என விஞ்ஞானி கூறுகையில் கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருந்தார். “ஓ! அப்படியா? எனக்கு கூறுவாயா.” எனக் கடவுள் பதில் அளிக்கிறார். “நல்லது,

read more

வகுப்பு 28 – நோக்கங்கள்

கதை அர்த்தமற்ற நோக்கங்கள் விவசாயி ஒருவர் தன்னுடன் நாய் ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய் சாலையோரம் அமர்ந்து கொண்டு அந்த பக்கம் வருகின்ற வாகனங்களுக்காக காத்திருப்பது வழக்கம். ஏதாவது வாகனம் வருமாயின் அது சாலையோரமாக இருந்தவாறே குரைத்துக் கொண்டும் வாகனத்தை முந்திச் செல்ல முயன்று கொண்டும் இருக்கும். ஒருநாள் பக்கத்து நிலத்துக்காரர் “உங்கள் நாய் வாகனத்தை எப்போதாவது பிடிக்கப் போகிறது என்று எண்ணுகிறீர்களா” என்று கேட்டார். விவசாயி, “அதைக் குறித்து நான் கவலைப்படவில்லை. ஒருபோதாவது ஒருவரைப் பிடித்து […]

read more

Horizontal Rule Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Items Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin

Testimonials Element

is available in AIT Elements Toolkit plugin
Download Plugin