கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகை

கதை
ஜீஸஸ் பற்றிய கதை

ஜீஸஸ் குழந்தைகளை மிகவும் அதிகமாக நேசித்தார். ஒரு நாள் மாலை ஜீஸஸ் சோர்வினால் ஓய்வு கொண்டிருந்தார். அப்போது கிராமத்துக் குழந்தைகள் சிலர் ஜீஸஸைக் காண அணுகினர். அவர்கள் அனைவரும் ஜீஸஸை மிகவும் நேசித்தனர். அவரது கதைகளை கேட்க விரும்பினர்.

ஆனால், குழந்தைகள் அருகே வருகையில் அவரது சீடர்கள் தம் குருவானவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளை அப்பால் செல்ல வேண்டி சத்தமிட்டனர். சப்தங்களைக் கேட்ட ஜீஸஸ் எழுந்து வெளியே வந்தார். அவர் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறினார். பிறகு பாறையினருகே சென்று அதன் மீது அமர்ந்தார். குழந்தைகள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர். சிலர் அவரது மடி மீது அமர்ந்து கொண்டனர். மற்ற குழந்தைகள் அவர் தோள்களின் மீது சாய்ந்து கொண்டு அவரது முடியுடன் விளையாட ஆரம்பித்தனர்.

ஜீஸஸ் அவர்களும் குழந்தைகளுடன் சிரித்து விளையாடி பல நல்ல கதைகளை கூறினார். அவரது அன்பையும் கவனத்தையும் அபரிமிதமாகப் பெற்ற குழந்தைகள் எழுந்து தம் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றனர்.