காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி
காந்தி ஜெயந்தி

கதை
செப்புக் காசின் மதிப்பு

இந்தியாவின் தந்தையெனப் போற்றப்பட்ட மஹாத்மா காந்தி மிகவும் சிறப்பான மனிதர். அவர் மஹாத்மா என அழைக்கப்படுவதற்கான காரணங்களுள் ஒன்றை பின்வரும் கதை விளக்குகிறது:

ஒருமுறை வறியவர்களுக்கு உதவி செய்வதற்கான நிறுவனத்திற்காக மஹாத்மா காந்தி நகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் நன்கொடை பெறுவதற்காக சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று முடிவில் ஓடிஸாவை அடைந்தார். அங்கு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

அங்கே காந்திஜி மக்களிடையே உரையாற்றி நிறுவனத்திற்கு நிதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது பேச்சின் முடிவில் கூன் விழுந்த முதுகுடன் நைந்து கிழிந்த ஆடை, நரைமுடி சுருங்கிய தோலுடன் தோற்றமளித்த மிகவும் வயதான மூதாட்டி எழுந்தாள். அவள் தன்னார்வத் தொண்டர்களிடையே காந்தியிடம் சென்றடைவதற்கு அனுமதிக்க வேண்டினாள். இருப்பினும் அவர்கள் மூதாட்டியை தடுத்து நிறுத்தினார்கள். அவள் கைவிடவில்லை அவர்களுடன் போராடி முடிவில் காந்தியை அடைந்தாள். அவள் காந்தியின் பாதங்களை வணங்கினாள். பின் தன்னுடைய சேலையில் முடிந்து வைத்திருந்த செப்புக் காசை எடுத்து அவரது காலடியில் வைத்தாள். பிறகு மூதாட்டி மேடையை விட்டு வெளியேறினாள்.

காந்தி மிகவும் பொறுப்புடன் செப்புக் காசை எடுத்து வைத்துக் கொண்டார். நிறுவனத்தின் பொக்கிஷதாரர் செப்புக் காசைத் தரக் கோரினார். ஆனால் காந்திஜி தர மறுத்தார். “நான் ஆயிரக் கணக்கான ரூபாய்க்கான காசோலைகளை வைத்துக் கொண்டுள்ளேன். அவ்வாறு இருக்கையில் ஒரு செப்புக் காசுக்கு என்னை நம்ப மறுக்கிறீர்களே!” என்றார். காந்தி, “இந்த செப்புக் காசு அந்த ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் விடவும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தது. பல லட்சங்கள் பணம் கொண்டிருக்கும் மனிதன் ஒரு சில ஆயிரங்களை விட்டுக் கொடுத்தால் அது அதிகமானதாக ஆகாது”.

ஆம்! செப்புக் காசு ஒன்றே அந்த ஏழை மூதாட்டி வைத்திருந்த பொருளாகக் கூட இருந்திருக்கலாம். அவள் சரியான ஆடை கூட இன்றி நல்ல உணவைப் பெற இயலாத நிலையில் இருக்கிறாள். இருந்தாலும் தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டாள். ஆகவேதான் காந்திஜி அந்த செப்புக் காசை மிகவும் மதிப்பு மிக்கதாகக் கருதினார்.