ஏப்ரல் நிகழ்வுகள்

யுகாதியின் முக்கியத்துவம்“என்று மனிதன் தனதுக் கெட்டக் குணங்களைக் களைந்துத் தியாக உணர்வையும் அன்பையும் இதயத்தில் முழுவதுமாக வளர்க்கின்றானோ அன்றுதான் உண்மையான யுகாதியாகும்.”

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநில மக்களின் புது வருடப் பிறப்பே யுகாதி ஆகும். ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலத்தில் ‘யுகாதி’ என்றும், மகாராஷ்ட்ராத்தில் ‘குடிபத்வா’ என்றும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக மார்ச் மாதத்தில் இந்தப் பண்டிகை அமையும். இந்துக்களின் நாள்காட்டியின்படி (பஞ்சாங்கம்) யுகாதிப் பண்டிகை, சித்திரை மாதத்தின் வளர்பிறையில் (ஸுக்லபக்ஷத்தில்) வருகின்ற முதல் நாளில், காலங்களில் முதல் காலமான வசந்த காலத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைப் புது வருடத் துவக்க நாளாக ஆந்திர, கர்நாடக, மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸம்ஸ்கிருத மொழியில் உள்ள யுகாதி என்ற சொல்லில் இருந்து உகாதி என்பது மருவி வந்துள்ளது. புதிய யுகத்தின் துவக்கம் அல்லது சகாப்தத்தின் துவக்கம் என்று அதன் பொருள். புராணங்கள் இந்த தினத்தைப் பகவான் கிருஷ்ணர் தமது மனித உடலைத் துறந்து, துவாபர யுகத்தின் நிறைவையும் கலியுகத்தின் பிறப்பையும் பறைச் சாற்றுவதாகக் கூறுகின்றது. இந்த தினத்தில் தான் பிரம்ம தேவர் பிரபஞ்சத்தைப் படைத்ததாகவும் நம்பப்படுகிறது.

யுகாதி தினத்தை பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் உகாதிப் பச்சடியுடன் துவங்குவது முறை. ஆறுப் பொருட்களைச் சேர்த்து செய்யப்படுவதே யுகாதிப் பச்சடி. ஒவ்வொன்றும் ஆறு சுவைகளான இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவைகளைக் குறிப்பதாகும். இவை நமது வாழ்வில் வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே சீராகப் பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பகவானின் அமுதமொழிகள்

புதிய முயற்சிகளைத் துவங்குவதற்குப் புது வருடம் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு வினாடியும் புதியதே. எல்லாரும் புது வருடம் எந்த விதமான கஷ்டங்களையும், இழப்புகளையும் கொண்டு வருமோ என்று அச்சப்படுகின்றனர். நமது இன்னல்களுக்குப் புது வருடம் காரணமல்ல. நமது நடத்தையே பொறுப்பாகும். நமது செயல்கள் நன்றாக இருந்தால் அதன் பலனும் நல்லதாகவே இருக்கும்.தீயச் செயல்களில் ஈடுபட்டால் அதன் விளைவும் தீயதாகவே இருக்கும். மக்கள் நல்லதும் தீயதும் நேரத்தின் அடிப்படையில் நிகழ்வதாகக் கருதுகின்றனர். அது அப்படி அன்று. அவர்களது எண்ணமே காரணம். ஆகவே நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றும் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். அவர்கள் நல்ல நினைவுகளைப் பாதுகாக்க வேண்டும். மற்றும் நல்லவர்களுடன் பழக வேண்டும். நேரத்தின் முக்கியத்துவத்துவத்தை உணர வேண்டும். நேரத்தின் பெரும் பங்கை வீணடிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. நேரத்தைச் சரியான செயலுக்குச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதுவே ஒவ்வொரு மனிதனின் தலையாயப் பணியாகும். நேரத்தை வீணடிப்பது, வாழ்க்கையை வீணடிப்பதற்குச் சமமாகும். நேரம் என்பது கடவுள். அவரிடம் அடைக்கலம் புகுவோரை இறப்பின் கடவுளானக் காலனிடம் இருந்தும் காப்பாற்றுவார். அதை முறையாகப் பயன்படுத்தாதவரை அது பழி வாங்கியே தீரும். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டில் உள்ள பிரஜைகள் நேரத்தை எவ்வாறுப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் என்ன நல்லச் செயல்களைச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்

- அருள்சொற்பொழிவு: 7 ஏப்ரல் 1997

இன்று யுகாதி. புதிய வருடத்தின் துவக்கம், பண்டையக் காலம் முதல் மனிதன் பல யுகாதிகளைக் கொண்டாடியுள்ளான். இருப்பினும், அவன் தனதுக் கெட்டக் குணங்களை விடவில்லை. புத்தாடை உடுத்துவதும், நல்ல உணவை உண்ணுவதும் மட்டும் யுகாதிப் பண்டிகை அல்ல. இன்று நீங்கள் புத்தாடை அணிந்து கொள்வீர்கள். அது எத்தனை நாட்களுக்குப் புதிதாக இருக்கும்? அடுத்த நாள் அது, பழையதாகி விடும். ஒரே செய்தித் தாளை யாரும் தினமும் படிப்பதில்லை. இன்றைய செய்தித்தாள் நாளைய பழைய தாள். நமது வாழ்வும் ஒரு செய்தித்தாளைப் போன்றது. உங்களுக்கு இந்தப் பிறப்பு ஒரு செய்தித்தாளைப் போன்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்ப துன்பங்கள் என்பது மாறி மாறி அமைகிறது. இது வரை இருந்ததுப் போதும். இனி ஒரு செய்தித்தாள் போன்று மேலும் ஒரு பிறவி வேண்டும் என்று வேண்டாதீர்கள். கடவுளே எனக்கு இந்தச் செய்திதாள் போன்ற வாழ்வை அளித்துள்ளீர்கள், இதில் நல்லது, தீயது போன்ற அனுபவங்களையும் தந்துள்ளீர்கள். இனி எனக்குப் பிறவா வரம் தாரும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். யுகாதி ஆகிய இந்தப் புனித தினத்தில் உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துவது என்ற ஒரு திடமான எண்ணத்தை நிலைநிறுத்துங்கள். கடந்தக் காலம் இனி திரும்பப் போவதில்லை. அதை இனி மீட்டு எடுக்க முடியாது. நீங்கள் பாதையில் நடக்கும் பொழுது முன் நோக்கித்தான் நடக்க வேண்டும். பின்னால் பார்த்து நடக்க வேண்டிய அவசியம் என்ன? அதே போல் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளை அடைகாக்கத் தேவையுமில்லை. எதிர்காலமும் நிச்சயமில்லை. நாளை வரை நாம் வாழ்ந்திருப்போம் என்று என்ன நம்பிக்கை இருக்கிறது? ஆகவே எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள். இது சாதாரணமான நிகழ்காலமன்று. இது எங்கும் நிறைந்திருக்கிறது. அதாவது கடந்த காலம் மற்றும் எதிர் காலத்தின் விளைவுகள் அதில் அடங்கி உள்ளது. ஆகவே, நீங்கள் உங்கள் நிகழ்காலத்தைச் சரியாக உபயோகித்தால் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாகவும், நல்லதாகவுமே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை.

- அருட்சொற்பொழிவு : 13 ஏப்ரல் 2002.

நமது எண்ணங்கள் மற்றும் செயல்களில் தூய்மை இருந்தால், நமது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் நமக்கு வெற்றி நிச்சயம்.இன்றுப் புதிய வருடத்தின் முதல் தினம். இன்று முதல், ஒவ்வொரு பக்தரும் புனிதச் செயல்களை மேற்கொள்ள வேண்டும். கடந்த காலம் கடந்த காலமே. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தேவை இல்லை. காரணம், அது நமதுக் கைகளில் இல்லை. நாளை வரை வாழ்ந்திருப்போம் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? ஆகவே, இன்றைய நாள் மிகவும் முக்கியமானதாகும். அதை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். உங்கள் உள்ளுணர்வுக்கு எதிராகச் செயல்படாதீர்கள். அதனால் தான் எனதுக் குழந்தைகளுக்கு அதாவது இங்கு உள்ள மாணவர்களுக்கு(பாலவிகாஸ்) நான் எப்பொழுதும் கூறுவது, உங்கள் தலைவர் சொல்வதைக் கேட்டு நடந்துக் கொள்ளுங்கள்.யார் உங்கள் தலைவர்? உங்கள் உள்ளுணர்வே தலைவர். வேறு ஒருவரும் தேவையில்லை. உங்கள் உள்ளுணர்வைப் பின்தொடருங்கள். அதுவே உங்கள் கடவுள். அதுவே உங்கள் சந்தோஷம்.அதுவே உங்கள் சொத்து. அதுவே உங்களுக்கு அமைதித் தரவல்லது. சந்தோஷமும்,அமைதியும், உங்களுக்கு வெளியில் இல்லை. உங்கள் உள்ளில்தான் இருக்கிறது.

- அருட்சொற்பொழிவு:20 மார்ச்1996

Adapted from : http://srisathyasai.org.in/Pages/AshramInfo/Ugadi.htm
நாம் வாழ்ந்து இறக்கிறோம், கிறிஸ்து மரித்து வாழ்கிறார்

நம்மில் பலரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் நம்மிடையே மனிதனாகவும் கடவுளாகவும் வாழ்ந்தவர். இவர் ஜோசப் மற்றும் மேரி தம்பதியினருக்கு மகனாக, பெத்லஹெம் என்னும் நகரில் பிறந்தவர். “இயேசு கிறிஸ்து” என்பது ஹீப்ரு மொழிச்சொல்லாகும். இயேசு என்பதன் பொருள் பாவங்களில் இருந்து காப்பவர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்றும் பொருள் ஆகும். ஈஸ்டரில் நிகழ்ந்தவைகளை வைத்து அவருக்கு ஏன் இந்தத் தலைப்புக் கொடுக்கிறோம் என்பதை விளக்குகிறது.

நாம் நம்மைப் பார்க்கும்பொழுது, அடிக்கடிப் பாவச் செயலைச் செய்வதற்குத் தள்ளப்படுகிறோம் என்பது தெரிய வருகிறது. ஆனால், கடவுள் தன் மகனை, நல்ல மனிதனாக வாழ்வது எப்படி, நல்ல மற்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும், கடவுளின் அன்பைப் பெறுவதற்கானச் சட்டத் திட்டங்களைப் பின்பற்றுவது எப்படி என்றும், ஒருவரை ஒருவர் நேசிப்பது எப்படி என்பதைப் பற்றியும் நமக்குக் கற்றுத் தர உலகிற்கு அனுப்பி வைத்தார். இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்து, ஒவ்வொருவரின் உணர்வுகளையும், கஷ்டத்தினையும் அனுபவித்துப் புரிந்துக் கொண்டார். அவர் நம் உணர்வுகள் மற்றும் கஷ்டங்களைக் கடவுளுக்குப் பிடித்த வழியில் கையாள்வது எப்படி என்றும், இறைவனுக்குப் பிடிக்காத செயல்களில் இருந்து விலகி இருப்பது எப்படி என்று நமக்கு நடந்து காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து முதல் முப்பது ஆண்டுகள் இஸ்ரேலில் ரோமானிய சர்வாதிகாரர்களுக்குக் கட்டுப்பட்டு சராசரி யூதர்களின் வாழ்வைப் போலவே வாழ்ந்து வந்தார். அவர், தனது முப்பது வயதிற்குப் பின் மக்களுக்குப் போதனைகளையும், பொது நலத் தொண்டையும் துவங்கினார். அவர் பெத்லஹேமிலேயே இருந்தாலும் அவரது புகழ் இஸ்ரேல் முழுவதும் பரவத் துவங்கியது.இவரது புகழையும், வளர்ச்சியையும் கண்ட யூதத்தலைவர்களும், ரோமானியப் பேரரசர்களும் இவரது முக்கியப் பிரச்சாரச் செய்தியைக் கண்டு கலங்கினர். அவர்கள் வகுத்துள்ளக் கோட்பாடுகள் மற்றும் சட்டங்களுக்குப் புறம்பாக இருப்பதைக் கண்டு அச்சம் கொண்டனர்.

இயேசுவிடம் அவருக்கு எவ்வாறு இத்தகைய அற்புதங்கள் செய்யும் ஆற்றல் வந்தது என்ற வினாவிற்கு தனது தூய தந்தையாகிய தேவனின் அருளால் வந்தது எனவும் தனது ஆற்றலினால் அல்ல என்றும் கூறினார். மேலும் அவரது போதனைகள் இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், மாறாக, தான் கொல்லப்பட்டால், தனது தூய தந்தையாகிய தேவன் மூன்றாம் நாள் தன்னை உயிர்ப்பிப்பார் என்றும் கூறினார். தான் தேவனின் மகன் என்ற வாசகமே அங்கு பெரும் சர்ச்சையாகக் கிளம்பியது. அவருடைய சீடர்களுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை. அதற்கு மாறாக, அவர் ரோமாபுரி மற்றும் யூதர்களின் சட்டத்திற்கு மீறி நடப்பதாக குற்றம் சாட்டினர். இந்தக் காரணத்திற்காக, அவருக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மத போதகர்கள் ரோமாபுரி அரசரிடம் முறையிட்டனர்.

இருப்பினும் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் அவர் எந்தச் சட்டங்களையும் மீறவில்லை மற்றும் அவர் குற்றமற்றவர் என்றும், அவர் ஒரு அப்பாவி மனிதர் என்றும் நிருபணமாயிற்று. இருப்பினும் அவரது புகழைக் கண்டு பயந்த போண்டிஸ்ப்லட் என்ற ரோமன் ஆளுநரைக் கொண்டு அவருக்கு மரண தண்டனை வழங்க சம்மதித்தனர். இதுவே நாம் ஒரு வாரம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வழி வகுத்தது.(ஜான் 17-20)

ஈஸ்டர் வாரம் என்பது ஈஸ்டர் வருவதற்கு முன்பான குருத்து ஓலை ஞாயிறு முதல் ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை வரை ஆகும். இந்த வாரத்தில் மூன்று முக்கிய தினங்கள் உள்ளன. குருத்து ஓலை ஞாயிறு அன்று இயேசுநாதர் அரசரைப் போல் வீதி முழுவதும் குருத்தோலையைப் பரப்பி மக்கள் ஊர்வலமாகக் கூட்டிச் செல்வர். மாண்டி வியாழன் அன்று இயேசுநாதர் தாம் கொல்லப்பட இருக்கிறார் என்பதை அறிந்து சீடர்களுடன் கடைசி இரவு உணவு உட்கொண்ட தினம். அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். புனித வெள்ளி அன்று அவரது கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட மரச்சிலுவையில் இறக்கும்வரை தொங்கவிடப்பட்ட நாள். மூன்றாம் நாள் இறப்பில் இருந்து உயிர் பெற்ற நாள் ஈஸ்டர் ஞாயிறு.

இயேசு கடைசி இரவு உணவு உட்கொள்ளும் பொழுது தமது இறுதி நேரம் நெருங்குவதை நன்கு உணர்ந்தார். அதனால் கலக்கமும், அச்சமும் கொண்டு அருகில் இருந்த கெத்சமனே என்ற நந்தவனத்தில் பிரார்த்தனை செய்யச் சென்றார். நாம் இயேசு கடவுள் என்றால் அவர் ஏன் அச்சமுற வேண்டுமென யோசிக்கலாம் இயேசு மனிதனாக வாழ்ந்து மனிதனின் உணர்வுகள் ஒவ்வொன்றையும் தான் அனுபவித்தவர். அவர் வேதனை, அச்சம் என்பது எல்லோருக்கும் இயல்பே என்று விளக்குகிறார். இவ்வளவு சவால்களுக்கிடையே அவர் எவ்வாறு இறைவனிடம் பிரார்த்தித்தார் என்பதில் தான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.உள்ளது. அவர் இறைவனிடம் வேண்டுவது போல் அதை நிறுத்தச் சொல்லி வேண்டவில்லை. அதை எளிதாக்கவும் வேண்டவில்லை. மேலும் மிக நல்லவர், நல்லது மட்டுமே செய்தவர். அதனால் தமக்கு இந்த இன்னல் கூடாது என்றும் வேண்டவில்லை. மாறாக இறைவனிடம் இன்னல்களைத் தாங்கும் பலத்தை வேண்டினார். மேலும் அவர் கூறியது “இது உங்கள் சித்தம் எனது அல்ல”.

அவர் பிரார்த்தனை செய்யும் பொழுது ஜூடாஸ் என்ற சீடன் கூட்டத்துடன் வந்தான். இயேசுநாதர் அருகில் சென்று அவரது கன்னத்தில் முத்தம் இட்டான். இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக அவ்வாறு செய்தான். இதைச் செய்வதற்கு ஜூடாசிற்கு வெள்ளிக் காசுகள் கொடுக்கப்பட்டிருந்தன. கூட்டம் இயேசுவைக் கைது செய்தது. அவரது சீடர்கள் ஓடி ஒளிந்துக் கொண்டனர். இயேசுவை யூதர்களின் மதத் தலைவர்கள் அரசரின் முன்பு நிறுத்தி இறைவனின் மகன் என்று கூறியக் குற்றத்திற்காகத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினர்.

அடுத்த நாள் புனித வெள்ளி. இயேசுவை போண்டிஸ்பிளாட்டிடம் அழைத்துச் சென்று இயேசு இறக்க வேண்டும் என்று கூறினர். அதற்குப் பிளாட் ஒத்துக் கொண்டதன் பெயரில், வீரர்கள் இயேசுவிடம் கனமான ஒரு சிலுவையைக் கொடுத்துத் தூக்கச் சொல்லி மிகவும் மோசமான குற்றவாளிகளைச் சிலுவையில் அறையும் கோல்கோத் என்னும் மலையின் உச்சிக்குக் கொண்டுச் சென்றனர். இயேசுவை சிலுவையில் அறைந்தப் பொழுது அவரதுக் கால்களில் அறையப்பட்டிருந்த ஆணிகள் அவரது உடலைக் கீழே இழுத்தது. அதனால் அவருடைய நுரையீரலுக்குச் செல்ல வேண்டியக் காற்றுத் தடுக்கப்பட்டது. அடுத்த மூன்று மணி நேரத்தில் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரைச் சிலுவையில் இருந்து இறக்கிக் கல்லறையில் புதைத்தனர். பிளாட் இரண்டு ரோமானியா வீரர்களைக் காவலுக்கு அமர்த்தி யாரும் இயேசுவின் உடலைத் திருடிவிடக் கூடாது என்று ஒரு பெரியக் கல்லைக் கல்லறையின் வாயிலில் வைத்து அடைத்து விட்டார். இயேசுவின் நண்பர்கள் மிகவும் கவலையுற்றுத் திரும்பினர். ஏனெனில் அடுத்து என்ன நடக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் சில நண்பர்கள் யூதர்கள் முறைப்படி இயேசுவின் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டி கல்லறைக்குச் சென்றனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக, அவரது கல்லறை மீது வைக்கப்பட்டிருந்த கல் நகர்ந்து இருந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தக் காவலாளிகளைக் காணவில்லை. அவரது உடலும் அங்கு இல்லை. அவர்களால் தாங்கள் காணும் காட்சியை நம்ப முடியவில்லை. அந்தக் கல்லறையை உற்று நோக்கிச் செய்வதறியாது நின்றனர். அப்பொழுது அங்கு ஒரு தேவதை தோன்றி இயேசுநாதர் இறப்பிலிருந்து எழுந்து விட்டதாகக் கூறினார். அப்பொழுது இயேசுநாதர் தாம் கொல்லப்பட்டால், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவது பற்றி முன்னமே தமக்கு உரைத்தத்தை நினைவுக் கூர்ந்தனர். இது அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. காரணம் அவர்கள் முதல் முறையாக இயேசுநாதர் தாம் யார் என்றுக் கூறியதை ஏற்றுக் கொண்டனர். அவர் இறைவனின் மகனே அன்றி ஒரு சாதாரண யூத மத குரு அல்ல என்று புரிந்துக் கொண்டனர்.

அவர்கள் ஊருக்குள் ஓடிச் சென்று தங்கள் கண்டக் காட்சியைக் கூற விழைந்தனர். வழியில் இயேசுநாதரை நேரில் அடையாளம் கண்டும் அவர்களால் அவர் பேசும் வரையில் அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. இயேசு நாதர் தமது சீடர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுவர்களால் தாம் உயிர்த்தெழுவதைப் பற்றி புரிந்துக் கொள்ள முடியாது என்று நன்கு அறிந்திருந்தார். அதற்குக் காரணம் அவர்கள், ரோம வீரர்கள் தன்னைக் கைது செய்துச் சிலுவையில் அறையும் பொழுது பயந்து ஓடி விட்டனர். இயேசுநாதர் அவர்களுக்குத் தாம் காணும் காட்சி மற்றும் சிலுவையில் அறையப்பட்ட அதே இயேசுநாதர் தான் திரும்பி வந்துள்ளார் என்ற உண்மையை விளக்க வேண்டிப் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்திக் காண்பித்தார். அவர்களோடு நடந்தார், உணவு உட்கொண்டார், கைகள் மற்றும் கால்களில் உள்ள வடுக்களைக் காண்பித்தார். தாமஸ் என்ற சீடர் நம்ப மறுத்ததால், அவரை அந்தப் புண்களைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தார்.

இயேசுநாதர் உயிர் பெற்றுத் திரும்பி வந்த மகிழ்ச்சியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நற்செய்தியை ஊருக்குள் சென்றுப் பரப்பினர். இம்முறை அவர்களுக்கு ரோம ஆட்சியாளர்கள் பற்றி பயம் எதுவும் தோன்றவில்லை. அவர்கள் மாட்டுக் கொட்டகையில் பிறந்து அந்த சிறுவனாக இருந்துத் தம்மோடு வளர்ந்தவன் தெய்வீக குணம் கொண்டவன் என்று அறிந்திருந்தனர். இறுதியாக அவர்கள் கடவுளேத் தமது பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்துபவர். மேலும், அவர்கள் இயேசுநாதரை இறைவனின் மகனாக ஏற்றுக்கொண்டு, அவர் மட்டுமே வணங்கத் தகுதியானவர் என்றுப் புரிந்துக் கொண்டனர்.

இந்த அதிசய நிகழ்வின் சாராம்சம் என்ன? இது நமது வாழ்க்கையில் வாழ்வது, வேலைப் பார்ப்பது மற்றும் வணங்குவதைப் பற்றி என்னப் போதிக்கிறது? ஈஸ்டர் திருநாள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் சில பாடங்கள்.

 • 1. நமது வாழ்வில் கஷ்டங்கள் இருந்தே தீரும். நாம் தீர்மானித்தவை நிகழாமல் போகலாம். நமது திட்டம் வெற்றி அடையாமல் போகலாம். நாம் வேண்டுவது நமக்குக் கிடைக்காமல் போகலாம். நமது உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.இதுப் போன்ற இக்கட்டான நேரங்களில் நாம் இறைவன் எல்லாம் வல்லவன் என்றும் நம்மை அவரை விட வேறு யாராலும் அதிகமாக நேசிக்க இயலாது என்றும் நம்மை இந்தக் கஷ்டங்களில் இருந்து விடுபெற நாம் வேண்டினால் அவர் நம்மை விடுவிப்பார் என்றும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
 • 2. ஈஸ்டர் நாம் மன்னிக்கும் குணத்தைப் பெற வேண்டும் என்ற பாடத்தைப் புகட்டுகின்றது. இயேசுவின் மரணத்தில் கடவுள் நமது பாவங்களை மன்னித்து அருளினார். நாம் இறைவனிடம் மன்னிப்பைப் பெறும் பொழுது நாமும் மற்றவர் மீது கோபம் மற்றும் வெறுப்பை மறந்து மன்னிக்க வேண்டும். சிலுவையில் இருக்கும் பொழுதும் தம்மைக் குற்றம் சாற்றியவர்களுக்காக இயேசுநாதர் “தந்தையே இவர்களை மன்னியும், இவர்கள் தாம் செய்தவறியார்” என்று மன்றாடினார்.
 • 3. உங்களை உங்கள் நண்பர்கள் கைவிடும்பொழுது, “முப்பது வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவரையும் இழிவாக எண்ணாதீர்கள். இயேசுநாதர் தமது சீடர்களை விடப் பல மடங்குகள் ஞானமுற்றவராக இருப்பினும் அவர்களுக்குத் தேடிச் சென்று தொண்டு செய்தார். எந்த ஒருப் பிரச்சினையும் அவரால் தீர்க்க முடியாதது அல்ல. இருப்பினும், பல மைல் தூரம் நடந்தே சென்று தொண்டு செய்தார். தாம் செய்யும் உதவிக்கு யாராலும் கைம்மாறு செய்ய முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் அவர்களைத் தேடிச் சென்று உதவிப் புரிந்தார். எளிய வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளவைக்காக நன்றியுடன் இருங்கள். இறைவன் உங்களுக்காக உங்கள் வாழ்க்கையை மற்றும் அதில் நடப்பவை எல்லாவற்றையும் தீர்மானித்து இருக்கிறார். நீங்கள் பயணிக்கின்ற வழிகளை அவரது விருப்பம் என்று மனதில் கொண்டால் எல்லா நேரமும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும். மற்றவர்களுடைய வாழ்க்கை உங்களை விட மேன்மையானதாக இருக்கும். ஆனால் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கையே உங்களுக்குச் சிறந்ததாகும்.
 • 4. எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனை உங்களது உள்ளிருக்கும் சக்தியாகும். அது உங்களைக் கடவுளுக்கு அருகாமையில் வைத்திருப்பதாகும். அவர் அருகில் இருக்கும்பொழுது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எந்தக் கெடுதலும் உங்கள் அருகில் வர வாய்ப்பில்லை. அப்படி இருக்க ஈஸ்டர் முட்டை, ஈஸ்டர் முயல் மற்றும் இனிப்புகள் எங்கே பொருந்தும்? இவை யாவும் வெளிப்புறக் கொண்டாட்டாங்களே ஆகும்.

இவை யாவும் மக்கள் தமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றதென்று பிரபலமாக்கப்பட்டு பின்பற்றி வரும் முறை ஆகும். முதலில் தேவாலயத்தில் உள்ள பாதிரியார்கள் மக்களை, ஈஸ்டர் புனித வாரத்தில் முட்டையை உண்ண அனுமதிக்கவில்லை. குடும்பத்தார்கள் அந்த வாரத்தில் இடப்பட்ட முட்டைகளைச் சேமித்து, அதை அவித்து, அவர்களதுக் குழந்தைகளுக்கு ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை காலை உண்ணக் கொடுத்தனர். பின்னர் மக்கள் முட்டையை அட்டையிலும், காகிதக் கூழிலும் உண்டாக்கினார்கள் அதில் பரிசுப்பொருட்களை நிரப்பி குழந்தைகளைக் கொண்டு வண்ணம் பூசி அதை மற்ற நண்பர்களுக்குப் பரிசளித்து மகிழ்ந்தனர். மக்கள் முட்டையைப் புது வாழ்வின் துவக்கமாகக் கண்டனர். அதனால் ஈஸ்டரில் புதிய வாழ்வின் துவக்கத்தின் அடையாளமாக முட்டைப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இனிப்புச் செய்தல், மாரசிப்பான் (மாவால் செய்யப்படும் ஒரு வகைப் திண்பண்டம்). அல்லது சர்க்கரை வைத்து ஐசிங் செய்த முட்டை மற்றும் வேறு சில வழிகளில் அவித்த முட்டைக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறது. . முட்டைகளைப் பூங்காக்களில் மறைத்து வைத்து குழந்தைகளை முட்டையைக் கண்டுப் பிடித்தல் என்ற விளையாட்டு நடத்தப்படுகிறது. பூங்காக்களில் உள்ள முட்டைகளை ஈஸ்டர் தினத்தின் காலைத் தேடி எடுக்கச் சொல்லுவார்கள்.

முட்டை உருட்டுதல் என்பது இறுகிய முட்டை உருட்டுவதாகும். இது இயேசுவின் கல்லறை மீது வைக்கப்பட்டிருந்த கல்லை உருட்டுவதை உவமானப்படுத்த வேண்டிச் செய்யப்படும் சடங்கு ஆகும். அமெரிக்க நாட்டில் முட்டை உருட்டும் வருடாந்திர திருவிழாவில் வெள்ளை மாளிகையில் உள்ள தெற்கு பூங்கா பொதுமக்களுக்கு ஈஸ்டர் முடிந்த திங்கள் கிழமைத் திறந்து விடப்படும. இந்த தினத்திற்கான நுழைவுச் சீட்டுகள் மக்களுக்கு குலுக்கல் முறையில் கொடுக்கப்படும். இந்த தினத்தை மக்கள் நாட்டின் குடியரசுத் தலைவருடனும் அவரது மனைவியுடனும் கொண்டடுவார்கள். ஈஸ்டர் முயல்களின் கதை ஜெர்மனியில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. முயல்கள் ஒவ்வொரு முறைக் குட்டிகள் ஈன்றெடுக்கும் பொழுதும் பலக் குட்டிகளை இடும். இது வாழ்வின் துவக்கத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.


புராணங்களில் கூறப்பட்டுள்ள கதைகளில் ஈஸ்டர் முயல்கள் முட்டைகளை அலங்கரித்து ஒளித்து வைத்து விடும் என்றும் பிறகு ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை அன்று கண்டெடுக்கும். இந்தப் பணியை முயல்கள் தனியாகச் செய்வதில்லை. ஸ்விட்சர்லாந்தில் முட்டைகளை ஈஸ்டர் குயில்கள் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஈஸ்டர் பீப்லி என்ற ஒரு வகை சிறிய எலி கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் பொருளையும் அதுக் கொண்டாடப்படும் விதங்களையும் இப்பொழுது நமது வசதிக்கேற்ப மாறுபடுவதைக் காணலாம். நமக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்க்கிறோம். அதுக் காலப்போக்கில் அழிந்து விடுகிறது. இவைகளில் எல்லாம் என்றும் மாறாமல் இன்றும் உள்ளது இயேசுநாதரின் உயிர்த்தெழுதலே. இதுவே புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. யூதர்கள் மற்றும் ரோமானியர்களின் வரலாற்றில் இயேசுநாதர் பிறந்த இடம், இறந்த இடம், வாழ்ந்த இடம், உயிர்த்தெழுந்த இடம் என்று எல்லாவற்றையும் ஜெருசலெத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக மாற்றம் இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது தற்கால நிலையை உணரச் செய்கிறது. காரணம் எதிர்காலம் கடவுளுக்குச் சொந்தமானதாகும்.

எல்லோருக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.

குறுக்கெழுத்து புதிர்
இராமாயண குலுக்கல் விளையாட்டு


வித்திடப்படும் நற்பண்புகள் :
 • இராமயாணத்தில் இடம் பெற்று இருக்கும் பாத்திரங்களைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல்.
 • அந்தப் பாத்திரங்களில் இருந்து ஒரு சிலரது வாழ்வியல் பாடங்களைக் கற்றுக் கொள்ளுதல்.
 • இராமகதா ரஸவாஹினி என்ற சுவாமியால் எழுதப்பட்டப் புத்தகத்தைப் படிக்க ஊக்குவிப்பது. ஏனெனில், பகவான் இந்தப் புத்தகத்தில், இராமாயணக் கதையை மிக சுவாரசியமான முறையில் புதிய வடிவில் எழுதி உள்ளார். இதில் பல வாழ்க்கை நெறி முறைகளைத் தக்க இடைவெளிகளில் முன்னிலைப்படுத்தி விளக்கி உள்ளார்.

தேவையானபொருட்கள் :
 1. விளையாடும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு காகிதம் மற்றும் எழுதுகோல்
 2. 30 - 40 அட்டைகளில் இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள்
 3. அட்டைகளை வைக்கும் வகையில் ஒருஉறை
 4. கடிகாரம்

தயார்படுத்துதல் :
 • இந்த விளையாட்டை விளையாடும் முன், இராமாயணக் கதையைக் குழந்தைகள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
 • ஆசிரியர் இந்தக் கதையை முழுவதுமாய் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.
 • இந்த விளையாட்டை விளையாடுவதற்கும் முன் குழுக்களில் இந்தக் கதையைப் பற்றி நன்கு ஊக்குவித்திருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் அந்தக் கதாப் பாத்திரத்தை நன்கு அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.

விளையாடும் முறை :
 1. விளையாட்டில் பங்கு பெரும் ஒவ்வொருவருக்கும் ஒரு காகிதம் மற்றும் எழுது கோலைக் கொடுக்கவும்.
 2. மூன்று நிமிடங்களுக்குள் இராமயணத்தில் உள்ள ஏதேனும் பதினைந்து கதாபாத்திரங்களின் பெயர்களை எழுதச் சொல்லவும்.
 3. அடுத்து, நடுவர் உறையில் இருந்து ஒரு அட்டையை எடுத்து அதில் உள்ள பெயரை உரக்கச் சொல்ல வேண்டும்.
 4. குழந்தைகளில் யார் எல்லாம் அந்தப் பெயரை எழுதி உள்ளனரோ, அவர்கள் தமது காகிதத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். எந்தக் குழந்தை ஐந்து கதாபாத்திரங்களின் பெயர்களைக் குறித்து வைத்துள்ளனரோ அவரை ‘விரைவான ஐந்து’ என்றப் போட்டியை வென்றதாக அறிவிக்கவும். அதை வென்றவர் அந்த ஐந்துப் பாத்திரங்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அந்தக் கதாபாத்திரத்தால் தாம் கற்ற நற்பண்புகளைப் பற்றியும் கூறச் சொல்ல வேண்டும்.
 5. விளையாட்டுத் தொடரும்.
 6. அடுத்ததாக, பத்து மதிப்பெண்கள் பெற்ற குழந்தையை ‘ஸ்மார்ட் பத்து’ என்று அறிவித்து அந்தக் குழந்தையை அதிலொருக் கதாப் பாத்திரதித்தைப் பற்றியும் அந்தக் கதாபாத்திரத்தால் தாம் கற்ற நற்பண்புகளைப் பற்றியும் கூறச் சொல்ல வேண்டும்.
 7. இவ்வாறாக விளையாட்டில் பங்கு பெறும் ஒருவர் பதினைந்து மதிப்பெண்கள் பெறும் வரை இந்த விளையாட்டுத் தொடரும். அவரை ‘முழு வீடு’ வென்றவராக அறிவிக்கவும். அவ்வாறு வென்றவர் ஒரு கதாப் பாத்திரத்தைப் பற்றிப் பேசி, அவரிடம் இருந்துக் கற்றுக் கொண்ட நற்பண்புகளைப் பற்றிப் பேச வேண்டும்.
தமிழ்ப் புத்தாண்டு முக்கியத்துவம்

இந்தியா பல்வேறு மாநிலங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் மரபுகள் உள்ளன. ஆண்டு முழுவதும் பல விழாக்களும், பண்டிகைகளும் கொண்டாடப்படுவதால், இந்த நாடு சிறப்பு மிக்கத் துடிப்பான நாடாகத் திகழ்கின்றது. புத்தாண்டு அல்லது தமிழ் வருடப்பிறப்பு என்பது தமிழ் நாடு, கேரளா, மற்றும் புதுவை மாநிலங்களில் மக்களால் புது வருடத்தின் துவக்கமாகக் கொண்டாடப்படுவதாகும். இலங்கை, மலேஷியா, மௌரிசியஸ் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ளத் தமிழ் மக்களும் மிகுந்த உற்சாகம் மற்றும் ஆரவாரத்துடன் கொண்டாடுகிறார்கள். தமிழில் வருடப்பிறப்பு என்றுக் கொண்டாடப்படுவது, கேரள மக்களால் விஷு என்றுப் போற்றப்படுகிறது. நமது புராணங்களின்படி, இந்தப்புனித தினத்தில் தான் பிரபஞ்சத்தைப் படைக்கும் கடவுளான பிரம்ம தேவன் இவ்வுலகைப் படைக்கத் துவங்கினார். தமிழ் சூர்ய நாட்காட்டியின்படி ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் புத்தாண்டுக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக கிரிகொரியன் நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தமிழகத்தில் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. ஆகவே தொன்றுத்தொட்டுத் தமிழ் வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், கலியுகம் 5118ஆண்டுத் துவங்குகிறது.

இந்தப் பண்டிகையின் முதலாம் நாள் இரவு வீடுகளில் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்க்கப்படுகின்றன. கோலத்தின் நடுவில் குத்து விளக்கு வைக்கப்படுகிறது. இந்த விளக்கு வாழ்க்கையில் உள்ள இருளை நீக்குவதாகத் திடமாக நம்பப்படுகிறது. இந்த விழாவிற்கு வேண்டி விசே ஷமானத் தட்டு ஒன்று தயார் செய்வது வழக்கம். மா,பலா,வாழை என்ற மூன்று விதமானப் பழங்களால் அந்தத் தட்டு நிரப்பப்பட்டு இருக்கும். இதைத் தவிர வெற்றிலை, பாக்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் சிறிதளவு காசு மற்றும் பணம், அரிசி, தேங்காய் மற்றும் பூக்கள் என்று அவரவர் குடும்ப வழக்கப்படி வைக்கப்பட்டு இருக்கும்.

.காலையில் முதன்முதலில் அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான இந்த அமைப்பைக் காணவேண்டும். இந்த வழக்கத்தை விஷுக்கனி அதாவது புனிதமானக் காட்சி என்று அழைப்பர். புது வருடத்தின் முதல் நாளின் முதல் காட்சி புனிதமாக இருப்பதால் வருகின்ற வருடம் சாதகமான மற்றும் நிறைவானதாக இருக்கும் என்று மக்கள் நம்புகின்றார்கள். வீட்டில் உள்ள மூத்தவர்கள் காலையில் எழுந்து வீட்டில் விளக்கை ஏற்றுவார்கள். பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் எழுப்பி கண்களை மூடியபடி விஷுக்கனி வைத்துள்ள இடத்திற்கு அழைத்து வருவார்கள். சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெறுவதும் அதற்குப் பெரியவர்கள் பணமும், ஆசியும் வழங்குவதும் வழக்கம். கனிக் கண்ட பின் காலையில் சிறப்பு வழிபாடுகள் சில கோவில்களில் ஏற்பாடு செய்யப்படும். அங்கு மக்கள் குளித்துச் சென்று வழிபட்டு வருவார்கள். அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டிற்கும் சென்று வருவது வழக்கம். இந்த தினத்தில் புத்தாடை அணிந்து சுவை மிக்க உணவுகள் தயாரித்தூம் மகிழ்வர். மேலும், ஒரு சிறப்பு புத்தாண்டில் பஞ்சாங்கம் வாசிக்கப்படுதல் ஆகும். பாரம்பரியங்களில் ஒன்றாக எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்துப் பெரியவர்களில் ஒருவர் வருடத்தின் பலனைப் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசிப்பார்.

கோவில்களின் நகரமான மதுரையில் சித்திரைத் திருவிழா ஒரு முழு மாதமும் கொண்டாடப்படுகிறது. இதுவே உலகின் மிக நீளமானத் திருவிழாவாகும். ஒரு மாதக் காலம் விடப்படும் முதல் பதினைந்து நாட்கள் இறைவி மீனாட்சிக்கும் அடுத்த பதினைந்து நாட்கள் அழகர் அதாவது இறைவன் விஷ்ணுவின் வடிவமாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைப் பொருட்காட்சி என்றுப் பெரும் திரு விழாவும், சந்தைகளும் அமைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் இதைச் சித்திரை விஷு என்றுக் குறிப்பிடுவர். கும்பகோணம் அருகில் திருவிடை மருதூரில் ஒரு பெரும் தேர்த் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது. பல உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்பட்டாலும் மக்களால் தயாரிக்கப்படும் மாங்காய்ப் பச்சடி இந்தப்பண்டிகையின் சிறப்பு. பச்சைமாங்காய், வெல்லம் மற்றும் வேப்பம் பூவால் தயாரிக்கப்படுவதாகும். இதன் சுவையில் கசப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்பு கலந்து இருக்கும். இது நமது வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற உயரியப் பாடத்தைப் பயிற்றுவிக்கிறது. கேரளா மாநிலத்தில் இந்த தினத்தில் பலாப்பழம் மற்றும் பாலினால் இனிப்புப் பாயாசம் செய்வார்கள். அதனுடன், கிடாரங்காயினால் ஊறுகாயும் செய்வார்கள்.

புத்தாண்டை இவ்வாறாக வித்தியாசமான முறையில் கொண்டாடுவது உண்மையில் தனிச் சிறப்பே ஆகும்.

ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராமநவமி இறைவன் ஸ்ரீ ராமனாகத் திரேதாயுகத்தில் அவதரித்ததைக் கொண்டாடும் விழாவாகும். இந்து பஞ்சாங்கத்தில் சித்திரை மாதம் சுக்லபக்ஷம் வளர்பிறை ஒன்பதாம் நாள் ராம நவமி கொண்டாடப்படும். ஸ்ரீ ராமன் தர்மத்தின் வடிவமாகப் போற்றப்படுகிறார். அவரது வாழ்க்கை மனிதன் எவ்வாறு தான் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளது. இந்து மதத்தின் மிக முக்கிய இதிகாசமான இராமாயணமானது, வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமனின் வாழ்வை விவரிக்கும் பாடல்களின் தொகுப்பு ஆகும்.

இராமாயணம் இரண்டு முக்கியமான பாடங்களை உணர்த்துகிறது. ஒன்று, பற்றில்லாமலிருத்தல், இரண்டாவது, எல்லாவற்றிலும் இறைத்தன்மையைக் காண்பது. மனிதன் இவ்வுலக வாழ்வில் இருந்து விடுபட முக்கியமானவைகள், இறைவன் மீது நம்பிக்கையும், உலகியல் பொருட்கள் மீது பற்றற்ற தன்மையுமே ஆகும். புலங்களினால் வரும் சுகத்தின் மீது உள்ள பற்றை விடுத்தால் ராமனை அடையலாம். சீதை கானகத்தில் ராமனுடன் இருக்க வேண்டி அயோத்யா நகரின் சுகத்தை விடுத்தாள். ஆயினும் தங்க மானைக் கண்டவுடன் அதன் மேல் ஆசைக் கொண்டதன் காரணமாக இராமனின் அருமையை இழக்க நேர்ந்தது. துறவு சந்தோஷத்தை அளிக்கிறது. பிணைப்பு சோகத்தை அளிக்கிறது. உலகத்தில் இரு. ஆனால் அதற்காக மட்டுமல்ல.

ராமர் எல்லோருக்குள்ளும் இருப்பவர். அவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆனந்தத்தின் ஆத்ம சுகத்தின் காரணம். மனிதனின் உள்ளம் என்னும் நீரூற்றில் இருந்துக் கிடைக்கும். அவருடைய ஆசிகளே பேரின்பத்திற்கும், அமைதிக்கும் காரணம். அவர் எல்லா தர்மங்களின் உருவம். அவர் நீதிக்கு எடுத்துக்காட்டு. அதுவே, மனித இனத்தை அன்பு மற்றும் ஒற்றுமையோடு இருக்க வழி வகுக்கிறது.

– பகவான் பாபவால் இயற்றப்பட்ட ராமகதா ரசவாஹினியில் இருந்துத் தொகுக்கப்பட்டது.

பகவானின் அருளுரையின் மேற்கோள்கள்

இராமாயணம் எல்லோருக்கும் அவரவர்களின் கடமை மற்றும் தர்மம் பற்றி விளக்குகிறது. பல யுகங்களும், காலங்களும் கடந்திருந்தாலும், இராமாயணம் எல்லாக் காலத்திலும் இளமைக் குன்றாமல் மனிதனை சத்திய வழிக்கும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கைக்கும் இட்டுச் செல்கிறது.

இன்றைக்கும் இராமன் என்ற கதாப் பாத்திரத்தை நாம் மரியாதையோடும், வணக்கத்தோடும் காண்கிறோம். அப்படியென்றால் தான் அதன் பெருமையை நன்கு உணர முடியும். இராமயணத்தில் கூறப்பட்டுள்ள அறநெறிக்கு மேலாக எந்த ஓர் நெறியும் இல்லை. இராமாயணம் நாமத்துப் பாராயணத்தில்(வழிபடுதலின்) ஒரு அங்கமாக இருக்க வேண்டும். எல்லோரும் இராமனின் கொள்கைகளை மனத்தில் இருத்தி ஆனந்தத்தை அடைய வேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்க வேண்டும். இராமனின் ஆணையை நிறைவேற்றுங்கள். இராமயணத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளவும் அதில் உள்ளவற்றை உணர்ந்து கொள்ளவுமே நாம் இராம நவமியைக் கொண்டாடுகிறோம். பிற உணவுப் பண்டங்களை மற்றும் இனிப்பைப் பகிர்ந்து உண்ணுதலில் மட்டும் இந்தக் கொண்டாட்டங்கள் இருக்கக் கூடாது.

- அருள்மொழி: 11 ஏப்ரல் 2003.

தொன்று தொட்டு பாரதத்தில் வாழும் மக்கள் யாவரும் ஸ்ரீ ராமனின் வாழ்க்கையைச் சீர்மையுள்ளதாகக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் தாங்கள் வாழ்ந்துக் காட்டிப் புனிதம் அடையச் செய்ய விழைந்துள்ளனர்.

ஸ்ரீ ராமர் உலகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெருக்குவதற்காகவே மனித உருவில் அவதரித்தார். “இராமர் தர்மத்தின் முழு உருவம்” (ராமோ விக்ரஹவான் தர்ம:) நீதியே மண்ணில் பிறந்ததாகக் கொள்ள வேண்டும். தர்மமும் இராமரும் பிரிக்க முடியாதவைகள். இராமனின் இனிய நாமத்தை நாம் தன்னலமற்ற தூய்மையான இனிய இதயத்தோடுப் பிரார்த்தனை செய்யும் முகமாகச் சொல்லிக்கொண்டே இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதர்கள் இனிமையாகவும், மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் பேச வேண்டும். இனிமையான பேச்சு அமைதி அளிக்கின்றது. அதுவே தன்னைத் தானே உணர்ந்து கொள்ள வழி வகுக்கும். ஸ்ரீ இராமர் இனிமையாகப் பேசுபவர். இதயத்தில் வாழ விரும்புவார். முழு மனதோடு ஒரு முறையேனும் ராம நாமத்தைச் சொன்னால் மலைப்போன்றப் பாவங்களை அது அழித்து விடும். ஆனால், இயந்திரத்தனமாக இசைத்தட்டைப் போல் இராம நாமத்தைச் சொல்லி எந்த விதப் பயனும் இல்லை. அது இதயத்தின் உள் ஆழத்திலிருந்து வர வேண்டும். இராமரின் வாழ்வியல் கொள்கைகளை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக வாழ்ந்து உலகியல் வாழ்விலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இராமனின் நாமத்தை அன்புடன் நினையுங்கள். இறைவனை அன்பின்றி வேறு எந்த முறையிலும் அடைய இயலாது.

- இறைவனின் அருள்மொழி : 14 ஏப்ரல் - 1989

பகவான் பாபாவின் அருளுரை

புதிய வருடம் துவங்கி இருக்கிறது. இன்று முதல் நல்லனவற்றையே கேளுங்கள். நல்லதை மட்டும் பேசுங்கள்.மேலும் நல்ல செயலை மட்டும் செயலாற்றுங்கள். இதன் மூலம் நமது இதயம் தூய்மை அடையும்.இறைவனைப் பற்றிய சிந்தனை மூலம் உங்களது வாழ்க்கையைப் புனிதம் ஆக்குங்கள். இந்தப் புனிதப் பாதையை மக்கள் பின்பற்றுவதால் உலகில் அமைதியும், செழிப்பும் நிறைந்திருக்கும்.வருகின்ற வருடத்தில் எல்லோரும் சந்தோஷமாகவும், செழிப்பாகவும், அமைதியோடும் வாழ்வோம். இறைவனிடம் தூய இதயத்துடன் பிரார்த்தனை செய்வதால் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம். எந்த ஒரு அரசோ, படையோ, ஆயுதமோ கஷ்டங்கள் மற்றும் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியாது. ஒரே ஒருவர் மட்டுமே நம்மைக் காக்க வல்லவர். அவர் தான் இறைவன். இறைவனிடம் காக்க வேண்டிப் பக்தர்கள் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையால் மட்டுமே இறைவனின் அருளைப் பெற முடியும். ஆகவே, முழு மனதோடுப் பிரார்த்தனை செய்யவும்.

“ சம்ஸ்த லோகா சுகினோ பவந்து” (எல்லா உலகில் அனைத்து உயிரினங்களும் ஆனந்தமாக இருக்கட்டும்”)

கொடைக்கானல் சாய் ஸ்ருதியில் பகவான் பாபாவின் அருளுரை 14-ஏப்ரல் -1993