ஸ்வாமியின் பிறந்தநாள் - குழுமச் செயல்பாடுகள்

சர்வமும் நீயே சாயி (பிறந்தநாள் பாடல்)நவ நன்னெறி கோட்பாடுகள்
[9 Point Code of Conduct]

Code 1 - Daily Meditation and Prayer

ஆன்மீக சாதனையும் நம் வாழ்வில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா கூறுகிறார்.

உலக மக்கள் அனைவருக்கும் ஆன்மீக மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வழி காட்டும் ஒரு ஜோதியாக, நவ நன்னெறி கோட்பாடுகளை நம் அன்பு தெய்வம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

நம் பாலவிகாஸ் குழந்தைகள் இந்த ஒன்பது கோட்பாடுகளுக்கும் மிக அழகாக நாடகங்கள் நிகழ்த்தியுள்ளனர். இந்த நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டின் முக்கியத்துவத்தை மிக எளிமையாகவும், சுவாரசியமாகவும் எடுத்துரைக்கின்றன.

இந்தக் காணொளிகளைக் கண்டு மகிழ்வீர்! பிறருடனும் பகிர்வீர்!

இந்த உலகை ஓர் அமைதிப் பூங்காவாக்குவோம்! வாரீர்!

சர்வ தர்ம நாம நிருத்ய மாலா

ஆச்சார்ய வினோபா பாவே அவர்களால் அனைத்து மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதப்பட்ட 'ஓம் தத் சத்' என்ற பாடலின் அடிப்படையில் இந்த நடனம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பொருள் பொதிந்த பாடலில் கடவுள், 36 நாமங்களால் அறியப்படுகிறார்.

அனைத்து மதங்களும் ஒன்றாகவே வளர்ந்து ஒருங்கே வளம் பெறுதல் முக்கியமானது என்று ஸ்வாமி கூறுகிறார், அனைத்து மதத்தையும் மதித்து இணக்கத்துடன் வாழக்கற்பது என்பது அமைதி,ஒற்றுமை மற்றும் செல்வ வளம் இவற்றின் உட்கிடக்கையாகும்.

குழந்தைகளுக்கு இந்த காணொளிக் காட்சியில் கொடுக்கப்பட்டுள்ள நடனத்தின் உதவியுடன் இந்த பிரார்த்தனையின் பொருளையும் 36 இறை நாமங்களையும் கற்றுத்தரலாம்.

நுண்கலைகளில் வலிமைமிக்கதான நாட்டியத்தின் வாயிலாக மனசாட்சியைத் தூண்டுவித்து அன்பு, அமைதி, ஒற்றுமை இவற்றைப் புரிந்து கொள்ளவும், இந்த பிரபஞ்ச செய்தியை பரப்பவும் செய்வோமாக!


கேசாதி பாதம் தொழுதேன்


தண்டனிட்டோம் தண்டனிட்டோம், கோடிக்கோடி தண்டனிட்டோம்

இந்த பாடல் ஒவ்வொரு பக்தரின் கோடி நமஸ்காரங்களை எளிய சமர்ப்பணமாக நம் அன்பு ஸ்வாமிக்கு சமர்பிப்பதை எதிரொலிக்கிறது. ஒரு தீவிர பக்தரின் பிரார்த்தனையான இந்த பாடல் வரிகள், ஸ்வாமி நம் வாழ்விலும் தாழ்விலும் நம் கூடவேயிருக்க வேண்டும் என்று வாக்களிக்க வேண்டுகிறது. அந்த பக்தர் ஸ்வாமியின் அன்பான மொழி களாலும், கருணையான பார்வைகளாலும் ஆனந்தமடைகிறார். எவ்வளவு பெரிய செல்வமும், உலகாயத பதவிகளும், ஒருபோதும் இதற்கீடாகாது. ஸ்வாமி இந்த அவதாரத்தில் தன்னிடம் அடைக்கலம் நாடி வந்தோரைக் காப்பாற்றச் செய்த தியாகங்களை பக்தர் புரிந்து கொள்கிறார்.

கருணையின் வடிவமான ஸ்வாமி நம் கண்ணீரை துடைத்து அவரது ஆசிர்வதிக்கும் கைகளால் நம்மை எப்போதும் பிடித்துக்கொள்கிறார்.

இந்த மனதை லகுவாக்கும், நாட்டுப்புற பாடலின் சுவை கொண்ட பாடல் கட்டாயம் பாடுவோர்க்கும், கேட்போர்க்கும் ஒரு சேர ஆனந்தத்தை அளிக்கும். மாணவர்க்கு நடன வடிவமைப்புக்கும் உதவும். இது அனைத்து வயது பிரிவினருக்கும் பொருந்தும்.

ஞான பூமியிலே நின்ற வான மழை முகிலே


லோகா சமஸ்தா சுகினோ பவந்து


சந்தோஷ பலூன்களை தக்க வைத்தல்


விளையாடுபவர்கள் : பிரிவு 1 மாணவர்கள்

கற்பிக்கப்படும் பண்புகள்:

 • குழந்தைகள் நல்லவை தீயவை இவற்றை பகுத்தறிய உதவுதல்
 • தீயவற்றை நீக்குவதால் பெறப்படும் ஆனந்தத்தை புரிய வைத்தல்

தேவைப்படும் பொருட்கள்:

 • 4 பலூன்கள், நூல் - குழந்தைக்கு ஒன்று வீதம்
 • பலூனின் கலர், பெரியவர்கள் அதன்மீது எழுதுவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்
 • மார்க்கர் பேனா
 • இசைப்பேழை (இருந்தால் நலம்)

முன்னேற்பாட்டு முயற்சிகள்:

 • வாழ்க்கையில் ஆனந்தமாக இருக்க நல்ல எண்ணங்கள் தேவை என்பது குறித்து குரு கூற வேண்டும்
 • இந்த விளையாட்டு கெட்ட எண்ணங்களை விட்டொழிக்க அவர்களது பகுத்தறியும் திறனை வளர்க்க உதவும் என்று விளக்க வேண்டும்

விளையாட்டு:

 • குழந்தைகளை இரண்டு குழுக்களாக பிரிக்கவும்.
 • 4 ஊதிய பலூன்களை – குழந்தையின் காலிலும், மணிக்கட்டிலும் குரு கட்டிவிட வேண்டும்.
 • குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கையில், குரு அவர்களை சுற்றி வந்து சிரித்த முகம் அல்லது வருத்த முகம் ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு பலூன் மீது விரைவாக வரைந்து விட வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் சரிபாதி சிரித்த/வருத்த முகம் கொண்ட பலூன்கள் இருக்க வேண்டும்.
 • குழந்தைகள் இப்போது கண்களை திறக்க வேண்டும்.
 • இசை ஆரம்பிக்க, ஒவ்வொரு குழுவினரும் அவர்களது குழுவில் உள்ளவர்களின் வருத்த முகம் கொண்ட பலூனை அதன்மீது உட்கார்ந்து வெடித்து விட வேண்டும்.
  • கையால் உடைக்கவோ அல்லது உடலின் வேறு பாகத்தால் உடைக்கவோ அனுமதி இல்லை.
  • அவரவர் பலூனை அவர்களே உடைக்கக்கூடாது.
 • குழந்தைகள் சிரித்த முக பலூன்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வருத்த முகம் கொண்ட அத்தனை பலூனையும் எந்த குழு முதலில் வெடித்ததோ அவர்கள் ‘ஹாப்பி, ஹாப்பி’ என்று கத்துவார்கள், உடனே இசை நின்று விடும்.
 • மீதமுள்ள ஊதிய பலூன்களையே குரு எண்ண வேண்டும் சிரித்த முகம் ஒர் பாயிண்ட், வருத்த முகம் -1 பாயிண்ட்.

நல்லதையே பார், நல்லதையே செய், நல்லவனாக இரு


விளையாடுபவர்கள் : குரூப் 1 குழந்தைகள்

கற்பிக்கப்படும் பண்பு நலன்கள்

 • பகுத்தறியும் அறிவை மேம்படுத்தல்
 • ஒருமித்த மனக்குவிப்பை மேம்படுத்தல்
 • விழிப்புடன் இருக்கச் செய்தல்
 • நல்ல செயல்களை காப்பியடித்தல்
 • குழந்தைகளை நல்லதையே பார், நல்லதையே கேள், நல்லதையே செய் என்பதற்கு ஊக்குவித்தல்

தேவைப்படும் பொருட்கள்:

 • நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை பட்டியல்
  • மீரா சொல்கிறாள் சிரி (நல்ல செயல்)
  • மீரா சொல்கிறாள் குதி (நல்ல செயல்)
  • மீரா சொல்கிறாள் உட்கார் (நல்ல செயல்)
  • மீரா சொல்கிறாள் எழுந்திரு (நல்ல செயல்)
  • மீரா சொல்கிறாள் கோபப்படு (கெட்ட செயல், குழந்தைகள் அமர்ந்து தங்கள் கண்களை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்)
  • கைதட்டு (நல்ல செயல்), உன் இடது கையை உயர்த்து (நல்ல செயல்) , கீழே போடு ( நல்ல செயல்), தள்ளு (கெட்ட செயல்)
  • நடனமாடு (நல்ல செயல்), சாப்பிடு (நல்ல செயல்), உன் நண்பனை உதை (கெட்ட செயல்)
  • பால் குடி (நல்ல செயல்), வணக்கம் செய் ( நல்ல செயல்), கத்து (கெட்ட செயல்)
  • சிரி (நல்ல செயல்), கடவுளை வணங்கு (நல்ல செயல், (கடுமையாக இரு (கெட்ட செயல்)
  • உன் காலைத்தொடு (நல்ல செயல்), நேராக நில் (நல்ல செயல்), இரண்டு கைகளையும் உயர்த்து (நல்லசெயல்), நொண்டி அடி ( நல்ல செயல்), சோம்பேறியாக இரு (கெட்ட செயல்)
  • தலையை வாரு (நல்ல செயல்), நகங்களை சீர் செய் (நல்ல செயல்), கைகளைக் கழுவு (நல்ல செயல்), பற்களை துலக்கு (நல்ல செயல்), அழுக்குத்துணிகளை அணிந்து கொள் (கெட்ட செயல்)

முன்னேற்பாட்டு முயற்சிகள்:

 • இது நல்லனவற்றை காப்பி அடிக்கவும், கெட்டவற்றை பின்பற்றாதிருக்கவும் கற்க ஒரு விளையாட்டு என்று குரு முதலிலேயே சொல்லிவிடவேண்டும்.
 • நல்லனவற்றையே பார், நல்லவையே செய், நல்லொழுக்கம் உள்ளவனாக இரு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், இதனை தன் விவேகத்தை பயன்படுத்தி பின்பற்றவும் குரு வலியுறுத்திக் கூற வேண்டும். அடிப்படையில் நேர்மை வழியையே பின்பற்ற வேண்டும்.

விளையாட்டு:

 • குழந்தைகள் அரைவட்டமாக அல்லது வரிசையாக நிற்க வேண்டும்
 • குரு சத்தமாக கட்டளையைக்கூற வேண்டும். குழந்தைகள் அதனை பின்பற்றி நடக்க வேண்டும்.
 • ஒரு கட்டளை நல்ல செயலுக்கானதாக இருந்தால் அவர்கள் அதனை நடத்த வேண்டும். ஆனால் கட்டளை கெட்ட செயலுக்கானதாக இருந்தால் அவர்கள் அதற்கு கீழ்ப்படியாது உடனே தரையில் அமர்ந்து நல்ல செய்கைக்கான அடுத்த கட்டளை வரும்வரை தம் கைகளால் கண்களை மூடி அமர்ந்திருக்க வேண்டும். எந்த குழந்தை கடைசியாக கீழே உட்கார்ந்த்தோ அந்த குழந்தை கெட்ட செயலை பின்பற்றியதாக விளையாட்டை விட்டு வெளியேற வேண்டும்
 • ஒரே ஒரு குழந்தை மட்டும் இறுதியாக இருக்கும்போது வரைக்கும் விளையாட்டு தொடர்ந்து விளையாடப்படும் அந்த குழந்தையே வெற்றியாளர்.

நற்குணங்களை தக்க வைத்தல், துர்க்குணங்களை துண்டாக்குதல்


விளையாடுபவர்கள் : பிரிவு 2 மற்றும் 3 குழந்தைகள்

கற்பிக்கப்படும் பண்பு நலன்கள்

 • குழந்தைகளுக்கு மனித மேம்பாட்டு குணங்களை (அமைதி, அன்பு, அஹிம்சை, நன்னடத்தை மற்றும் உண்மை) புரிய வைத்தல்.
 • தீயவைகளிலிருந்து நல்லவைகளை பிரித்துணரச்செய்தல்.
 • தீயவைகளை அடக்கி, அவற்றை வெடிக்க வைப்பதன் மூலம் ஆனந்தம் அடைதல்.

தேவைப்படும் பொருட்கள்:

 • நான்கு பலூன்கள், நூல்-ஒவ்வொரு குழந்தைக்கும் (பலூனின் மேல் எழுதத்தக்கவாறு அதன் வண்ணம் இருக்க வேண்டும்)
 • இசைப்பேழை இருந்தால் நலம்

முன்னேற்பாட்டு முயற்சிகள்:

 • குரு முதலில் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு மனித மேம்பாட்டு குணங்களின் முக்கியத்துவம் பற்றி விவரிப்பார்
 • இந்த விளையாட்டு அவர்களின் கூர்ந்தாராயும் அறிவிற்கு எவ்வாறு உள் உணர்வு உதவும், மனிதனின் எதிரியாகிய தீயவற்றை எவ்வாறு உடைப்பது என்று விளக்குகிறது,.

விளையாட்டு:

 • குழந்தைகளை இரண்டு குழுக்களாக பிரிக்கவும். ஒவ்வொரு குழந்தைக்கும் 4 ஊதிய பலூன்கள் – மனித மேம்பாட்டுக்குணங்கள் மற்றும் தீய குணங்கள் அதாவது முறையே அமைதி, அன்பு, அஹிம்சை, நன்னடத்தை, உண்மை, மற்றும் காமம், கோபம், பேராசை, மாயை, பெருமை, பொறாமை ஆகியன எழுதப்பட்டவை கொடுக்கப்படும்
 • ஒவ்வொரு குழுவுக்கும் நல்ல குணம் மற்றும் கெட்ட குணம் கொண்ட சமமான எண்ணிக்கையிலான பலூன்களே தரப்பட்டுள்ளனவா என்று குரு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்
 • பங்கு பெறுவோர் தம்முடைய கால்களில், தோள்களில் பலூனை கட்டிக்கொள்ள சொல்ல வேண்டும். அந்த சமயம் ஏதாவது பலூன் உடைந்து விட்டால் குரு, வேறு பலூன் தரலாம். பேச்சே கூடாது.
 • பாட்டு ஒலிக்க ஆரம்பித்தவுடன் பங்கேற்பவர்கள் தீய குணமுள்ள பலூன்களை அதன்மீது உட்கார்ந்து வெடிக்கச்செய்ய வேண்டும் என உத்தரவிடவேண்டும்
  • கையாலோ அல்லது உடலின் இதர பாகத்தாலோ உடைக்க அனுமதி இல்லை.
  • யாரும் தங்கள் பலூனை தாங்களே உடைக்க அனுமதி இல்லை
  • மனித மேம்பாட்டு குணங்கள் உள்ள பலூன்களை குழந்தைகள் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
 • பாட்டு நின்றவுடன் பலூன் உடைப்பதை குழந்தைகள் நிறுத்தி விட வேண்டும்
 • பின்பு குரு இரண்டு குழுவையும் பரிசீலித்து மனித மேம்பாட்டு குணங்கள் அடங்கிய பலூன்களுக்கு தலா ஒரு பாயிண்டும், தீய குணங்கள் உள்ளவைகளுக்கு மைனஸ் மதிப்பெண்ணும் வழங்க வேண்டும்
 • அதிக பாயிண்ட் எடுத்த குழு தான் வெற்றியாளர்

மனிதப்பண்புகள் நாற்காலி


விளையாடுபவர்கள் :பிரிவு 2, 3 குழந்தைகள் அல்லது பெற்றோர்

கற்பிக்கப்படும் பண்புகள்:

 • குழந்தைகள் வாழ்வில் நற்குணங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளல்
 • நற்குணங்களில்லாத போது எழும் பிரச்னைகள் குறித்து அறிதல்

தேவைப்படும் பொருட்கள்:

 • ஒரு பங்கேற்பாளருக்கு ஒன்று வீதம் – ஒரு நாற்காலி
 • பேப்பர்/சார்ட்
 • இசை ஒலிக்கும் கருவி

முன்னேற்பாட்டு முயற்சிகள்:

 • ஒரு பங்கேற்பாளருக்கு ஒன்று வீதம் – ஒரு நாற்காலி

விளையாட்டு:

 • இந்த விளையாட்டு இசை நாற்காலி போலவே தான். ஆனால் இது மனிதப் பண்புகள் நாற்காலி.
 • நாற்காலிகளை வட்ட வடிவில் ஒழுங்கு படுத்தவும் பங்கு பெறுபவர்கள் எண்ணிக்கையைவிட ஒரு நாற்காலி எப்போதும் குறைவாகவே இருக்க வேண்டும்.
 • பங்கேற்பாளர்கள் பாட்டு ஆரம்பித்தவுடன் சுற்றி ஓட வேண்டும்.
 • பாட்டு நின்றவுடன் காலியான நாற்காலிகளில் அமர வேண்டும்.
 • அடுத்த ரவுண்டில் ஒரு நாற்காலியை எடுத்து விட வேண்டும்.
 • பங்கேற்பாளர் தான் அமர வேண்டிய நாற்காலி காலியாக இல்லையென்றால் ஆட்டத்தை விட்டு வெளியேறவேண்டும். அந்த நாற்காலியில் ஒட்டியிருந்த நற்பண்பினை எடுத்து விட வேண்டும். மேலும் அந்த குறிப்பிட்ட பண்பு தன்னிடம் இல்லையென்றால் ஏற்படும் விளைவை கூற வேண்டும்.
 • கடைசியாக இவ்வாறாக எவர் மீதம் ஆகிறார்களோ அவரே வெற்றியாளர்.

மேற்கோள்களை விரும்பினால் மேற்கொள்க பயிற்சியை !


விளையாடுபவர்கள் :பிரிவு 1 மற்றும் 2 குழந்தைகள்

கற்பிக்கப்படும் பண்புகள்:

 • நல்ல மேற்கோள்களை கற்று அவற்றை பயிற்சி செய்ய ஊக்குவித்தல் .
 • பிறர் கூறுவதை செவிமடுக்க பயிற்சி செய்தல்
 • நினைவாற்றலை மேம்படுத்தல்

தேவைப்படும் பொருட்கள்:

 • தாக்கம் ஏற்படுத்தும் மேற்கோள்கள் அட்டைகள்
 • விளையாடுபவர்களின் கண்களைக் கட்ட துணி

முன்னேற்பாட்டு முயற்சிகள்:

குருமார்கள் மேற்கோள்கள அடங்கிய அட்டைகள் தயார் செய்துக் கொள்ள வேண்டும்.

உதாரணம்:

 • முதலில் நல்லவனாக இரு, + செய் பிறகு சொல்
 • எப்போதும் உதவி செய், + ஒருபோதும் துன்புறுத்தாதே
 • நேர்மையே + சிறந்த கொள்கை
 • எல்லோரையும் நேசி + எல்லோருக்கும் சேவை செய்
 • கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு + பெறுவதும் மறப்பதும் சுயநலம்
 • மானவ (மானுட) சேவையே + மாதவ சேவை.
 • இருப்பது ஒரே கடவுள் + அவர் சர்வ வியாபி
 • இருப்பது ஒரே மதம் + அது அன்பு மதம்.
 • இருப்பது ஒரே ஜாதி + அது மானுட ஜாதி

விளையாட்டு:

 • இந்த விளையாட்டை ஒரு பரந்த இடத்தில் விளையாடுவது நன்றாக இருக்கும்.
 • விளையாட்டில் பங்கு பெறுவோர் பரவலாக நிற்க, நெறியாளர் ஒவ்வொரு வரிடமும் பொன்மொழியின் பாதி வரி எழுதிய சீட்டை கொடுப்பார்.
 • அந்த வரியை சீட்டைப் பெற்றவர் மனப்பாடம் செய்துக்கொள்ள வேண்டும்
 • தங்கள் கண்களை தாங்களே கட்டிக்கொண்டு வழியை மறக்கும் பொருட்டு வட்டமாக சுற்றிவந்து நிற்க வேண்டும்.
 • ‘ஆரம்பிக்கலாம்’ என்று குரல் கொடுக்கப்பட்டதும் விளையாடுபவர்கள் தங்கள் சீட்டில் உள்ள பாதிவரியை மெதுவான இனிமையான குரலில் சொல்லிக் கொண்டே மீதி பாதியைத் தேடிக்கொண்டு இருக்க வேண்டும்.
 • கைகளை முன்புறம் நீட்டிக்கொண்டே செல்வதால் குழந்தைகள் யார் மீதும் இடிக்காமல் இருக்கலாம்.
 • தன்னுடைய இணையைக் கண்டுபிடித்ததும் கண்கட்டை அவிழ்த்துவிட்டு குருவிடம் சென்று தகவல் சொல்ல வேண்டும்.
 • குரு மேற்கோளைச் சரிபார்த்து, தவறு இருந்தால் மீண்டும் கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாட்டுக்கு திரும்ப வேண்டும்.
 • முதல் இணையர் வெற்றியாளர்.
 • ஆனால் அனைவரும் தங்கள் இணையைக் கண்டுபிடிக்கும் வரை விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
 • இறுதியில் ஒவ்வொரு இணையும் தங்கள் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள பொன்மொழியை அனைவர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும்.
 • குரு, இந்தப் பொன்மொழியில் உள்ள செய்தியை குருட்டுத்தனமாக இல்லாமல் பழக்கத்தில் கொண்டு வர வலியுறுத்த வேண்டும்.

அக அழகின் அகராதி


விளையாடுபவர்கள் : பிரிவு 3 குழந்தைகள் அல்லது பெற்றோர்

கற்பிக்கப்படும் பண்பு நலன்கள்

 • கற்பனையை விஸ்தரித்தல்
 • அழகான வார்த்தைகளை பயன்படுத்த தக்கம் ஏற்படுத்தல் (To enhance the power of comprehension)

தேவைப்படும் பொருட்கள்:

 • ஒரு அகராதி (டிக்‌ஷனரி)
 • பங்கு பெறுவோர் அனைவருக்கும் தலா ஒரு பேனா, ஒரு பேப்பர்
 • வினாடி முள் கடிகாரம் (ஸ்டாப் வாட்ச்)

முன்னேற்பாட்டு முயற்சிகள்:

 • குருமார்கள் நேர்மறை பொருளுள்ள வார்த்தைகளின் பட்டியல் தயார் செய்ய வேண்டும் எப்பொழுதும் பண்பு சார்ந்த்தாக இருத்தல் நலம் (உணர்வுகள், நல்ல குணங்கள் முதலியன)

உதாரணம் : அமைதி, ஒற்றுமை, உற்சாகம், தெய்வீகம், சேவை

 • நெறியாளர், விளையாட்டில் பங்கேற்போர் விளையாட்டை புரிந்து கொள்ளும்படி ஒரு உதாரணம் தர வேண்டும்-

ஆத்மா - ஒரு மனிதனின் பாகம். ஆனால் அவனது உடல் கிடையாது. அது உடல் இறந்த பிறகும் அப்படியே இருக்கும்.

விளையாட்டு:

 • பங்கேற்பவர்கள் வட்டமாக அமரவேண்டும்
 • குரு தற்போது, அவர்களிடம் ஒவ்வொருவருள்ளும் ஒரு அக அழகின் அகராதி உள்ளது. இந்த விளையாட்டு அதனை பயன்படுத்த நினைவூட்டும் என்று விவரிக்க வேண்டும்.
 • பிறகு குரு, மெதுவான குரலில் வெவ்வேறு குணாம்சங்களை குறிக்கும் வார்த்தைகளை ஒவ்வொரு பாங்கேற்பார்களிடமும் உச்சரிக்க வேண்டும். (ஒருவரிடம் ஒரு வார்த்தைதான்)
 • பங்கேற்பாளர்களுக்கு வார்த்தையை தங்களிடமுள்ள பேப்பரில் விவரிக்க ஒரு நிமிட அவகாசம் தரப்பட வேண்டும். அந்த வார்த்தை அவர்களிடம் கொடுக்கப்பட்ட அகராதியில், உள்ள வார்த்தைக்கு இணயானதாக இருக்க வேண்டும். யாரும் அந்த வார்த்தையை வெளியில் சொல்லக்கூடாது.
 • முடிந்தவுடன் நெறியாளர், பங்கேற்பாளர்களை அவர்கள் எழுதிய விவரத்தை கேட்க வேண்டும். யாரும் வார்த்தையை சொல்லக்கூடாது. மீதிபேர் அந்த வார்த்தையை யூகிக்க வேண்டும்.
 • முதலில் சரியான விடையை கூறுபவர்க்கு ஒரு பாயிண்ட்
 • அதிக மதிப்பெண் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
 • முடிவில் குரு அந்த வார்த்தைக்கான விபரத்தை அகராதியிலிருந்து படிக்கலாம்.