- திருவிழாக்களின் உட்கருத்து - ஹோலி
-
இந்தியாவில் ஹோலிப் பண்டிகை
- இயற்கை ஹோலி வண்ணங்கள் தயரிக்கும் முறை
- புனித ஹோலி வண்ணங்கள்
- வண்ணங்கள் தெளித்து விளையாடுதல்
- ஹோலிகா தகனம்
-
வசந்த காலமே வருக
- ஹோலி வாழ்த்து அட்டை
- ஹோலி மரம்
- வளமிகு ஹோலி வண்ண மணி ஹோலி
- வட்டத்தைச் சுற்றும் வண்ணங்கள்
- வண்ணம் தீட்டவும் (பிரிவு I,
பிரிவு II,
பிரிவு III)
- வழிதேடல் (பிரிவு I, பிரிவு II, பிரிவு III)
- புள்ளிகளை இணைக்கவும்
இயற்கை ஹோலி வண்ணங்கள் தயரிக்கும் முறை
புனித ஹோலி வண்ணங்கள்
- ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் முதன்மை வண்ணங்களைப் பற்றி எடுத்துரைக்கவும்.
- சிவப்பு வண்ணமானது அன்பு மற்றும் செழிப்பினைக் குறிக்கின்றது.
- நீல வண்ணம் பகவான் கிருஷ்ணரின் வண்ணத்தைக் குறிக்கிறது.
- மஞ்சள் வண்ணமானது மங்களகரமான மஞ்சளைக் குறிக்கிறது.
- பச்சை வண்ணமானது புதிய துவக்கம் மற்றும் வசந்த காலத்தைக் குறிக்கிறது.
- வித்திடப்படும் நல்ல பண்புகள்
- ஹோலி வண்ணங்களைப் பாராட்டுதல்
- ஹோலியின் முதன்மை வண்ணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல்.
- சிவப்பு வண்ணமானது அன்பு மற்றும் செழிப்பினைக் குறிக்கின்றது.
- நீல வண்ணம் பகவான் கிருஷ்ணரின் வண்ணத்தைக் குறிக்கிறது.
- மஞ்சள் வண்ணமானது மங்களகரமான மஞ்சளைக் குறிக்கிறது.
- பச்சை வண்ணமானது புதிய துவக்கம் மற்றும் வசந்த காலத்தைக் குறிக்கிறது
- தேவையான பொருட்கள்:
- பல வண்ணங்களாலான தெர்மோக்கோல் பந்துகள் / பல வண்ண முத்துக்கள்.
- முதன்மை வண்ண பந்துகள் / முக்கிய வண்ண முத்துக்கள்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,பச்சை)
- குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1 – 10 எண்கள் குறிப்பிடப்பட்ட பல அட்டைகள்.
- ஒரு கூடை அல்லது கிண்ணம்.
- ஆயத்த முயற்சிகள்:
- முதன்மை ஹோலி நிறங்களை சேகரித்தலுக்கு கூடுதல் ஊக்க புள்ளிகள் வழங்கப்படும்.
- விளையாட்டு:
- அட்டைகளை நன்றாக குலுக்கியபின், குழந்தைகளால் எவ்வளவு அட்டைகளை எடுத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு அட்டைகளை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுத்து கொள்ள கூறவும்.
- கடிகாரத்தை துவக்கவும்/இயக்கவும்
- குழந்தை/ குழந்தைகளை அட்டைகளை எடுத்துக் கொள்ளச் சொல்லவும்.
- குழந்தைகளை அட்டையில் உள்ள எண்ணிற்கு ஏற்றவாறு அவர்களால் முடிந்த அளவு பந்துகள் அல்லது முத்துக்களை சேகரிக்கச் சொல்லவும்.
- இவ்வாறு குறிப்பிட்டுள்ள கால அளவு நிறைவுறும் வரை, குழந்தை/குழந்தைகளை மீண்டும் அட்டையை எடுத்து, அதில் உள்ள எண்ணிற்கு ஏற்றவாறு, பந்துகள் மற்றும் முத்துகள் சேகரிக்கச் சொல்ல வேண்டும்.
- சேகரிக்கப்பட்டுள்ள பந்துகள் மற்றும் முத்துக்களை எண்ணவும்.
- சேகரிக்கப்பட்டுள்ள ஹோலி பண்டிகையின் முதன்மை நிறத்திற்கு ஊக்க புள்ளிகள் அளிக்கப்படும்.
- அதிகமாக புள்ளிகள் எடுத்த குழந்தை/ குழந்தைகள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும்.
வண்ணங்கள் தெளித்து விளையாடுதல்

இந்த செயற்பாடு, கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் இடையே நடந்த ஹோலி தொடர்புடைய ஒரு புராணக்கதையைக் குழந்தைகளுக்கு நினைவூட்டும்.
ஒரு நாள், கிருஷ்ணன் தன் தாய் யசோதாவிடம் சென்று, “இந்த இயற்கையின் அநியாயத்தைப் பாருங்கள் அம்மா. அந்த ராதா மட்டும் எவ்வளவு வெள்ளையாக இருக்கிறாள். நான் மட்டும் இப்படி கறுப்பாக இருக்கிறேனே.” என்று கூறி அழுதான். அழும் கிருஷ்ணனை சமாதானப் படுத்துவதற்காக யசோதா, “நீ சென்று ராதாவின் முகத்தில் நீ விரும்பிய வண்ணத்தைப் பூசிவிட்டு வா” என்று கூறி அனுப்பினாள்.
அம்மாவின் அறிவுரையைக் கேட்ட குறும்புக் கண்ணன் தன் அன்பு ராதாவின் முகத்தில் வண்ணத்தைப் பூசி அவளையும் தன்னைப் போலவே ஆக்கிவிட்டான்.
ராதா மீதும் மற்ற கோபிகைகள் மேலும் “பிச்காரி” (Water Jet) என்ற ஒரு குழாயைக் கொண்டு வண்ணங்கள் தெளித்த கிருஷ்ணனின் இந்த குறும்புச் செயல் எப்படியோ மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. மேலும் அது ஒரு வழக்கமாக மாறி பின்னர் ஒரு பெரிய திருவிழாவாகவே மாறிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஹோலியின்பொழுது, “பிச்காரி” யும் பலவித வண்ணங்களும் உபயோகப்படுத்துவது நன்கு பரவி வருகிறது.
நாம் இப்பொழுது காலி (use&throw) வாட்டர் பாட்டில் வைத்து எப்படி pichkari செய்வது என்று பார்ப்போம். மேலும் அதை வைத்து வண்ணத் தண்ணீர் தெளித்து நம் நண்பர்களுடன் நன்கு விளையாடுவோம்.
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
- தேவையற்ற பொருட்களை எவ்வாறு உபயோகமானதாக மாற்றுவது என்றறிதல்
தயாரித்து வைத்துக்கோள்ள வேண்டியவை:
- பல வண்ணங்களில் தண்ணீர் தயாரிக்கவும் ( வீட்டிலேயே இயற்கை முறையில் வண்ண நீர் தயாரிப்பது என்றறிய எங்களது காணொளியைப் பாருங்கள்)
தேவையான பொருட்கள்:
- உபயோகித்த பழைய வாட்டர் பாட்டில்
- துளைகள் போட ஒரு காம்பஸ்
- பாட்டிலின் வெளிப்புறம் அழகு படுத்த பல வண்ண அலங்காரத் தாள்கள்.
- பாட்டிலில் நிரப்பப் பல வண்ணங்களில் தண்ணீர்
செய்முறை:
- பழைய வாட்டர் பாட்டில்களை எடுத்துக்கொள்ளவும்
- காம்பஸைக் கொண்டு பாட்டில் மூடியில் துளைகள் போடவும்
- பாட்டிலை நன்கு அழகு படுத்தவும்.
- வண்ணத் தண்ணீரை நிரப்பி பாட்டிலை மூடவும்.
- உங்கள் நண்பர்களுடன் ஒரு திறந்த வெளிக்குச் சென்று வண்ண நீரை மேலே தெளித்து விளையாடவும்.
ஹோலிகா தகனம்

இந்த கொலெஜ்(காகிதகூண்டு) செயல்பாடானது குழந்தைகளுக்கு ஹோலியை ஒட்டிய புராணக்கதைகளை சொல்வதற்கு ஒரு சுவாரசியமான வழிமுறையாகும்.
ஹோலியைப்பற்றி, பல்வேறு விதமான புராணக்கதைகள் இந்தியாவின் பல்வேறு பாகங் களிலும் நிலவி வருகிறது. இதில் மிக ப்ரசித்தமானது அசுர அரக்கன் ஹிரண்ய கசிபுவைப் பற்றியதாகும். அவன் ஒரு குரூரமான கொடுங்கோல் அரசன் அவனது மகன் பிரஹல்லாதன் பகவான் விஷ்ணுவின் ஆழ்ந்த பக்தன். இதனால் ஆத்திரமடைந்த அவன் தந்தை மஹா விஷ்ணுவை வழிபடுவதை தடுக்க பல வகைகளில் கடுமையாக முயன்றார். அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்றதால், அவனை கொல்ல தீர்மானித்தார். குன்றிலிருந்து தூக்கியெறிதல், யானை காலடியில் போட்டு நசுக்குதல் போன்ற பல முயற்சிகள் செய்தார். ஆனால் பகவான் விஷ்ணு ஒவ்வொரு முறையும் அவனை காப்பாற்றினார். இறுதியில், தீயினால் பொசுக்கப்படாதிருக்கும் வரத்தை வாங்கியுள்ள தன் சகோதரி ஹோலிகாவை அழைத்தான். ஹோலிகா, ப்ரஹல்லாதனை தன் மடியிலிருத்தியவண்ணம் தீயில் இறங்கினாள். ஆனால் பகவான் விஷ்ணுவின் கருணையினால், இந்த முறை தீயில் ஹோலிகா எரிந்தாள். பிரஹல்லாதன காப்பாற்றப்பட்டான்.
- ப்ரஹல்லாதனின் தீவிர பக்தியை மனதில் கொள்ளல்
- தீமையை நன்மை வெர்றி கொள்ளல்
- பொறுமை
- படைப்பாற்றல்
- பழைய செய்திதாள் (தரையில் விரித்துக்கொள்ள)
- அட்டை காகிதம்
- ஒட்டுவதற்கு பசை-க்ளூ ஸ்டிக்
- மஞ்சள்,சிவப்பு,ஆரஞ் டிஸ்யு அல்லது க்ரேப் தாள்
- ப்ரவுன் பேப்பர்
- ஒட்டுவதற்கு டேப்
- Sticky tape
- ஹோலிகா மற்றும் ப்ரஹல்லாதன் படம் (ஏதாவது பழைய புத்தகத்திலிருந்து கிழிக்கலாம் அல்லது கையாலேயே வரையலாம்).
- அட்டையை எடுத்து எரியும் நெருப்பு வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
- பிறகு சிவப்பு டிஷ்யு பேப்பரில் எரியும் நெருப்பு கதிர்கள் போல் வெட்டிக்கொள்ளவும்.
- பசையை எடுத்து, டிஷ்யு பேப்பரின் அடியில்(கீழ்ப்பக்கம்) மட்டும் தடவவும் (நிஜம் போல தோன்ற) பிரவுன் பேப்பரில் செவ்வக வடிவத்தில் விறகு போல் வெட்டிக்கொள்ள வேண்டும். இவற்றை நெருப்புக்கு கீழ் ஒட்டவும். நிஜம் போல் தோற்றமளிக்க நிஜமான கிளைகளையும் உபயோகிக்கலாம்
- படத்தில் காட்டியுள்ளது போல் ஹோலிகா, ப்ரஹல்லாதன் படத்தை ஒட்டவும்
ஹோலி மரம்

வசந்த காலம் என்பது வண்ணக் காலம். இயற்கைத் துளிர் விடும் காலம். கண்டிப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தருணம்! கடும்பனிக் காலம் முடிந்து கோடை காலத்தின் துவக்கத்தை அறிவிக்கும் காலம்தான் இந்த வசந்த காலம்(அல்லது) இளவேனிற்காலம். அதனால் தான் நாம் பல நூற்றாண்டுகளாக இதைக் கொண்டாடி வருகிறோம்.
இதோ நம் சுட்டிக் குழந்தைகளுக்காக ஒரு அழகிய கைவேலை! வசந்த காலத்தை குறிக்கும் விதமாக பளிச்சிடும் வண்ணங்களைக் கொன்டு ஹோலி மரத்தை அழகு செய்யலாம்.
இதன் மூலம் கற்பிக்கப்படும் நற்குணங்கள்:- பொறுமை
- நிறங்களின் அழகை ரசித்தல்
- டிஷ்யு பேப்பர் (அ) வண்ணக் காகிதங்கள்
- பசை(gum)
- வெள்ளை நிற அட்டை
- ப்ரௌன் நிற, கையால் செய்யப்பட்ட சார்ட் பேப்பர் (hand made paper)
- ப்ரௌன் பேப்பரைக் கொண்டு மரத்தின் தண்டுப் பகுதியை வரைந்து வெட்டி எடுத்து வெள்ளை அட்டையில் ஒட்டவும்
- பல வண்ணக் காகிதங்களையோ அல்லது டிஷ்யு பேப்பரையோ கசக்கி சுருட்டி மரத்தின் கிளைகளைச் சுற்றி ஒட்டவும்.( படத்தில் காட்டியபடி செய்யவும்) .
வளமிகு ஹோலி வண்ண மணி ஹோலி

ஹோலி பண்டிகையில் உபயோகப்படுத்தும் பல வித நிறங்களை பகுத்து அறிதலும், அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதலும்.
தயார் படுத்துதல் :குழந்தைகளிடம் ஹோலி பண்டிகையின் முதன்மையான வண்ணங்களைப் பற்றி விளக்கி கூற வேண்டும். அதாவது,
- சிவப்பு நிறம் அன்பையும், செழிப்பையும் குறிக்கும்.
- நீல நிறம் ஸ்ரீ கிருஷ்ணபகவானை நினைவு கொள்ள செய்யும்.
- மஞ்சள் நிறம் என்பது மஞ்சள் கிழங்கின் நிறமாகும். அது மங்களகரத்தை குறிக்கிறது. பச்சை நிறம் வசந்த காலத்தையும், புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது.
- பல வண்ண தெர்மகோல் உருண்டைகள் அல்லது பல வண்ண மணிகள்.
- இவற்றுள் பிரதான நிறமாகிய சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை ஆகியவை முக்கியமாக இருக்கவேண்டும்.
- விளையாட்டில் பங்கு பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நிறைய அட்டைகள் (கார்ட்ஸ்) தயார் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று முதல் பத்து எண் வரை ஒவ்வொரு அட்டையிலும் ஒரு எண் என்ற முறையில் தனித்தனியாக எழுத வேண்டும்.
- ஒரு கிண்ணத்தில் பல நிறமுடைய தெர்மோகோல் (அ ) மணிகளை வைக்கவும் .
- எல்லா அட்டைகளையும் நன்கு குலுக்கி எண்கள் அடியில் இருக்குமாறு குப்புற கவிழ்த்து வைக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், (உ.ம் 3 நிமிடம்)
- ஒவ்வொரு குழந்தையையும் 3 அட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுக்க சொல்லவேண்டும்.
- ஒவ்வொரு அட்டையையும் எடுத்தபின் அந்த அட்டையில் உள்ள எண்கள் படி ஒரே நிறமுள்ள மணிகளை /தெர்மொகோல் உருண்டைகளை கிண்ணத்தில் இருந்து எடுக்கச்சொல்ல வேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் 3 சிறிய தட்டுகளைக் கொடுத்து அவற்றில் வைக்கச் சொல்ல வேண்டும். உதாரணமாக எண் 3 என்று எழுதப்பட்டுள்ள அட்டையை குழந்தை எடுத்தால ஒரே நிறமுள்ள 3 மணிகளை அக்கிண்ணத்தில் இருந்து எடுக்கச்சொல்லி தட்டில் வைக்க செய்யவும்.
- இவ்வாறு 3 அட்டைகளிலும் உள்ள எண்ணுக்கு ஏற்றாற்போல் மணிகளை கிண்ணத்தில் இருந்து எடுக்கச்செய்ய வேண்டும். விருப்பமான நிறங்களை குழந்தைகள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் பிரதான நிறங்களுக்கு (சிவப்பு,நீளம்,மஞ்சள்,பச்சை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் விளையாட்டை முடிக்கக்செய்ய வேண்டும். ஒவ்வொரு நிற மணிகளுக்கும் மதிப்பெண் கொடுக்கப்படவேண்டும். பிரதான நிறங்களுக்கு ஊக்க மதிப்பெண் கொடுக்கவேண்டும். அதிக மதிப்பெண் பெற்ற குழந்தை வெற்றி அடைந்தது என்று பாராட்டப்படவேண்டும் .
- அட்டை தயார் செய்தலில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். எண்களுக்கு பதில் அட்டையில் நிறங்களின் பெயர் (வானவில் நிறங்கள்) எழுதவேண்டும். அதாவது ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், இளம் சிவப்பு, சிவப்பு முதலியன.
- நிறைய அட்டைகள் தயாரிக்கவேண்டும்.
- அட்டைகளை குலுக்கி நிறங்களின் பெயர் கீழ் பக்கம் இருக்குமாறு அடுக்கவேண்டும்.
- ஒவ்வொரு குழந்தையும் ஒரு நிமிடத்தில் ஒரு அட்டையை உருவி எடுத்து அதில் எழுதப்பட்டுள்ள நிறத்தை பார்க்க வேண்டும்.
- உடனே அந்த நிறத்திற்கு ஏற்றவாறு மணிகளை கூடையில் இருந்து எடுக்கவேண்டும். எவ்வளவு அதிகமாக எடுக்கமுடியுமோ அவ்வளவு மணிகளை அக்குழந்தை சிந்தாமல் சிதறாமல் கூடையிலிருந்து கொடுக்கப்பட்ட அந்த ஒரு நிமிடத்தில் எடுக்கவேண்டும்.
- இவ்வாறு ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று அட்டைகள் உருவவும், மூன்று முறை அட்டையில் குறிக்கப்பட்ட நிற மணிகளை சேகரிக்கவும் மூன்று நிமிட அவகாசம் தரப்பட வேண்டும்.
- பொறுக்கும் நிறமணிகள் வெளிர் அல்லது அடர் நிற முடயதாக இருக்கலாம். அனால் ஒரே நிறத்தில் சேகரிக்கப்படவேண்டும்.
விதி : யார் நிற மணிகளை சரியாக அட்டையில் உள்ளவாறு புரிந்து கொண்டு எடுக்கிறார்களோ, மற்றும் அதிக எண்ணிக்கையில் குறிப்பிட்ட நேரத்தில் சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்.
அறிவு : நிறங்களை இனம் கண்டு கொள்ள உதவும். எண்களின் முக்கியத்துவம், செயல் திறமை ஆகியவை மேம்படும்.
வட்டத்தைச் சுற்றும் வண்ணங்கள்

கற்பிக்கப்படும் குணங்கள்:
- கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல்
- ஒற்றுமை
- சாக்கட்டி
- ஏதாவது ஒரு இசைக்கருவி (அ) குருவே பஜன் பாடலாம்
- தரையில் ஒரு வட்டம் வரையவும்
- சிறு குழுவாகயிருந்தால் சிறிய வட்டம், குழு பெரியதாக இருந்தால் பெரிய வட்டம்.
விளையாட்டு:
குழுவின் அளவு : குறைந்தபட்சம் 15-20 குழந்தைகள்.
- குழந்தைகளை முடிந்தவரை சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரிக்கவும்.
- ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வண்ணப் பெயரிடவும். (சிகப்பு/நீலம்/பச்சை/மஞ்சள் என்று)
- பின்னணியில் இசை (அ) பஜன் ஒலிக்கத் செய்யவும்.
- குழந்தைகளை வட்டத்தைச் சுற்றி ஓடச் சசொல்லவும்.
- ஒரு சில சுற்றுகளுக்குப் பிறகு குரு இசையை நிறுத்திவிட்டு அதே சமயத்தில் ஒரு வண்ணத்தின் பெயரைக் கூறி அழைக்கவும்.
- அழைக்கப்பட்ட வண்ணக் குழுவைச் சேர்ந்த குழந்தைகள் வட்டத்திற்குள்ளே வரவேண்டும். உதாரணமாக, “சிகப்பு” என்றழைத்தால், சிகப்புக் குழுவைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் வட்டத்திற்குள் வந்து நிற்கவேண்டும். ஏதாவது ஒரு சிகப்புக் குழு குழந்தை வட்டத்திற்கு வெளியே இருந்தால் அவன்/அவள்/அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும். சிகப்பு அல்லாத மற்ற வண்ணக் குழுவிலுள்ள குழந்தைகள் எவரேனும் வட்டத்திற்குள் வந்தாலும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .
- குரு அடுத்த வண்ணம் அழைக்கும் வரை மீண்டும் விளையாட்டைத் தொடரவும். 6 குழந்தைகளே மீதமாகும் வரை விளையாட்டைத் தொடரவும்.
- ஆட்ட இறுதியில் எந்த வண்ணக் குழுவைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் நிற்கிறார்களோ அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.