குரு பூர்ணிமா - நிகழ்வுகள்

குருதத்தாத்ரேயர்


பகவான் பாபா வைட்பீல்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் கல்லூரி மாணவர்களில் சிலருடன் 1978-ம் வருடம் சிவராத்திரி அன்று ஊட்டியில் உள்ள முதுமலைக்குச் சென்றார். அங்கு அவர் மிகவும் சந்தோஷம் நிறைந்த மனநிலையில் இருந்தார். அப்போது அவர் மாணவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி அளித்துக்கொண்டும் இருந்தார்.

அந்தசமயம் அந்தகுழுவில் இடம்பெற்று இருந்த திருமதி.ரத்தன்லால் என்ற மிகச் சிறந்த பக்தை ஸ்வாமியின் அங்கியை கால்கள் மறையும்படி சரி செய்வதற்காக முன்னால் வந்தார். அந்த நேரத்தில் மிகவும் சினம் கொண்ட குரலில் பகவான் "என்னைத் தொடாதே, தொட்டால் நீ சாம்பல் ஆகி விடுவாய். நான் உங்களோடு சிரித்து விளையாடி இருப்பதால் நான் யார் என்ற உண்மையை மறந்து விடுகிறாய். நான் யார்? நான் யார்? நீ எனது உண்மையான தோற்றத்தைக் காணப் போகிறாய்" என்று கூறினார்.

அவ்வாறு கூறிவிட்டு ரூபக் சங்க கோடி என்ற தனது மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவரிடம் தன்னைத் தனியாக போலோரோய்ட் புகைப்படக் கருவியில் படம் பிடிக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த போலோரோய்ட் புகைப்படத்தை வெளியில் உருவிப் பார்த்த பொழுது தத்தாத்ரேயரின் வடிவமான மூன்று முகங்களோடு – மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனின் உருவம் அதில் தெரிந்ததைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அந்தக் குழுவில் இருந்த ரூபக் ஸர்மா என்ற மாணவர் அந்தக் காட்சியை நேரில் பார்த்தவர். அவர் அதை வர்ணிக்கும் பொழுது பகவானின் கேசம் சடையாகி இருந்ததாகவும், அவருக்கு ஆறு கரங்கள் இருந்ததாகவும், அவரது மேனியில் மேலாடை ஏதுமின்றி, ஒரு வேட்டி அணிந்திருந்ததாகவும், ஒரு மாட்டின் மீது தனது கரத்தை வைத்திருந்ததாகவும், அந்த மாடு அவரின் காலை நக்கிக் கொண்டிருந்ததாகவும், அவரைச் சுற்றிலும் நீலநிறத்தில் ஒளிவட்டம் தெரிந்ததாகவும், பின்னணியில் ஓம் என்ற எழுத்து தெரிந்ததாகவும் கூறினார். அந்த படத்தில் நான்கு நாய்களும் காணப்பட்டன.

ஸ்ரீசத்ய சாய் பாபாவே முழுமுதலானவர். அவரே ஆதியும் அந்தமும் ஆகி படைப்பு, காப்பு மற்றும் அழிப்பு ஆகிய மூன்றிற்கும் காரணமானவர். இந்த உண்மையை இச்சம்பவம் மூலம் நமக்கு சத்யசாய் உணர்த்தவே ஆழ்நிலை தெய்வீகத்தைக் கடந்து மூன்று இறைவடிவங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவற்றை ஒன்றாக ஒரே வடிவத்தில் வெளிப்படுத்தினார்.

தத்துவ சாஸ்திரத்தில் பேராசிரியராக இருந்த "கோந்தவளி பிரம்ம சைதன்ய மகாராஜ்" என்ற பெயர் கொண்டவர், ஒரு குருவிடம் இருந்து புராணங்களைப் பற்றிக் கேட்டறிந்து வைத்திருந்தார். அந்த குரு இறைவன் தத்தாத்ரேயன் பால் மிகுந்த பக்திகொண்டவர். அவர் ஒருமுறை அந்த பேராசிரியரிடம் "தத்தாத்ரேயர் புட்டபர்த்தியில் மனித உருவில் அவதரித்திருக்கிறார்" என்று கூறி அவரைப் புட்டபர்த்திக்குச் சென்று இறைவனின் ஆசியைப் பெற்று வரும்படி வலியுறுத்தினார்.

மேலும் தனது முதிர்ந்த வயதினால் அவருடன் வர இயலவில்லை என்றும் பேராசிரியரும் புட்டபர்த்திக்குச் சென்று பாபாவைக் கண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். குருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அந்த பேராசிரியர் புட்டபர்த்தி வந்தடைந்தார்.

அவருக்கு பாபாவுடன் தனிநேர் காணலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் உள்ளே நுழைந்தவுடன் பாபா "பாத நமஸ்காரம் எடுத்துக்கொள், இது தத்தாத்ரேயர் இருக்கும் பீடம்" என்று உரைத்தார். அந்த பேராசிரியர் அனுபவித்த அந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

குரு மற்றும் அவரது சீடர்களை பொருத்தவும்

Images disciples disciples Enter Correct Answer Gurus Images Gurus
இராமர்

1.வால்மீகி
சிவாஜி

2.இராமக்ருஷ்ண பரமஹம்சர்
கிருஷ்ணா

3.சாணக்யா
லவ குசன்

4.ரவிதாஸ்
விவேகானந்தர

5.வசிஷ்டர்
சந்த்ரகுப்த மௌரியர்

6.ராம்தாஸ்
மீரா பாய்

7.சாந்தீபனி

"அன்புடன் வளருங்கள்" - வழிதேடல்

நம் தெய்வீக குரு – வண்ணம் தீட்டுக

கணேசர் - வண்ணம் தீட்டுதல்

சரஸ்வதி – வண்ணம் தீட்டுதல்

குரு வண்ணம் தீட்டுதல்

இறைவன் அவரது தூய அன்பினால் பூக்கள் மற்றும் நிலாவை உருவாக்கினார். வாழ்க்கை என்பது நீரைப் போன்றது.

குரு என்பவர் நமக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும், மற்றும் தத்துவங்களை போதிப்பவராகவும் இருக்கிறார்.