- முக்கியத்துவம்
- ஸ்ரீ சத்ய சாய் அருளமுதம்
- வார்த்தை தேடல் : (புதிர் , விடை)
- பொருத்துதல் விளையாட்டு
- வார்த்தை விளையாட்டு
- வழிதேடல்
- மூன்று இரத்தினங்கள் (த்ரி-ரத்னா)
- புள்ளிகளை இணைத்து வண்ணம் தீட்டவும்
- வண்ணம் தீட்டுதல்
- புத்த மத பிரார்த்தனை
- அங்குலிமாலா(கதை , வண்ணம் தீட்டுதல்)
- தாமரை தியானம்
- வரைந்து அன்பளிப்போம்
- குழந்தை புத்தர்
- மண்டலா
(வண்ணம் தீட்டுதல்)
- ஜாம் ஜாடி லாந்தர்
புத்த மத பிரார்த்தனை
வரிகள்
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்ம சம்புதஸ்ஸ
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
புத்தர், புத்த மதம் மற்றும் புத்த பூர்ணிமா பற்றி சத்ய சாய் பாபா
(தமிழாக்கம்)
சுத்தோதன அரசனும், அவரது மனைவி மாயாதேவியும் ஜபம், தவம், விரதம் ஆகிய ஆன்மீக சாதனைகளைப் பல வருடங்கள் செய்து தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என எத்தனையோ ஜோதிடர்களையும் கலந்து ஆலோசித்தனர். தனக்குப்பின், அரசாள ஒரு வாரிசு இல்லையே என்ற கவலை இரவும் பகலும் சுத்தோதனை வாட்டியது.
பிரார்த்தனையின் பலனாக, மாயாதேவி லும்பினி என்ற நகரத்தில் ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரசவத்திற்குப்பின் மாயா தேவி மரணமடைந்தாள். பையனுக்கு சித்தார்த்தன் என்ற பெயர் வைக்கப்பட்டது. சுத்தோதனின் இரண்டாவது மனைவி கௌதமி குழந்தையை தன் மகனாகவே பாவித்து நன்கு வளர்த்தாள். அதனால் தான் குழந்தைக்கு கௌதமன் என்ற ஆயிரம் வழங்கப்பட்டது.
குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள் "சித்தார்த்தன் நாடாள மாட்டான்; முற்றும் துறந்த ஒரு ஞானியாவான்", எனக் கூறினார்கள். ஜோதிடர்களின் இந்த அறிவிப்பு சுத்தோதனன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சித்தார்த்தன் வளர வளர மன்னரது கவலையும் அதிகமாயிற்று. தனது மகன் வெளியே செல்லாதவாறு பல முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்கினான். மற்ற எவருடனும் பழகாமல் பார்த்துக் கொண்டான். ஏனெனில் அவர்களால், அவனுக்கு நாடாமல் இருக்கத் தூண்டுதல்கள் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இவ்வாறு இருபது வயது ஆகும் வரை மகனைக் காப்பாற்றி வந்தான்.
"ஆசைகளைத் துறந்து ஞான ஒளி பெறுங்கள்", ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் அருளமுதம், தொகுப்பு 39, மே 13, 2006, பிருந்தாவனம்
பிறந்தவுடன் புத்தர் முதலில் சர்வார்த்த சித்தர் என்ற பெயரிட்டு அழைக்கப்பட்டார். சுத்தோதனர் புத்தருக்கும் தனது மைத்துனன் சித்ரகுப்தனின் மகளுக்கும் திருமணம் செய்வித்தார். இடைவிடாத உள்விசாரணை மூலம் துறவு மனப்பான்மை ஏற்படலாகாது என்பதற்காக திருமணம் செய்விக்கப்பட்டது. ஆனால் புத்தர் இவ்வுலக வாழ்க்கை முறை சரியல்ல என்று உணர்ந்து கொண்டார். உலகத்திலுள்ள தொடர்புகளால் தான் மனிதன் துன்பமடைகிறான். நண்பர்களும் உறவினர்களுமே த ள க்கு மூல காரணம் அவர்களே துன்பங்களுக்கு காரணமானவர். ஆகவே என்று முழங்கினார் சர்வம் அனைத்தும் நிலையற்றவை என்று பகர்ந்தார். "சர்வம் நஸ்யம்" அனைத்தும் அழிவது நிச்சயம் என்று கூறினார். ஒன்றுமே நிலைத்த உண்மை அல்ல. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அனேக விதமான அலைகளை ஏற்படுத்தி முடிவில் அனைவரும் அழிகிறார்கள். உரிய வயது வந்ததும் பிள்ளைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்கிறார்கள். மற்றவர்களை மூலம் துர்குணங்களை கூட தலையெடுக்கின்றன. திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின் தன்மை என்ன என்பது புரியாதது. அறியாமையே இதற்கான மூல காரணம். அவர்கள் அனுபவித்த மகிழ்ச்சி எத்தகையது அது உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப்பட்டதா அல்லது வேறு எத்தகையது? மிகப்பெரும் அறிஞரும்கூட நிலையற்ற இன்பத்தை நாடுகிறானே தவிர நிலையான மகிழ்ச்சியை நாடுவதில்லை. பெற்றோர் நண்பர்கள் உறவினர் அனைவரும் இத்தகைய தலைப்பட்ட துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கருதினார். நள்ளிரவில் மனைவியையும் மகன் ராகுலை யும் விட்டு விலகிச் சென்றார்.
"அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
சித்தார்த்தனுக்கும் யசோ தராவுக்கும் திருமணம் செய்து வைத்தான் அரசன். திருமணம் முடிந்த பின்னர் சித்தார்த்தனும் யசோதராவும் அரச மாளிகையில் தங்கினர். ஒரு வருடம் கழித்து ஓர் ஆண்மகவு பிறந்தது. அதற்கு ராகுல் என பெயர் சூட்டினர். கணவனும் மனைவியும் தன் மகனுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்தனர். அரண்மனை வாழ்வு தரும்சுகமும் மகிழ்ச்சியான மண வாழ்வு இருந்தும் கௌதமனின் மனம் ஏங்கியது. ஒரு நாள் அவன் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது முதியவர்களையும், வியாதியால் அவதிப்படுபவர்கள்களையும் மற்றும் மரணம் அடைந்தவர்களையும் கண்டு மனம் பதைத்தான். அவன் மனதில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்பட்டது. மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நடுநிசியில் சித்தார்த்தன் எழுந்தான். தன் குழந்தையைத் தூக்கி கொஞ்சினான். காட்டை நோக்கி நடக்கலானான். கானகத்தில் அவன் எத்தனையோ கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் எல்லாவற்றையும் பொறுமையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டான். பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கினர். மகனைப் பிரிந்த சோகம் அவர்களை கவ்வியது. சித்தார்த்தன் கஷ்டங்களை அனுபவித்த போதிலும் தன்னை அறியும் முன் முயற்சியில் ஈடுபட்டான்.
ஆசைகளைத் துறந்து ஞான ஒளி பெறுங்கள்", ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் அருளமுதம், தொகுப்பு 39, மே 13, 2006, பிருந்தாவனம்
இருபத்தி எட்டாம் வயதில் அனைத்தையும் துறந்தார். இவற்றின் உட்பொருள் என்ன ? "சங்கம் சரணம் கச்சாமி" hands in society head in the forest. அவர் காலத்தில் வாழ்ந்தார் சமுதாய நலனுக்காக தனக்குள்ளேயே விசாரணை நடத்தி வந்தார். "தர்மம் சரணம் கச்சாமி அஹிம்சா பரமோ தர்ம" யாருக்கும் எத்தகைய தீங்கு இழைக்காது ஒருவருக்கும் துன்பம் நிறைந்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை.
அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
புத்தர் இவ்விரு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுதும் பிரச்சாரம் செய்தார். திபெத், பர்மா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கும் புத்தரின் கொள்கை பரவியது. பிற்காலத்தில் புத்தரைப் பின்பற்றி யவர்களுக்கிடையே போராட்டம் நிகழ்ந்தது. புத்த மதம் நலிந்ததற்கு இதுவே காரணம்.
அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
புத்தர் நிர்வாணம் அடையும் நேரம். உடலை விட்டுப் பிரியும் சமயம் கௌதமியின் மகன் ஆனந்தன் எதிரே அமர்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கிறான்
புத்தர் ஆனந்தனை தன்னருகே அழைத்தார். "ஆனந்தா! இன்றுவரை, இவ்வுலகம் சத்யத்தை உணரவில்லை. யாராவது மரணமடைந்தால் அதற்காக வருந்துபவர் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் மரணமடையும் அந்த மனிதன் எந்த உயர்நிலைக்கு உயர்ந்திருக்கிறான் என்பதை விசாரித்துப் புரிந்து கொள்ளும் அளவில் எவரும் இல்லை. நான் அந்த சத்யத்தை உணர்ந்து கொண்டேன். அந்த சத்யத்திலேயே இன்று ஐக்கியமாக போகிறேன். அதற்காக கண்ணீர் விடுவது எவ்வளவு நியாயமற்றது? நான் அடைந்திருக்கும் உயர்ந்த நிலையைக் கண்டு நீ துக்கிப் போன்று இது ஆகிறது. மனிதன் எவரும் இறக்கும் தருவாயில் கண்ணீர் சிந்தக்கூடாது.
தெய்வத்துவத்தை எண்ணியவுடன் ஆனந்த பாஷ்பம் கண்களில் பெருகவேண்டும். துயரக் கண்ணீர் என்பது மனிதனுக்கு தேவையே இல்லை. அது மனித இயல்பும் இல்லை.
"புத்தரது போதனைகளின் சாராம்சம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 31, மே 11, 1998, பிருந்தாவனம்,
கௌதமன் தனது கோரிக்கைகளை எல்லாம் முயற்சி செய்து நிறைவேற்றிய பின் அவர் அடைந்த பெயர் சித்தார்த்தன். பவித்ரமான குணத்தை அடைந்து தனது புத்தியின் மூலம் விவேகத்தை அடைந்தார். அதனாலேயே புத்தர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. மனிதனுக்கு இந்நாளில் இரண்டு (discrimination) பகுத்தறியும் திறன் தேவை. ஒன்று (individual) தன்சார்புடையது. மற்றொன்று (fundamental) அடிப்படையானது. தனிப்பட்ட (discrimination) என்பது தான், தனது, என் சுயநலமும் சுயலாபமுமே!
ஆனாலதுவே எனக்கு உனக்கு மற்றவருக்கு என ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதுவே fundamental discrimination. இதைத்தான புத்தர் தன்னை எடுத்து வளர்த்த கௌதமியின் மகன் ஆனந்தனுக்குப் போதித்தார்.
ஒருமுறை புத்தர் நிர்வாணம் அடைய தயாரான நிலையில இருந்த நேரம் அது. தன்னை அடுத்து இருந்த ஆனந்தனை அழைத்தார். ஆனந்தன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான். புத்தர்,"ஆனந்தா எனது நிர்வாணம் உனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறதா? எத்தனைை காலம் இந்த நிர்வாணத்திற்காக நான் தவம் செய்து வருகிறேன். இந்தத் தருணத்தில் நான் மிகவும் ஆனந்தமாகவே இருக்கிறேன். நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய்?" என்று கேட்டார்.
இந்த சத்யத்தைப் புரிந்து கொண்ட ஆனந்தன் அதன் பின்னர் ஆனந்தத்தையே அனுபவித்தார் கடைசியில் அவரும் நிர்வாணம் அடைந்தார்.
"புலன்களை அடக்குங்கள்", பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 32, பார்ட் 1, மே 30, 1999, பிருந்தாவனம்
இவ்வாறு அபிவிருத்தி செய்து கொள்வதற்கான பிரச்சாரமோ, முயற்சிகளோ, சரியாகச் செய்யப்படாததினால் தான், படிப்படியாக புத்தமதம் க்ஷீண மடைந்து, போய்விட்டது. சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று, இதனால்தான் எல்லா மதங்களும் பலவீனமாகிப் போய்விட்டன. நாம் என்ன சொல்கிறோமோ, அதனை நடைமுறைப்படுத்த முயலவேண்டும். நாம் அறிந்த சத்யத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் நமக்கு சத்யத்தின் உண்மையான தரிசனம் நிச்சயம் கிடைக்கும். ஆனால் சத்யத்தை நாம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில்லை.
"புத்தரது போதனைகளின் சாராம்சம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 31, மே 11, 1998, பிருந்தாவனம்,
இன்று நாம் கொண்டாடும் இந்த புனித நாளான புத்த ஜெயந்தி புத்தபூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. பரிபூரணமாக (முழுமையாக) இருப்பதே பூர்ணிமா.
சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ சூர்யா அஜாயத்: மனதே சந்திரனாகும். மனம் அன்பினால் முழுவதும் நிறைந்திருக்கும் போது அதுவே பவுர்ணமி தினம். மனம் இருண்டு இருக்கும்போது அதை பூர்ணிமா என்று எவ்வாறு கூற இயலும்? பெயருக்கு பூர்ணிமா என்று கூறலாம். உள்ளே இருட்டு தான் மிஞ்சி இருக்கும். நாம் அறியாமையை விரட்டவேண்டும்.
வெளியில் வெளிச்சம் இருந்து என்ன பயன்? இதயத்தில் அல்லவா ஒளி வீச வேண்டும். இதயத்தில் ஒளி இல்லாத போது வெளியிடத்தில் விளக்குகள் ஏற்றி பயனில்லை. இதயத்தில் தெய்வத்துவம் என்ற விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். உலகியல் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தள்ளி வைக்க வேண்டும். பகைமை, பொறாமை இவற்றை விட வேண்டும். ராகம், துவேஷம் என்ற இரண்டு கிரகங்கள் தான் மனிதனை கெட்ட வழியில் செலுத்துகின்றன. இவற்றை விளக்குவதற்கு அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
எத்தனையோ தொலைவில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். புத்த பௌர்ணிமாவை அனுபவிக்க, ஆனந்திக்க வந்திருக்கிறீர்கள். நீங்கள் இத்தனை தூரம் வர வேண்டிய அவசியம் ஏதுமில்லை. புத்தர் என்பது உங்களது புத்தியின் வடிவமே! ஆகவே உங்கள் புத்தியை மிகவும் புத்திசாலித்தனமான வகையில் உபயோகிக்க வேண்டும். புத்தியை சரியாகப் பயன்படுத்திய பின்னர் தான் உங்கள் வாழ்க்கை முழுமை பெறும்!
"புத்தரது போதனைகளின் சாராம்சம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 31, மே 11, 1998, பிருந்தாவனம்
உண்மையில் புத்தர் என்பவர் ஒரு தனி மனிதர் இல்லை. நீங்கள் எல்லோரும் கூட புத்தர்களே! இந்த உண்மையை புரிந்து கொண்டால் நீங்கள் எல்லா இடத்திலும் ஒருமையை காணலாம்.
“ஆசைகளைத் துறந்து ஞான ஒளி பெறுங்கள்", ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் அருளமுதம், தொகுப்பு 39, மே 13, 2006, பிருந்தாவனம்
புத்த பூர்ணிமா அன்று ஒரு நாள் மட்டுமே சந்தோஷமாக இருந்தால் போதாது.i இந்த பேரின்பத்தை எப்போதும் அனுபவிக்க வேண்டுமென்றால் புத்தருடைய போதனைகளைக் கடைபிடிக்க வேண்டும். இன்றைய நாட் களில் மக்கள் மேடைப்பேச்சில் வீர்ராக இருக்கிறார்கள்.ஆனால் செயலில் பூச்சியமாக இருக்கிறார்கள். சொற்பொழிவுகளை விட புத்தரின் போதனைகளை செயலாக்கம் செய்வதே மிக முக்கியமாகும். இதுவே ஆனந்தத்தினை அனுபவிக்கும் முறையான வழியாகும். புத்த பூர்ணிமாவை சிறந்த முறையில் கொண்டாடும் முறை என்ன என்றால் அவர்தம் போதனைகளை செயல்படுத்துவதாகும்.. இந்த பண்டிகை நாளில் மட்டும்சந்தோஷமாக இருப்பது போதுமானதல்ல. இடையறாது இப்புனித நாளை நினைத்து வாழ்வதால், அந்த ஆனந்தத்தை எப்போதும் அனுபவிக்கிறோம். பசு முதலில் புல்லை மேய்கிறது. பிறகு அமைதியாக அமர்ந்து, ஏற்கனவே உண்டதை அசைபோடுகிறது. ஒரு விலங்கினம் இதை செய்ய முடியும்போது, மனிதனால் தான் பெற்ற போதனைகளை அசைபோட முடியாதா? வீடு திரும்பியதும் இன்று கற்றதை அசைபோடவேண்டும் இன்றைய அனுபவத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும் இதுவே நீ கற்றதை ஜீரணித்து, ஆன்ந்தமாக இருக்கும் வழியாகும்.. நீ இதை எப்போது செய்கிறாயோ அப்போதுதான், நீ இங்கு வர மேற்கொண்ட பயணம் பயனடையும். நீ இந்த பாடங்களை இங்கிருந்து சென்ற் உடனே மறந்து விடக்கூடாது. புத்தரின் செய்திகள் பிருந்தாவனத்தில் கோடை மழை 2000,பிருந்தாவன்
ஸ்ரீ சத்ய சாய் அருளமுதம்

பிறப்பும் இளமைக் காலமும்
சுத்தோதன அரசனும், அவரது மனைவி மாயாதேவியும் ஜபம், தவம், விரதம் ஆகிய ஆன்மீக சாதனைகளைப் பல வருடங்கள் செய்து தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என எத்தனையோ ஜோதிடர்களையும் கலந்து ஆலோசித்தனர். தனக்குப்பின், அரசாள ஒரு வாரிசு இல்லையே என்ற கவலை இரவும் பகலும் சுத்தோதனை வாட்டியது.

பிரார்த்தனையின் பலனாக, மாயாதேவி லும்பினி என்ற நகரத்தில் ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரசவத்திற்குப்பின் மாயா தேவி மரணமடைந்தாள். பையனுக்கு சித்தார்த்தன் என்ற பெயர் வைக்கப்பட்டது. சுத்தோதனின் இரண்டாவது மனைவி கௌதமி குழந்தையை தன் மகனாகவே பாவித்து நன்கு வளர்த்தாள். அதனால் தான் குழந்தைக்கு கௌதமன் என்ற பெயர் வழங்கப்பட்டது.
குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள் "சித்தார்த்தன் நாடாள மாட்டான்; முற்றும் துறந்த ஒரு ஞானியாவான்", எனக் கூறினார்கள். ஜோதிடர்களின் இந்த அறிவிப்பு சுத்தோதனன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சித்தார்த்தன் வளர வளர மன்னரது கவலையும் அதிகமாயிற்று. தனது மகன் வெளியே செல்லாதவாறு பல முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்கினான். மற்ற எவருடனும் பழகாமல் பார்த்துக் கொண்டான். ஏனெனில் அவர்களால், அவனுக்கு நாடாமல் இருக்கத் தூண்டுதல்கள் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இவ்வாறு இருபது வயது ஆகும் வரை மகனைக் காப்பாற்றி வந்தான்.
"ஆசைகளைத் துறந்து ஞான ஒளி பெறுங்கள்", ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருளமுதம், தொகுப்பு 39, மே 13, 2006, பிருந்தாவனம்

பிறந்தவுடன் புத்தர் முதலில் சர்வார்த்த சித்தர் என்ற பெயரிட்டு அழைக்கப்பட்டார். சுத்தோதனர் புத்தருக்கும் தனது மைத்துனன் சித்ரகுப்தனின் மகளுக்கும் திருமணம் செய்வித்தார். இடைவிடாத உள் விசாரணை மூலம் துறவு மனப்பான்மை ஏற்படலாகாது என்பதற்காக திருமணம் செய்விக்கப்பட்டது. ஆனால் புத்தர் இவ்வுலக வாழ்க்கை முறை சரியல்ல என்று உணர்ந்து கொண்டார். உலகத்திலுள்ள தொடர்புகளால் தான் மனிதன் துன்பமடைகிறான். நண்பர்களும் உறவினர்களுமே தளைக்கு மூல காரணம்; அவர்களே துன்பங்களுக்கு காரணமானவர். ஆகவே சர்வம் நஸ்யம் என்று முழங்கினார். அனைத்தும் நிலையற்றவை என்று பகர்ந்தார். "சர்வம் நஸ்யம்" அனைத்தும் அழிவது நிச்சயம் என்று கூறினார். ஒன்றுமே நிலைத்த உண்மை அல்ல. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அனேக விதமான அலைகளை ஏற்படுத்தி முடிவில் அனைவரும் அழிகிறார்கள். உரிய வயது வந்ததும் பிள்ளைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்கிறார்கள். மற்றவர்கள் மூலம் துர்குணங்கள் கூட தலையெடுக்கின்றன. திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின் தன்மை என்ன என்பது புரியாதது. அறியாமையே இதற்கான மூல காரணம். அவர்கள் அனுபவித்த மகிழ்ச்சி எத்தகையது அது உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப்பட்டதா அல்லது வேறு எத்தகையது? மிகப்பெரும் அறிஞரும்கூட நிலையற்ற இன்பத்தை நாடுகிறானே தவிர நிலையான மகிழ்ச்சியை நாடுவதில்லை. பெற்றோர் நண்பர்கள் உறவினர் அனைவரும் இத்தகைய தளைப்பட்ட துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கருதினார். நள்ளிரவில் மனைவியையும், மகன் ராகுலை யும் விட்டு விலகிச் சென்றார்.
"அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்

“ஆசைகளைத் துறந்து ஞான ஒளி பெறுங்கள்", ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் அருளமுதம், தொகுப்பு 39, மே 13, 2006, பிருந்தாவனம்

இருபத்தி எட்டாம் வயதில் அனைத்தையும் துறந்தார். இவற்றின் உட்பொருள் என்ன? "சங்கம் சரணம் கச்சாமி" hands in society head in the forest. அவர் காலத்தில் வாழ்ந்தார் சமுதாய நலனுக்காக தனக்குள்ளேயே விசாரணை நடத்தி வந்தார். "தர்மம் சரணம் கச்சாமி அஹிம்சா பரமோ தர்ம" யாருக்கும் எத்தகைய தீங்கு இழைக்காது ஒருவருக்கும் துன்பம் நிறைந்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை.
"அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
புத்தர் இவ்விரு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுதும் பிரச்சாரம் செய்தார். திபெத், பர்மா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கும் புத்தரின் கொள்கை பரவியது. பிற்காலத்தில் புத்தரைப் பின்பற்றியவர்களுக்கிடையே போராட்டம் நிகழ்ந்தது. புத்த மதம் நலிந்ததற்கு இதுவே காரணம்.
“அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
நிர்வாணம் அடைதல்

புத்தர் நிர்வாணம் அடையும் நேரம். உடலை விட்டுப் பிரியும் சமயம் கௌதமியின் மகன் ஆனந்தன் எதிரே அமர்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.
புத்தர் ஆனந்தனை தன்னருகே அழைத்தார். "ஆனந்தா! இன்றுவரை, இவ்வுலகம் சத்யத்தை உணரவில்லை. யாராவது மரணமடைந்தால் அதற்காக வருந்துபவர் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் மரணமடையும் அந்த மனிதன் எந்த உயர்நிலைக்கு உயர்ந்திருக்கிறான் என்பதை விசாரித்துப் புரிந்து கொள்ளும் அளவில் எவரும் இல்லை. நான் அந்த சத்யத்தை உணர்ந்து கொண்டேன். அந்த சத்யத்திலேயே இன்று ஐக்கியமாக போகிறேன். அதற்காக கண்ணீர் விடுவது எவ்வளவு நியாயமற்றது? நான் அடைந்திருக்கும் உயர்ந்த நிலையைக் கண்டு நீ துக்கிப்பது போன்று இது ஆகிறது. மனிதன் எவரும் இறக்கும் தருவாயில் கண்ணீர் சிந்தக்கூடாது.
தெய்வத்துவத்தை எண்ணியவுடன் ஆனந்த பாஷ்பம் கண்களில் பெருகவேண்டும். துயரக் கண்ணீர் என்பது மனிதனுக்கு தேவையே இல்லை. அது மனித இயல்பும் இல்லை.
"புத்தரது போதனைகளின் சாராம்சம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 31, மே 11, 1998, பிருந்தாவனம்
கௌதமன் தனது கோரிக்கைகளை எல்லாம் முயற்சி செய்து நிறைவேற்றிய பின் அவர் அடைந்த பெயர் சித்தார்த்தன். பவித்ரமான குணத்தை அடைந்து தனது புத்தியின் மூலம் விவேகத்தை அடைந்தார். அதனாலேயே புத்தர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. மனிதனுக்கு இந்நாளில் இரண்டு (discrimination) பகுத்தறியும் திறன் தேவை. ஒன்று (individual) தன்சார்புடையது. மற்றொன்று (fundamental) அடிப்படையானது.
தன்சார்புடையது (individual discrimination) என்பது தான், தனது, என் சுயநலமும் சுயலாபமுமே! ஆனாலதுவே எனக்கு உனக்கு மற்றவருக்கு என ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதுவே fundamental discrimination. இதைத்தான புத்தர் தன்னை எடுத்து வளர்த்த கௌதமியின் மகன் ஆனந்தனுக்குப் போதித்தார்.
ஒருமுறை புத்தர் நிர்வாணம் அடைய தயாரான நிலையில் இருந்த நேரம் அது. தன்னை அடுத்து இருந்த ஆனந்தனை அழைத்தார். ஆனந்தன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான். புத்தர், "ஆனந்தா எனது நிர்வாணம் உனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறதா? எத்தனைக் காலம் இந்த நிர்வாணத்திற்காக நான் தவம் செய்து வருகிறேன். இந்தத் தருணத்தில் நான் மிகவும் ஆனந்தமாகவே இருக்கிறேன். நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய்?" என்று கேட்டார்.
இந்த சத்யத்தைப் புரிந்து கொண்ட ஆனந்தன் அதன் பின்னர் ஆனந்தத்தையே அனுபவித்தார் கடைசியில் அவரும் நிர்வாணம் அடைந்தார்.
"புலன்களை அடக்குங்கள்", பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 32, பார்ட் 1, மே 30, 1999, பிருந்தாவனம்

இந்தியாவில் புத்த மத சரிவுக்கு காரணம்
இவ்வாறு அபிவிருத்தி செய்து கொள்வதற்கான பிரச்சாரமோ, முயற்சிகளோ, சரியாகச் செய்யப்படாததினால் தான், படிப்படியாக புத்தமதம் க்ஷீண மடைந்து, போய்விட்டது. சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று, இதனால்தான் எல்லா மதங்களும் பலவீனமாகிப் போய்விட்டன. நாம் என்ன சொல்கிறோமோ, அதனை நடைமுறைப் படுத்த முயலவேண்டும். நாம் அறிந்த சத்யத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் நமக்கு சத்யத்தின் உண்மையான தரிசனம் நிச்சயம் கிடைக்கும். ஆனால் சத்யத்தை நாம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில்லை.
"புத்தரது போதனைகளின் சாராம்சம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 31, மே 11, 1998, பிருந்தாவனம்
புத்த ஜெயந்தி கொண்டாட்டம்

இன்று நாம் கொண்டாடும் இந்த புனித நாளான புத்த ஜெயந்தி புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. பரிபூரணமாக (முழுமையாக) இருப்பதே பூர்ணிமா. சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ சூர்யா அஜாயத்: மனதே சந்திரனாகும். மனம் அன்பினால் முழுவதும் நிறைந்திருக்கும் போது அதுவே பவுர்ணமி தினம். மனம் இருண்டு இருக்கும்போது அதை பூர்ணிமா என்று எவ்வாறு கூற இயலும்? பெயருக்கு பூர்ணிமா என்று கூறலாம். உள்ளே இருட்டு தான் மிஞ்சி இருக்கும். நாம் அறியாமையை விரட்டவேண்டும்.
வெளியில் வெளிச்சம் இருந்து என்ன பயன்? இதயத்தில் அல்லவா ஒளி வீச வேண்டும். இதயத்தில் ஒளி இல்லாத போது வெளியிடத்தில் விளக்குகள் ஏற்றி பயனில்லை. இதயத்தில் தெய்வத்துவம் என்ற விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். உலகியல் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தள்ளி வைக்க வேண்டும். பகைமை, பொறாமை இவற்றை விட வேண்டும். ராகம், துவேஷம் என்ற இரண்டு கிரகங்கள் தான் மனிதனை கெட்ட வழியில் செலுத்துகின்றன. இவற்றை விளக்குவதற்கு அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
"அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்", பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 30 மே 15, 1997, பிருந்தாவனம்
எத்தனையோ தொலைவில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். புத்த பௌர்ணிமாவை அனுபவிக்க, ஆனந்திக்க வந்திருக்கிறீர்கள். நீங்கள் இத்தனை தூரம் வர வேண்டிய அவசியம் ஏதுமில்லை. புத்தர் என்பது உங்களது புத்தியின் வடிவமே! ஆகவே உங்கள் புத்தியை மிகவும் புத்திசாலித்தனமான வகையில் உபயோகிக்க வேண்டும். புத்தியை சரியாகப் பயன்படுத்திய பின்னர் தான் உங்கள் வாழ்க்கை முழுமை பெறும்!
"புத்தரது போதனைகளின் சாராம்சம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 31, மே 11, 1998, பிருந்தாவனம்

உண்மையில் புத்தர் என்பவர் ஒரு தனி மனிதர் இல்லை. நீங்கள் எல்லோரும் கூட புத்தர்களே! இந்த உண்மையை புரிந்து கொண்டால் நீங்கள் எல்லா இடத்திலும் ஒருமையைக் காணலாம்.
"ஆசைகளைத் துறந்து ஞான ஒளி பெறுங்கள்", ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் அருளமுதம், தொகுப்பு 39, மே 13, 2006, பிருந்தாவனம்
புத்த பூர்ணிமா அன்று ஒரு நாள் மட்டுமே சந்தோஷமாக இருந்தால் போதாது. இந்த பேரின்பத்தை எப்போதும் அனுபவிக்க வேண்டுமென்றால் புத்தருடைய போதனைகளைக் கடைபிடிக்க வேண்டும். இன்றைய நாட்களில் மக்கள் மேடைப்பேச்சில் வீர்ராக இருக்கிறார்கள். ஆனால் செயலில் பூச்சியமாக இருக்கிறார்கள். சொற்பொழிவுகளை விட புத்தரின் போதனைகளை செயலாக்கம் செய்வதே மிக முக்கியமாகும். இதுவே ஆனந்தத்தினை அனுபவிக்கும் முறையான வழியாகும்.
புத்த பூர்ணிமாவை சிறந்த முறையில் கொண்டாடும் முறை என்ன என்றால் அவர்தம் போதனைகளை செயல்படுத்துவதாகும். இந்த பண்டிகை நாளில் மட்டும் சந்தோஷமாக இருப்பது போதுமானதல்ல. இடையறாது இப்புனித நாளை நினைத்து வாழ்வதால், அந்த ஆனந்தத்தை எப்போதும் அனுபவிக்கிறோம். பசு முதலில் புல்லை மேய்கிறது. பிறகு அமைதியாக அமர்ந்து, ஏற்கனவே உண்டதை அசைபோடுகிறது. ஒரு விலங்கினம் இதை செய்ய முடியும்போது, மனிதனால் தான் பெற்ற போதனைகளை அசைபோட முடியாதா? வீடு திரும்பியதும் இன்று கற்றதை அசைபோட வேண்டும். இன்றைய அனுபவத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும்.
இதுவே நீ கற்றதை ஜீரணித்து, ஆன்நதமாக இருக்கும் வழியாகும். நீ இதை எப்போது செய்கிறாயோ அப்போதுதான், நீ இங்கு வர மேற்கொண்ட பயணம் பயனடையும். நீ இந்தப் பாடங்களை இங்கிருந்து சென்ற உடனே மறந்து விடக்கூடாது. (புத்தரின் செய்திகள் பிருந்தாவனத்தில் கோடை மழை 2000, பிருந்தாவன்)
Adapted from: https://sathyasaiwithstudents.blogspot.com/2018/04/sri-sathya-sai-on-buddha-buddhism-and.html?m=1
புத்த பூர்ணிமா – பொருத்துதல் விளையாட்டு
இடது பக்கத்தில் இருக்கும் சொற்களுக்குத் தகுந்த பொருத்தமான சொற்களை வலது பக்கத்தில் பொருத்தி விளையாடவும். விடைகள்
புத்த பூர்ணிமா – பொருத்துதல் விளையாட்டு - விடைகள் (செயற்பாடு-1)
- கௌதம புத்தர்
- ஞானோதயம்
- லும்பினி
- சுத்தோதனா
- யசோதரா
- ஆனந்தன்
- ஸ்தூபி
- ராகுலன்
- எண்வகைவழி
புத்த பூர்ணிமா போட்டியில் விளையாட்டு - பதில் (செயற்பாடு-2)
- விழித்தெழுந்தவர்
- புத்த மதத்தின் சின்னம்
- பஞ்சசீலம்
- நான்கு சம்பவங்கள்
- புனிதநூல்
- நிர்வாணம்
- வைசாக பூர்ணிமா
- துக்கம்
- மனிதனின் தலைவன்
- ஆசிய ஜோதி.
புத்த பூர்ணிமா – பொருத்துதல் விளையாட்டு
இடது பக்கத்தில் இருக்கும் சொற்களுக்குத் தகுந்த பொருத்தமான சொற்களை வலது பக்கத்தில் பொருத்தி விளையாடவும்.
செயற்பாடு II விடைகள்பகொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைச் சரியாக வரிசைப் படுத்தவும் - பதில் (செயற்பாடு - 1)
- அஹிம்சை
- சித்தார்தர்
- அமைதி
- கருணை
- மாயாதேவி
- துறவு
- பகுத்தறிவு
- அவதார்
- துன்பம்
- நிர்வாணம்
புத்த பூர்ணிமா போட்டியில் விளையாட்டு - பதில் (செயற்பாடு - 2)
- உண்மை
- அன்பு
- கபிலவஸ்து
- தர்மம்
- எண்வழிகள்
- சங்கம்
- திருடாமை
- துறவி
- ஞானோதயம்
- தூய்மை
தாமரைத் தியானம்

புத்த மதத்தின் மதிப்பு: தாமரை மலர் சேற்றில் வளர்ந்தாலும் கலங்கிய நீரின் மேல் மலர்வதைப் போல் நாமும், நமது களங்கங்கள் மற்றும் துன்பங்களில் இருந்து மேல் எழும்ப முடியும்.
குழந்தைகளே! கண்களை மூடி, நிமிர்ந்து அமரவும்! உங்கள் உடலை தளர்த்திக் கொள்ளவும்!
உங்களை மண்ணால் குளத்தில் நீருக்கடியில் புதைந்திருக்கும் தாமரை விதைகளாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் மண் இருக்கிறது. அதை உங்களால் நன்றாக உணர முடிகிறது. உங்களுக்கு மேல், இந்த சேறும் சகதியும் கலந்த நீரின் மேல் சூரிய ஒளியும், காற்றோட்டமும் இருக்கிறது. இந்த நீரின் மேல் வளரும் பயணத்தால் நீங்கள் தளர்வடைவதில்லை.
உறுதியான மனதோடு நீங்கள் பூமியில் சுழல்கின்றீர்கள். உங்களது வேர்கள் மண்ணுக்குள் மிகுந்த ஆழத்திற்குச் செல்கின்றது. மெதுவாக உங்களது சிறிய காம்பு வளர்கிறது. திடீரென்று நீங்கள் மண்ணுக்கு மேல் இருக்கிறீர்கள். உங்களது காம்பு மேலும் பெரிதாக, இன்னமும் பெரிதாக வளர்ந்து கொண்டே வருகிறது. நீங்கள் மெதுவாக கலங்கிய நீரோடு சண்டையிட்டு மேலெழும்பி வருகிறீர்கள். திடீரென்று நீங்கள் அந்தக் கலங்கிய குளத்திற்கு வெளியே உள்ளீர்கள். நீங்கள் வெதுவெதுப்பான சூரியனை நோக்கி வளர்கிறீர்கள். சூரியன் உங்கள் மீது தனதுக் கதிர்களை வீசுகிறார்.
உங்கள் தாமரை மொட்டு உங்கள் காம்பின் மீது முளைக்கிறது. அது மேலும் மேலும் வளர்கிறது. பெரிதாகிறது. கடைசியாக அது முழு மலராக மலர்கிறது. நீங்கள் ஒரு வெள்ளைத் தாமரை. நீங்கள் கலங்கிய நீரின் மேல் வளர்ந்த அந்த மண்ணால் கறைபடாமல் அழகாக நிற்கிறீர்கள். நீங்கள் வெள்ளையாகவும், நறுமணத் தோடும் அழகாகவும் இருக்கிறீர்கள்.
உங்களைப் பார்க்கும் யாவரையும் உங்கள் அழகால் கவருகிறீர்கள். மண்ணால் கலங்கிய நீரை விட்டு வளர வேண்டும் என்ற உங்கள் உறுதி, புத்தர் தனக்கு ஞானம் வேண்டும் என்ற பயணத்தில் கொண்ட மன உறுதியை நினைவுப் படுத்துகிறது. புத்தர் ஒரு தாமரைப் போல் இந்த வாழ்க்கை என்ற கலங்கிய நீராகிய களங்கங்கள் மற்றும் குறைகளில் இருந்து வெளியேற உறுதிக் கொண்டார். அவர் அதற்காக செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தார். மேலும் நம்மாலும் செய்ய முடியும் என்றுக் காண்பித்தார். நமக்குள் களங்கங்கள் இருக்கலாம். ஆனால் அதனை மீறி அந்தக் களங்கங்களைக் களைந்து ஞானம் பெறும் ஆற்றல் நம்முள் இருக்கிறது.
நீங்கள் ஒரு அழகிய வெள்ளைத் தாமரை. உங்களது பங்கு, நீங்கள் எவ்வாறு மண்ணால் கலங்கிய நீரில் மண்ணினால் கறைப்படியாது மேல் எழும்பி நிற்கிறீர்களோ, அதே போன்று மக்கள் தங்கள் களங்கங்களிலுருந்தும், துன்பங்களிலுருந்தும் மேல் எழும்ப வேண்டும் என்பதை நினைவூட்டுவதே ஆகும்.
வரைந்து அன்பளிப்போம்

பாரதத்தில் புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் பெயர் போதி மரம் ஆகும். அந்த மரம் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் புனிதமானதாகும். புத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளில், வைசாகத் தினத்தன்று போதி மரத்தின் இலையில் புத்தரை வரைந்து அன்பளிப்பாகக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இந்த புத்த பூர்ணிமா அன்று புத்தரை ஒரு T–சட்டையில் வரைந்து நமக்கு அன்பானவர்களுக்குப் பரிசளிப்போம்.
வித்திடப்படும் நற்பண்புகள்:
- கலையை மனதாரச் செய்வது.
- நமது திறமைகளை இறைவனுக்கு அர்ப்பணிப்பது.
- பக்தி.
- புத்த மத முறைகளைப் புரிந்துக் கொள்ளுதல்.
தேவையானப் பொருட்கள்:
- T – சட்டை
- கார்பன் காகிதம்
- பென்சில் - வெளிக்கோடுகளை வரைவதற்கு
- துணியில் வரையும் வண்ணங்கள்
- வண்ணப் பூச்சு தூரிகைகள்
செய்முறை :
- பதிவிறக்கம் செய்த சுவடை T–சட்டையின் மீது வைத்துக் கார்பன் காகிதத்தின் ஊதவியோடு வரைந்துக் கொள்ளவும்.( Download Template)
- வண்ணம் பூசவும்.
- மேலும் வண்ணம் பூசி விவரிக்கவும்.
- உலர வைக்கவும்.
- புத்த பூர்ணிமா தின அன்பளிப்பாகக் கொடுக்கவும்.
குழந்தை புத்தர்
மண்டலா
(வண்ணம் தீட்டுதல்)
திபெத்திய புத்த மதத்தின், முக்கிய கலை வடிவங்களில் ஒன்றாகத் திகழும் மண்டலா, இப்ரபஞ்சத்தை உருவகிக்கும் ஒரு அடையாளச் சின்னமாகும். வண்ணம் தீட்டும் தாள்களில் கொடுக்கப்பட்டுள்ள இப்புனித மண்டலா வடிவங்களை, குழந்தைகள் பாலவிகாஸ் வகுப்புகளில் வண்ணம் தீட்டி மகிழலாமே!
பாலவிகாஸ் பிரிவு II மற்றும் பிரிவு - III குழந்தைகள், சுவரொட்டிகள் தயார் செய்தும் கோலங்கள் போட்டும் பாலவிகாஸ் மையத்தை அலங்கரிக்கலாமே!