சுதந்திர தினம் - செயல்பாடுதேசிய விலங்கு : புலி(வண்ணம் பூசுதல்)

அழகும், பலமும், சுறுசுறுப்பும், அளவிடமுடியாத வலிமையும் கொண்டு விளங்கும் விலங்கான புலி, எல்லோராலும் மதிப்பு மிக்கதாகவும் உயர்வாகவும் கருதப்படுகிறது.

பின்பற்றவேண்டிய நன்னெறிகள் :
நம் வாழ்க்கைக் குறிக்கோள்களை அடைய உழைக்கும்போது நாம் புலியைப்போல விழிப்போடு, துரிதமாகச் செயல்பட முயற்சி செய்யவேண்டும்.

தேவையான பொருட்கள் :
 1. வெள்ளை நிற சார்ட்(chart) அல்லது காகிதம் (A4 sheet)
 2. ஆரஞ்சு, கருப்பு வண்ணம் (poster colour)
 3. பெய்ண்ட் ப்ரஷ் (paint brush)
ஆயத்தம் ஆகுதல் :

புலிகளின் எண்ணிக்கை, வேகமாகக் குறைவதன் காரணங்களையும், அவற்றைப் பராமரிக்க மேற்கொண்டுள்ள ‘புலிப் பாதுகாப்புத் திட்டம்’ போன்ற முயற்சிகளைப் பற்றி விவாதிக்கவும்.மேலும் இவ்விலங்கிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய நன்னெறிகளை எடுத்துரைக்கவும்.

குழுமச்செயல்பாடு :

 • குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களில் மஞ்சள் வண்ணம் பூசி காகிதத்தில் பதியச் செய்யவும்.
 • படத்தில் காட்டியவாறு பெய்ண்ட் ப்ரஷ் கொண்டு கருப்பு வரிகள் வரையவும்.

தேசிய பறவை : மயில் (பேப்பர் plate கைவினைப்பாடு)வண்ணமயமான மயில் அழகு நிறைந்த பறவை. அழகுக்குக் காரணம் என்ன? முருகன் என்றால் அழகு என்று பொருள். அவருக்கு வாஹனமாக இருப்பதால் மயிலும் அழகாக இருக்கிறது. இறைவனுக்கு அருகில் (சாமீப்பியம்/உபவாசம்) இருந்தால், நமக்கும் இறைகுணங்கள் நிறையும்.

பின்பற்றவேண்டிய நன்னெறிகள் :

வண்ணமயமான மயிலின் அழகைப் பார்ப்பதுடன் நமது அகத்தின் அழகையும் உற்று நோக்கவும். அன்பு, பொறுமை, மன்னிக்கும் மனப்பான்மை, கருணை ஆகிய நற்குணங்கள் அகத்தின் அழகை குறிக்கும். இதை நம் அன்றாட வாழ்வில் கடைபிடிப்போமாக !

தேவையான பொருட்கள் :
 1. காகித தட்டு
 2. நீலம், பச்சை நிற வண்ணங்கள் (poster colour)
 3. பெய்ண்ட் ப்ரஷ் (paint brush)
 4. நீலம், மஞ்சள் நிற காகிதங்கள்
 5. ஜமிக்கி
ஆயத்தம் ஆகுதல் :

நமது தேசியப்பறவை மயிலைப்பற்றியும் அதன் அழகிய தோகையைப் பற்றியும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கவும். மேலும் இவ்வழகிய பறவையிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய நன்னெறிகளை எடுத்துரைக்கவும்.

குழுமச்செயல்பாடு :

 • நீலம் மற்றும் பச்சை வண்ண நிறங்களை காகிதத் தட்டில் பூசவும்.
 • படத்தில் காட்டியவாறு மயிலின் வடிவத்தை நீல நிற காகிதத்தில் வரைந்து, கத்தரித்து .காகிதத் தட்டில் ஒட்டவும்.
 • மஞ்சள் நிற காகிததில் அலகு மற்றும் கண்களை வெட்டி ஒட்டவும்.
 • ஜமிக்கிகளை தோகைகளாக படத்தில் காட்டியவாறு ஒட்டவும்.

தேசியக்கொடி– பேப்பர் கொலாஜ் (collage)இது ஒரு கொலாஜ் (collage) செயல்பாடாகும். குழந்தைகளுக்கு பல வண்ண காகிதங்களை கிழித்துப் போட்டு விளையாடுவது மிகவும் பிடித்தமான செயல்பாடாகும்.

மூவர்ணங்களின் முக்கியத்துவம் :
 1. காவி நிறம் : பற்றின்மை, தைரியம், தியாகம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
 2. வெண்மை நிறம் : சத்தியம், சாந்தி, தூய்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
 3. பச்சை நிறம் : வளமை, நம்பிக்கை, வீரம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
 4. அசோகச் சக்கரம் : தர்மத்தை பின்பற்றுவதைக்குறிக்கிறது.
தேவையான பொருட்கள் :
 • வெள்ளை நிற சார்ட்(chart)
 • ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற காகிதம்
 • பசை (glue)
ஆயத்தம் ஆகுதல் :

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குழந்தைகளுடன் தேசியக்கொடியின் முக்கியத்துவத்தையும், நமது தேசம் எவ்வாறு சுதந்திரம் அடைந்தது என்பதைப் பற்றியும் கலந்து உரையாடவும். அஹிம்சை பற்றியும், சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கவும்.

குழுமச்செயல்பாடு :
 • குழந்தைகளை ஆரஞ்சு,பச்சை மற்றும் நீல நிற காகிதங்களை சிறு துண்டுகளாக கிழித்து தனித்தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
 • குழந்தைகள் கலர் காகிதங்களை வைத்து படத்தில் கட்டியபடி தேசியக்கொடியின் வடிவத்தை சார்ட்டில் ஒட்டவும்.
 • இந்த செயல்பாட்டின் மூலம் குழந்தைகள் ஒற்றுமையோடு,பகிர்ந்து செயல்படுதலையும் கற்றுக்கொள்வார்கள்.

மாம்பழம் (குறிப்பு புத்தகம் தயாரித்தல் - Note pad Making)பழங்களின் அரசன் என கருதப்படும் மாம்பழம் நமது தேசிய கனியாகும்.

பின்பற்றவேண்டிய நன்னெறிகள் :

மாம்பழத்தின் இனிமையை போல் நமது சொற்கள் அன்பாகவும், கனிவாகவும், மென்மையாகவும், இனிமையாகவும் இருத்தல் வேண்டும்.

தேவையான பொருட்கள் :
 • மஞ்சள் நிற சார்ட்(chart)
 • காகிதம் (A4 sheet)
 • பச்சை வண்ண காகிதம்
 • கருப்பு நிற ஸ்கெட்ச் (sketch pen)
குழுமச்செயல்பாடு :
 • படத்தில் காட்டியவாறு மாம்பழ வடிவத்தை மஞ்சள் நிற சார்ட்டில்(chart)வரைந்து, கத்தரித்து வைத்துக்கொள்ளவும்.
 • அதே போல் A4-sheet-யும் மாம்பழ வடிவத்தில் கத்தரித்து வைத்துக் கொள்ளவும்.
 • மஞ்சள் நிற சார்ட்டினுள் கத்தரித்து வைத்துள்ள A4-sheet-களை ஒட்டவும்.
 • பச்சை வண்ண காகிதத்தை இலை வடிவில் கத்தரித்து படத்தில் காட்டியவாறு ஒட்டவும்
 • மாம்பழ வடிவ குறிப்பு புத்தகம் தயார்.
மூவர்ண சாலட்பலவண்ண பச்சைக் காய்கறிகள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும்.

பின்பற்றவேண்டிய நன்னெறிகள் :

 • நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு வண்ணமும் நமது உணர்ச்சியை தூண்டச் செய்யும். மஞ்சள் நிறம் நல்லெண்ணத்தையும், ஆரஞ்சு நிறம்மூளையை துரிதமாக செயல்படவும் உதவும்.
 • அதனால் நம்மைச் சுற்றி உள்ள வண்ணங்களை உற்று நோக்குதல் மிகவும் அவசியமாகும்.

தேவையான பொருட்கள் :
 • ஆரஞ்சு, வெள்ளை (அ) இள மஞ்சள், பச்சை நிற காய்கறிகள்
 • தட்டு

ஆயத்தம் ஆகுதல் :
 • குருமார்கள் காய்கறிகளை சிறுதுண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
 • பச்சைக் காய்கறிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடவும்.
 • நம்மை சுற்றி உள்ள வண்ணங்களை உற்று நோக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுடன் கலந்துரையாடவும்.
குழுமச்செயல்பாடு :
 • வெட்டிய காய்கறிகளை ஒன்றாகக் கலந்து ஒரு அகன்ற தட்டில் வைக்கவும்.
 • குழந்தைகளை மூவர்ணக் கொடியின் வடிவத்தில் (படத்தில் காட்டியவாறு) காய்கறிகளை எடுத்து இன்னொரு தட்டில் அடுக்கச் செய்யவும்.
 • இந்தச் செயல்பாடு குழந்தைகளிடம் கூர்ந்து கவனிக்கும் திறனை அதிகரிக்கும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களும் அவர்தம் உன்னத குணங்களும் (விளையாட்டு)

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று தேசிய விடுமுறையாகும். அன்றுதான் இந்தியா ஆங்கிலேய அரசிடமிருந்து விடுதலை பெற்றது. இந்தத் தேசிய விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில், பாலவிகாஸ் குருமார்கள், குழந்தைகளிடம் தேசபக்தி உணர்வை வளர்க்க முயற்ச்சிக்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழி, நம் தலைவர்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பதுதான்.

க்ரூப் 2 மற்றும் க்ரூப் 3 குழந்தைகளுக்காக இரண்டு செயற்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பிக்கப்படும் குணங்கள்:
 1. துணிவு, அஹிம்சை, அன்பு, சுய சிந்தனை, அன்பு உள்ளம், நேர்மை, பணிவு, கருணை, இரக்கம் மற்றும் மன உறுதி
 2. மேலும் நம் தேசத் தலைவர்கள் செய்தத் தியாகங்கள் பற்றியும் குழந்தைகள் அறிந்துகொள்ளலாம்.
 3. குழந்தைகளிடம் நாட்டுப்பற்று வளரும் மற்றும் கவனமும் ஞாபகசக்தியும் மேம்படும்
தேவையான பொருட்கள்:
 • சார்ட் பேப்பர்
 • பசை

முன்னேற்பாடுகள்:
 1. குரு செயற்பாடு ஆரம்பிக்கும் முன் குழந்தைகளுடன் கீழ்க்கண்டவற்றைக் கலந்துரையாடலாம்..
 2. மேலே கூறப்பட்டுள்ள நற்குணங்கள் ஒவ்வொன்றையும் குழந்தைகளுக்கு விவரித்துக் கூறலாம். நம் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை உதாரணம் காட்டி இந்த நற்குணங்களைத் தெளிவு படுத்தலாம்.
 3. ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர் பற்றியும் ஒரு சிறு குறிப்பு கொடுக்கலாம்.
 4. ஒவ்வொரு தலைவரின் தனிப்பட்ட நற்குணத்தை எடுத்துரைக்கலாம். உதாரணமாக, காந்திஜிக்கு, ‘ அஹிம்சை’ சொல்லலாம்.
 5. அவ்வகைக் குணங்கள் எழுதப்பட்ட சின்னச் சின்னத் துண்டுக் காகிதங்கள் தயாரிக்கவும். இது போல் 1௦ துண்டுகள் எழுதலாம்.

இப்பொழுது நாம் செயற்பாட்டிற்குத் தயாராக உள்ளோம்.

குறிப்பு: குரு, மேற்கூறப்பட்ட ஏற்பாடுகளை ஒரு வகுப்பில் செய்துகொள்ளலாம். செயற்பாட்டை அடுத்த வகுப்பில் செய்து பார்க்கலாம்.

விளையாட்டு 1: சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குவோம்!

இந்த சுவாரஸ்யமான விளையாட்டை ஓடி விளையாட அதிக இடம் வேண்டும்.

வீரர்கள் பெயர் எழுதப்பட்ட அட்டைகளை சற்று இடைவெளி விட்டு வட்ட வடிவமாகத் தரையில் பரப்பவும். இசையைத் துவக்கிவிடவும். குழந்தைகளும் சுற்றி ஓடவேண்டும். இசை நிறுத்தப்படும்போது, குரு ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து அதில் எழுதப்பட்ட நற்குணத்தைச் சத்தமாகப் படிக்கவேண்டும். உதாரணத்திற்கு, “துணிவு” என்று கூறினால், குழந்தைகள், அக்குணத்தால் அறியப்படும் தலைவரின் அட்டை வைத்துள்ள இடத்தில் சென்று நிற்கவேண்டும். இந்த உதாரணத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

சரியான இடத்தில் நிற்கும் குழந்தைகள் ஆட்டத்தில் தொடரலாம். பிறர் விலகலாம்.

ஒரு முறைப் படிக்கப்பட்டத் துண்டுக் காகிதமும், அதுத் தொடர்பான தலைவர் ஒட்டிய அட்டையும் வெளியே எடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் ஒரு அட்டையும் துண்டுக் காகிதமும் குறையும். இறுதியில் 3 குழந்தைகளே எஞ்சியிருக்கும் வரை ஆட்டத்தைத் தொடரவேண்டும்.

இந்த 3 குழந்தைகளே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

விளையாட்டு 2: ஞாபகத் திறன் சோதனை

சுதந்திரப் போராட்ட வீரர் படம் ஒட்டிய அட்டைகளை ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு அட்டை வீதம் கொடுக்கவேண்டும். குருவும் குழந்தைகளும் வட்டமாக அமரவேண்டும். குழந்தைகள் அவரவர் கையிலிருக்கும் அட்டையில் உள்ள தலைவரின் சிறப்பு குணத்தைக் கூற வேண்டும். ஒரு குழந்தைக்கு சரியாகத் தெரியவில்லை என்றால், விடை தெரிந்த குழந்தைகள் கை உயர்த்தவேண்டும். குரு யாரைக் கேட்கிறாரோ அவர் பதிலளிக்கலாம். இந்த விளையாட்டைக் குரு இடமிருந்து வலமாக விளையாடலாம்.

குருவிற்கானக் குறிப்புகள் :
 • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் : துணிவு
 • சுபாஷ் சந்திரபோஸ் முழுச் சுதந்திரம் வேண்டும் என விரும்பினார். ஜாதி, மத வேறுபாடற்ற சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. “ஜெய் ஹிந்த்” என்ற அவருடைய வீர முழக்கம் இன்றும் நம்மிடையே ஒளிக்கிறது. சுதந்திரத்திற்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த வீரர்.

 • மகாத்மா காந்திஜி : அஹிம்சை
 • காந்திஜி தீண்டாமையை எதிர்த்துப் போராடினார். அவர்களுக்கு “ஹரிஜனர்கள்” என்று பெயரிட்டார். அதன் அர்த்தம் இறைவனின் மக்கள் என்பதே. அவர் எந்த ஒரு வன்முறையையும் விரும்பவில்லை. கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் பெறப் பாடுபட்டார். அவர் எளிமையின் உருவமாக இருந்தார்.

 • ஜவஹர்லால் நேரு: அன்பு
 • இவர் சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜிக்கு உறுதுணையாக இருந்தார். நேருவிற்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களும் நேருவை அன்பாக ‘நேரு மாமா’ என்றழைத்தனர். அவருடைய பிறந்த நாளாகிய நவம்பர் 14-ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் குழந்தைகளின், கல்வி, வளர்ச்சி மற்றும் நலனுக்காக அரும்பாடு பட்டார்.

 • சர்தார் பகத் சிங் : சுய சிந்தனை
 • இவர் தன் 12-ம் வயதிலேயே, அப்பாவி மக்களின் உயிர் பறித்த ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்குச் சென்றுப் பார்வையிட்டார். இள வயதிலேயே சுதந்திரப் போராட்டம் இவர் மனதில் பதிந்தது. இவர் நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் சிறந்தவராகத் திகழ்ந்தார். அவர் மனதில் இருந்ததெல்லாம் ஒரே ஒரு குறிக்கோள்தான். அது நமது நாட்டின் சுதந்திரம். அவர் சுயமாக சிந்தித்துத் தன்னுடைய தனிப்பட்ட வழியில் நடப்பவர். அவர்தம் 23-வது வயதில் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.

 • டாக்டர் ராஜேந்திர பிரசாத் – அன்பு உள்ளம்
 • இவர் எப்பொழுதும் முதல் வகுப்பும், தங்கப் பதக்கமும் வாங்கிக் குவித்த சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார். கல்கத்தா பல்கலைகழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் அலஹாபாத் பல்கலைகழகத்தில், சட்டத்திற்கான டாக்டர் பட்டம் பெற்றார். அன்பு உள்ளம் கொண்டவர். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு, அதில் இணைந்தார்.. ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டுபவர்.

 • லால் பகதூர் சாஸ்த்ரி : நேர்மை
 • இவர், சுவாமி விவேகானந்தர், டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். பரந்த மனம் படைத்தவர் மேலும் பொது நலத் தொண்டு நிறைய செய்தவர். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற வீர முழக்கத்தை உருவாக்கினார். நேர்மையான மனிதராகவும் உண்மை பேசுபவராகவும் திகழ்ந்தார்.

 • கமலா நேரு : கருணை
 • சுதேசி இயக்கத்தில் சிறந்த பங்கு வகித்தவர். அன்னியப் பொருட்களை எரிக்கக் கோரி மக்களைத் தூண்டினார். பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறத் தூண்டினார். பண்டித ஜவஹர்லால் நேருவின் மனைவியாவார். கருணை உள்ளமுடைய இவர், காயமடைந்த சுதந்திரப் போராட்ட வீரகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தன் வீட்டிலேயே ஒரு வைத்தியசாலை அமைத்தார்.

 • கிட்டூர் ராணி சென்னம்மா: சிறந்த முன்னோடி
 • முந்தைய கர்நாடகத்தின் சுதேச அரசாக இருந்த கிட்டூரின் ராணியாக இருந்தவர் சென்னம்மா. இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரு எழுச்சிப் படையை வழி நடத்தியவர். குதிரையேற்றம், வில் வித்தை, கத்திச் சண்டை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர். எதிர்காலத் தலைமுறைப் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்கினார்.

 • சரோஜினி நாய்டு: இரக்கம்
 • இவர் ஒரு சுறுசுறுப்பான சுதந்திரப் போராட்ட வீரர். இவர் இயற்கை, நாட்டுப்பற்று, அன்பு, மேலும் பல தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளார். இந்தியாவின் கவிக்குயில் என்றழைக்கப்பட்டார். சென்னை, லண்டன் மற்றும் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். மகாத்மா காந்திஜியின் உப்பு சத்யாக்ரகத்தில் பங்கு பெற்றார். மிகவும் இறக்க குணமுடையவர், ஏழைகளின் நலனுக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடு பட்டவர்.

 • ஜான்சிராணி லட்சுமிபாய்: மன உறுதி
 • வட இந்தியாவின் ஜான்சி மாகாணத்தின் ராணியாக இருந்தார். குதிரையேற்றம், துப்பாக்கிச் சுடுதல், போன்ற வித்தைகளைப் பயின்றார். இள வயதிலேயேத் தனித்துவம் வாய்ந்தப் பெண்மணியாகத் திகழ்ந்தார். இவருடைய மன உறுதியையும் ராணுவத் திறமையையும் கண்ட ஆங்கிலேயர்கள் பயந்தனர். தனக்கென்று ஒரு தனி உடை பாவனை வைத்திருந்தார். புடவை அணிந்திருப்பார். ஆனாலும் ஒரு ஆண்மகனைப் போல் காட்சியளிப்பார். தன் வாள் இல்லாமல் அரண்மனையை விட்டுப் படியிறங்கமாட்டார்.

Tiger (Paper Plate Craft)


Activity : Paper Plate tiger
Materials required:
 1. Paper plate
 2. Orange paints
 3. Brush
 4. Black paper/chart paper for making strips
 5. Glue
 6. Eyes
Activity:
 • Keep the paper plate upside down.
 • Paint the paper plate with orange paints.
 • Make cut outs for ears, nose, mouth etc.
 • Stick the cut outs and the eyes to the coloured plate.
 • The tiger is now smiling at you!
Mango(Paper Plate Craft)


Activity : Colouring Activity

This activity can be done independently by children

Material required:
 • The colouring sheet with the mango picture
 • Crayons
Get ready:

Discuss the importance of eating fruits on a daily basis. Talk about how mango is useful as a fruit both raw and ripe. Discuss the values learnt from this fruit.
This coloring activity is very simple. Children can be told to put effort to colour within the lines and to colour neatly. Children learn patience from this activity.

இவை யாருடய கண்கள் ? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் !
பதில்
தாமரை (குழந்தை பாடல்)


பாடல்வரிகள்

தலை நிமிர்த்திடு தாமரை போல்..
நிலை உயர்த்திடு சூரியன் வரையில்
தலை நிமிர்த்திடு...
மனம் விரித்திடு மலரின் இதழென
மனமென்னும் அன்பை மற்றவர் பெற்றிட(2)
நிறைத்திடு நாட்களை அன்பும் கருணையும்
நிறைந்த பலநற் செயல்களாலே..(2)
தலை நிமிர்த்திடு தாமரை போல்..
நிலை உயர்த்திடு சூரியன் வரையில்
தலை நிமிர்த்திடு...

பாடல் மூலம் P.V.ஸ்ருதி( பாலவிகாஸ் மாணவி )

தாமரை (கதை)


கதை மூலம் P.V.சாய் அர்ஜுன் ( பாலவிகாஸ் மாணவன் )

சுதந்திர தினம் சுவரொட்டி

Baby jesus
The Louts

Lotus is a Sacred Flower and is an Auspicious Symbol in Indian Culture.It Grows in Muddy Water and Emerges As a beautiful Flower.

Value Learnt:
We too in Life Should Learn to be Steadfast and Ensure that our mind is Pure and Clean and not Influenced by impure Thoughts. the Louts Blooms When it sees the sun . Similarly we too Should Open Our Heart to God.

வழிதேடல்

உண்மையான வெற்றிக்கொடி

பாரதத்தைப் பற்றி பகவானின் வார்த்தைகள்

சற்றேறக்குறைய 2௦ வருடங்கள் முன், இதே சுதந்திர தின நாளன்று நம் சுவாமி அவருடையப் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் கடைபிடிக்கவேண்டியக் கொள்கைகளையும் லட்சியங்களையும் பற்றி அந்த இளம் மனதில் தெளிவாகப் பதியவைத்தார். சுதந்திரம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்றும் அவர்களுக்குத் தெளிவு படுத்தினார். ஆகஸ்ட் 15, 1985 அன்று பகவான் மனம் திறந்து அருளிய உரையிலிருந்து சில பகுதிகள் இங்கே உங்களுக்காக:சுதந்திரம் மற்றும் சுயராஜ்யத்தின் பொருள்:

இன்று நாம் கொண்டாடும் சுதந்திரம் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 –ம் நாள் நள்ளிரவில் நமக்குக் கிடைத்தது. ‘ சுதந்திரம் ‘ என்னும் சொல்லின் பொருள் என்ன?. 

நாம் இனிமேல் எவரையும் சார்ந்து இல்லை என்று பொருள். நாம் நம்மை மட்டுமே நம்பி இருக்கிறோம். ‘சு’ ‘தந்திரம்’ என்றால் ‘நம் தந்திரம்’ என்று பொருள். தந்திரம் என்ற சொல் ‘ ஆத்மா’ வைக் குறிக்கிறது. ஆகையால், சுதந்திரம் என்பது ஆத்மாவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும் சுதந்திரம் எனப் பொருள் படும்.

ஒருவன் எப்பொழுதும் தன் இதயத்தைப் பின்பற்றவேண்டும். அது ஒன்றுதான் நம் குரு மற்றும் கடவுள். வேறு எவரையும் நம்பி இருக்க வேண்டாம். ஒருவன் தாமே தமக்கு முழு அதிபதியாக இருக்கும் நிலையே சுயராஜ்யம். சுயராஜ்யம் என்னும் சொல் பொதுவாக உலகியல் சார்பு இல்லாமல் இருக்கும் ஒரு தனிப்பட்ட நிலை என்றுதான் பொருள்படும். மாயையில் சிக்கவைக்கும் இந்தப் புலன்களின் பிணைப்பிலிருந்து விடுபட்டால்தான் ஒருவனால் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கமுடியும். புலனடக்கம், பரந்த அன்பு, மற்றும் உள்ளத் தூய்மை ஆகியவற்றை உள்ளடக்கிய யோக நிலையை அடைவதுதான் உண்மையான லட்சியமாக இருக்கவேண்டும். இந்த நிலை அடைந்தால்தான், அந்த இறைவனின் புகழ் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒளிரும்.

உண்மையான வெற்றிக்கொடி

தாய்நாட்டுப் பற்று நல்லதே. ஆனால், அதுவே பிற நாடுகளின் மேல் வெறுப்பை உண்டாக்கக்கூடாது. உன்னுடையப் பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும் என்றால், “ எங்கும் எல்லோரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கவேண்டும்” என்றுதான் அமையவேண்டும். ஏனெனில், இந்த உலகம் அமைதியாகவும் செழிப்பாகவும் இருந்தால்தான், இந்தியாவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கமுடியும்... உன்னுடைய நிம்மதியும் சந்தோஷமும் உலக அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. உன்னுடைய ஏதாவது ஒரு செயல் வன்முறை அல்லது வெறுப்புடன் இருக்குமேயானால், அது இந்த உலகச் சூழ்நிலையையே மாசுப்படுத்தும். நீ எந்த ஒரு உயிரினத்தை வணங்கினாயானாலும், அந்த வணக்கம் இறைவனைச் சென்றடையும். ஏனெனில் அவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அதேபோல், நீ ஏதாவது ஒரு உயிரினத்தைத் துன்புறுத்தினாலும், அதுவும் இறைவனைச் சென்றடையும். அதனால், எங்கும் எல்லோரிடம்மும் அன்பு காட்டு.கொடி, வெற்றியின் அடையாளம் மேலும் சுதந்திரத்தின் களிப்பு. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கொடி உண்டு. மற்றவர்களுடைய பாராட்டத்தக்க வெற்றியைக் குறிக்கும் சின்னமாகிய கொடியிலும் நீ கவனம் செலுத்தவேண்டும். இது ஒருவருடைய உள்ளுணர்வு, உணர்ச்சி, மனக் கிளர்ச்சி மற்றும் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது. இந்தக் கொடிதான் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பறக்க விட வேண்டிய கொடி. இந்த வெற்றியை அடைந்துவிட்டால், நீங்கள் பாரதக் கலாச்சாரத்தின் உண்மையான வாரிசாகிவிடுவீர்கள்.

- 1985 , ஆகஸ்ட் 15 அன்று பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தில் சுதந்திர தினத்தன்று பகவான் அருளிய அருளுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.