ஈஸ்டர் - நிகழ்வுகள்

நாம் வாழ்ந்து இறக்கிறோம், கிறிஸ்து மரித்து வாழ்கிறார்

நம்மில் பலரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் நம்மிடையே மனிதனாகவும் கடவுளாகவும் வாழ்ந்தவர். இவர் ஜோசப் மற்றும் மேரி தம்பதியினருக்கு மகனாக, பெத்லஹெம் என்னும் நகரில் பிறந்தவர். “இயேசு கிறிஸ்து” என்பது ஹீப்ரு மொழிச்சொல்லாகும். இயேசு என்பதன் பொருள் பாவங்களில் இருந்து காப்பவர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்றும் பொருள் ஆகும். ஈஸ்டரில் நிகழ்ந்தவைகளை வைத்து அவருக்கு ஏன் இந்தத் தலைப்புக் கொடுக்கிறோம் என்பதை விளக்குகிறது.

நாம் நம்மைப் பார்க்கும்பொழுது, அடிக்கடிப் பாவச் செயலைச் செய்வதற்குத் தள்ளப்படுகிறோம் என்பது தெரிய வருகிறது. ஆனால், கடவுள் தன் மகனை, நல்ல மனிதனாக வாழ்வது எப்படி, நல்ல மற்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும், கடவுளின் அன்பைப் பெறுவதற்கானச் சட்டத் திட்டங்களைப் பின்பற்றுவது எப்படி என்றும், ஒருவரை ஒருவர் நேசிப்பது எப்படி என்பதைப் பற்றியும் நமக்குக் கற்றுத் தர உலகிற்கு அனுப்பி வைத்தார். இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்து, ஒவ்வொருவரின் உணர்வுகளையும், கஷ்டத்தினையும் அனுபவித்துப் புரிந்துக் கொண்டார். அவர் நம் உணர்வுகள் மற்றும் கஷ்டங்களைக் கடவுளுக்குப் பிடித்த வழியில் கையாள்வது எப்படி என்றும், இறைவனுக்குப் பிடிக்காத செயல்களில் இருந்து விலகி இருப்பது எப்படி என்று நமக்கு நடந்து காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து முதல் முப்பது ஆண்டுகள் இஸ்ரேலில் ரோமானிய சர்வாதிகாரர்களுக்குக் கட்டுப்பட்டு சராசரி யூதர்களின் வாழ்வைப் போலவே வாழ்ந்து வந்தார். அவர், தனது முப்பது வயதிற்குப் பின் மக்களுக்குப் போதனைகளையும், பொது நலத் தொண்டையும் துவங்கினார். அவர் பெத்லஹேமிலேயே இருந்தாலும் அவரது புகழ் இஸ்ரேல் முழுவதும் பரவத் துவங்கியது.இவரது புகழையும், வளர்ச்சியையும் கண்ட யூதத்தலைவர்களும், ரோமானியப் பேரரசர்களும் இவரது முக்கியப் பிரச்சாரச் செய்தியைக் கண்டு கலங்கினர். அவர்கள் வகுத்துள்ளக் கோட்பாடுகள் மற்றும் சட்டங்களுக்குப் புறம்பாக இருப்பதைக் கண்டு அச்சம் கொண்டனர்.

இயேசுவிடம் அவருக்கு எவ்வாறு இத்தகைய அற்புதங்கள் செய்யும் ஆற்றல் வந்தது என்ற வினாவிற்கு தனது தூய தந்தையாகிய தேவனின் அருளால் வந்தது எனவும் தனது ஆற்றலினால் அல்ல என்றும் கூறினார். மேலும் அவரது போதனைகள் இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், மாறாக, தான் கொல்லப்பட்டால், தனது தூய தந்தையாகிய தேவன் மூன்றாம் நாள் தன்னை உயிர்ப்பிப்பார் என்றும் கூறினார். தான் தேவனின் மகன் என்ற வாசகமே அங்கு பெரும் சர்ச்சையாகக் கிளம்பியது. அவருடைய சீடர்களுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை. அதற்கு மாறாக, அவர் ரோமாபுரி மற்றும் யூதர்களின் சட்டத்திற்கு மீறி நடப்பதாக குற்றம் சாட்டினர். இந்தக் காரணத்திற்காக, அவருக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மத போதகர்கள் ரோமாபுரி அரசரிடம் முறையிட்டனர்.

இருப்பினும் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் அவர் எந்தச் சட்டங்களையும் மீறவில்லை மற்றும் அவர் குற்றமற்றவர் என்றும், அவர் ஒரு அப்பாவி மனிதர் என்றும் நிருபணமாயிற்று. இருப்பினும் அவரது புகழைக் கண்டு பயந்த போண்டிஸ்ப்லட் என்ற ரோமன் ஆளுநரைக் கொண்டு அவருக்கு மரண தண்டனை வழங்க சம்மதித்தனர். இதுவே நாம் ஒரு வாரம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வழி வகுத்தது.(ஜான் 17-20)

ஈஸ்டர் வாரம் என்பது ஈஸ்டர் வருவதற்கு முன்பான குருத்து ஓலை ஞாயிறு முதல் ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை வரை ஆகும். இந்த வாரத்தில் மூன்று முக்கிய தினங்கள் உள்ளன. குருத்து ஓலை ஞாயிறு அன்று இயேசுநாதர் அரசரைப் போல் வீதி முழுவதும் குருத்தோலையைப் பரப்பி மக்கள் ஊர்வலமாகக் கூட்டிச் செல்வர். மாண்டி வியாழன் அன்று இயேசுநாதர் தாம் கொல்லப்பட இருக்கிறார் என்பதை அறிந்து சீடர்களுடன் கடைசி இரவு உணவு உட்கொண்ட தினம். அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். புனித வெள்ளி அன்று அவரது கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட மரச்சிலுவையில் இறக்கும்வரை தொங்கவிடப்பட்ட நாள். மூன்றாம் நாள் இறப்பில் இருந்து உயிர் பெற்ற நாள் ஈஸ்டர் ஞாயிறு.

இயேசு கடைசி இரவு உணவு உட்கொள்ளும் பொழுது தமது இறுதி நேரம் நெருங்குவதை நன்கு உணர்ந்தார். அதனால் கலக்கமும், அச்சமும் கொண்டு அருகில் இருந்த கெத்சமனே என்ற நந்தவனத்தில் பிரார்த்தனை செய்யச் சென்றார். நாம் இயேசு கடவுள் என்றால் அவர் ஏன் அச்சமுற வேண்டுமென யோசிக்கலாம் இயேசு மனிதனாக வாழ்ந்து மனிதனின் உணர்வுகள் ஒவ்வொன்றையும் தான் அனுபவித்தவர். அவர் வேதனை, அச்சம் என்பது எல்லோருக்கும் இயல்பே என்று விளக்குகிறார். இவ்வளவு சவால்களுக்கிடையே அவர் எவ்வாறு இறைவனிடம் பிரார்த்தித்தார் என்பதில் தான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.உள்ளது. அவர் இறைவனிடம் வேண்டுவது போல் அதை நிறுத்தச் சொல்லி வேண்டவில்லை. அதை எளிதாக்கவும் வேண்டவில்லை. மேலும் மிக நல்லவர், நல்லது மட்டுமே செய்தவர். அதனால் தமக்கு இந்த இன்னல் கூடாது என்றும் வேண்டவில்லை. மாறாக இறைவனிடம் இன்னல்களைத் தாங்கும் பலத்தை வேண்டினார். மேலும் அவர் கூறியது “இது உங்கள் சித்தம் எனது அல்ல”.

அவர் பிரார்த்தனை செய்யும் பொழுது ஜூடாஸ் என்ற சீடன் கூட்டத்துடன் வந்தான். இயேசுநாதர் அருகில் சென்று அவரது கன்னத்தில் முத்தம் இட்டான். இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக அவ்வாறு செய்தான். இதைச் செய்வதற்கு ஜூடாசிற்கு வெள்ளிக் காசுகள் கொடுக்கப்பட்டிருந்தன. கூட்டம் இயேசுவைக் கைது செய்தது. அவரது சீடர்கள் ஓடி ஒளிந்துக் கொண்டனர். இயேசுவை யூதர்களின் மதத் தலைவர்கள் அரசரின் முன்பு நிறுத்தி இறைவனின் மகன் என்று கூறியக் குற்றத்திற்காகத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினர்.

அடுத்த நாள் புனித வெள்ளி. இயேசுவை போண்டிஸ்பிளாட்டிடம் அழைத்துச் சென்று இயேசு இறக்க வேண்டும் என்று கூறினர். அதற்குப் பிளாட் ஒத்துக் கொண்டதன் பெயரில், வீரர்கள் இயேசுவிடம் கனமான ஒரு சிலுவையைக் கொடுத்துத் தூக்கச் சொல்லி மிகவும் மோசமான குற்றவாளிகளைச் சிலுவையில் அறையும் கோல்கோத் என்னும் மலையின் உச்சிக்குக் கொண்டுச் சென்றனர். இயேசுவை சிலுவையில் அறைந்தப் பொழுது அவரதுக் கால்களில் அறையப்பட்டிருந்த ஆணிகள் அவரது உடலைக் கீழே இழுத்தது. அதனால் அவருடைய நுரையீரலுக்குச் செல்ல வேண்டியக் காற்றுத் தடுக்கப்பட்டது. அடுத்த மூன்று மணி நேரத்தில் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரைச் சிலுவையில் இருந்து இறக்கிக் கல்லறையில் புதைத்தனர். பிளாட் இரண்டு ரோமானியா வீரர்களைக் காவலுக்கு அமர்த்தி யாரும் இயேசுவின் உடலைத் திருடிவிடக் கூடாது என்று ஒரு பெரியக் கல்லைக் கல்லறையின் வாயிலில் வைத்து அடைத்து விட்டார். இயேசுவின் நண்பர்கள் மிகவும் கவலையுற்றுத் திரும்பினர். ஏனெனில் அடுத்து என்ன நடக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் சில நண்பர்கள் யூதர்கள் முறைப்படி இயேசுவின் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டி கல்லறைக்குச் சென்றனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக, அவரது கல்லறை மீது வைக்கப்பட்டிருந்த கல் நகர்ந்து இருந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தக் காவலாளிகளைக் காணவில்லை. அவரது உடலும் அங்கு இல்லை. அவர்களால் தாங்கள் காணும் காட்சியை நம்ப முடியவில்லை. அந்தக் கல்லறையை உற்று நோக்கிச் செய்வதறியாது நின்றனர். அப்பொழுது அங்கு ஒரு தேவதை தோன்றி இயேசுநாதர் இறப்பிலிருந்து எழுந்து விட்டதாகக் கூறினார். அப்பொழுது இயேசுநாதர் தாம் கொல்லப்பட்டால், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவது பற்றி முன்னமே தமக்கு உரைத்தத்தை நினைவுக் கூர்ந்தனர். இது அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. காரணம் அவர்கள் முதல் முறையாக இயேசுநாதர் தாம் யார் என்றுக் கூறியதை ஏற்றுக் கொண்டனர். அவர் இறைவனின் மகனே அன்றி ஒரு சாதாரண யூத மத குரு அல்ல என்று புரிந்துக் கொண்டனர்.

அவர்கள் ஊருக்குள் ஓடிச் சென்று தங்கள் கண்டக் காட்சியைக் கூற விழைந்தனர். வழியில் இயேசுநாதரை நேரில் அடையாளம் கண்டும் அவர்களால் அவர் பேசும் வரையில் அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. இயேசு நாதர் தமது சீடர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுவர்களால் தாம் உயிர்த்தெழுவதைப் பற்றி புரிந்துக் கொள்ள முடியாது என்று நன்கு அறிந்திருந்தார். அதற்குக் காரணம் அவர்கள், ரோம வீரர்கள் தன்னைக் கைது செய்துச் சிலுவையில் அறையும் பொழுது பயந்து ஓடி விட்டனர். இயேசுநாதர் அவர்களுக்குத் தாம் காணும் காட்சி மற்றும் சிலுவையில் அறையப்பட்ட அதே இயேசுநாதர் தான் திரும்பி வந்துள்ளார் என்ற உண்மையை விளக்க வேண்டிப் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்திக் காண்பித்தார். அவர்களோடு நடந்தார், உணவு உட்கொண்டார், கைகள் மற்றும் கால்களில் உள்ள வடுக்களைக் காண்பித்தார். தாமஸ் என்ற சீடர் நம்ப மறுத்ததால், அவரை அந்தப் புண்களைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தார்.

இயேசுநாதர் உயிர் பெற்றுத் திரும்பி வந்த மகிழ்ச்சியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நற்செய்தியை ஊருக்குள் சென்றுப் பரப்பினர். இம்முறை அவர்களுக்கு ரோம ஆட்சியாளர்கள் பற்றி பயம் எதுவும் தோன்றவில்லை. அவர்கள் மாட்டுக் கொட்டகையில் பிறந்து அந்த சிறுவனாக இருந்துத் தம்மோடு வளர்ந்தவன் தெய்வீக குணம் கொண்டவன் என்று அறிந்திருந்தனர். இறுதியாக அவர்கள் கடவுளேத் தமது பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்துபவர். மேலும், அவர்கள் இயேசுநாதரை இறைவனின் மகனாக ஏற்றுக்கொண்டு, அவர் மட்டுமே வணங்கத் தகுதியானவர் என்றுப் புரிந்துக் கொண்டனர்.

இந்த அதிசய நிகழ்வின் சாராம்சம் என்ன? இது நமது வாழ்க்கையில் வாழ்வது, வேலைப் பார்ப்பது மற்றும் வணங்குவதைப் பற்றி என்னப் போதிக்கிறது? ஈஸ்டர் திருநாள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் சில பாடங்கள்.

 • 1. நமது வாழ்வில் கஷ்டங்கள் இருந்தே தீரும். நாம் தீர்மானித்தவை நிகழாமல் போகலாம். நமது திட்டம் வெற்றி அடையாமல் போகலாம். நாம் வேண்டுவது நமக்குக் கிடைக்காமல் போகலாம். நமது உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.இதுப் போன்ற இக்கட்டான நேரங்களில் நாம் இறைவன் எல்லாம் வல்லவன் என்றும் நம்மை அவரை விட வேறு யாராலும் அதிகமாக நேசிக்க இயலாது என்றும் நம்மை இந்தக் கஷ்டங்களில் இருந்து விடுபெற நாம் வேண்டினால் அவர் நம்மை விடுவிப்பார் என்றும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
 • 2. ஈஸ்டர் நாம் மன்னிக்கும் குணத்தைப் பெற வேண்டும் என்ற பாடத்தைப் புகட்டுகின்றது. இயேசுவின் மரணத்தில் கடவுள் நமது பாவங்களை மன்னித்து அருளினார். நாம் இறைவனிடம் மன்னிப்பைப் பெறும் பொழுது நாமும் மற்றவர் மீது கோபம் மற்றும் வெறுப்பை மறந்து மன்னிக்க வேண்டும். சிலுவையில் இருக்கும் பொழுதும் தம்மைக் குற்றம் சாற்றியவர்களுக்காக இயேசுநாதர் “தந்தையே இவர்களை மன்னியும், இவர்கள் தாம் செய்தவறியார்” என்று மன்றாடினார்.
 • 3. உங்களை உங்கள் நண்பர்கள் கைவிடும்பொழுது, “முப்பது வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவரையும் இழிவாக எண்ணாதீர்கள். இயேசுநாதர் தமது சீடர்களை விடப் பல மடங்குகள் ஞானமுற்றவராக இருப்பினும் அவர்களுக்குத் தேடிச் சென்று தொண்டு செய்தார். எந்த ஒருப் பிரச்சினையும் அவரால் தீர்க்க முடியாதது அல்ல. இருப்பினும், பல மைல் தூரம் நடந்தே சென்று தொண்டு செய்தார். தாம் செய்யும் உதவிக்கு யாராலும் கைம்மாறு செய்ய முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் அவர்களைத் தேடிச் சென்று உதவிப் புரிந்தார். எளிய வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளவைக்காக நன்றியுடன் இருங்கள். இறைவன் உங்களுக்காக உங்கள் வாழ்க்கையை மற்றும் அதில் நடப்பவை எல்லாவற்றையும் தீர்மானித்து இருக்கிறார். நீங்கள் பயணிக்கின்ற வழிகளை அவரது விருப்பம் என்று மனதில் கொண்டால் எல்லா நேரமும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும். மற்றவர்களுடைய வாழ்க்கை உங்களை விட மேன்மையானதாக இருக்கும். ஆனால் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கையே உங்களுக்குச் சிறந்ததாகும்.
 • 4. எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனை உங்களது உள்ளிருக்கும் சக்தியாகும். அது உங்களைக் கடவுளுக்கு அருகாமையில் வைத்திருப்பதாகும். அவர் அருகில் இருக்கும்பொழுது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எந்தக் கெடுதலும் உங்கள் அருகில் வர வாய்ப்பில்லை. அப்படி இருக்க ஈஸ்டர் முட்டை, ஈஸ்டர் முயல் மற்றும் இனிப்புகள் எங்கே பொருந்தும்? இவை யாவும் வெளிப்புறக் கொண்டாட்டாங்களே ஆகும்.

இவை யாவும் மக்கள் தமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றதென்று பிரபலமாக்கப்பட்டு பின்பற்றி வரும் முறை ஆகும். முதலில் தேவாலயத்தில் உள்ள பாதிரியார்கள் மக்களை, ஈஸ்டர் புனித வாரத்தில் முட்டையை உண்ண அனுமதிக்கவில்லை. குடும்பத்தார்கள் அந்த வாரத்தில் இடப்பட்ட முட்டைகளைச் சேமித்து, அதை அவித்து, அவர்களதுக் குழந்தைகளுக்கு ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை காலை உண்ணக் கொடுத்தனர். பின்னர் மக்கள் முட்டையை அட்டையிலும், காகிதக் கூழிலும் உண்டாக்கினார்கள் அதில் பரிசுப்பொருட்களை நிரப்பி குழந்தைகளைக் கொண்டு வண்ணம் பூசி அதை மற்ற நண்பர்களுக்குப் பரிசளித்து மகிழ்ந்தனர். மக்கள் முட்டையைப் புது வாழ்வின் துவக்கமாகக் கண்டனர். அதனால் ஈஸ்டரில் புதிய வாழ்வின் துவக்கத்தின் அடையாளமாக முட்டைப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இனிப்புச் செய்தல், மாரசிப்பான் (மாவால் செய்யப்படும் ஒரு வகைப் திண்பண்டம்). அல்லது சர்க்கரை வைத்து ஐசிங் செய்த முட்டை மற்றும் வேறு சில வழிகளில் அவித்த முட்டைக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறது. . முட்டைகளைப் பூங்காக்களில் மறைத்து வைத்து குழந்தைகளை முட்டையைக் கண்டுப் பிடித்தல் என்ற விளையாட்டு நடத்தப்படுகிறது. பூங்காக்களில் உள்ள முட்டைகளை ஈஸ்டர் தினத்தின் காலைத் தேடி எடுக்கச் சொல்லுவார்கள்.

முட்டை உருட்டுதல் என்பது இறுகிய முட்டை உருட்டுவதாகும். இது இயேசுவின் கல்லறை மீது வைக்கப்பட்டிருந்த கல்லை உருட்டுவதை உவமானப்படுத்த வேண்டிச் செய்யப்படும் சடங்கு ஆகும். அமெரிக்க நாட்டில் முட்டை உருட்டும் வருடாந்திர திருவிழாவில் வெள்ளை மாளிகையில் உள்ள தெற்கு பூங்கா பொதுமக்களுக்கு ஈஸ்டர் முடிந்த திங்கள் கிழமைத் திறந்து விடப்படும. இந்த தினத்திற்கான நுழைவுச் சீட்டுகள் மக்களுக்கு குலுக்கல் முறையில் கொடுக்கப்படும். இந்த தினத்தை மக்கள் நாட்டின் குடியரசுத் தலைவருடனும் அவரது மனைவியுடனும் கொண்டடுவார்கள். ஈஸ்டர் முயல்களின் கதை ஜெர்மனியில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. முயல்கள் ஒவ்வொரு முறைக் குட்டிகள் ஈன்றெடுக்கும் பொழுதும் பலக் குட்டிகளை இடும். இது வாழ்வின் துவக்கத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.


புராணங்களில் கூறப்பட்டுள்ள கதைகளில் ஈஸ்டர் முயல்கள் முட்டைகளை அலங்கரித்து ஒளித்து வைத்து விடும் என்றும் பிறகு ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை அன்று கண்டெடுக்கும். இந்தப் பணியை முயல்கள் தனியாகச் செய்வதில்லை. ஸ்விட்சர்லாந்தில் முட்டைகளை ஈஸ்டர் குயில்கள் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஈஸ்டர் பீப்லி என்ற ஒரு வகை சிறிய எலி கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் பொருளையும் அதுக் கொண்டாடப்படும் விதங்களையும் இப்பொழுது நமது வசதிக்கேற்ப மாறுபடுவதைக் காணலாம். நமக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்க்கிறோம். அதுக் காலப்போக்கில் அழிந்து விடுகிறது. இவைகளில் எல்லாம் என்றும் மாறாமல் இன்றும் உள்ளது இயேசுநாதரின் உயிர்த்தெழுதலே. இதுவே புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. யூதர்கள் மற்றும் ரோமானியர்களின் வரலாற்றில் இயேசுநாதர் பிறந்த இடம், இறந்த இடம், வாழ்ந்த இடம், உயிர்த்தெழுந்த இடம் என்று எல்லாவற்றையும் ஜெருசலெத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக மாற்றம் இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது தற்கால நிலையை உணரச் செய்கிறது. காரணம் எதிர்காலம் கடவுளுக்குச் சொந்தமானதாகும்.

எல்லோருக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.

Swami’s various quotes on Jesus and The Easter

1. Try to be like Jesus. Jesus was a person whose only joy was in spreading Divine love, offering Divine love, receiving Divine love and living on Divine love. Jesus was a supremely pure and sacred person. ( 25 December 1979)

2. Jesus was to shatter the darkness that had enveloped the world… to spread the light of love in the heart of man and councils of humanity. (24 December 1972)

3. Jesus was the epitome of compassion and the refuge of the poor, needy and forlorn. But, many people tried to create troubles for Jesus, since they did not like his sacred teachings and activities. Their hatred for Jesus increased day by day. Even the priests turned against Jesus as they became jealous of his growing popularity. Many people out of jealousy laid obstacles in his path and even tried to kill him. (25 December 2000)

4. Christ sacrificed his life for the sake of those who put their faith in him. He propagated the truth that service is God, that sacrifice is God. Even if you falter in the adoration of God, do not falter in the service of the living God. Be ready to sacrifice even your life for the sake of God. The spirit of sacrifice is essential. To speak about devotion without a spirit of sacrifice is meaningless. If the name of Jesus is glorified all over the world today, it is because of his boundless love. He served the lowly and the lost, and in the end, he offered his life itself as a sacrifice .( 25 December: 1970, 1998, 1993)

5. Jesus’ critics complained to the head priest against him. They tempted one of his disciples with 30 silver pieces, to betray him into their hands. The disciple who was most loved, Judas by name, decided to work against the Master, yielding to the low temptation of a few pieces of silver. Greed for money is a demon that gets hold of the weak. Jesus’ critics told the Roman ruler that Jesus was attempting to assert himself as king and so he should be punished for treason. The priest knew that Jesus was speaking the truth, but he did not support him in order to safeguard his own position. Their insistences made the Governor order his crucifixion. (25 December 1978, 23 November 1979, 25 December 2001)

6. Jesus wished well for those who insulted and injured him. He knew that God wills all. So, even on the cross he bore no ill-will towards any one and he exhorted those with him to treat all as instruments of God’s Will. (25 December 1982)

இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் முக்கியத்துவம்

இயேசுவும், ஜூதர்களும் :

பழங்கால சிந்தனையும், செருக்கு நிறைந்த மனிதர்களும் இயேசு ஒரு பொய்யான போதகர் எனக் கருதி அவரது இயக்கத்தை தடங்கல் செய்வதற்கான அனைத்து வழிகளையும் முயன்றனர். ஏதாகினும் இயேசு கலங்கவில்லை. எதிர்ப்பினை எதிர் கொண்டபடி வாழ்கின்ற உண்மையின் எடுத்துக்காட்டாகவும் சமுதாயத்தை தூய்மைப்படுத்தும்படியும் தன் பணியினை மேற்கொண்டார். பல சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினர். ஆனால் வரலாறு முழுவதும் இராமா, கிருஷ்ணா, இயேசு, முகம்மது ஆகியவர்களது அனுபவத்தில் சீடர்கள் எத்தகு அருகாமையில் இருந்தாலும் அரிதாகவே அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்து வந்தனர். பெரும்பான்மையினர் பகுதி நேர சீடர்களே. இயேசுவிற்கு 12 சீடர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் அவரிடம் நம்பிக்கைக் கொண்டு அவரது உபதேசங்களின்படி வாழ்ந்தனர். ஆனால் ஜூடாஸ் பேராசைக்கு இடம் அளித்து வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக தனது தலைவனையே காட்டிக் கொடுத்து விட்டான். இந்த வஞ்சகச் செயலுக்குப் பின்னர் அவனால் மகிழ்ச்சியுடன் வாழ இயலவில்லை. அவனது மனம் அவனுக்கு அமைதியினை அளித்திடவில்லை. அவன் தற்கொலைக்கே அடைக்கலாமானான்.

போற்றுவது போல நடித்துக் காட்டிக் கொடுக்கின்ற மக்களின் செயல் காலம் காலமாக நடந்து வருகின்றன. கலங்கமற்ற பேராசை மற்றும் சுயநலமிக்க மக்கள் தங்களுடைய எஜமானர்கள் பற்றியே பொய்யான தகவல்களைப் பரப்புகின்றன. 2000 வருடங்கள் முன்பு ஜூடாஸ் பற்றி நாம் கேட்கிறோம். ஆனால், கலியுகத்தில் மக்கள் செல்வத்தின் மீது வெறிக கொண்டுள்ள சீடர்கள் பெருகி விட்டனர். அவர்கள் அற்பமான வளங்களைத் திரட்டுவதில் ஈடுபடுகின்றனர். நல்லொழுக்கம், நன்னடத்தை மற்றும் இறைவனைப் பற்றிய அறிவு ஆகியன சேர்க்க வேண்டிய மூன்றுப் புதையல்களாகும். நிலம், வீடு, வெள்ளி, தங்கம், ரூபாய் நோட்டுக்கள் இதர நாட்டு வெள்ளிகள் ஆகியன நிலையற்றதும், தற்காலிகமானதும் ஆகும். அவை வாழ்வு நிலைத்துள்ள மட்டுமே உள்ள உடைமைகள். ஆனால் அந்த மூன்றுப் புதையல்களும் என்றும் நிலைத்திருக்கும். அவை உங்களை ஆதரித்து, வலுப்படுத்தி, எல்லையற்றத் தன்மையுடன் நீங்கள் கலந்திடும் வரையில் உங்களைக் காத்திடும்.

“இயேசுவின் வழி”, ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு XIV 25.12.1979 பிரசாந்தி நிலையம்

எதிர்விளைவுகளின் இயல்பில் உள்ள மாற்றங்களும் அணுகுமுறை வகைகளும் கணத்தின் விருப்பம் ஆசையின் திருப்பங்களும், முறுக்கங்களும் மற்றும் சூழல் ஏற்படுத்தும் விசை, அந்தப் பிரதேசம் மற்றும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாற்றம் பெறும்.

ஜூடாஸ் எனும் பெயர் கொண்ட மிகவும் நேசிக்கப்பட்ட சீடன் எஜமானனுக்கு எதிராகப்பணி செய்திட தீர்மானித்து, சில வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்து விட்டான். செல்வம் மீது கொண்டப் பேராசையே பலவீனமானவர்களைப் பிடித்துள்ள அரக்கனாகும். ஒருவர் அதனைப் பெற்று விட்டால், பாகுபடுத்தும் தன்மைக்கான தாக்கங்கள் அனைத்தையும் இழந்து, எளிதாக அதனை நிறைவேற்றுவதற்கான தவறான வகைகளை ஏற்றுக் கொள்வான்.

நான் வந்துள்ள காரணத்திற்கான பணியின் வெற்றி வெகு விரைவில் உலகம் முழுவதும் வியாபிக்கும். அந்த ஒன்றின் பல முகங்களே அனைத்து மதங்களும் எனும் நம்பிக்கையும் அனைத்துப் பாதைகளும் ஒரே இலக்கிற்கே கொண்டுச் செல்கின்றன எனும் உண்மையும் சில மக்களுக்குத் தெரிய வருகின்றது. இயேசுவின் நாடகத்தில், அவர் எங்ஙனம் நன்மையின் அடிப்படை உண்மைகளை வலியுறுத்துகிறார் என்பதனையும் எங்ஙனம் இறைத்தன்மை மிக்க வாழ்வு மதங்களின் தலைவர்களாலும் கூடத் தவறாக எடுத்துரைக்கப்படுகிறது என்பதனையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் தங்களுடைய சுயமானத் தோல்விகளைப் பழிச்சொல் மற்றும் பொய்யால் மறைக்கப் பார்க்கின்றனர். அவர்கள் இயேசுவைத் துன்புறுத்தவும் கூடத் திட்டங்கள் தீட்டினர். இயேசுவின் அனைத்துச் செயல்களும் தூயதாகவும், புனிதமாகவும் தன்னலமற்ற அன்பினால் நிரம்பியும் திகழ்ந்தன. ஒருவர் தனது மதத்தின் மீது பற்றுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அது மற்ற மதத்தின் மீதான வெறுப்பாக வெளிப்படுதல் கூடாது. மாறாக தெய்வீக அன்பின் புனிதமான, ஆதரிக்கும் ஓடையினை ருசித்தபடி இருங்கள். அதுவே, நிலையான ஆனந்தத்தை வழங்கிடும்.

“மேற்கொள்ளும் பணி” ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு XIV 23.11.1979 பிரசாந்தி நிலையம்

சிலுவையில் இயேசு :

ஜீசஸ் சிலுவையில் அறையப்படும்போது அவர் கடவுளிடம் கதறினார். “ஓ! கடவுளே! என்னை ஏன் இவ்வாறுத் தண்டிக்கிறீர்கள்?” உடனே அவர் உண்மையை உணர்ந்துக் கூறினார். “இறைவா உனது சங்கல்பம் எதுவோ அதுவே நிறைவேறட்டும். நீதான் என்னை உருவாக்கினாய்! என்னைப் பாதுகாத்தாய்! உனது சங்கல்பத்துக்கு எதிராக நான் எதுவும் செய்ய மாட்டேன். உன்னைத் தூற்றுதல் எவ்வகையிலும் தவறு!” இந்தத் தவறை உணர்ந்து ஜீசசைப் பார்த்து ஒரு வான்வெளிச் செய்தி வந்தது. “எல்லோரும் ஒரே மாதிரியானவர்களே, என் மாதிரியானவர்களே, என் மகனே! அனைவரையும் சமமாக நேசித்து நடந்து கொள்”.

உனது தவறை உணர்ந்ததும், தெய்வீகம் தானாக வெளிப்படுகிறது. ஆனால் மனிதன் தனது தவறுகளைப் புரிந்துக் கொள்வதில்லை. அதற்குப் பதில் அடுத்தவரிடம் இருக்கும் தவறுகளைக் கண்டுப்பிடிக்க மிக முயற்சி செய்கிறான். மற்றவர்களது தவறைப் பற்றிக் கவலைப்படாதே. உனது தவறுகளைத் தேடிக் கண்டுப்பிடித்து அவற்றைப் போக்க முயற்சி செய். அப்போது தான் உனது வாழ்க்கைப் புனிதமானதாகும்.

“கடவுளிடம் உறுதியான நம்பிக்கையை வளர்த்துக்கொள்”- ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு 31 1.1௦.1998 பிரசாந்தி நிலையம்

ஆனால் உண்மையானப் பொருளில் ஞானி என்பவர் யார்? “நான் உடலல்ல, நான் மனதல்ல, உண்மையில் நான் இறைவனே” என்பதனை உணர்ந்த மனிதன் மட்டுமே ஞானி. “இது என் உடலல்ல” என நீங்கள் கூறினால், நீங்கள் யார்? நீங்கள் யாரைக் குறிக்கிறீர்கள்? “எனது உடல்” எனும் குறிப்பு நீங்கள் உடலிலிருந்து வேறானவர் என்பதனைக் குறிக்கிறது. “இது என் மனம் “ என நீங்கள் கூறும்பொழுது, மனம் உங்களிடமிருந்து வேறாகி விடுகிறது. அது போன்று “இது என் புத்தி (அறிவு)” என நீங்கள் கூறும்பொழுது, புத்தி உங்களிடமிருந்து வேறானது என்று பொருளாகிறது. இந்த வெளிப்பாடுகள் அனைத்திலும், ‘எனது’ என்பது என்ன? ‘எனது’ என்பதுதான் நான். இந்த ‘ நான்’ என்பதுதான் ஏசுவால் செருக்கு எனக் குறிப்பிடப்பட்டது. அது கழிக்கப்படவேண்டும். அதுவே சிலுவையின் உண்மையான முக்கியத்துவம். நீங்கள் செருக்கினை அழித்துவிடுங்கள்.

“புனித இருதய பீடத்தில் கடவுளை நிர்மாணி” - ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு 42 25.12.2009 பிரசாந்தி நிலையம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அன்னை மேரியால், அந்தக் காட்சியினைக் காண இயலவில்லை. தாள இயலாது கண்ணீர் உகுத்தாள். அப்பொழுது இயேசு “எதற்காக நீ அழுகிறாய்?” இது இயல்பானதே. எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீர வேண்டும். ஆகவே, நீ கண்ணீர் விடக் கூடாது.” என்றுக் கூறினார்.

இயேசு மீனவர்களுக்குப் பல வகைகளில் உதவியுள்ளார். அவர்களுக்கு ரொட்டிக் கொடுத்தார். ஒருமுறை ஒரு மீனவனால் ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவர் அப்பொழுது பீட்டரை அழைத்து, “பீட்டர் மீன் வலையைக் கொண்டு வந்து என்னைப் பின் தொடர்ந்து வா” என்று கூறினார். அவர் மீன் வலையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசுமாறுக் கூறினார். பெருத்த எண்ணிக்கையில் மீன்கள் அந்த வலைகளில் சிக்கின. மீனவர்களால் மீன் அதிகமாயிருந்த வலையினை இழுக்கவே முடியவில்லை. ஆகவே தெய்வத்தினால் தனது தெய்வீகத் தீர்மானத்தைக் கொண்டு எதையும் செய்திட இயலும். ஒவ்வொன்றும் இறைவனது பரிசு மட்டுமே அன்றி வேறு இல்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் நம்பிக்கையினை வளர்த்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் நல்ல காலகட்டங்களை அனுபவித்து வந்தால், அதுவும் இறைவனுடையப் பரிசே. மாறாகத் துன்பம் நிரம்பிய காலகட்டத்தைக் கடக்க நேர்ந்தால் அதுவும் இறைவனுடையப் பரிசே. அதற்கு சீரான நம்பிக்கையினை நீங்கள் வளர்த்துக் கொள்ள அவதிப்பட்டால் நீங்கள் கசப்பான மாத்திரைகளை உட்கொண்டே தீர வேண்டும். அது உங்கள் நன்மைக்கே.

“உண்மைப் பெருந்தகை இறைவனைச் சிந்தியுங்கள்”- ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு 41. 25.12.2008 பிரசாந்தி நிலையம்

இயேசுவின் பின்னே சென்ற பக்தர்கள்,  பல்வேறு கருத்துக்களில் வேறுபாடு கொண்டு பிரிந்து விட்டனர். ஆனால் இயேசுவின் வாழ்வு , ஒருமைக்கான பாடம் .  இயேசு சிலுவையில் இருந்த பொழுது, அவரை கொடுமைப்படுத்திய மனிதர்கள் மீதான கசப்பு உணர்வுகள், அவரைத் தாக்கின. திடீரென்று ஒரு குரல் அவரை எச்சரித்து, "அனைத்தும் ஒன்றே, எனது அருமை மகவே! அனைவரிடமும் சமமாக நடந்து கொள்!" இதனை மற்றொரு அறிவிப்பு பின்தொடர்ந்தது. "மரணமே வாழ்வின் ஆடை . ஒருவர் கிழிந்த ஆடைகளை உடுத்துவது போல, ஆத்மாவும் பழைய உடலைக் களைந்து, புதிய உடலினுள் செல்கிறது . ஆகவே இயேசு வெறுப்பு மற்றும் தீய உணர்வு களுக்கு எதிராகவும், புலம்புவதற்கு எதிராகவும் மதிக்கப்பட்டார் . புலம்புதலுக்கே மனிதன் இப்போது வாரிசாக இருக்கிறான்.

“இயேசு எவரை அறிவித்தாரோ, அவரே” - ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு 11. 24.12.1972 பிரசாந்தி நிலையம்

இயேசு நாதர் வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லறையில் இருந்து எழுந்து வந்தார். அதனால்தான் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கும் சேவைக்கும் உரிய நாளாகக் கருதப்படுகிறது. கத்தோலிக்கர்கள் இயேசுநாதரைப் பெற்றெடுத்த கன்னிமேரிக்கு  முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிராட்டஸ்டண்டுகளோ இயேசுநாதரின் பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கத்தோலிக்கர்கள் 24ஆம் தேதி மாலை மேரியை வழிபட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். பிராட்டஸ்டண்டுகள் 25ஆம் தேதி இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்.

“தெய்வீகத்தின் அடிப்படையில் ஒற்றுமை”- ஸ்ரீ சத்யசாய் அருளமுதம் தொகுப்பு 25. 25.12.1992 பிரசாந்தி நிலையம்

குறுக்கெழுத்து புதிர்
விடியல் வியப்பு
ஈஸ்டர் சன்ரைஸ் ஆச்சரியம் (காணொளி)

இயேசுவை கண்டுபிடி (வழி தேடல்)
SIGNIFICANCE OF JESUS’ RESURRECTION

For a Christian, the resurrection of Jesus is essential to knowing that Jesus was Divine and that his teachings were Divine. St. Paul – whom Sai Baba said “was originally an inveterate critic of Jesus, (but) was transformed by Christ’s love into the greatest apostle of Jesus and the first propagator of the Christian faith” – stated the importance of Jesus’ resurrection to Christians in a letter to an early Christian community:

 

If Christ had not been raised from the dead, our preaching is useless and so is your faith… (and) you are still in your sins. But Christ has indeed been raised from the dead. (1 Corinthians 15:15, 17, 20)

Jesus’ physical resurrection points back to the early days of Jesus’ ministry when he spoke of our need to be resurrected and reborn in a different way – in the knowledge and direct experience of God:

I tell you the truth, no one can see the kingdom of God unless he is born again. Flesh gives birth to flesh, but the Spirit gives birth to spirit. (Jesus – John 3: 3, 6)

Swami’s explanation about this “resurrection” and the lessons we learn from it:

What is the resurrection, really? It is the revelation of the divinity inherent in man. That is the result of contact with the Godhead; that can come only after years of contrition. Man is led into the wrong belief that the accumulation of material possessions will endow him with joy and calm. But Divine Love (Prema) alone can give that everlasting joy. Divine Love alone will remove anger and envy and hatred. ( 28 February 1964 )

ஈஸ்டர் கல்லறைக்
(கைவினை கழிவில் இருந்துப் படைப்பு)
Emblem

பயிற்றுவிக்கப்படும் பண்புகள் :
 • ஒரு அணியாகப் பணிசெய்தல்.
 • இறை நம்பிக்கை
 • இயேசு நாதரால் கற்பிக்கப்பட்ட நற்பண்புகளாகிய இரக்கம், மன்னித்தல், மற்றும் அன்பின் முக்கியத்துவம்.

தேவையானப் பொருட்கள் :
 1. காகிதத் தட்டுகள்.
 2. காகித உறுஞ்சு கோல்
 3. கைவினைப் பசை
 4. பச்சை நிறத்தில் அக்ரிலிக் வண்ணப் பூச்சு
 5. ஒன்றை விடப் பெரியதாக இணைக்க இரு அட்டைத் துண்டுகள்.
 6. வண்ணத் தூரிகை
 7. ஓவியத்தின் பேனா அல்லதுக் குறியீட்டுப் பேனா.
 8. கத்திரிக்கோல்

தயார்ப் படுத்துதல் : குருமார்கள் ஈஸ்டர் பற்றிய கதையையும் இயேசுநாதரின் சிறந்த குணங்களைப் பற்றியும் போதனைகள் பற்றியும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கவும்.

செய்முறை :

Emblem_1

1. காகிதத் தட்டைப் பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் படத்தில் காண்பித்துள்ளது போல் முட்டை வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

Emblem_2

2. காகிதத் தட்டில் பச்சை அக்ரிலிக் வண்ணத்தைப் பூசவும்.

Emblem_3

3. காகித உறுஞ்சு குழல்களைப் பெரியதும் சிறியதுமாக இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

Emblem_4

4. உறுஞ்சு குழல்களை படத்தில் காட்டியவாறு சிலுவை போல் பசையிட்டு ஒட்டிக் கொள்ளவும்.

Emblem_5

5. மூன்று சிலுவைகளை செய்து கொள்ளவும்.

Emblem_6

6. அட்டையின் சிறிய பகுதியில் வண்ணம் பூசப்பட்ட காகிதத் தட்டை ஒட்டிக் கொள்ளவும்.

Emblem_7

7. சிலுவைகளை ஒட்டி முட்டை வடிவில் வெட்டிய மீதமுள்ளத் துண்டில் இயேசுநாதரின் உருவத்தை வரைந்து அதைப் பச்சை வண்ணம் கொண்டத் தட்டினுள் (கல்லறையின்) ஒட்டிக் கொள்ளவும்.

Emblem_8

8. மீதமுள்ள அட்டையை முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

Emblem_9

9. அதை அட்டையின் பின்னால் ஒட்டி நிற்க வைக்கவும்.

Emblem_10

10. உங்கள் கற்பனைக்கு ஏற்ப அட்டையை அழகு படுத்தவும்.

Emblem_11

11. பைபிள் வசனம் மத்தேயு 28:6வைக் குழந்தையை ஒரு அட்டைத் தூண்டில் எழுதச் சொல்லவும். இந்த அட்டைக் கல்லறையில் இருந்து நீக்கப்பட்டப் பாறையாகப் பயன்படுத்தப்படும். கல்லறையின் வாயிலின் அருகில் வைத்து விடவும்.

K. சாய் அரவிந்த் & K. ஸ்ரீராம் (பாலவிகாஸ் மாணவர்கள்)