ஈத்-உல்-பிதுர் - நிகழ்வுகள்

  புதுப்பிக்கப்பட்ட ரமலான் மற்றும் இஸ்லாம் மதத்தின் சாரம்

  இறைவனை மனப்பூர்வமாக நினைந்து மவுனமாக இருக்கும் மாதம் தொடங்கிவிட்டது. உலகெங்கிலும் உள்ள 1.5 கோடி இஸ்லாமிய மக்களுக்கும் காலந்தவறாத பிரார்த்தனை. மன்னிப்பு யாசித்தல்,விருப்புடன் தன் சவுகரியங்களையும் சந்தோஷங்களையும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காகச் செய்யும் தியாகத்திற்கான காலமிது. இந்த நேரத்தில் தான் ஒருவர், இஸ்லாத்தின் உண்மையான அர்த்தத்தையும் சாரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.எளிதாகப் புரிந்து கொள்ள நாம் படிப்படியாகச் செல்லலாம்

 • முகமது, அல்லாவின் தீர்க்க தரிசி
 • உண்மையான இஸ்லாத்தின் சாரம்
 • இஸ்லாம் மதத்தின் 5 தூண்கள்
 • சாயியின் அழைப்பு
முகம்மது- அல்லாவின் தீர்க்க தரிசி

அரேபியா நாட்டின் மெக்கா நகரில் கி.மு.569 இல் பிறந்த தீர்க்கதரிசியானவர், தன் பிள்ளைப் பருவத்திலேயே அனாதையானார். தாயின் அரவணைப்பும் தந்தையின் பாதுகாப்பும் அறியாதவர் அவர். ஆக இந்த அனுபவமே, இந்த குழந்தை பிறரது துன்பம் கண்டு இரக்கப்படவே பிறந்தது என்பதற்கான முதல் படியாயிற்று சிறுவனாக இருந்தபோது மாடு மேய்த்தார் மாடுகளை உள்ளார்ந்த அன்புடன் பராமரித்தார். இச்செயல், தம்மைத்தாமே”நல்ல மேய்ப்பன்” என்று கூறிக்கொண்ட ஏசு பிரானை நினைவூட்டுகிறது, மேலும் ஸ்ரீ கிருஷ்ணனும் தெய்வீகமேய்ப்பனாகவே(கோபாலன்) வணங்கப்படுகிறார்.

ஒரு சமயம் அவர் மந்தையைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு மாடு மேய்ப்பவன் வந்து, ”. நான் உன் மந்தையைப் பார்த்துகொள்கிறேன், நீ நகர்ப்புறம் சென்று சந்தோஷமாக இருந்து விட்டு வா, பின்னர், நீ என் பசுக்களைப் பொறுப்பெடுத்துக் கொள், நான் சிறிது நேரம் சென்று வருகிறேன்” என்றார். இளம் முகமது கூறினார், ” வேண்டாம். நான் உங்கள் மந்தையை பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வேண்டுமானால் போகலாம். நான் என் பொறுப்பைவிட்டுப் போக மாட்டேன் ”“அவர் வாழ் நாள் முழுவதும் இதே கொள்கையே கடைப்பிடித்தார்.

தீர்க்கதரிசியான அவர் படித்தவரல்ல. அவரால் படிக்கவோ எழுதவோ முடியாது. இருப்பினும் அனைத்து ஞானத்தின் களஞ்சியமாக விளங்கினார் - ஏனெனில், அந்த ஒன்று எப்போது அறியப்பட்டதோ, அதனால் எல்லாம் அறியப்பட்டதோ, எந்த ஒன்றை அறியாமல், மீதி அறிவெல்லாம் அடிமைத்தளை என்பதனை அவர் அறிந்தார்- ஆம் அல்லாவைப்பற்றிய அறிவு.. தான் எடுத்துச்செல்லும் தெய்வீக செய்தியைத் தாங்குவதற்கான ஒரு சரியான முன்மாதிரியாக விளங்கினார்- அனாதையாக, மேய்ப்பனாக, வணிகனாக ,போர்வீரனாக, அரசியல்வாதியாக,அரசனாக, கணவனாக, தந்தையாக, சகோதரனாக, மகனாக, ஏன் ஒரு பேரனாகவும் விளங்கினார்.

அவர் வாழ்வில், ஒரு வீழ்ச்சியின் சுழற்சியில் அவர் சிக்கியபோது, ஒர் திருப்புமுனை ஏற்பட்டது. உடனே அவர் தனிமையிடம் அடைக்கலம் புகுந்தார். சில நேரங்களில் மணிக்கணக்காக, சமயத்தில் நாட்கள், வாரக்கணக்கில் காரே-ஹிரா மலைக்குகையில் ஒதுங்கித் தனிமையிலிருந்தார். தன் இதயக்குகையில் நுழையும் பொருட்டு, ஆழ்ந்த இறை சிந்தனையில், த்யானத்தை மேற்கொண்டார். பொறுமையுடையவர் ஆதலால், உண்மையைத் தொடர்ந்து தேடினார், அவரது நாற்பதாவது வயதில் தான் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடமிருந்து முதல் வெளிப்பாடு கிடைக்கப்பெற்றார். அது தேவதை காபிரியேலின் வாய்மொழியாக, அனைவரின் இதயத்தின் உண்முக அறிவாக வெளிப்பட்டது .இறைவனின் புனித நாமத்தை முழங்குவீராக ! (சுரா96:1)

இந்த நற்செய்தி அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது. அவர் தாழ்மையுடன் பதிலிறுத்தார் நான் எழுத்தறிவில்லாதவன். ஏன் படிக்கக்கூட முடியாதவன். பிறகு இறைவன் இவரது இதயத்தைத் திறந்து, அதில் தெய்வீக ஞானத்தையும், ஆன்மீக அறிவையும் நிரப்பினார். பிறகு அவரை தெய்வீக ஒளியால் ஒளிபெற செய்தார். பிறகு இந்த அறிவுரையை மேற்கொள்ளத் தொடங்கியபோது அனைத்திலும் இதன் எதிரொலியையே கேட்டார் .வானம், பூமி, நிலவு, இந்த ப்ரபஞ்சம் அனைத்தும் அவர் நித்தம் உருப்போடும் அந்த நாமத்தையே கூறின.

தேவதை முகம்மதுவிடம் வந்து படிக்குமாறு கூறியது. தீர்க்கதரிசியானவர் பதிலிறுத்தார்” “எனக்கு படிக்கத்தெரியாது. எவ்வாறு படிப்பது.?அவர் மேலும் கூறினார், தேவதை என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு அழுத்தியது, பிறகு பிடியைத் தளர்த்தி விடுவித்து மீண்டும், என்னைப் படிக்க கூறியது . நான் பதில் கூறினேன், “ எனக்கு படிக்கத் தெரியாது எப்படி படிப்பது?” தேவதை என்னை மீண்டும் சகிக்க இயலாத அளவு பிடித்து அழுத்தி ,படிக்கக் கூறியது. நான் மீண்டும் பதில் கூறினேன், “எதைப் படிக்க வேண்டும்? இதன் பேரில் என்னை மீண்டும் மூன்றாம் முறையாக பிடித்து அழுத்திப் பின்னர் விடுவித்து கூறியது ” இங்கு இருக்கும் அனைத்தையும் படைத்து, உறை நிலையிலிருந்து மனிதனையும் படைத்த இறைவனின் பெயரால் படிப்பீராக!” உமது இறைவன் மிகவும் பெருந்தன்மையானவர். (96-1, 96-2, 96-3) ஆயிஷாவால் விளக்கப்பட்டவாறு ஹாடித் ரெவிலீஷன்ஸ் தொகுப்பு 1, புத்தகம் 1 நம்பர் 3 படிப்படியாக தீர்க்கதரிசியின் இதயம் எல்லையற்றதுடன் ஒருமித்தது. உள்ளேயும், வெளியேயும் உள்ளது ஒரே ஆன்மா என்பதை உணர்ந்தார். இறைவனின் ஆணையை உலகிற்கு முன்னெடுத்துச்செல்ல விளிக்கப்பட்டார்; அவன் நாமத்தை பெருமைப்படுத் தவும்,பிரிந்தோரை ஒருமிக்கவும், உறக்க நிலையில் உள்ளோரை விழிப்புறச்செய்யவும், அனைவரையும் இணக்கமாக இருக்கச் செய்யவும் புனித குரானில் உள்ளபடி”. அலிஃப் லாம்ரா. இந்த புத்தகம் வெளிப்படுத்தப்பட்டது ஏனெனில், நீவிர் மக்களை, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும், மேன்மையான, புகழ் வாய்ந்த பாதைக்கும் நடத்திசெல்லவே.

sai

ஹசரத் முகம்மது இறைவனின் நற்செய்தியை வெளியிட்டார். அந்தக் காலத்தில் மக்கள் இந்த தெய்வீக விளம்பல்களை செவி மடுக்கவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு அகன்று செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார். ஹசரத் முகம்மது அவர்களுக்கு, இந்த அவமானங்களும் துன்பங்களும் உடம்புக்கேயன்றி, ஆத்மாவுக்கு அல்ல ஆத்மா ஒருபோதும் துன்புறாது என்று தெரியும்

உண்மையான இஸ்லாத்தின் சாரம்

இஸ்லாத்தின் முக்கிய குறியீடு சரணாகதியே. இஸ்லாம் என்ற வார்த்தை அஸ்லாமா என்ற அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது.அதன் பொருளே சரணாகதி என்பதாகும். அதாவது, ஒரு முகம்மதியன் எனப்படுபவன் தன் முழு மனதையும் இறைவனிடம் சரணாகதி செய்தவனே. சமயம், சாதி, நாடு நிறம் இவற்றைக் கடந்து எவனொருவன் இந்நிலையை இறைவனிடம் உணர்கிறானோ அவனே முஸ்லிம். இதற்கான உதாரணங்களையும் குரான் கொடுத்துள்ளது: ஆபிரஹாம், நோவா, மோஸஸ், ஜீஸஸ் முதலியோர் முழுமையான சரணாகதி நிலையை அடைந்து முஸ்லிமாக கருதப்பட்டவர்கள்.

ஆபிரஹாம் யூதருமல்ல, கிருஸ்தவரும் அல்ல. ஆனால் தன் நம்பிக்கையில் திடமாயிருந்தார் ஒரு இஸ்லாமியராக. ஆனால் கடவுளுக்கே கடவுளாகக் கருதப்படுபவராக அல்ல( குரான் 3:60) ஆக, இஸ்லாம் என்பது ஒரு மதத்தைக் குறிக்கும் வார்த்தை அல்ல, மனதின் நிலையைக் குறிக்கும் வார்த்தை. இறைவனின் விருப்பத்திற்கு முழுமையாகச் சரணடைந்த நிலையைக் குறிக்கும் சொல் எனவே, தீர்க்க தரிசியானவர் தன்னை ஒரு புதிய மத ஸ்தாபகராகக் கருதாமல், அனாதிகாலம் தொட்டு இருந்த இஸ்லாமியக் கொள்கைகளின் அஸ்திவாரத்தை மீட்டு நிர்மாணிப்பவராகவே நினைத்தார்இஸ்லாத்தில் “ஸலாம்” என்னும்வார்த்தை ஒருவரை வாழ்த்தப் பயன்படுகிறது இதில் ஸா எனப்படுவது ,ஸாலோக்கியம்,ஸாமீப்யம், ஸாயுஜ்யம்( தெய்வீகத்தைக் காணல் தெய்வீகத்தின் அருகே இருத்தல்,தெய்வீகத்தில் இணைதல்) ஆகியவற்றின் ஒருமித்த விளக்கம்.. இது மூன்றும் ஒன்றாக ஆனபோது இறைவனுடன் இணைதல் அதாவது லா” ஸலாம் நடைபெறுகிறது.(பகவானின் தெய்வீக அருளுரை 25 டிசம்பர் 1991)

இன்று ஒவ்வொருவருக்கும் அதி முக்கியமான தேவை யென்னவெனில் கடவுள் ஒருவரே என்று உணர்வதுதான் இதையே ஏசுநாதரும் முகம்மதுவும் கூறினர். உண்மையில் அல்லா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் எனில் மிகப் பெரியவன், ப்ரபஞ்சம் முழுமையும் உள்ளடக்கியவன் என்பதாகும். இதுவே வேதங்களின் முக்கிய செய்தியாகும். அனைத்து மதங்களின் அத்தியாவசிய உண்மை என்னவெனில் இறைவன் ஒருவரே. ஏசுவின் கூற்று என்னவெனில், உலகத்தின் தந்தை ஒருவரே கடவுள்; மக்கள் எல்லோரும் சகோதரர்கள். ஒருவருக்கு ஒரு தந்தைதான் இருக்க முடியும், இரண்டு அல்ல - பகவான் சத்ய சாய் பாபா மூன்று நடக்கக்கூடிய தவறான கருத்துக்கள்” முதலாவது தவறான கருத்து: உன்னுடைய கடவுள் என்னுடைய கடவுளிடமிருந்து வேறுபட்டவர்.

இரண்டாவது தவறான கருத்து: கடவுளும் அவருடைய படைப்புகளும் வேறானவை மூன்றாவது தவறான கருத்து : நான் கடவுளிடமிருந்து வேறுபட்டவன் இறைவன் ஒருவரே. அவர் மனிதரில் உள்ள ஒவ்வொரு குலத்துக்கும் தனித்தனியல்ல. அன்பு ஒன்றே. அது உண்மையானதாக இருந்தால் சமயம், சாதி, நிறம் இவற்றைக்கடந்தது. உண்மை ஒன்றே. இரண்டாக இருக்க முடியாது. ஏனெனில், ஒன்றே மீண்டும் நிகழலாம். இலக்கு ஒன்றே. அனைத்து பாதைகளும் ஒரே இறைவனை நோக்கியே சென்றாக வேண்டும். அறுதியானதும் நிரந்தரமானதுமான இதன் மீது, மனிதன் ஏன் சண்டை, சச்சரவு செய்கிறான்?

பகவான் சத்யசாயி அருளுரை 12 அக்டோபர்,1983

இஸ்லாம் மதத்தின் 5 தூண்கள்


 • ஷஹாதாஹ்- வாய்மையை குறிப்பது
 • சாலாஹ் அமைதியை குறிப்பது
 • ஜக்கத்- நன்னடத்தையை குறிப்பது
 • ஸாம்- அஹிம்சையை குறிப்பது
 • ஹாஜி அன்பை குறிப்பது

நமது அன்பான சத்யசாயி பாபா நமக்கு இந்த ஐந்து ஆன்மீக தூண்களைப்பற்றி அதாவது, உள்ளும்,புறமுமான உலகத்திற்கு ஆதாரமான வாய்மை, சாந்தி, அன்பு நன்னடத்தை அகிம்சை ஆகியவைகளைப் பற்றி கூறுகிறார்.

சாயியின் அழைப்பு

சாயியின் அறைகூவலைக் கேளுங்கள்.எழுமின்! விழிமின்! அல்லாவுடனான உங்கள் ஒருமைத்தன்மையை உணருங்கள். சாயி பாபா இஸ்லாத்தின் உயர்ந்த நிலைக்கு நம்மை வழி நடத்த வந்திருக்கிறார். சாயி பாபா, நம்மை அல்லாவின் விருப்பத்திற்குப் பூரண சரணாகதி அடைய அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் சாயி பாபா நமக்கு, “மனம் மவுனிக்கும் (மரணிக்கும்) கலையைக் கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார். மனம் மரணிக்காவிடில் உருவமில்லாத ,உண்மையின் சாரத்தை உருவப்படுத்த இயலாது

பக்தியுள்ள இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர், சத்யசாயியின் கொள்கைகளில், இஸ்லாத்தின் மெய்ஞானத்தின் அதிர்வை. கண்டறிந்து இறைவனுடன் இணக்கமாக இருக்க இதுவே தக்க தருணம் என்று பல உதாரணங்களைக் கண்டு நம்புகிறார்கள் அவர் அல்லா என்று சொன்னால் அவர் ஒருவர் மட்டுமே. அவர் அல்லா என்று சொன்னால் முழுமையான சத்தியமானவர். அவர் அல்லா என்று சொன்னால், அவர் பிறக்கவுமில்லை. பிறப்பிக்கப்படவுமில்லை அவர் அல்லா என்று சொன்னால், அவரைப் போன்ற எதுவுமில்லை. அவர் அல்லா என்று சொன்னால் அவர் அதுவாக இரு என்கிறார். ஆம்; அதுவே அவர்.

அதுமட்டுமல்ல. சாய் பாபா, உலகம் முழுதும் உள்ள தன் பக்தர்களை அல்லாவுடனான ஒருமிப்பிற்கு பரிட்சார்த்தமான விழிப்புணர்வுக்கு வழி நடத்துகிறார்; எங்கும் நிறைந்திருப் பதற்கும், யாவற்றையும் அறிந்தவராகவும் நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர்.தாங்கள் பெற்ற முதல் அனுபவங்கள் மற்றும், தாங்கள் பெற்ற வெளிப்பாடுகள் மீதும் திட நம்பிக்கை வைத்து சாயியின் அறை கூவலை செவிமடுக்க மற்றவரை துரிதப்படுத்துகின்றனர் இங்கு மற்றுமொரு அனுபவம் உள்ளது. அப்துல் ரசாக் பாபுரா கொர்பு என்னும் பேராசிரியர் கடவுளின் அடையாளங்களைக் கண்ட மற்றும் ஒருவர்; ஆம் அவரை அல்லா என்று சொன்னால், வானகத்தையும் வையகத்தையும் தன் ஒரு விரலில் தாங்கி பிடித்து, அதுவாக இரு என்று சொல்லி, அதுவாகவே இருந்தவர்.

சாய் பாபா என்னைப் பேட்டிக்கு அழைத்தார். பேட்டியறையில் அன்பான ஸ்வாமி ஒரு கேள்வியைத் தொடுத்தார். அது என்னை முற்றிலுமாக வீழ்த்திவிட்டது. பாபா, “ என் மீது உனக்கு நம்பிக்கை உள்ளது என்று எனக்குத் தெரியும் .இருந்தாலும் பொருட்களை சிருஷ்டிக்கும் என் சக்தியைப்பற்றி உனக்கு நம்பிக்கை இல்லை. அப்படித்தானே?”

எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஒருவிதத்தில் இந்த விஷயம் வெளிவந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இதில் எனக்குத் திருப்தியில்லை.. இதை நான் பார்த்து என் அனுபவத்தில் உணர விரும்பினேன் கடந்த ஐந்து வருடங்களாக நான் பாபாவைப் பற்றி பேசினேன். பாபாவைப்பற்றி விஞ்ஞானிகளிடமும் மருத்துவர்களிடமும் மற்றுமுள்ள கற்றறிந்த பெரியோரிடமும் பேசினேன். வெறும் சங்கல்ப மாத்திரத்தில் பொருட்களை சிருஷ்டி செய்வது பற்றிய அவர்கள் கேள்விகளுக்கு என்னால் பதிலிறுக்க இயலவில்லை., எனக்கு சுய அனுபவம் இல்லாததாலோ அல்லது என்னுடைய அரைகுறை முயற்சியினாலோ, இதனைப் புரிந்து கொள்ளும் போதிய அறிவு எனக்கு இல்லை என்று நினைத்தேன்.

அப்துல்: மன்னியுங்கள் பாபா. அது சரியே.
பாபா: என் சிருஷ்டி சக்தியை நம்பாதது உன் நேர்மையே, அது உன் ஆர்வமும் கூட. உன் வெளிப்படைத்தன்மை எனக்கு பிடித்திருக்கிறது. நான் உன்னை நேசிக்கிறேன். எதையும் நீ சலுகையாக எடுத்துக்கொள்ளாதது நல்லது. என் மீதான உனது நம்பிக்கை கண் மூடித்தனமானது அல்ல. மிக நல்லது. இப்போது நான் சொல்கிறேன் உனக்கு என்ன வேண்டுமோ கேள், நான் தருகிறேன். இப்போதே, இங்கேயே.உனக்கு வேண்டிய நேரத்தை எடுத்துக்கொள். நீ விரும்பியதைக் கேள் இப்போது எனக்கு சற்று இடைவெளி கிடைத்தது. பாபா சிருஷ்டித்த எத்தனையோ பொருட்களை நான் பார்த்திருக்கிறேன். அவற்றைக் கையாண்டும் இருக்கிறேன். அவர் சிருஷ்டித்த பொருட்களின் உண்மைத் தன்மை பற்றி நான் நம்பியிருந்தாலும் அதை பாபா தான் சிருஷ்டிக்கிறாரா என்பது பற்றி எனக்கு ஐயமே.

சிறிது நேரம் யோசனைக்கு பிறகு, - முஸ்லிம் பக்தர்கள் வெகு சிலரே அறிந்திருந்த யாரும் அவரிடம் ஒரு கொடுக்க முடியாத பொருளை, யாரும் பார்த்திராத பொருளைக் கேட்க தீர்மானித்தேன் அப்துல், “ பாபா, தயவு செய்து எனக்கு ப்ரபஞ்சம் முழுதும் அடங்கியதாய்,அதில் என்னுடைய மதம் மட்டுமே வெளிப்படக்கூடியதாய் ஒரு பொருள் தாருங்கள்” என்றார் பாபா ஒரு இனிய முறுவலுடன், “அப்துல்! நீ உண்மையிலேயே என்னால் இயலாத ஒரு பொருளை கேட்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாயா?” எனக்கேட்டார்.

பதிலேதும் கூறாமல் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் பாபா, “ என் உள்ளங்கையைப் பார். அதில் ஏதும் இல்லை, அதன் பின்னாலும் எதுவும் இல்லை, நீ பரிசோதித்துக் கொள்ளலாம்” என்றார். பாபா தன் உள்ளங்கையை தலைகீழாகத் திருப்பினார் ,அவர் சட்டை முழங்கைக்கு மேல் இருந்தது. அவர் கையைப் பிடிக்க எனக்கு துணிவில்லை. அவர் வலுக்கட்டாயமாக என் மணிக்கட்டைப்பிடித்து, அவரது உள்ளங்கை மற்றும் மணிக்கட்டு மீது நகர்த்தினார். பாபா, “ இப்போது சிறிது நேரம் என் உள்ளங்கை நடுவிலேயே பார்த்துக்கொண்டிரு” என்றார்.

உள்ளங்கை நடுவிலிருந்து ஒரு மோதிரம் அப்துல்காக சிருஷ்டிக்கப்பட்டது, ஏழு அல்லது எட்டு நொடிகளுக்குள் வெளிப்பட்டது. உள்ளங்கை தோல் முன் போல் மூடிக்கொண்டது. அழகான மோதிரம் ஒளிவிட்டுக்கொண்டிருந்தது பாபா (ஹிந்தியில்) “நீ அதை எடுத்து என் கையில் கொடு. அதற்கு முன் அதை கவனித்துப் பார்.” பாபாவின் உத்தரவுபடி, அதை கூர்ந்து பரிசோதித்துப் பார்த்தேன். அதன் மீது சந்திரப்பிறையும் நட்சத்திரமும் தென்பட்டன. அதை மீண்டும் பாபாவின் கையில் வைத்தேன்.

அப்துல், “ பாபா, இந்த மோதிரத்தைப்பற்றி ஒன்றும் அறிந்த் கொள்ள முடியவில்லை, தயவு செய்து விளக்குங்கள்” என்றார் பாபா, அதற்கு “ நீ முஸ்லிமாக பிறந்து இருக்கிறாய். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை” என்று பதிலளித்தார்.

அது உண்மைதான். நான் உண்மையில் ஒரு மதவாதியல்ல, பாபா, “ நான் இந்த மோதிரத்தை எண்கோணத்தில் வடிவமைத்து இருக்கிறேன் அதன் மீது நவரத்தினங்களை பதித்து இருக்கிறேன். இவையிரண்டும் ப்ரபஞ்சத்தைக் குறிக்கிறது. நவரத்தினங்களின் இடையே பச்சை நிற மரகதகல்லில் சந்திரபிறையும் நட்சத்திரமும் வைத்திருக்கிறேன்.” என்று விளக்கினார்.

அப்துல், “ பாபா, முஸ்லிம் மதத்தைப் பற்றி அதில் எங்கேயிருக்கிறது?” என்று கேட்டார் பாபா, “ அந்த பச்சைக்கல்லைப் பார். அதுதான் உன் மதம், நான் இதை உன் இடது கையின் நான்காவது விரலில் போடுகிறேன்; ஏனெனில் உனது வலது கை விரல் குறைபாடுடன் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு பாபா மேற்சொன்ன விரலில் அந்த கனமான மோதிரத்தைப் போட்டார். ஆ! அது சரியாக பொருந்தியது. நான் அவரது பாதத்தில் வீழ்ந்து வணங்கினேன், இம்முறை மிகுந்த கண்ணீருடன். சில நிமிடங்கள் கழித்து, நான் அவருடன் வெளியறைக்குவந்தேன் வெளியில் அமர்ந்திருந்த ஒன்பது வெளி நாட்டு பக்தர்களுக்கு மோதிரத்தைப் பற்றி கூறி, என்னை, “ என் குறும்புக்கார பக்தன் “ என்று குறிப்பிட்டார்

நான் வெளி வராந்தாவிற்கு வந்தேன். இடதுகையின் நான்காவது விரல் மோதிரத்துடன் கனமாக இருந்தது. மோதிரம் மிகுந்த ஒளியுடன் அழகாக இருந்தது. அது முதலில் பேராசிரியர் கஸ்தூரியின் கவனத்தைத்தான் ஈர்த்தது. அவர் என் உள்ளங்கையைத் தூக்கி கூர்மையாக பரிசோதித்துப் பார்த்தார். நான் இதுவரை ஸ்வாமியின் இவ்வளவு அழகான படைப்பை பார்த்ததில்லை என்று வியந்தார். இந்த ஒன்பது நவரத்தினங்கள்-ஒன்பது ப்ரபஞ்சங்கள். இதென்ன நடுவில் பச்சைக்கல்லில்? ஓம்- ஆ? இதனை வி.கே கோகக்கும் பரிசோதித்துவிட்டு கூறினார்” நிச்சயமக ஓம் இல்லை. எதுவாக இருப்பினும், இது மிக அழகாக உள்ளது. இதுவரை நானும் ஸ்வாமியின் இது போன்ற ஒரு படைப்பை முதன் முதலாக பார்க்கிறேன். வேறு பக்தர்களும் பார்த்து கையால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர் நான் ஒரு வார்த்தைகூட பதிலளிக்க முடியாமல் பேச்சிழந்து நின்றேன்.தர்ஷன் ஹாலுக்கு வந்ததும் நிறையபேர் என்னைச் சூழ்ந்துக் கொண்டனர். அதில் பெரும்பாலோர் வெளிநாட்டினர்.

அதில் ஒருவர் தாடி வைத்திருந்த அமெரிக்க பக்தர்.அவர் மோதிரத்தை அருகில் வைத்துப் பார்த்து,என் கையைத்தூக்கி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு’ அல் ஹும் தோ அல்லா! (ஹா கடவுளே உன் முற்பிறவி ஆழங்காணவியலாதது) என்றார். இதைபார்த்து ஆச்சரியப்பட்ட நான், அவரை இது பற்றி மேலும் கூறுமாறு கேட்டேன். அதற்கு அவர் பதிலிறுத்தார்.” நான் ஒரு முஸ்லிம். நீயும் ஒரு முஸ்லிம்தான் என்பதை இந்த மோதிரம் காட்டுகிறது.” அதை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அதற்கு அவர் கூறினார், “ அரபிக் பாஷை படிப்பீர்களா? நான் இல்லையென்று மறுதலித்தபோது அவர் கூறினார் அதில் அவ்வாறு பச்சைக்கல்லில் நடுவில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்ன என்று கேட்டதற்கு, அல்லா என்று அரபியில் அர்த்தம் என்று கூறினார்

அப்போதுதான் பாபா அல்லா என்று பச்சைக்கல்லில் எழுதியிருப்பது தெரிந்தது. பாபாவிடம் நான் என் மதத்தைப்பற்றி கேட்டேன். அதற்கு அவர் என்னை இவ்வாறு அற்புதமாக ஆசிர்வதித்தார். அல்லாவைத்தவிர வேறு யார் அதுவாகவே இரு எனக்கூறமுடியும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

“நான் எந்த குறிப்பிட்ட ஒரு மதத்தையும் பற்றிப் பேச வரவில்லை நான் எந்த குறிப்பிட்ட பிரிவின் பிரச்சாரத்திற்காகவும் காரணத்துக்காகவும் இயக்கம் அமைக்கவில்லை, எந்த கொள்கைக்காகவும், என்னை பின்பற்றுவோர்களைத் தேடி வரவில்லை. எனக்கு சீடர்களை அல்லது பக்தர்களை என் பக்கம் அல்லது வேறு எந்தப் பக்கமும் கவர்ந்து இழுக்க எந்த திட்டமும் இல்லை. நான் எதற்கு வந்தேன் என்றால், இந்த ப்ரபஞ்ச ஒற்றுமையின் மீது நம்பிக்கை, இந்த ஆத்ம தத்துவம் (ஆத்ம ஒருமைப்பாடு,) இந்த அன்பு வழி, இந்த தார்மீக அன்பு) (அன்பின் இயல்பு) இந்த அன்பின்கடமை, இந்த அன்பிற்கான நமது கட்டுப்பாடு. ஸ்ரீ சத்யசாய் பாபா ஒவ்வொருவரும் தத்தம் மதத்தில் கூறியகோட்பாடுகளை உண்மையாக பயிற்சி செய்ய வேண்டும். ஒரு கிருத்துவன் நல்ல கிருத்துவனாகவும், ஒரு இந்து நல்ல இந்துவாகவும், ஒரு முஸ்லிம் நல்ல முஸ்லிமாகவும் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் மதத்தினை உண்மையாக பின்பற்றவேண்டும்”- ஸ்ரீ சத்யசாய் பாபா

இஸ்லாமிய பிரார்த்தனைLYRICS

பிஸ்மில்லா அர் ரஹ்மான் அர் ரஹீம் (2)
லா இ்லாஹா இல்லல்லா அல்லா அல்லா(3)

அபு பென் ஆதாம் – முன்னுரை


பால்க் நாட்டு சுல்தான் இப்ராஹிம் இபன் பல்கை 1760 மற்றும் 1770 ஆம் ஆண்டிற்கிடையில் தேவதைகள் வந்து சென்ற நிகழ்ச்சியை விளக்கும் சிறிய சித்திரம்.

இப்ராஹிம் இபன் ஆதாமை இப்ராஹிம் பல்கி என்றும் அழைப்பார்கள். இவர் தொன்மை வாய்ந்த பிரசித்தி பெற்ற சூஃபி ஞானிகளில் ஒருவராவர். தனது ராஜ வாழ்க்கையைத் துறந்து ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்திய இளவரசர் கௌதம புத்தரைப் போன்றே சூஃபி மதத்திலும் இப்ராஹிம் பல்கி என்ற மகான் வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கையை விளக்குகிறது இந்தக் கதை.

சூஃபி இனத்தின் பாரம்பரியத்தில். இப்ராஹிமின் பல தூய்மையான மற்றும் எளிமையான வாழ்க்கை முறைப் பற்றியும், அவர் தனது வாழ்வின் முதல் பகுதியின் பல்கியின் ராஜ வாழ்க்கைக்கு மாறான வாழ்க்கை வாழ்ந்தது பற்றியும் பெருமை கொள்கிறார்கள்.

அபு பென் ஆதாம் பற்றி லேய்க் ஹண்ட் (1784-1859) எழுதிய கவிதை

அபு பென் ஆதாம் பற்றிய இந்தக் கவிதை சக மனிதர்களை நேசிப்பது பற்றி இப்ராஹிமின் கருத்துக்களை பதிவு செய்யும் கதையாகும்.

அபு பென் ஆதாம் (அவரது குலம் வளரட்டும்)
ஆழ்ந்த அமைதியான கனவிலிருந்து ஓர் இரவில் எழுந்தான்.
ஒளிர்ந்த நிலவொளியில் அவனது அறைக்கு அழகூட்டும் கண்டான்.
மலர்ந்த அல்லி போன்ற ஒரு தேவதை
கண்ணுற்றான் தங்க நூலில் எழுதியதை
அதீத அமைதி பென் ஆதாமை துணிவுள்ளவனாக்கியதே
அந்த அறையில் இருந்தவரிடம் எழுதுவது என்ன என்று வினவ.
தன் பார்வையை உயர்த்திய அவ்வுருவம் மிகுந்த கனிவுடன்
கூறியது “இது இறைவனை விரும்புவோரின் பட்டியல்” என்று,
“என் பெயர் உள்ளதா” என்று கேட்க
“இதுவரை இல்லை” என்றது தேவதை.
அபு மெல்லிய குரலில் ஆனால் மகிழ்ச்சியாக
"நான் வேண்டுவது உன்னிடம்
எனது பெயரை சக மனிதர்களை நேசிப்பதில் ஒருவராக எழுதுக”
எழுதி மறைந்தது தேவதை.

அடுத்த இரவில் மீண்டும் மிகுந்த ஓளியில் வந்தது தேவதை.
காண்பித்தது இம்முறை இறைவன் விரும்புவோரின் பட்டியலை.
அதில் ஆச்சர்யமில்லாமல் அவனது பெயரே முன்னிலையில்.

பாபாவின் கதை நேரம் – அபு பென் ஆதாம்


மாணவர்களே, அபு பென் ஆதாம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் எப்பொழுதும் “சர்வ பூத தயா” (அதாவது, அனைத்துயிர்களிடத்தும் கருணை) என்கிற புஷ்பத்தை இறைவனுக்கு அற்பணிப்பவர்.

அவர் தினமும், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு தெருத் தெருவாக சுற்றி வருவார். இரவு வெகு நேரம் கழித்துதான் வீடு திரும்புவார். அதுபோல் ஒரு நாள் அவர் வீடு திரும்பும்போது, தமது படுக்கையறையில் ஒரு தேவதை ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் உடனே அந்த தேவதையிடம் சென்று “என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவள், இறைவனை நேசிப்பவர்கள் பட்டியல் ஒன்று தயாரிப்பதாகக் கூறினாள். தமது பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா என்றறிய விரும்பினார். ஆனால் ‘இல்லை’ என்ற பதில்தான் கிடைத்தது.

அடுத்த நாள் இரவு அவர் வீடு திரும்பும்போதும், அதே தேவதை ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டார். “தாயே, இப்பொழுது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “மகனே, நான் இப்பொழுது இறைவனால் நேசிக்கப்படுபவர்களின் பெயர்ப் பட்டியல் எழுதுகிறேன்” என்று கூறினாள். மீண்டும் அவருக்கு இந்தப் பட்டியலில் தம் பெயர் இருக்கிறதா என்றறிய ஆவல். பட்டியலின் முதல் பெயரே அவருடையதுதான் என்று பதிலளித்தாள் அந்த தேவதை.

மானுட சேவையே இறைவனை மகிழ்விக்கும் என்பதுதான் இக்கதையின் சாராம்சம். நமது மறை நூல்கள் நமக்கு நவ வித பக்தியைப் பரிந்துரைக்கின்றன. அவை, ஸ்ரவணம் (இறைவனின் கதைகளைக் கேட்டல்), கீர்த்தனம் (அவன் புகழ் பாடுதல்), விஷ்ணு ஸ்மரணம் (இறைவன் நாமத்தை நினைவில் கொள்ளுதல்), பாத சேவனம் (இறைவனின் பொற்பாத கமலங்களுக்கு சேவை செய்தல்), அர்ச்சனம் (பூஜை செய்தல்), வந்தனம் (வணங்குதல்), தாஸ்யம் (அவனடி பணிதல்), ச்நேஹம் (நட்பு), ஆத்ம நிவேதனம் (நம்மையே இறைவன்பால் அர்ப்பணித்தல்), அதாவது பூர்ண சரணாகதி. ஆனால், இவை அனைத்திலும் சிறந்தது சேவை செய்வதே.

தவம், புனித யாத்திரை, புனித நூல்களைக் கற்றல் இவை மட்டும் நமக்கு இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவாது. சேவை மூலம் மட்டுமே ஒருவன் தன் வாழ்க்கையை மீட்கமுடியும்.

அபு பென் ஆதாம், தம் நேரம் முழுவதையும் சக மனிதர்களுக்கு சேவை செய்வதிலேயே கழித்ததால்தான் அவர் இறைவனின் அன்பிற்குப் பாத்திரமானார்.

இறைவன் அனைவரையும் நேசிக்கிறார், ஏனெனில் அவர் ஒரு பிரேமஸ்வரூபம். ஆனால், எவர் அனைத்துயிர்களிடத்தும் கருணை காட்டுகிறார்களோ, அவர்களுக்குத்தான் இறைவன் தன்னையே அளிக்கிறார்” (பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளுரையிலிருந்து).
• [மூலம் : ரேடியோ சாய்]

புள்ளிகளை இணைத்து வண்ணம் தீட்டுதல்வண்ணம் தீட்டவும்

வார்த்தை தேடல் புதிர்

வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்

வழிதேடல்

ரமலான் விளக்கு - காகிதக் கைவினை

ரமலான் கண்ணாடி கூட்டு விளக்கு என்பது விளக்கின் ஒளி, அணையாதவாறு அதனைச் சுற்றி தெளிவான கண்ணாடியைப் போன்ற பொருளைக் கொண்டு ஒளி அணையாதவாறு பாதுகாக்கும் ஒளி விளக்காகும் . அவைகள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது போன்ற வண்ண மிகு கூட்டு விளக்குகளால் ஆன மாலையை உருவாக்கும் காணொளியைக் கண்டு செய்முறையைக் கற்றுக் கொள்வோம்.

குழந்தைகளே! எதற்காக நாம் காத்திருக்க வேண்டும்? உங்களுக்குப் பிடித்தமான வண்ணக் காகிதங்களையும், கத்திரியையும் கொண்டு வண்ணமயமான கூட்டு விளக்குகளை உங்கள் பாலவிகாஸ் நண்பர்களுடன் தயார் செய்து உங்கள் பாலவிகாஸ் வகுப்புகளை அழகுப் படுத்தவும்.

கூட்டு விளக்குகளைப் போல நாமும் அன்பு என்னும் ஒளியையும், ஆனந்தத்தையும் நம்மைச் சுற்றி பரப்ப முயற்சி செய்வோமாக!

பிறையும் சந்திரனும் (விளையாட்டு)இஸ்லாமியச் சின்னமாகிய பிறைச் சந்திரனுடன் கூடிய நட்சத்திரம், தன் அங்கிங்கலையாத் தன்மையை நமக்கு உணர்த்துகிறது. இதோ, மாணவர்களுக்காக ஒரு சுவாரசயமான கண்கட்டி விளையாட்டு:

அன்பு குருமார்களே, இந்த ரமதான் சிறப்பு வீடியோவைப் பார்த்து, உங்கள் பாலவிகாஸ் வகுப்பில் இந்த வேடிக்கையான கண்கட்டி விளையாட்டை விளையாடச் சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து நட்சத்திரத்தைப் பிறைக்குள் வைக்க முயற்ச்சிக்கட்டும். இந்த விளையாட்டு குழந்தைகளின் கவனிக்கும் திறனையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கவும் உதவும். ஒவ்வொரு குழந்தைக்கும் சரியாகப் பொருத்துவதற்கு 3 முறை வாய்ப்பளிக்கலாம்.

நட்சத்திரத்தைப் போலவே நாமும் தர்மத்தின் பாதையை விட்டு விலகாமல், இறைவன் பால் திடமான நம்பிக்கை வைப்போம்.

இந்த விறுவிறுப்பான விளையாட்டின் மூலம் குழந்தைகளின் பிஞ்சு மனதில் இப்படி ஒரு நல்லொழுக்கத்தைக் கற்பிக்கலாமே!!

அராபிய மொழி பஜனை

குவைத் நாட்டு பாலவிகாஸ் சிறுமி ஸ்ரவ்யா விஸ்வநாத் பாடியுள்ள “சாய் ப்ரேம் தே சாந்தி தே ஆனந்த் தே“ பாடலின் ஒலி ஒளிக் காட்சியை ரமலான் அர்ப்பணிப்பாக வழங்குகிறோம்.

குருமார்களே! பெற்றோர்களே! குழந்தைகளே! கடல் கடந்து வந்துள்ள ஆத்மார்த்தமான இந்த இனிய அரபு மொழி பஜனையைச் சிறிது நேரம் கேட்டு அனுபவித்து மகிழ்ந்து பின்னர் கற்றுக்கொள்ளலாமே!

ரமலான் மாதத்தின் அலங்காரங்கள் – பிறை மற்றும் நட்சத்திர ஊர்திஈகை மாதமான ரமலான் கொடைத் திருநாளாம் ஈத் யுள் பிதருடன் நிறைவுப் பெறுகிறது. பிறை மற்றும் நட்சத்திரத்துடன் கூடிய ஊர்தியை செய்ய இந்தக் காணொளிக் காட்சியில் பார்ப்போம் .நாமும் இந்த அழகிய ஊர்தியை உருவாக்கும் முயற்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.